/> குருபெயர்ச்சி ராசிபலன் 2015-2016 சிம்மம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Friday, 26 June 2015

குருபெயர்ச்சி ராசிபலன் 2015-2016 சிம்மம்

 குருபெயர்ச்சி ராசிபலன் 2015-2016 சிம்மம்

வாக்கிய பஞ்சாங்கப்படி 5.7.2015 ஞாயிறு இரவு 11 மணிக்கு சிம்ம ராசிக்கு குரு பெயர்ச்சியாகிறார்..திருக்கணித பஞ்சாங்கப்படி 14.7.2015 அன்று செவ்வாய்க்கிழமை காலை 6.23 க்கு குருபகவான் சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகிறார் கோயில்களில் வழிபாடு 5ஆம் தேதியன்றே நடைபெறும்.

சிம்மம் (மகம் 4 பாதங்கள்,பூரம் 4 பாதங்கள்,உத்திரம் முதல் பாதம் மட்டும்) 

சிம்மம் ராசி நண்பர்களே..உங்கள் ராசிக்கு இதுவரை குரு 12ஆம் இடத்தில் சஞ்சரித்து வந்தார் இதனால் நீங்கள் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல...ராசிக்கு யோகாதிபதி குரு கெட்டால் சகலமும் கெடும் என்பதற்கேற்ப செல்வாக்கும் சரிந்து,பணமுடக்கம் உண்டாகி,தொழில் மந்தமும் சிலருக்கு வேலை இழப்பும் உண்டானது சிலருக்கு சொத்துக்களை விற்கும் நிலையும் உண்டானது....மருத்துவ செலவுகளாலும் உடல் உபாதைகளாலும் பெரிதும் தவித்து போனீர்கள்..சொந்த பந்தம்,நண்பர்கள் எல்லாம் கைவிட்டு கையறுந்த நிலையில் தவித்தீர்கள்...ஒளிந்திருந்த குரு பகவான் இப்போது அதிக பிரகாசத்துடன் உங்கள் ராசிக்கே வருகிறார்..ஜென்ம குருவில் ராமன் சீதையை பிரிந்தார் .....என உங்களை இன்னும் கதிகலங்க வைக்கும் பழமொழி இருப்பினும் கலங்காதீர்கள் சென்ற வருட மோசம் இந்த வருடம் இருக்காது..


நான்காம் இடத்து சனி பெரிதும் உங்களுக்கு இடைஞ்சலா இருக்குது..சனி விருச்சிகத்துல இருக்கும்போது அது உங்க ராசிக்கு நான்காம் இடம் என்பதால் உங்கள் சுகம் பாதிக்குது,,,இடமாறுதல் உண்டாகுது..வம்பு வழக்குகள் கழுத்தை நெரித்தது..அப்போ குருவால ஒண்ணும் செய்ய முடியல..இப்போ குரு ராசியில் நிற்பதால் குரு பார்வை 5,7,9 ஆம் பார்வை செய்வதால் தெய்வ அருளால் பல சிக்கல்களில் இருந்து மீள்வீர்கள் நீங்கள் செய்த புண்ணியம் உங்களை காக்கும்..செல்வந்தர்கள்,பெரிய மனிதர்கள்,அதிகாரத்தில் இருப்போர் உங்களுக்கு இப்போது பகிரங்கமாக உதவ முன் வருவர்.

ஜென்ம குரு எப்போதும் சிக்கல்தான்.. ஜென்ம குருவினால் ஏதாவது இடற்பாடுகள் வந்து சேரும் என்பது விதி..வீடு மாறுதல்,தொழில் செய்யும் இடம் மாறுதல்,சொத்துக்கள் சார்ந்த வில்லங்கம்,உடல் ஆரோக்கியத்தில் பிரச்சினை இருக்கும்..இருப்பினும் முன்பு அதிலிருந்து தப்பிக்க வழி இல்லாமல் இருந்தது இனி வழி பிறக்கும்..ஜென்ம குருவில் பண நஷ்டம்,பெரிதாக ஏமாறுதல் போன்றவை பலருக்கு நடந்துள்ளதால் நீங்கள் எச்சரிக்கையக இருக்க வேண்டும் மற்ற ராசியினருக்கு நடப்பது போலவே ஜென்ம குரு சிம்ம ராசிக்கு நடக்குமா என்றால் நடக்காது காரணம் ராசிக்கு அவர் பஞ்சாமதிபதி...அவர் ராசியில் வலுக்கும்போது ஜென்ம குருவின் பாதிப்புகள் செயல் இழந்துதான் இருக்கும்..அதனால் நீங்கள் தைரியமாகவே இருக்கலாம்...

எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம் -9.5.2016 முதல் 10.8.2016 வரையிலான காலகட்டம் எச்சரிக்கையாக செயல்படுங்கள் குரு வக்ரமாகி மீண்டும் ராசிக்கு 12ல் மறைந்தால் மிக மோசமான பலன்கள் நடக்கும்...ரகு கேது ,சனி இவர்கள் ஏற்கனவே இடைஞ்சல் கொடுக்கும் நிலையில் குருவும் மறையும்போது பணப்புழக்கம் இருக்காது தொழில் சுறுசுறுப்பாக இருக்காது....உடல் ஆரோக்கியம் சட்டென பாதிப்புக்குள்ளாகும்..அதன் பின் பாதிப்பில்லை..

பரிகாரம் -முருகனை செவ்வாய் தோறும் நெய்தீபம் ஏற்றி வழிபடவும்..பிரதோச வழிபாடு செய்து வரவும்


செல்வவளம் உண்டாக

சர்வ ஜன வசிய எந்திரம்,மூலிகை சாம்பிராணி,மகாலட்சுமி கலசம்  போன்ற பிரச்சினைகளை தீர்க்க கூடிய செல்வவளம் தரும் ஆன்மீக பொருட்களை உருவாக்கி விற்பனை செய்து வருகிறோம்... பல நண்பர்கள் இதனை நம்மிடம் பெற்றனர்.. அதன் மூலம் பல நன்மைகளை அடைந்தனர்..பல பிரச்சினைகள் தீர்ந்தது..  ஒரு கவசம் போல் பாதுகாப்பு தருகிறது என போனிலும், நேரிலும் பாராட்டிய நண்பர்களுக்கு நன்றி.மேலும் இதனை பெறவும்,விபரங்களை அறியவும், இங்கு க்ளிக் செய்யவும்..நன்றி..!!Related Article:

Post Comment

2 comments:

பரிவை சே.குமார் said...

இதுவரைக்கும் கஷ்டப்பட்டா... இப்போ உச்சம்... இனியாச்சும் நல்லா இருக்கட்டும்...
குரு பார்வை எல்லாவற்றிலும் ஜெயத்தைக் கொடுக்கட்டும்.

avr vetrivel said...

ஐயா துலாம் ராசி விசகம் நட்சத்திரம்
பிரந்ததேதி 5/2/1983 நோம் 4;30 கலை
எப்படி இருக்கு ஐயா தவரு இருப்பின் மன்னிக்உம்

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner