/> நல்ல நாள் ,நல்ல நேரம் பார்க்கும் முறை;முகூர்த்தம்,பஞ்சாங்கம் 2015 | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Tuesday, 24 February 2015

நல்ல நாள் ,நல்ல நேரம் பார்க்கும் முறை;முகூர்த்தம்,பஞ்சாங்கம் 2015

எந்த  ஆண்டிலும்,  எந்தக்கிழமைக்கும்  பொதுவான  நல்ல  நேரம்;

1.ஞாயிறு  -காலை 6-12, மதியம் 1,30 -4.30 மாலை 6-காலை6

2. திங்கள்  -காலை 6-7.30, காலை 9.10.30,பகல் 12- அதிகாலை6

3. செவ்வாய்  -காலை6-9, காலை 10.30-பகல்3  மாலை 4.30- அதிகாலை 6

4.புதன்       -காலை6—7.30,காலை9-பகல்12   பகல்1.30-அதிகாலை 6

5. வியாழன்   -காலை 7.30, பகல்    1.30  மாலை 3- அதிகாலை 6

6.வெள்ளி  -காலை 6-10.30,பகல் 12-மாலை3  மாலை 4.30- அதிகாலை  6

7.சனி   -காலை 6-9,  காலை10.30-பகல்  1.30  மாலை 3-அதிகாலை 6ராசியான  நாளில்  மாங்கல்யம்   வாங்கவோ, செய்யக் கொடுக்கவோ  உகந்ததாக்க்  கருதப்படும்  நட்சத்திரங்ளில்  ஒன்றுதான்  ‘சுவாதி’  வீடு  கட்ட  தொடங்கவும்  கிரகப்  பிர வேசம்  செய்யவும்,  மங்கல  நிகழச்சிகள்   நட்த்தவும்  ‘சுவாதி’  நட்சத்திரம்  இடம்  பெற்ற  நாளாகத்  தேர்ந்தெடுக்கலாம்.

என்றும்  எப்பொழுதும்  சுப  வேளைதான்

இன்று ஒரு  காரியத்தினை  சாதித்தே  ஆக வேண்டும் எனில் எல்லா  நாலும்  சுப தினம்தான்  அல்லது  சுபதினமாக்கி எண்ணியதை   முடிக்க   நமது  முன்னோர்கள்   சில  விதிமுறைகளை   வகுத்துச் சென்றுள்ளனர்.  அதனடிப்படையில்  மோசமான   நாளைக்கூட    சுபத்தினமாக்கி   எண்ணியதை   திண்ணமாக  முடிக்க முடியும்.

1.     தற்காலம்   நாட்காட்டிகளில்  காலையிலும்   -மாலையிலும்   நல்ல  நேரம்  எனக்  குறித்திருப்பதைப்  பார்க்கிறீகள்,  அவை  சுப ஹோரை- கெளரி பஞ்சாங்கத்தின்  அடிப்படையில்   குறிக்கப்படுவது  ஆகும்.  அந்த  நேரங்களை  நல்ல  நேரமாக்க்  கருதி  [மோசமான  நாட்களிலும்]  செயல் படலாம்.

2.    எவ்வளவு  மோசமான  நாளாக  இருந்தாலும்  செய்தே  ஆக  வேண்டிய   கட்டாயமான    வேலைகளை   சுபஹோரை  பார்த்துச் செய்யலாம்.

3.    கெளரி  பஞ்சாங்கத்தில்  உத்தியோகம்,  அமிர்தம், சுகம், தனம், லாபம் எனக் குறிப்பிட்டுள்ள  காலங்களில்  [ராகு, எமகண்டம்   தவிர்த்து]  நல்லது  செய்யலாம்.


4.    பகல்  11  மணிக்கு   12 மணிக்குள்   சூரியன்  உச்சியில்   பிரகாசிக்கும் காலம்  முகூர்த்த காலம்  எனப்படுகிறது. இக்காலம்  தோஷமில்லாத  சுப  நேரமாக்க்   கருதப்படுகிறது.

5.    சூரியன்  உதயமாவதற்கு  முன் காலை 4 ம்ணி முதல்  6. மணிக்குள்  சூரியன்  மறந்த  பின்  6  மணிக்குப்  பிறகு  எல்லா  சுபகாரியங்களையும்  செய்யலாம்.  எந்த  தோஷமும் கிடையாது என சொல்லப்பட்டுள்ளது.


Related Article:

Post Comment

No comments:

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner