/> மீனம்,தனுசு,மேசம்,விருச்சிகம் ராசியினருக்கு எப்போது யோகம்...?ராசிபலன் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Thursday, 12 February 2015

மீனம்,தனுசு,மேசம்,விருச்சிகம் ராசியினருக்கு எப்போது யோகம்...?ராசிபலன்

மீனம்,தனுசு ராசியினருக்கு குரு தான் ராசி அதிபதி..ஒரு குடும்பத்தலைவன் பொறுப்பாக இல்லாமல்  இருந்தால் குடும்பம் தள்ளாடாதா..? அப்படித்தான் இப்போது ராசி அதிபதி குரு வக்கிரமாக இருக்கிறார் ..இதனால் தனுசு,மீனம் ராசியினர் தள்ளாடிக்கொண்டிருக்கின்றனர்..குரு வை யோகாதிபதிகளாக கொண்ட அவரையே நம்பிக்கொண்டிருக்கும் மேசம்,சிம்மம் ராசியினரும் தவித்துக்கொண்டுதான் இருக்கின்றனர்..இவர்களுக்கு எப்போது வெளிச்சம் என்று பார்த்தால் குரு வக்கிர நிவர்த்தி ஆக வேண்டும்..


சிம்ம ராசிக்கு குரு ராசிக்கு 12ல் இருந்து கெடுதலைதானே செய்கிறார் அவர் வக்கிரமானது நல்லதுதானே என கேட்கலாம்..சிம்மத்துக்கு குரு 5ஆம் அதிபதி ஆச்சே..அவர்தான் புர்வபுன்ணியாதிபதி..தொழில் லாபாதிபதி அவர்தான்...அவர் வக்கிரமாகிவிட்டால் தொழிலுக்கு லாபம் ஏது..? குடும்பத்தில் நிம்மதி ஏது..? குழந்தைகளுக்கும் பிரச்சினை ஆச்சே...மேசம் ராசிக்கு பாக்யாதிபதி குரு வக்கிரம் ஆனால் என்ன ஆவது..? தெய்வ துணையே இல்லையே..? எத்தனை கோயில் போனாலும் அஷ்டம சனி தொல்லை நீங்காதே..? சனி திசையோ புத்தியோ நடப்பவர்கள் வாகனவிபத்தையோ அறுவை சிகிச்சையோ சந்தித்தே ஆகவேண்டும்...அதில் இருந்து தப்பிக்க முன்னோர் ஆசியோ தெய்வ துணையோ இருந்தால்தானே முடியும்..? அதுவரை கேப்டன் இல்லாத கப்பல் போல அல்லவா தவிப்பார்கள்...? 

விருச்சிக ராசிக்கு ஏழரை சனி பயத்துலியே பாதி ஆளா இளைச்சு போயிருப்பாங்க..அதுக்கேத்த மாதிரி புது புது கவலைகள் ,பயம் வந்து அவர்களை மன உளைச்சலில் தள்ளிக்கொண்டுதான் இருக்கிறது..எல்லாம் இருந்தும் நிம்மதி இல்லையே என புலம்புபவர்கள் அநேகம்..சுகமில்லாத ராசி ,உன்ன கட்டி என்ன சுகத்தை கண்டேன் என புலம்புவது இவங்கதான்...செல்வாக்குக்கு,கெள்ரவத்துக்கு பங்கம் வரும்..மதிப்பு குறைகிறது...பணம் தண்ணீராய் செலவழிகிறது..ஆனால் வருமானம் வரும் வழியைத்தான் காணோம்...அப்படி யாருக்கேனும் நல்ல வருமானம் வந்தாலும் ஏதோ ஒரு பெரிய செலவு வரப்போகிறது என்று அர்த்தம்..குரு வக்கிர நிவர்த்தி வரும் ஏப்ரல் 8ஆம் தேதி தான் வருகிறது அதுவரை மிக எச்சரிக்கையாக இருங்கள் அதன் பின் மேற்க்கண்ட பிரச்சினைகள் தீரும்..!!

முக்கிய குறிப்பு; மகா சிவராத்திரி வரும் 17 ஆம் தேதி வருகிறது..மகா புண்ணிய நாளில் சிவபக்தர்களுக்கு இரவு கண் விழித்தோருக்கு சிற்றுண்டி ,பானங்கள் வழங்க இருக்கிறோம்..ஆதரவற்றோர்க்கு அன்னதானம் செய்ய இருக்கிறோம்..பங்கேற்க விருப்பம் இருப்போர் மெயில் செய்யவும். உங்கள் பங்களிப்பாக எவ்வளவு சிறு தொகையும் அனுப்பலாம்..நன்றி...sathishastro77@gmail.com


Related Article:

Post Comment

3 comments:

kings said...

தனுசு ராசிக்கு அவ்வளவு தானா?,எதுவும் சொல்லவில்லை நீங்கள்

Venkat said...

Dear Mr Sathishkumar,

I have got your "SARVA JANA VASIA ENTHIRAM in November 2014.After that I noticed good signs & my problems are moving towards good solutions. Thanks a lot.

பரிவை சே.குமார் said...

பகிர்வுக்கு நன்றி.

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner