/> தமிழ் புத்தாண்டு ராசி பலன் துன்முகி 2016 மிதுனம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Wednesday, 13 April 2016

தமிழ் புத்தாண்டு ராசி பலன் துன்முகி 2016 மிதுனம்

தமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 மிதுனம் 

மிதுனம் ;அறிவுக்கொழுந்துகள் என இவர்களைத்தான் சொல்வார்கள் ஆமங்க புதன் அறிவு கிரகம் ...அவர் ஆட்சி பெறும் ராசி மிதுனம்..அப்போ அறிவாளிகள் மிதுனராசிக்காரர்கள்தானே....! அதே சமயம் தந்திரசாலிகள், நகைச்சுவை ததும்ப, ததும்ப பேசக்கூடியவர்கள்..புதுபுது ஐடியாக்கள் சொல்லும் ஐடியா டிப்போவும் இவங்கதான்..தந்திரமா தப்பிக்கும் சூட்சுமங்கள் நிறைந்த குடோனும் இவங்கதான்...அழகா பேசி காரியத்தை சாதிச்சுக்குவாங்க..30 வயசு வரை நண்பர்கள்தான் உலகம்..அதுக்கு மேலதான் உலகத்தை புரிஞ்சுக்குவாங்க...படிச்சு வாங்குன பட்டத்தை விட அடிபட்டு வாங்கின பட்டங்கள் இவங்க கிட்ட அதிகம்..வாழ்வில் நிறைய சோதனைகளை தாண்டி வந்திருப்பீர்கள் ..

உங்க ராசிக்கு 6ஆம் இடத்தில் ஒன்றரை வருடங்களாக சனி மறைந்து இருக்கிறார் ..அவர் உங்க ராசிக்கு பாக்யாதிபதி.அவர் மறைந்து இருப்பது நல்லதா என கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்..சனி மறைந்தா அதிர்ஷ்டம் கொட்டும் என்றுதான் ஜோதிட நூல்கள் சொல்கின்றன..ஆனா மிதுன ராசிக்கு அவர் சுபர்.அவர் ராசிக்கு மறைவது நல்லது அல்ல..இதனால் தொழில் ரீதியா நிறைய சிக்கல்களையும், அலைச்சல்களையும் சந்தித்து இருப்பீர்கள்...எட்டுக்குடையவனும் சனியாக வருவதால் அவர் மறைவது பெரும் நஷ்டத்தை தடுக்கும்..என்றும் எடுத்துக்கொள்ளலாம்..

சிலர் தந்தைக்கு மருத்துவ செலவும்,சிலர் கணவன் அல்லது மனைவிக்கு மருத்துவ செலவும் செய்திருப்பீர்கள்..பூர்வீக சொத்து சிக்கலில் இருக்கும்..பங்காளிச்சண்டைக்கும்,மனக்கசப்பிற்கும்  குறைவிருக்காது...

குரு 3ஆம் இடத்தில் இருப்பது எப்போது வேண்டுமானாலும் மீண்டும் மருத்துவ செலவு வரும் என்பதை காட்டுகிறது...இப்போது தாய்க்கு தந்தைக்கு மனைவிக்கு என மாறி மாறி மருத்துவ செலவு செய்தபின் இன்னொன்றா என அலறுவது கேட்கிறது உங்கள் வாழ்க்கை துணை அஷ்டம சனி,ஏழரை சனி காரராக இருந்தால் உங்களுக்கு ஒரு மருத்துவ செலவு வந்துதான் தீரும்..

சித்திரை மாசத்தை பொறுத்தவரை ராசிக்கு யோகாதிபதி உச்சமாகி தான் ஆரம்பித்து இருக்கிறது...பூர்வபுண்ணியாதிபதி உச்சமானால் நினைத்தை நடத்தி வைக்கும் ...வருமானம் அதிகரிக்கும்...பெரிய தொகை வந்து சேரும் புதிய சொத்துக்கள்,வாகனம்,காலி மனை ஆகஸ்ட் மாதத்துக்கு பின்னர் வாங்குவீர்கள்..கடன் பிரச்சினையில் இருப்பவர்கள் அதிலிருந்து மீள்வார்கள்


 குரு கன்னிக்கு வந்து விட்டால் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தை பார்ப்பார் இது திடீர் அதிர்ஷ்டத்தை தரும் ..கடன் நெருக்கடிகள் தீரும்..பத்தாம் இடத்தை பார்ப்பதால் தொழில் உயர்வு பெறுவீர்கள்..சம்பள உயர்வு எதிர்பார்த்தபடி கிடைக்கும்..தந்தை மூலம் எதிர்பார்த்த ஆதாயங்களும் கிடைக்கும்...


குலதெய்வம் கோயில் போய் ரொம்ப நாள் ஆனவர்கள் ஒருமுறை உங்க நட்சத்திரம் வரும் நாளில் சென்று வழிபட்டு அபிசேகம் செய்து அன்னதானம் செய்து விட்டு வாருங்கள் திருப்பதி போய் ரொம்ப நாள் ஆகியிருந்தாலும் போய் வாருங்கள் அல்லது ஸ்ரீரங்கம் சென்று வரலாம்..

 
சித்ரா பெளர்ணமி அன்னதானம்;

சித்திரை மாதத்தின் பெரும் சிறப்பு, சித்ரா பெள்ர்ணமி தினமாகும்..புராண‌க் கதைக‌ளி‌ன்படி, ம‌னித‌ர்க‌ளி‌ன் பாவ, புண‌ணிய‌க் கண‌க்குகளை எழுது‌ம் ‌சி‌த்ர கு‌ப்த‌ன் அவத‌ரி‌த்த நாளு‌ம் இ‌‌ன்றுதா‌ன்....அன்று நாம் செய்யும் புண்ணிய காரியங்கள் பல ம்டங்கு பலன்களை கொடுக்கும்...

சித்ரா பெளர்ணமி வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி வருகிறது.. அன்று உடல் ஊனமுற்றோர் ,ஆதரவற்ற முதியோர்கள்,குழந்தைகளுக்கு வழக்கம் போல அன்னதானம்,ஆடைதானம் செய்ய இருக்கிறோம்..இணைந்து செய்ய விரும்புவோர், மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும் sathishastro77@gmail.com cell;9443499003

Related Article:

Post Comment

No comments:

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner