/> வசதியான கணவர் அமையும் யோகம்;திருமண பொருத்தம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Tuesday, 5 April 2016

வசதியான கணவர் அமையும் யோகம்;திருமண பொருத்தம்


வசதியான கணவர் அமையும் யோகம்

    
பெண்கள் ஜாதகத்தில் ஏழாமிடம் களத்திர ஸதானம் என்றும் எட்டாமிடம் மாங்கல்யஸ்தானம் என்றும் நம் ஆன்றோர்கள் நிர்ணயித்துள்ளார்கள். அது போல் இரண்டாம் வீடு குடும்ப ஸ்தானத்தை வலியுறுத்துகிறது. ஒரு பெண் ஜாதகத்தில் 2,7 ஆகிய இடங்களை வைத்து எப்படிப் பட்ட கணவர் வருவார் என்பதை எளிதாக நிர்ணயம் செய்ய முடியும். திருமணத்துக்கு குருபலம் மிகவும் முக்கியமாகும். 

ஒருபெண்ணின் ஜாதகத்தில் 2,5,7,9,11 ஆகிய வீடுகளில் குரு கோசார ரீதியாக வரும்போது திருமணம் நடைபெறுகிறது. திருமணம் ஆகாமல் திருமண வயதை அடைகிறது. பெண்களுக்கே இந்த அமைப்பு உண்டாகிறது. எல்லோருக்கும் ஏற்படுவதில்லை. ஒரு பெண் ஜாதகத்தில் 2,7-ல் சுபகிரகம் வீற்றிருந்து 7ம் அதிபதி உச்சம் பெற்று காணப்பட்டால், அந்தப் பெண்ணின் கணவன் நல்ல வசதி படைத்தவனாக இருப்பான். கணவர் வந்த பிறகு அந்தப் பெண்ணின் வாழ்க்கை உயர்ந்தபடி இருக்கும் ஏழாம் அதிபதி லாபம் பெற்று 11ம் வீட்டில் காணப்பட்டால் கணவன் செல்வந்தராகவும், உயர்ந்த பதவி வகிப்பவராகவும் திகழ்வார். ஏழாம் அதிபதி ஏழாம் வீட்டைபார்வை செய்தாலும் அழகான, வசதியான நல்ல குணம் வாய்ந்த கணவர் அமையும் யோகம் உண்டாகும்.

     ஏழாம் அதிபதி 6,8,12ல் அமையப் பெற்றால் தாமத திருமணமும் ஒற்றுமையில்லாத கணவன் அமையும் யோகமும் உண்டாகும்;. அது போல ஏழாம் வீட்டில் சனி, செவ்வாய், ராகு, கேது போன்ற பாவிகள் இருந்தால் வசதி வாய்ப்பில் குறைந்து கணவராகவும் மiனிவயுடன் அடிக்;கடி சண்டைபோடும் கணவராகவும் வருவார்.

     ஏழில் புதன் அமையப்பெற்றால் அத்தை மகனை கைப்பிடிக்கும் யோகம் உண்டாகும். ஏழில் சூரியன் இருந்தால் மனைவியுடன் ஒத்துப் போகாத கணவர் கிடைப்பார்.

     ஏழாம் அதிபதி நான்கில் காணப்பட்டால் தாய் வழி உறவில் கணவர் அமைவார். திருமணத்திற்கு பிறகு பூமி, வீடு, வாகனம் யாவும் அமையப்பெறும்.

     ஏழாம் அதிபதி ஐந்தில் இருந்தால் உறவினர் வழியில் கணவன் அமைய வாய்ப்பில்லை இவர்களுக்கு காதல் திருமணமோ அல்லது கலப்புத் திருமணமோ நடக்க வாய்ப்பு உள்ளது.

     ஏழாம் அதிபதி ஆறில் அமையப்பெற்றால் மாமன் வழி உறவில் மணாளன் அமையும் யோகம் உண்டாகிறது.

     ஏழாம் அதிபதி ஏழில் அமையப்பெற்றால் அத்தையின் மகனையோ அல்லது உறவினர் ஒருவரையோ மணக்கும் யோகம் வாய்க்கும்.

     ஏழாம் அதிபதி வீட்டில் காணப்பட்டால், உறவினர் வழியில் வரன் அமையாது. திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவியிடயே கருத்து வேறுபாடு உண்டாக வாய்ப்பிருக்கிறது.

     ஏழாம் அதிபதி ஒன்பதில் காணப்பட்டால் அயல்நாடு, வெளிமாநிலம், வெளியூர் போன்ற இடங்களிலிருந்து கணவர் வருவார். திருமணத்துக்குப் பிறகு செல்வம் செல்வாக்கு மேலும் மேலும் அதிகரிக்கும் ஏழாம் அதிபதி பத்தில் ;இருந்தால் தந்தை வழி உறவில் கணவர் அமைவார். திருமணத்துக்குப் பிறகு தொழில் பொருளாதார நிலையாவும் சிறப்பாக இருக்கும்.

     ஏழாம் அதிபதி பதினொன்றில் இருந்தால் அறிமுகமான குடும்பத்தில் இருந்து கணவன் அமைவார். அவர் உயர்ந்த உத்தியோகத்தில் பணியாற்றுவார்.

     திருமணத்துக்கு பிறகு லாபமும் வெற்றியும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.

     ஏழாம் அதிபதி பனிரெண்டில் இருந்தால் உறவினர் வழியில் கணவர் அமையாது.            


Related Article:

Post Comment

No comments:

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner