/> சகலரையும் வசியமாக்கும் வசிய மந்திரம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Thursday, 19 March 2015

சகலரையும் வசியமாக்கும் வசிய மந்திரம்

வசிய மந்திரம்;

ஒரு புரோஹிதரிடம் கேட்டேன் உங்களுக்கு மட்டும் இவ்வளவு கூட்டம் வருதே...எப்படி என்றேன்....தினமும் காலையில் வசிய மந்திரம் சொல்கிறேன் என்றார் மந்திரத்தை சொல்லுங்க என்றால் அப்புறம் சொல்றேன் என ஒரு மாதம் இழுக்கடித்தார் அப்புறம் ஒருநாள் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருக்கும் போது சொன்னார்..

சிம்பிள்தான்..நிறைய மந்திர புத்தகங்களிலும் இருக்கிறது..ஆனால் அவர் கண்ணாடியில் இதை எழுதி வைத்துக்கொண்டாராம் தினம் காலையில் கண்ணாடியை பார்ப்போம் அப்ப முகத்தை கண்ணாடியில் பார்த்துக்கொண்டே சொல்ல வேண்டும்..

வசி வசி..வசி..
சகலமும் வசி...
சர்வமும் வசி..
சகலரும் வசி...

12 முறை இதனை சொல்லிவிட்டு வீட்டை விட்டு கிளம்புவேன் என்றார்..என் நண்பர்கள் யாருக்கேனும் இது பயன்பட்டால் அதை விட சந்தோசம் எனக்கு எதுவும் இல்லை!!

உண்மையில் ஒருவருக்கு நிறைய மக்கள் செல்வாக்கு உண்டாகவேண்டுமெனில் மக்கள் தொடர்பு ஸ்தானமான 9ஆம் இடத்தில் லக்னத்துக்கு சுபர் அல்லது இயற்கை சுபர் இருக்க வேண்டும்...அவரது திசாபுத்தி நடக்க வேண்டும் அல்லது நான்காம் அதிபதி திசையோ ஐந்தாம் அதிபதி திசையோ நடக்க வேண்டும்..அந்த காலத்தில் அவர் தன் வாழ்க்கை முழுமைக்குமான செல்வத்தை சேர்த்துவிடுகிறார்...லக்னத்துக்கு நான்காம் இடம் சுகாதிபதி..அவர் திசை நடக்கும்போது தம்பி பணக்காரர் ஆகிவிடுகிறார் ..மாமனார் செல்வாக்கு பெறுகிறார் ...ஜாதகரும் சொந்த வீடு கட்டிவிடுகிறார்...அல்லது மாமனாராவது சொந்த வீடு கட்டி கொடுத்து விடுவார்..பாக்யாதிபதி திசை நடக்கும்போது தந்தை இருந்தால் தந்தையால் செல்வம் வந்து சேரும்..அல்லது திடீரென புகழ் பெற்று ஓவர் நைட்டில் பெரிய ஆளாகிவிடுகிறார்..

நான் பார்த்த புரோகிதருக்கு சுக்கிர திசை நடந்து கொண்டிருந்தது....சுக்கிரன் ஒன்பதாம் இடத்தில்.மிதுன லக்னம் வேறு..பாவகிரக தொடர்பும் இல்லை..அம்சத்திலும் கெடவில்லை..சுக்கிரன் நின்ற வீட்டுக்கதிபதி சனி 2ஆம் பாவகத்தில்...பேசியே ..அல்லது மந்திரம் சொல்லியே சம்பாதிக்கிறார்..

ஒரு ஜாதகத்தில் லக்னம் ,ராசி,ராசி அதிபதி கெடாமல் இருந்தாலே போதும் அவர் யோகமான ஜாதகர் ஆகிவிடுகிறார்..சனி வலுத்து ஆட்சி உச்சம் பெற்றுவிட்டால் அவர் நிறைய சிரமங்களை அனுபவிக்கிறார்...ஆட்சி,உச்சம் பாவர்கள் அடைய கூடாது..லக்னத்துக்கு யோகர் மறைய கூடாது..லக்னத்துக்கு பாவர் பலம் பெற கூடாது...எதிரிகளுடன் போராடவே நேரம் சரியாக இருக்கும்.7ஆம் அதிபதி வலுத்துவிட்டால் எல்லாம் மனைவி பார்த்துப்பார் என வேலையை மட்டும் பார்க்க வேண்டியதுதான்.. அஷ்டம சனி,ஏழரை சனி எது வந்தாலும் திசை எது நடக்கிறது என்பதுதான் முக்கியம்..மோசமான திசை நடந்தாலும் சனிப்பெயர்ச்சி,குருப்பெயர்ச்சி ஓஹோ என இருந்தாலும்...முடியல சாமி..குரு என்னத்த கொடுத்தார் என புலம்புவதாக இருக்கும்!!


Related Article:

Post Comment

No comments:

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner