/> தமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 ;மீனம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Sunday, 24 April 2016

தமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 ;மீனம்

தமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 ;மீனம்

பூரட்டாதி 4ஆம் பாத்அம் ,உத்திரட்டாதி,ரேவதி ஆகிய நட்சத்திரங்களை கொண்ட மீனம் ராசி நண்பர்களே....

குருவின் ராசியில் பிறந்த உங்களுக்கு செல்வாக்குக்கும் ,புகழுக்கும் குறைவிருக்காது...ஊரில் மதிப்பும்,மரியாதையும் எப்போதும் இருக்கும் உங்கள் தாழ்வு மனப்பான்மை தான் சில சமயம் நம்மை ஒருத்தனும் மதிக்கறதில்லையே என்று எண்ண வைக்கும்...ஆனால் உண்மை என்னவெனில் உங்கள் அதிரடியான பேச்சும்,அறிவுப்பூர்வமான யோசனைகளும் பலருக்கும் பயன்படுவதால் யாரும் உங்களை உதாசீனப்படுத்த மாட்டார்கள்.

பூரட்டாதி ராசியினர் பணம் சம்பாதிப்பதில் குறியாக இருப்பார்கள் பெரிய ஆட்களுடன் எப்போதும் நட்பில் இருப்பார்கள் பொதுமக்கள் சம்பந்தமான அன்றாடம் அவர்களை சந்திக்கும்படியான துறையில் பிரகாசிப்பார்கள் உத்திரட்டாதி கடுமையாக உழைப்பார்கள் அலைச்சலும் அதிகம். பல தடைகள் ஏற்படினும் கடினமான முயற்சியால் அவற்றை உடைத்து வெற்றி காண்பார்கள்.

ரேவதி அறிவாளிகள்...கலகலப்பாக பேசுவார்கள் ..கடைசி ராசியில் கடைசி நட்சத்திரத்தை சார்ந்தவர்கள் என்பதால் எதுவும் தாமதமாக தான் கிடைக்கும் ..குலதெய்வத்தை வருடம் தோறும் வணங்குவது அவசியம்.வியாபாரம் செய்வதில் ,கமிசன் தொழில் செய்வதில் சாமர்த்தியசாலிகளாக இருப்பார்கள்..கணக்கு, வழக்கு துல்லியமாக கடைபிடிப்பர்கள். நல்ல பேச்சு திறமை நிறைந்தவர்கள்..

துன்முகி ஆண்டு பிறக்கும்போது உங்கள் ராசிக்கு யோகாதிபதி செவ்வாய் ஆட்சியாக இருக்கிறார்...பாக்யாதிபதி வலுத்து இருப்பதால் தெய்வ அருள் கிடைக்கும் .பெரியோர்கள்,முக்கியஸ்தர்கள் ஆதரவு கிடைக்கும்..தந்தை வழியில் ஒரு ஆதாயம் கிடைக்கும்.பூர்வீக சொத்து பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

ராசிக்கு ஆறாம் அதிபதி இரண்டில் உச்சம் அடைவதால் ,ஏதேனும் ஒரு வழியில் எதிர்பாராத பண உதவி கிடைக்கும் அதன் மூலம் பணப்பிரச்சினைகள் தீரும்.புதுசா கடனாவது கிடைக்கும்...அப்ப பழைய கடன்..? என மிரள வேண்டாம்,...ராசிக்கு 6ல் இப்போது குரு இருக்கிறார் ..குரு ஆறில் இருந்தால் கடன் நெருக்கடிகள் இருக்கும் மருத்துவ செலவுகள் இருக்கும் தொழில் மந்தமாக இருக்கும் வட்டி கட்ட முடியாத சூழலும் சிலருக்கு இருக்கும் .குடும்பத்தில் அடிக்கடி வாக்குவாதம் நிம்மதி இன்மை என தவிக்கும் உங்களுக்கு ஆக்ஸ்ட் மாத குருப்பெயர்ச்சி யோகத்தை தருவார் எல்லா பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பார் ..ஒன்பதாம் இடத்து சனி தொழில் மந்தத்தை உண்டாக்கினாலும்,தந்தை வழியில் சில சங்கடங்களை உண்டாக்கினாலும் அஷ்டம சனிக்கு எவ்வளவோ பரவாயில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அஷ்டம சனி முடிஞ்சும் பிரச்சினை தீரவில்லையே என வருந்தும் உங்களுக்கு குருபலம் வந்தால்தான் வசந்தம் வரும்....இப்போதைய கிரக நிலைகள் அதாவது சித்திரை மாதம் நன்றாகவே இருக்கிறது..அதனால் நெருக்கடிகள் தீரும். குரு தற்சமயம் வக்ரமாக இருப்பதால் ஆறாமிடத்து குரு கடுமையாக பாதிக்காது. நிம்மதியாக இருங்கள்.

பழனி முருகனை கிருத்திகையில் தரிசனம் செய்து வாருங்கள் ...நல்லது நடக்கும்.


Related Article:

Post Comment

No comments:

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner