/> 2015-2016ம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு வீடு,வாகன யோகம்..? ராசிபலன் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Saturday, 22 August 2015

2015-2016ம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு வீடு,வாகன யோகம்..? ராசிபலன்

 2015-2016 ஆம் ஆண்டில் சனியால் பாதிக்கப்பட்டிருக்கும் ராசியினர் ,சுப செலவுகளான வீடு கட்டுதல் மனை வாங்குதல் போன்றவை செய்து கொள்வது நல்லது இல்லையெனில் கெட்ட செலவு எனும் மருத்துவ செலவு,அறுவை சிகிச்சை என வந்து பெரிய தண்டமாக வைத்துவிடும் வய்ப்பு அதிகம்..கடன் நிறைய இருக்கே சார்..எப்படி கார் வாங்குறதுன்னு கேட்குறீங்களா..கடனே உங்களுக்கு போதும் ..அஷ்டம சனி ,ஏழரை சனி இருந்தா கடன் நல்லது.கடனை அடைச்சாதான் பிரச்சினை வரும்..

கடனே இல்லை என்பவர்கள் உடனே ஒரு பேங்க் லோன் போட்டு ஏதேனும் நீண்ட கால முதலீடை செய்து கொள்ளவும்..இது யாருக்கெல்லாம் பொருந்தும்..? மேசம்,துலாம்,தனுசு,விருச்சிகம் ராசியினருக்கு இது பொருந்தும்..இவங்க எல்லாம் சொகுசு வாகனம் வாங்கி ஜாலியா ஊர் சுத்த கிளம்பினா என்னாகும்..? புளிய மரத்தில் உங்களை மோத வைக்க சனிபகவான் .காத்துக்கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்..எனவே நீங்க வகனம் வாங்குதல் வீடு கட்டுதல் என்பதை கவனமுடன் செய்ய வேண்டும்..ஆடம்பர விடு கட்டுறேன் என ஆரம்பித்தால் கட்டிக்கிட்டே இருக்க வேண்டியதுதான் முடிக்க முடியாது..கட்டின வீட்டை வாங்கிக்கொள்வது நல்லது.கார் வாங்கியே ஆகனும்னா..வீட்ல யாருக்கு நல்ல நேரம் என பார்த்து அவங்க பேர்ல வாங்கிக்கலாம்..அல்லது பழைய வாகனமா வாங்கிக்கலாம்.


கும்பம்,கடகம்,துலாம்,விருச்சிகம்  ராசிக்காரங்க சொகுசு வாகனம் வாங்குவதில் அதிக ஆர்வமுடன் இருப்பார்கள்.ஆடம்பர வீடு கட்டுவதிலும் வாங்குவதிலும் ஆசை அதிகம். இவங்களுக்கு அந்த யோகம் அதிகம்.ஆனாலும் ஜாதகப்படி சில விதிமுறைகள் படிதான் இதன் பலம் அதிகரிக்கும்.

சொந்த வீடு,வாகனம் அமையணும்னா சுக்கிரன் நட்பு,ஆட்சி,உச்சம் இருக்கணும். நாலாமிடமும்,சுக்கிரனும் முக்கியம்.சுக்கிரன் நல்லா இருந்தா சொகுசான வண்டி அமையும்.இல்லைனா கொஞ்சம் ஓட்டை ஒடைசலான வண்டி அதாவது செகண்ட்ஸ் அமையும்.வீடும் அதே மாதிரிதான் சுக்கிரன் நல்லாருந்து, நான்காம் இடமும் பாவர் சம்பந்தம் இல்லைனா தார்ஸ் வீடு மாடி வீடு அமையும் இல்லைனா ஓட்டு வீடுதான்.அதிலும் வில்லங்கம் வந்து சேரும்.நாலாம் இடத்தில் சனி சம்பந்தம் ஆச்சுன்னா அந்த வீட்டை பூதம் காவல் காக்கும்.அதாவது முனி,கருப்பண்ண சாமி நடமாட்டம் இருக்கும்னு கிராமப்புறத்துல இருந்து வருபவர்களுக்கு சொல்வோம்.அது உண்மையும் ஆகியிருக்கிறது! அப்படி இருப்பின் அந்த வீட்டில் இருக்கும் வரை சுபகாரியம் நடத்த விடாது..தொழில் பாதிக்கும்...பணம் தங்காது!4ல் பாவர் இருந்தால் வீடு,வாகனம் சந்தோசத்தை தருவதில்லை...பிரச்சினையையும் கொடுக்கும்...

 2015-2016ல் மிதுனம்,கடகம்,கும்பம்,ரிசபம்,ராசியினருக்கு வாகனம் ,வாங்கும் யோகமும்,வீடு வாங்கும் யோகமும் உண்டு.அவர்களுக்கும் கீழ்க்கண்ட விதிமுறைகள் பொருந்தும்..இது பொருந்தாதவர்களுக்கு அமையாது.

 லக்னத்துக்கு நான்காம் இடத்துக்கு எட்டாம் இடமாகிய 11 ஆம் அதிபதி கெடாமல் இருந்தால் கார்,வீடு தங்கும்..அல்லது வாங்கி வாங்கி வித்துக்கிட்டே இருக்கனும்..லக்னத்துக்கு 6,8,12ல் செவ்வாய் இருந்தால் மனை ,வீடு தங்காது...

வாகனம்,வீடு யார் பெயரில் இருக்கோ அவர்கள் ஜாதகப்படி அந்த வீட்டின் சக்தியும்,கூடும் குறையும்.ராசியான வாஸ்து அமைப்புள்ள வீடு அமையும்.

கார் வாங்கும் யோகம் நான்காம் இடம் நன்கு அமைந்தவர்கலுக்கு விரைவிலேயே அமையும்.அத்ற்கு நல்ல திசா புத்தியும் வரணும்.கேது திசை,செவ்வாய் திசை,சூரிய திசையில் கார் வாங்கி விபத்தால் உடல் பாதிப்புகளை அடைந்தவர்கள் அநேகம் பேரை பார்த்திருக்கிறேன்!!

வாகனம்,வீடு வாங்குபவர்கள் நீங்கள் எந்த ராசியாய் இருப்பினும் ஜோதிடரிடம் ஆலோசனை பெறுவது உத்தமம்.யாருக்கு நல்ல நேரம் இருக்கோ,யாருக்கு நான்காம் இடத்தில் அசுபர் இல்லாமல் சுபர் இருக்கோ அவர்கள் பெயரில் வாங்கலம்..சந்திரனுக்கு நான்கு,ராசிக்கு நான்கு இரண்டையும் பார்க்க வேண்டாம்...6,8க்குடையவன் திசை நடந்தால் பழைய வாகனம் வாங்கி கொள்வது நல்லது புதியது வாங்கினால் உடனே பெரிய செலவு வைத்துவிடும்..விபத்தை சந்திக்க நேரும்.3ஆம் அதிபதி திசை நடந்தாலும் நான்காம் அதிபதி திசை நடந்தாலும் வீடு,வாகனத்துக்காக செலவு செய்வர்..சுக்கிரன் ஆட்சி,உச்சம் பெற்றிருந்தல் விலை உயர்ந்த கார் வாங்கும் அமைப்பு உண்டாகும்..ஆடம்பர பங்களா அமையும்..ஆனால் சுக்கிரனும் நல்லாருக்கும் 4ஆம் அதிபதியும்,செவ்வாயும் கெடாமல் இருக்கனும்.

 வாங்கும்போது ..வாகன எண் கவனிங்க.வீடாக இருந்தால் வாசல் திசை பாருங்க....வாங்கும் நாளை கவனிங்க..வாஸ்து நாலு பேரை வெச்சு நல்லா செக் பண்ணிக்குங்க..,உங்க ராசிக்கு சந்திராஷ்டமத்தில் வாங்கிவிட வேண்டாம்..


Related Article:

Post Comment

No comments:

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner