குரு பெயர்ச்சி ராசிபலன் 2015 -2016 மிதுனம் ராசிக்கான பலன்கள்
மிருகசிரீடம் 3,4 பாதம்,திருவாதிரை,புனர்பூசம்,1,2,3 பாதங்கள்..
மிதுனம் ராசியை சேர்ந்த நண்பர்களே....வரும் 14.7.2015 செவ்வாய்க்கிழமை முதல் காலை 6.23க்கு உங்கள் ராசிக்கு 3ல் குரு மாறுகிறார்...இதுவரை குருபலத்துடன் இரண்டாம் இடத்தில் இருந்தார்.. இப்போது மூன்றாம் ராசிக்கு மாறியிருக்கிறார்....
இது பற்றிய புலிப்பாணி முனிவர் எழுதி வைத்துள்ள பாடல்;
’’கேளப்பா குருபதியும் மூன்றிலேறக்
கெடுதி மெத்த செய்வனடா வேந்தன் தானும்
ஆளப்பா அகத்திலே களவு போகும்
அப்பனே அரிட்டமடா சிசுவுக்கேத்தான்’’
என்கிறார்..இதன்மூலம் மூன்ராமிடத்து குரு சிறப்பான நல்ல பலன் தர வழியில்லை என அறிந்திருப்பீர்கள் அதே சமயம் இடி விழுந்தாற்போல துவண்டு விடாதீர்கள்..ஜாதகத்தில் சனி புத்தி,கேது புத்தி,செவ்வாய் அல்லது ராகு புத்தி நடந்தால் மட்டும் மேற்க்கண்ட பலன்கள் நடக்கும்.
பாடல் சொல்லும் முக்கிய விசயம்,அரசாங்கம் அல்லது காவல்துறை,நீதிதுறை மூலம் சிக்கல் வரும் வாய்ப்பு இருக்கிறது...ஏதேனும் ஒரு முக்கியமான பொருள் திருட்டு போக வாய்ப்பிருக்கிறது குழந்தைகள் அல்லது குடும்பத்தில் ஒருவரால் பெரிய மருத்துவ செலவு ஒன்று இருக்கிறது என புரிந்து கொள்ளலாம்..
4க்கு விரயம் 3 என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை..தாய்க்கும் பாதிப்புதான் தாயாரால் மனக்கசப்பு உண்டாகும்..அதிக அலைச்சல் ,தொழில் மந்தம்,வருமான குறைவு உண்டாகும்..கல்வியில் மனததன்மையும் பெண்களுக்கு கணவன் மனைவியால் மனக்கசப்பு உண்டாகும் வாய்ப்பும் அடிக்கடி உண்டாகும் நீங்கள் எப்போதும் யாரையும் சந்தேக கண்கொண்டே பார்ப்பவர்கள் யாரையும் எளிதில் நம்பி விட மாட்டீர்கள்...நான் சொல்வதே நினைப்பதே சரி என வாழ்ந்து வருபவர்கள் நீங்கள்.....ஈச்சமயத்தில் உங்கள் எண்ணங்களையும்,சந்தேகத்தாலும் வீணாக யாரையும் பகைத்துக்கொள்ளாதீர்கள்.. இதன் மூலம் உங்கள் செல்வாக்கு முற்றிலும் இழக்க நேரலாம்..கவனம் தேவை.
3ல் குரு இருப்பதால் சகோதர வழியில் பகை மனக்கசப்பு,மாமனார் வழியில் செலவினங்கள்,பிரச்சினைகள் வரும்.குரு 3ல் மறையும்போது செல்வ வசதிகள் குறையும் அல்லது கரையும்.உடல் உபாதைகள் கூடும் ஏற்கனவே சிகிச்சையில் இருப்பவர்கள் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.ராசிக்கு 7ஆம் இடத்தை குரு பார்ப்பதால் குருபலன் இல்லாவிட்டாலும் திருமண முயற்சிகள் செய்யலாம் கூடி வரும்.பணப்பற்றாக்குறை இருக்கும். புதிய கடன்கள் உண்டாகுவதற்கும் வாய்ப்புண்டு...ஏற்கனவே கடனில் இருக்கோம் இன்னுமா என திகைக்க வேண்டாம்..திசாபுத்தி மாறினால் கடன்கள் அடைபடும்.
இட மாறுதல்,தொழில் மாறுதல் சிலருக்கு நடக்கும்...சிலர் ஊர் மாறும் வாய்ப்பும் உண்டு வீடு மாற்றம் இருக்கும்...நம்மை பற்றி யாரேனும் குறை சொல்லி கொண்டே இருப்பார்கள் வீட்டுக்கு போனாலும் கசக்கும் அலுவலகத்துக்கு வந்தாலும் கசக்கும் நேரம் இது.குழந்தைகளால் நிம்மதி உண்டாகும்.
வக்ர கதியால் நல்ல பலன்கள்;
குரு பகவான் உங்க ராசிக்கு 3ஆம் இடத்தில் அமர்ந்து தொல்லை கொடுத்தாலும் 8.1.2016 முதல் 8.5.2016 வரை குரு வக்ரமாகி மீண்டும் இரண்டாமிடமாகிய தன ஸ்தானத்துக்கு வந்து யோகத்தை தரப்போகிறார் பண நெருக்கடி தீரும் செல்வாக்கு உயரும்...கடன் தீரும் திருமண முயற்சிகள் கைகூடும்..
பரிகாரம் ;மூன்ராமிடத்து குருவால் துரியோதனன் படை மாண்டது என சொல்வார்கள் சகோதர யுத்தம் வரும் என்பர்....செல்வாக்கு சொல்வாக்கு போச்சு என்பர் எதுவாக இருப்பினும் திருச்செந்தூர் சென்று செந்தில் ஆண்டவரை ஒருமுறை தரிசனம் செய்து வாருங்கள் துன்பங்கள் எல்லாம் தீரும் அருகில் இருக்கும் கோயிலில் அடிக்கடி சென்று தீபம் ஏற்றி வாருங்கள் .
செல்வவளம் உண்டாக
Related Article:
1 comment:
Waiting for all rasies
Post a Comment