/> பசியின்றி ,உணவின்றி வாழ வைக்கும் சூரிய யோகா | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Thursday, 20 August 2015

பசியின்றி ,உணவின்றி வாழ வைக்கும் சூரிய யோகா

★சூரிய யோகி என்று ஒரு மகான் இருக்கிறார். அவர் சூரியன் உதிக்கும் போது சூரிய ஒளியை தினமும் 20 நிமிடங்கள் பார்த்து அதிலிருந்து சக்தியை எடுத்து கொள்வார். பத்து வருடமாக உணவும் கிடையாது, தண்ணீரும் குடிப்பதில்லை. எத்தனையோ பல்கலைக்கழகங்கள் அவரை வைத்து ஆராய்ச்சி செய்தார்கள்.

★ஒரே அரையில் நான்கு நாட்கள் அடைத்து வைத்து உணவும் தண்ணீர் கொடுக்காமல் அவரை பரிசோதனை செய்துவிட்டார்கள். தண்ணீர் குடிக்க மாட்டார். தண்ணீர் உணவு சாப்பிடாத காரணத்தால் மலம் வராது எந்த கழிவும் வராது . ஆனால் சிறுநீர் வரும். அப்படி என்றால் தண்ணீர் குடிக்க மாட்டார் சிறுநீர் மட்டும் எப்படி வருகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கேட்பார்கள். அவர் என்ன சொன்னார் என்றால் நான் தண்ணீர் குடிப்பதில்லைதான் ஆனால் தண்ணீரை வாய் வழியாக குடிப்பதில்லையே தவிர உடம்பு atmospheric என்று சொல்ல கூடிய வளிமண்டலத்தில் இருக்க கூடிய நீர் ஆவியை தானாகவே உறிஞ்சி கொள்வேன்.

★சாதாரண ஒரு மரம் 14 லிட்டர் தண்ணீர் உறிஞ்சும். 14 லிட்டர் தண்ணீரையே வளிமண்டலத்தில் எடுத்து கொள்கிறது என்று சொன்னால் மனித உடம்பிற்கு தேவையானது 1 1/2 லிட்டர் தான் , ஏன் அது எடுக்காது என்று சூரிய யோகி கேட்பார். உண்மையாக அவரை பரிசோதனை செய்தவர்கள் எப்போதெல்லாம் தண்ணீர் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் தோல் வெளியில் இருந்து தண்ணீரை உறிஞ்சும் என்று கண்டுபிடித்தார்கள்.

★இந்த உடம்பே நீர் ஆவியை உறிஞ்சுகிற அளவிற்கு உறிஞ்சும் சக்தி இருக்கிறது. ஆற்றல் குறையும்!!!!. எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் நடந்து செல்வார். அவர் வேகத்திற்கு நம்மால் நடக்கவும் முடியாது. கழிவு வெளியேற்றமும் கிடையாது. உணவும் தேவையில்லை. கையில் பணம் எடுத்து கொள்ளாமல் வெரும் கையோடு போவார். டீ குடிப்பதற்கு கூட 5 ரூபாய் வேண்டும். நாளு பேர் கிட்ட கை நீட்டி பிச்சையாவது எடுக்கனும். எதுவுமே தேவையில்லைனா!!!!!!!!. அவரை வீட்டுக்கு வரவேற்று மரியாதையா தண்ணீர் கொடுக்கிறேன் என்று கூட சொல்ல முடியாது.

★ அப்படினா தனக்கு தேவையானதை ஐம்புலன்களில் இருந்து உறிஞ்சி கொள்ளுதல் அந்த அளவிற்கு இந்த உடம்பில் ஆற்றல் உள்ளது என்பதை அந்த சூரிய யோகி நிரூபித்து உள்ளார். இன்னும் உயிரோடு தான் இருக்கிறார். இப்போது கல்கத்தாவில் இருக்கிறார். அடிக்கடி தமிழ்நாட்டுக்கு நினைத்தால் வந்துவிடுவார். வந்து சும்மா ஒரு நாள் கூடவே இருந்து சூரிய சக்தியை எப்படி ஈர்ப்பது என்று கற்றுத்தருகிறார்.

★செல்போனுக்கு battery down ஆகும் போது charge செய்வது போல மனிதனுக்கும் சக்தி குறையும் போது கண்களின் மூலமாக சூரியனில் இருந்து charge செய்துகொள்ளலாம்.

★ உயிரையும் மனதையும் பார்க்க முடியாது என்று சொல்வார்கள். ஆனால் அதை பார்கலாம்.

★சூரிய தியானம் செய்துவிட்டு கண்களை மூடி புருவமத்தியை கவனிக்கும் போது உயிர் என்பது ஜோதி வடிவத்தில் தெரியும். உயிர் என்பது கண்ணுக்கு தெரியாத ஒரு மிக மிக நுண்ணிய பொருள். ஒரு பசு மாட்டின் ரோமத்தை எடுத்து 1000 துண்டுகளாக வெட்டி அந்த ஆயிரம் துண்டில் ஒரு துண்டை எடுத்து 10000 துண்டுகளாக வெட்டி கிடைக்கும் ஒரு துண்டின் அளவே உயிர். இதுவே இறைதுகள், பரமணு, வெட்டவெளி, கடவுள்துகள், சுத்தவெளி என பல பெயர்களில் கூறப்படுகிறது.

★உயிரின் படர்க்கை நிலையே மனம். உயிரில் இருந்து வெளிபடும் சீவகாந்த ஆற்றலே மனமாக இயங்குகிறது. சூரிய தியானம் செய்துவிட்டு கண்ணை மூடி புருவமத்தியை கவனிக்கும் போது மனம் என்பது spiral shape ல் சுற்றும். யார் வேண்டுமானாலும் மனதையும் உயிரையும் பார்கலாம்.

★உணவு தேவைப்பட்டால் தான் காசு தேவை உணவே தேவையில்லை என்றால் பணம் என்ற அத்தியாவசிய தேவையே இல்லாமல் போய்விடும்.


Related Article:

Post Comment

No comments:

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner