/> ஜாதகப்படி யாருக்கு மனநிலை பாதிப்பு வரும்..? அதற்கு என்ன பரிகாரம்?ஜோதிடம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Tuesday, 10 February 2015

ஜாதகப்படி யாருக்கு மனநிலை பாதிப்பு வரும்..? அதற்கு என்ன பரிகாரம்?ஜோதிடம்

ஜாதகரீதியாக மன நிலை பாதிப்பு. 

மனதிற்கு அதிபதி சந்திரன் ஆகும்..சுய ஜாதகத்தில் தேய்பிறை சந்திரனாக இருந்து சந்திரன் லக்னத்துக்கு 6,8,12ல் ராகு ,கேதுவுடனோ அல்லது சனி,மாந்தி உடனோ இருந்து...அவர்களின் திசா புத்தி நடந்தால் மனநிலை அதிகம் பாதிக்கும். தாய்க்கும் கண்டம் உண்டாகும்...அதிகப்படியான குழப்பம்  எப்போதும் சிந்தனையில் இருத்தல்,அதிக கோபம்,பிடிவாதம்,மற்றவர்கள் பேச்சை கேளாமல் தான் சொல்வதே சரி என வாதிடுதல்,உடலில் அதிக சோர்வால் எப்போதும் படுத்தே இருத்தல்,எதை,யாரை கண்டாலும் பயம் ,வீட்டை விட்டு வெளியே போக பயப்படுதல்,என இருப்பார்கள்..இவர்கள் ஜாதகத்தில் லக்னத்துக்கு 4ஆம் இடத்தில் 6ஆம் அதிபதியோ எட்டாம் அதிபதியோ இருப்பர்..அல்லது 4ஆம் அதிபதி 6,8,12ல் மறைந்து 4ஆம் இடத்துக்கு பாவர்கள் தொடர்பும் இருக்கும்.லக்னம் பலவீனமாக மறைந்து,நீசமாகி அல்லது பகை ராசியில் இருக்கும்.பாக்யாதிபதி நன்றாக இருந்தாலோ பூர்வபுன்ணியாதிபதி நன்றாக இருந்தாலோ தெய்வ அருளால் குணமாவர்..குரு நன்றாக இருந்தால் குணப்படுத்த பலரும் உதவுவர்..

செவ்வாயும் பாவர்தான் இவருடன் இருந்தால் நெருப்பில் கண்டம் தண்ணீரில் கண்டம்,,காய்ச்சலால் கண்டம் என சொல்லலாம்..அடிக்கடி விபத்தும் அறுவை சிகிச்சையும் செய்ய வேண்டி இருக்கும்..சந்திரன் புதனுடன் ,ராகு சந்திரனுடன்,கேது சந்திரனுடன் இருந்து கெட்ட சகவாசம் ,கெட்ட பழக்கங்களால் உடலை கெடுத்துக்கொண்டவர்களும்...உண்டு.ஆனால் அதன் திசையோ புத்தியோ நடக்கனும் ..லக்னத்துக்கு 6,8,12ல் மறைந்து தேய்பிறை சந்திரனக இருந்தால்தான் இந்த பாதிப்புகள் உண்டாகும்...அப்படி இருப்பவர்கள் கீழ்க்கண்ட கோயில்கள் சென்று வழிபட்டு வரலாம்..

குணசீலம்;
புதன்கிழமை  குணசீலம்  பிரசன்ன வெங்கடாஜலபதி  ஆலயம் சென்று  உச்சி  காலத்தில் அர்ச்சனை செய்து  உச்சி காலத்தில்  கோவிலில்  தெளிக்கும் சங்கு  தீர்த்தத்தைத்  தெளித்துக் கொண்டு வந்தால் பாதக பலன் மாறி நற்பலன் உண்டாகும்.வளர்பிறை திங்கள் கிழமை சென்று அங்குள்ள காவிரியில் அதிகாலை குளித்துவிட்டு வழிபாடு நடத்தினாலும் நல்ல பலன் உண்டு..
வழித் தடம்;
திருச்சி-முசிறி சாலையில் உள்ளது.

சோளிங்கபுரம்;
மலையடிவாரத்தில்  உள்ள தக்கான்  திருக்குளத்தில் நீராடி, ஸ்ரீ  அமிர்த பலவல்லி  தாயார் சமேத ஸ்ரீ யோக நரசிம்மர்  ஸ்வாமியையும், ஸ்ரீ யோக  ஆஞ்சநேயர்  ஸ்வாமியையும்  தரிசித்து  வரவும்.  மனநல்ம்  பாதிக்கப்படுவதற்குக் காரணமாக  உள்ள அனைத்துக் கிரக தோஷங்களும், இந்த்த் தாயர், ஸ்ரீ யோக  நரசிம்மர், ஸ்ரீ யோக ஆஞ்சநேயர் ஆகிய  மூவரையும்  ஒரே தினத்தில்  தரிப்பதால்  நீங்கி விடும். வெள்ளி,  ஞாயிறு,  ஸ்வாதி  நட்சத்திரம்  ஆகியவை  விசேஷ  சக்தி  பெற்றவையாகும்.
வழித் தடம்;
அரக்கோணத்திலிருந்து  25 கி.மீ.  தூரத்திலுள்ளது.

திருவிசநல்லூர்;[திருந்து தேவன்குடி;
தற்போது நண்டாங்கோவில் என அழைக்கப்படுகிறது.  மனநிலை  பாதிப்பு  உள்ளவர்,  தேய்பிறை  அஷ்டமியில்  இவ்வாலயத்திலுள்ள  அருமருந்தம்மைக்கு  தைல அபிசேகம்  செய்து  வழிபட்டு, தைலத்தை  மருந்தாக அருந்தி  வந்தால்  உடனடியாக  மனநோய்  நீங்கும்.  தன்வந்திரி  பெருமாள்  மூலிகை மருந்துகளை  அறிந்த இடம்.
வழித் தடம்;
கும்பகோணத்திலிருந்து வேப்பத்தூர்  வழியே  குத்தாலம்  செல்லும் வழியில் 8 1\2 கி.மீ. தூரத்தில் உள்ளது.
பஸ் ஸ்டாப்;
திருவிசநல்லூர் பள்ளிக்கூடம் [நண்டாங்கோயில்]  


Related Article:

Post Comment

1 comment:

Anonymous said...

thanks for your good service

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner