/> நீங்க துலாம் ராசியா..? libra | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Wednesday, 4 March 2015

நீங்க துலாம் ராசியா..? libra

துலாம் ராசி;

 துலாம் ராசி சுக்கிரனின் ராசி..சுக்கிரன் சுகபோகத்துக்கு அதிபதி..எப்பவும் அழகா தன்னை காட்டிக்க விரும்புவாங்க..சுற்றுலா,சினிமா,போன்ற பொழுதுபோக்கு விசயங்களிலும் சுவையான உணவு உண்பதிலும்,ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் இருக்கும்.பார்க்கவும் ,அழகா இருப்பாங்க..பேச்சும் இனிமையா இருக்கும்.இதனால் நண்பர்கள் வட்டம் அதிகம்..இன்னும் கொஞ்சம் பேச மாட்டாரா,நம்மிடம் பழக மாட்டாரா என ஏங்க வைப்பார்.நோட் திஸ் பாயிண்ட்..ராசி அதிபதி சுக்கிரன் ராகு கேதுவுடனோ,செவ்வாய்,சூரியனுடனோ,சனியுடனோ சேராமல் இருப்பது மேற்க்கண்ட பலன்களுக்கு வலிமை தரும்...

இவங்க ராசிக்கு தராசு சின்னம் எதுக்கு வெச்சிருக்காங்க...? யாரையும் பார்த்தவுடன் அவர்களை பற்றி எடை போடுவதில் வல்லவர்கள்..துல்லியமான கணிப்பு இருக்கும். நீ வேணா பாரு அவன் ஒருநாள் இப்படித்தான் செய்யப்போறான் என்பார்கள்.. அது சரியாக ஒத்து வரும்.

துலாம் ராசிக்காரரின் பெரிய பலவீனம் பெண்கள்....பெண்கள் துலாம் எனில் ஆண்கள்..துலாம் ராசியினரின் வீடுகளில் சந்தேக பிரச்சினை அடிக்கடி வருவது சகஜம்..பெண்கள் விசயத்தில் பணத்தை இறைப்பதிலும்,அழகை மேம்படுத்த பணத்தை இறைப்பதிலும் இவர்களுக்கு நிகர் யாரும் இல்லை..சொந்த வீடு இல்லை என்றாலும் கார் வாங்க ஆசைப்படுவார்..வருமானம் இருக்கோ இல்லையோ தாய்லாந்து டூர் போயிட்டு வந்தா எப்படி இருக்கும்..கோவா போனா எவ்வளவு செலவாகும் என சீரியசா டிஸ்கசன்பண்ணிக்கிட்டு இருப்பார்..கோயில், குளம் போன்ற ஆன்மீக விசயங்கள் அலர்ஜி.


இந்த  ராசி  கால  புருஷனுக்கு  ஏழாவது ராசி, சர ராசி, ஆண் ராசி, காற்று ராசி, பாதிப்பலனளிக்கும் ராசி,  சாத்வீகமான ராசி,  பண்பான ராசி,  வேகமான ராசி, குரலோசை ராசி,  குருட்டுத்தனமான ராசி,  நீண்ட ராசி,  உயிரற்ற ராசி, உயரமான ராசி, ஒற்றைப்படை ராசியாகும்.

நல்ல நிறம் இருக்கும். நீண்ட புஜங்கள், அகன்ற மார்பு, பரந்த முகம், வீரிய சக்தி, கறுத்த  சுருட்டை முடி,  அழகான  கண்கள்  அமையப்  பெற்றவர். இந்த ராசிக்காரர்கள் உயரமாக  இருப்பார்கள்.  ஒல்லியாகவும்  மூக்கு தீர்க்கமாகவும் எடுப்பாகவும்  இருக்கும். அழகான  தோற்றமுடையவர்.  கட்டுமஸ்தான  உடலமைப்பு  உடையவர்.  தைரியசாலி  பலசாலி  அச்சமற்றவர். நடையிலும்  பயணத்திலும்  பிரியம்  உடையவர்கள்.ஜீரணத்  தொல்லைகள்  சீதள  நோய்கள்,  மர்ம  வியாதிகள்,  வயிற்றுக் கோளாறு  வரலாம்.

இந்த  ராசிக்காரர்கள்  போகத்தில் அதிக  நாட்டம்  உடையவர்கள். காம  உணர்வு  அதிகமாக  இருக்கும். புத்திசாலித்தனம்  உடையவர்கள்.  சோம்பேறித்தனம்  இவருக்கும்  சிறிதும்  பிடிக்காது.  மத்தியஸ்தராக  இருந்து  நடுநிலை தவறாது  நியாயத்  தீர்ப்பு  வழங்குவதில்  மிகவும் திறமைசாலி.  தர்மசிந்தனையிடையவர்.  அற்ப  விஷயங்களுக்காக  மனதை மாற்றிக் கொள்ளமாட்டார்.  ஆனால் மற்றவர்களுடைய உணர்ச்சிகளை  மதித்து  நடந்து கொள்வார்.  எதையும்  நன்கு  சிந்தித்து ஒரு  முடிவுக்கு  வரக் கூடியவர்.

பொதுவாக  கலைத்திறன், தொழில்  திறன்  இவரிடம்  இருக்கும். பொருட்களை  வாங்குவதிலும்  விற்பதிலும்  திறமைசாலி. செல்வமும்  அந்தஸ்தும்  பெறுவார்.  வேதமறிந்து  விற்பன்னரையும்,  தெய்வ  நம்பிக்கையும்  உடையவர். குழந்தைகள் குறைவாக  இருக்கும்.  உறவினருக்கு  உபகாரம்  செய்யும்  குணம்  உடையவர்.  பராக்கிரம்ம்  நிறை  பெற்றவர்.  சான்றோர்களிடம்  அதிக  மரியாதை  உடையவர்.  காலம்  நேரம்  பார்த்து  கச்சிதமாக  காரியங்களை  முடிப்பதில்  வல்லவர்.

இந்த  ராசிக்காரர்கள் நெறி  தவறாமல்  வாழ ஆசை உடையவர்.  நேர்மை  இவர்களின்  குறிக்கோளாக  இருக்கும். இதில்  மாற்றம்  செய்ய  மாட்டார்  எற்றம்  இறக்கமான  வாழ்க்கை  அமையும்.  செல்வந்தர்களிடம்  செல்வந்தர்கள்  போல காட்டிக்  கொள்ள  அதிகமாக செல்வு  செய்வார்.  அதனால்  வாழ்க்கையில்  சரிவு  ஏற்படும்.  கொள்கை  பிடிப்பு  இருக்கும்.  பெருமையுடையவர்  செருக்கும்  இருக்கும்.  மதக்  கோட்பாடுகளைக் கடைப்பிடிப்பார்கள்.  இரக்க  குணம் உடையவர்.  எல்லோரிடமும் அன்பாக நடந்துக்  கொள்வார்.  நல்ல இயல்புகள்  இருக்கும்.  ஏழை  எளியவர்களுக்கு  உதவி  செய்ய  வேண்டுமென்ற  எண்ணம்  உடையவர்.  பொது  நலத்தில்  இருந்தாலும்  சுயநலம்  அதிகம்  உண்டு.

சமூகத்தில் நல்ல  அந்தஸ்து  பெற்று  இருப்பார்.  தனவந்தர் என்ற  அந்தஸ்து  பெறுவார்.  சொந்த  ஊரை  விட்டு  வேறு ஊரில்  வாசம்  செய்வார்.  வாழ்க்கையை  உன்னதமான  நிலைக்கு  உயர்த்தப்பாடுபடுவார்.  தனது  தேவைகளை  பூர்த்தி  செய்து கொள்வதிலும்,  தேவையவற்றவைகளை  விலக்கி கொள்வதிலும்  சமார்த்தியசாலி.  ஆழ்ந்த  கருத்துக்களை  யோசித்து  வெளியிடுவார்.  சதா சர்வ   காலமும் கற்பனை  உலகில் சஞ்சரிப்பார்.  பிறருக்கு  வாக்கு  கொடுத்து விட்டால்,  கொடுத்த  வாக்கை  காப்பாற்றும்  வரை  தூங்கமாட்டார்.  மற்றவர்கள்  பேச்சில்  குற்றம்  குறைகளை  அதிகம்  கண்டுப்பிடிப்பார்.  அதனால்  குடும்பத்தில்  கருத்து  வேறுபாடுகள்  தோன்றும்.  குடும்பத்தை  விட்டு  நீண்ட  தூரத்தில்  இருக்க  நினைப்பார்.

எல்லா  வசதிகளையும்  இளமையில்  பெற  வேண்டுமென்று  விரும்புவர்.  குடும்ப  பொறுப்பு  இவர்க்கு  அதிகமாக  இருக்கும். பெற்றொர்களை  கலந்தாலோசிக்காமல்  எந்தவொரு  காரியத்தையும்  செய்ய மாட்டார். வரவைக்காட்டிலும்  செலவு  கூடுதலாக  இருக்கும்.  இரக்க சிந்தனை  அதிகம்  இருக்கும்.  சகோதரர்கள்  வலிய  சென்று உதவி செய்வார்.  சமூக தொண்டிலும்  அரசியல்  சேவையிலும்  அதிக  ஆர்வம்  காட்டி  சிக்கிக்  கொள்வார். பெண்  வழியில்  பிரச்சனைகள்  அதிகம்  வரும்.  பிறரால்  சாதித்துக்  காட்ட முடியாததை  சாதித்துக்  காட்டுவர்.  எதிர் கால தேவையை  அறியும்  நுட்பம் அதிகம்  இருக்கும்.  வீடு,  நிலம், வாகனம்  போன்றவைகளை  வாங்குவார்.  பிறரை  எடை  போடுவதில்  வல்லவர்.

நல்ல  பேச்சாளார்,  கூறிய  அறிவு  உடன்  செயல்படுவார்,காரியத்தில்  கண்ணாக  இருப்பார்,  காரியவாதி,  எதற்கும்  கணக்கு  பார்ப்பவர்  நியாயதர்மத்திற்கு  கட்டுப்பட்டவர்  சட்ட  திட்டங்களுக்கு  உட்பட்டவர்.  பிறந்த குலத்தின்  மேல்  அபிமான  முடையவர்.  தன  விருத்தியுடையவர்.  சம்பத்துடையவர்.

இவர்கள்  மின்சாரத்றை,  பொறியல் துறை,  உணவுத்துறை,  வாகனத்துறை,  ஆடை,  ஆபரண  அலங்காரத் துறைகளில்  ஈடுபட்டால்   ஆதாயம்  கிடைக்கும்.

இவர்கள்  சாந்த  ரூப  அம்பிகை  வழிபாட்டில்  ஈடுபாடு கொள்ள  வேண்டும். 

சுவாதியில் பிறந்தவர் நரசிம்மர்...பிரதோச நாளில் நர்சைம்மரை வணங்கலாம்...சித்திரை செவ்வாய் நட்சத்திரம்  இந்த நட்சத்திர நாளில் முருகனை வழிபடலாம்..விசாகம் திருச்செந்தூர் முருகன் வழிபாடு சிறப்பு.


Related Article:

Post Comment

No comments:

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner