/> 2017 | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Wednesday, 28 June 2017

எந்த பிரச்சினைக்கு எந்த கோயில் போகலாம்..? சக்தி வாய்ந்த கும்பகோணம் கோயில்கள்


பிரச்சனைகளை தீர்க்கும்அற்புத கும்பகோணம் ஆலயங்கள்..


நீங்கள் எப்போது கும்ப கோணம் சென்றாலும், இந்த  மிக முக்கியமான , கும்பகோணம் நகரைச் சுற்றியுள்ள ஸ்தலங்களை தரிசித்து வாருங்கள். ரத்தினச் சுருக்கமாக , இந்த ஆலயங்களுக்கு சென்று வருவதால் ஏற்படும் முக்கிய பலன்களை கொடுத்துள்ளேன்.

சில ஆலயங்களைப் பற்றி அந்த வரிகளை படிக்கும் போதே , உங்கள் உள்ளுணர்வு அந்தகோவிலுக்கு போக வேண்டும் என்று சொல்லும். அந்த ஆலயத்திற்கு அவசியம் சென்று வாருங்கள். உங்கள் பூர்வ ஜென்ம ,கர்ம வினைகள் நிச்சயம் அகலும். 

எல்லா ஆலயங்களுக்கும் செல்ல முடியவில்லை என்றாலும், கலக்கம் வேண்டாம். அதே நேரத்தில் , உங்களால் மிகத் திருப்தியாக பூஜை , அபிசேகம், அலங்காரம் செய்ய முடியவில்லையே என்று கூட மனக்கலக்கம் வேண்டாம்.ஒரு அர்ச்சனை கூட செய்ய வேண்டாம்.. ஒரே ஒரு விஷயம் மட்டும் தவறாமல் செய்யுங்கள்... 

மூலவருக்கு முன்பாக, அவரைப் பார்த்த படியோ , அல்லது உங்களால் முடிந்தவரை அருகிலோ - அல்லது மற்றவருக்கும் தொந்தரவு இல்லா வண்ணம் - ஒரு மணி நேரம் வரை வெறுமனே அமர்ந்து ,மனத்தால் இறைவனிடம் உங்கள் குறைகளை தீர்க்க வேண்டி மன்றாடுங்கள். முடிந்தால் மனதுக்குள் - ஓம் சிவ சிவ ஓம் மந்திரம் ஜெபிக்கலாம், அல்லது காயத்ரி மந்திரம் ஜெபிக்கலாம். ஸ்ரீ ருத்ரம் ஜெபிக்கலாம். 

சில சமயங்களில் ஒரு மணி நேரம் ஒதுக்க முடியாத சூழ்நிலை இருந்தால் , குறைந்த பட்சம் 12 நிமிடங்களாவது , அமர்ந்து வாருங்கள். இறைவனின் சிருஷ்டியில் எல்லா நாளும், நேரமும் புனிதமானதே. ஒரு சில மணித்துளிகள் மட்டும் , பலப் பல காரணங்களால் - மிக சக்திவாய்ந்த தருணங்கள் ஆகி விடுகின்றன. 

நல்ல விஷயங்களை , நீங்கள் அறிந்து உணந்த விஷயங்களை - உங்கள் நண்பர்களுக்கும், குடும்பத்திலும், உங்கள் குழந்தைகளுக்கும் தக்க நேரத்தில் எடுத்து சொல்லுங்கள். லட்சம் லட்சமாக சம்பாதிக்கும் வெளிநாட்டு அன்பர்களும் , இந்தியாவை ,குறிப்பாக தமிழகத்தை ரொம்பவே விட்டுப் போவதாக நினைப்பது , நம் ஊர் ஆலயங்களுக்காகத்தான்.  இங்கேயே இருக்கும் வாய்ப்பு கிடைத்த அனைவரும், அதை பயன்படுத்திக் கொள்வது நல்லதுதானே..!

மன நோய் அகற்றும் " திருவிடை மருதூர் :

சிவ பெருமான் தன்னைதானே பூஜித்து,வழிபட்ட லிங்கமானதால் இவர் "மகாலிங்கமானார்". இவரை தரிசிப்போர் மன நோய் நீங்கப் பெறுவர். நீண்ட நாட்கள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், இத் தல நாயகனை வழிபட்டு வந்தால் குணம் அடைவர். மன நோய் கொண்டுள்ளோர், இத்திருக்கோயிலின் வெளிச் சுற்றை வலம் வந்தால் குணம் பெறுவர். கும்பகோணத்தில் இருந்து மாயவரம் செல்லும் சாலையில் சுமார்10 கி.மீ. தொலைவில் உள்ளது இத் திருத் தலம். 

புற்றுநோய் தீர்க்கும் " திருந்து தேவன் குடி அருமருந்தம்மை :

புற்று நோய் தீர்க்கும் தலம் திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் திருக்கோவில். 
கற்கடேஸ்வரர் வீற்றிருக்கும் " திருந்துதேவன்குடியின் " நாயகி, தீரா நோய்கள் தீர்க்கும் அருமருந்து அம்மை. இங்கு,அம்மனுக்கு சார்த்தப்படும் எண்ணெய்,பின்னர் வேண்டுவோர்க்கு, பிரசாதமாய் வழங்கப்படுகிறது. இது, சர்வ வியாதிகளுக்குமான ஒரு நிவாரணி. அதிலும், மிக குறிப்பாக, புற்று நோய் தீர்க்கும் மருந்தாக கருதப்படுகிறது. நோய் தீர்க்கும் தலம் இது என்பதை உணர்த்தும் வண்ணம்,வைத்தியர் ஒருவரின் சிற்பம் ஒன்று கோயிலின் வெளிப்புறம், அவர் மருந்து தயாரிப்பதைப் போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. 

கடன் தொல்லைகள் தீர்க்கும்  திருச்சேறைருண விமோச்சனர் :

கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் திருவாரூர் வழியில்அமைந்துள்ளது " திருச்சேறை உடையார் கோவில் ". இங்கு தனி சந்நதியில் " ருணவிமோச்சனராய் " அருள்பாளிக்கிறார் பரமேஸ்வரன். தொடர்ந்து 11திங்கட்கிழமைகள் அர்ச்சனை செய்து, 11 வது வாரம் அபிஷேக ஆராதனை செய்ய அனைத்து வித கடன் தொல்லைகளும் தீர்கிறது. இச் சந்நதியின் முன் நின்று "கூறை உவந்தளித்த கோவே யென்று அன்பர் தொழச் சேறை உவந்திருந்த சிற்பரமே " என மனம் உருக 11 முறை பாராயணம் செய்தால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும்.
      
ஒருவர் முற்பிறவிகளில் செய்த பாவங்கள் அனைத்தும் அடுத்தடுத்த பிறவிகளில் தொடர்கிறது. முன்வினைப் பயன்கள் அனைத்தும் பிறவிக் கடன்களாகின்றன. முற் பிறவி தீவினைகள் நீங்கவும், இப் பிறவியின் கடன்கள் தீரவும், வறுமை நீங்கி சுபிட்சமான வாழ்க்கை கிடைத்திடவும் வணங்க வேண்டிய இறைவன், திருச்சேறையில் செந்நெறியப்பர் ஆலயத்தில், தனி சந்நதி கொண்டுள்ள " ரிண விமோஷன லிங்கேஸ்வரர் ". கும்பகோணம் - திருவாரூர் சாலையில் கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது இத் தலம். ரிண விமோஷனரை 11 திங்கட்கிழமைகள் அபிஷேக, ஆராதனை செய்து வழிபட்டு, பின்னர் மகாலஷ்மியையும், ஜேஷ்டா தேவியையும், பைரவரையும் வணங்கினால் வழி படுபவரது வறுமையும், கடன்களும் தீரும். 

இத் தலத்தில் துர்க்கை சிவ துர்க்கை, விஷ்ணு துர்க்கை, வைஷ்ணவி என மூன்று வடிவங்களாக அருளுகிறாள். மாசி மாதத்தில் 13,14,15 தேதிகளில் சூரியனது கிரணங்கள் இறைவன் மீதும், இறைவி மீதும் நேரடியாக விழுவது சிறப்பு.  

சங்கடங்கள் தீர்க்கும் திருபுவனம்  சூலினி,பிரத்தியங்கரா சமேத சரபேஸ்வரர்:
      
கடன் தொல்லைகளில் இருந்து விடுபட,வழக்குகளில் வெற்றியடைய, பில்லி,சூனியம், ஏவல்களில் இருந்து விடுபட பரமேஸ்வரன், சரபேஸ்வரராய் வீற்றிருந்து அருள்பாளிக்கும் " திருபுவனம் " சென்று வழி படலாம். இவர் வழிபடுபவரின் அனைத்து சங்கடங்களையும் தீர்ப்பவர். சூலினி,பிரத்தியங்கரா என தன் இரு தேவியருடன் தனி சந்நதி கொண்டு வீற்றிருக்கும் சரபரை 11 விளக்குகள் ஏற்றி, 11 முறை சுற்றி வந்து, 11வாரங்கள் வழிபட சங்கடங்கள் அனைத்தும்தீர்ந்து சுக வாழ்வு கிடைக்கும். சரபரை வழிபட ஞாயிற்று கிழமை ராகு கால வேளை சிறந்தது.

பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர ,வணங்க வேண்டிய  ‘ஸ்ரீவாஞ்சியம்’ :
      
மன வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்று சேர வழிபட வேண்டிய திருத் தலம், காசிக்கு இணையாக கருதப்படும், 

கும்பகோணத்தை அடுத்துள்ள "ஸ்ரீவாஞ்சியம்". காசி தேசத்தில் புண்ணியமும் வளரும். பாவமும் வளரும். ஆனால் இங்கு புண்ணியம் மட்டுமே வளரும். ராகுவும், கேதுவும் ஒரே திருமேனியில் காட்சி தரும் இத் தலம் பிள்ளைப் பேறு அருளும் தலம். ஏழரை, அஷ்டம மற்றும் கண்டகச் சனி திசைப் பரிகாரத் தலமாகும். இங்கு ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்திகள் செய்ய நீண்ட ஆயுள் கிட்டும். இங்குள்ள குப்த கங்கையில் நீராடி பித்ரு காரியங்களைச் செய்தால் பித்ரு தோஷ நிவர்த்தி கிடைக்கும். ராகு கேதுவை வழி பட கால, சர்ப்ப தோஷம் நீங்கும். இத் தலத்தில் ஓர் இரவு தங்கினாலேயே செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து முக்தி கிடைக்கும். ஸ்ரீயாகிய திருவை (மஹாலஷ்மி) பரந்தாமன் தனது வாஞ்சையில் விரும்பி சேர்த்ததால் இத் தலம் ஸ்ரீவாஞ்சியம் எனப் பெயர் பெற்றது. இங்குள்ள குப்த கங்கையில் நீராடி இறைவனையும், அம்பாளையும், மஹாலக்ஷ்மியையும் வழிபட்டால் பிரிந்துள்ள தம்பதியர் பிணக்குகள் அனைத்தும் தீர்ந்து ஒன்று சேர்வர்.

அட்சரப்பிரயாசம் ( எழுத்தறிவு ) பெற இன்னம்பூர் எழுத்தறிநாதர்:
    
அகத்திய முனிவர் இத் தலம் வந்து எழுத்தறிநாதரை வழிபட்டு இலக்கணங்களை கற்றுக் கொண்டதால், இன்றளவும் இத் தலத்தில் சிறு பிள்ளைகளுக்கான அட்சரப்பியாசம் நடைபெறுகிறது.
குழந்தைகளை பெற்றவர் இத் தலம் அழைத்து வந்து இங்குள்ள நாதனின் முன்பாக எழுத்து பயிற்சி தருகின்றனர்.இத் தல நடராஜரின் விக்கிரகத்தில் இடப் பக்கம் கங்கா தேவியும், வலப் பக்கம் நாகமும் காட்சியளிப்பது அற்புதமான காட்சி. இத் தலம் சஷ்டியப்தபூர்த்தி, பீம ரத சாந்தி ஹோமங்கள் செய்ய மிகச் சிறந்தது.

தடைபட்ட திருமணம் நடக்க கோனேரிராஜபுரம் என்றழைக்கப்படும் திருநல்லம் :
        
முக்கண்ணன் " உமா மகேஸ்வரராய் "மேற்கு நோக்கி வீற்றிருக்க, " அங்கவள நாயகியாய் " அம்பாள் கிழக்கு நோக்கி வீற்றிருப்பது, இருவரும் மாலை மாற்றிக் கொள்ளும் வண்ணம் அமர்ந்திருப்பதாய் ஐதீகம். பூமாதேவி, ஈஸ்வரனை பூஜிக்க வேண்டி, தேவ சிற்பி விஸ்வகர்மா ஆலயம் அமைக்க, தேவகுரு பிரகஸ்பதி மகேஸ்வரனை பிரதிஷ்டை செய்த,திருமணத் தடை அகற்றும் திருக் கோயில் இது. இத் தல நாயகனையும், அம்பாளையும் வழிபட்டால், தடைபட்ட திருமணங்கள் இனிதே நிறைவேறும். " பொல்லாத் துயரையும் பொடிப் பொடியாக்கும் இறைவன் " என இத் தல நாயகனை திருநாவுககரசர் பாடியுள்ளார். இத் தலத்தில், நோய் தீர்க்கும், " ஸ்ரீ வைத்திய நாதர் " சந்நதியும் அமைந்துள்ளது. இத் தலம்,திருவிடை மருதூரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணம் - வடமட்டம் பேருந்து வழித் தடத்தில்,
கோனேரிராஜபுரம் என்ற பஸ் நிறுத்தத்தில் இருந்து 1 கி,மீ. தொலைவில் ஆலயம் உள்ளது. 

 தீரா நோய்கள் தீர்க்கும் "வைத்தீஸ்வரன் கோவில் வைத்திய நாதர் :
      
மயிலாடுதுறை - சீர்காழி வழித் தடத்தில் அமைந்துள்ள நோய் தீர்க்கும் திருத் தலம் " வைத்தீஸ்வரன் கோவில் ". செவ்வாய் தோஷம் நீக்கும் " அங்காரகனுக்குரிய " திரு கோயிலான இது ஒரு பிரார்த்தனை திருத்தலம். வேண்டுபவரது பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேற்றும் வைத்யநாதர்,தையல் நாயகி சமேதராய் அருளும் திருக்கோயில் இது. இங்குதான் முத்துசாமி தீட்சிதர் பதிகம் பாடி கண்ணொளி பெற்றார்.18 சித்தர்களில் ஒருவரான, நோய்கள் தீர்க்கும் "தன்வந்திரி" இத் தலத்திற்கு உரியவர். அப்பர் பாடிய தேவாரத்திற்கு ஏற்ப, இத் தலத்தில் தரப்படும் மருந்து உருண்டையை உட்கொண்டு, இத் தல சித்தாமிர்த திருக்குளத்து நீரை பருகினால் தீராத வியாதிகள் அனைத்தும் தீரும் என்பது நிச்சயம். இங்குள்ள சடாயு குண்டத்தில் உள்ள சாம்பலை பூசிக் கொள்ள நோய்கள் தீருகின்றன. 

செல்வம் பெற வணங்க வேண்டிய தலம் "திருவாடுதுறை":
      
கும்பகோணம் - மாயவரம் சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமர் 10 கி.மீ.தொலைவில் உள்ளது ஆடுதுறை எனப்படும் "திருவாடுதுறை". 

ஞானசம்பந்தரிடம் அவர் தந்தை யாகம் செய்ய தேவையான பொருள் கேட்க, சம்பந்தரும் இத் தல இறைவன் மாசிலாமணி ஈஸ்வரரை வேண்டி பதிகம் பாட,பரம் பொருளும் 1000 பொற்காசுகள் கொண்ட பொற்கிளியை பலி பீடத்தின் மீது வைத்தருளினார்.

சரஸ்வதி கடாட்சம் தரும் கூத்தனூர்:
      
மாணவர்கள் கல்விச் செல்வம் பெறவும்,கலைமகளின் பரிபூரண அருளை பெறவும் வழி பட வேண்டிய தலம் ஞானசரஸ்வதி காட்சி தரும் "கூத்தனூர்". 

நமது பிறப்புகள் அனைத்திலும் நம்முடன் வருவது நாம் பெற்ற கல்விச் செல்வம் மட்டுமே. மயிலாடுதுறை - திருவாரூர் வழித் தடத்தில் பேரளத்தை அடுத்து அமைந்துள்ளது ஞான சக்தியாய் மகா சரஸ்வதி அருளும் கூத்தனூர். வெண்ணிற ஆடை உடுத்தி, வெண் தாமரையில் கிழக்கு முகமாய் வீற்றிருக்கும் சரஸ்வதி தேவி ஆய கலைகள் அனைத்தையும் அருள்பவள். இவள் வாக்கு வன்மையை தருபவள். வாழ்வில் உயர அனைவரும் வழிபட வேண்டியவள். ஞானம் அருள்பவள்.
மேலும் வாசிக்க"எந்த பிரச்சினைக்கு எந்த கோயில் போகலாம்..? சக்தி வாய்ந்த கும்பகோணம் கோயில்கள்"

Post Comment

Friday, 23 June 2017

செல்வம் குவிய, கடன் தீரச்செய்யும் மயில் இறகு பரிகாரம்


மயில் இறகை வீட்டில் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா??
மயில் இறகு என்றதும், சிறு வயதில் மயில் இறகை புத்தகத்தினுள் வைத்து, அது குட்டி போடும் என்று நம்பி பலர் வைத்திருந்தது கட்டாயம் ஞாபகத்திற்கு வரும்.
மேலும் மயில் கடவுள் முருகனின் வாகனம் என்பதால், அதன் இறகை புனிதமானதாக கருதி, பலரும் தங்களது வீட்டு பூஜை அறையில் வைத்திருப்போம்.
ஆனால் இந்த மயில் இறகு பல தோஷங்களை நீக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
இல்லையெனில் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

வாஸ்து தோஷம்
----------------------------------
வீட்டின் வாஸ்து தோஷத்தை நீக்க 8 மயில் இறகைப் பயன்படுத்த வேண்டும்.

அந்த எட்டு மயில் இறகையும் ஒன்று சேர்த்து, ஒரு வெள்ளை நிற கயிற்றினால் கட்டி, பூஜை அறையில் வைத்து ‘ஓம் சோமாய நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரித்து வர வேண்டும்.
சனி தோஷம்
--------------------------
சனி தோஷம் நீங்குவதற்கு, மூன்று மயில் இறகை ஒன்று சேர்த்து கருப்பு நிற கயிற்றினால் கட்டி, சிறிது பாக்கை நீரில் போட்டு, அந்நீரைத் தெளித்தவாறு ‘ஓம் சனீஸ்வராய நமஹ’ என்று தினமும் 21 முறை உச்சரிக்க வேண்டும்.

செல்வம் பெருக..
--------------------------------
நகை மற்றும் பணம் வைக்கும் அலமாரியில் ஒரு மயில் இறகை வைக்க வேண்டும்.

இதனால் அந்த அலமாரியில் செல்வம் அதிகம் சேர்வதோடு, நிலைக்கவும் செய்யுமாம்.
எதிர்மறை ஆற்றல்கள்
மயில் இறகை வீட்டின் முன் வைப்பதால், வீட்டினுள் எதிர்மறை ஆற்றல்கள் நுழைவதைத் தடுப்பதோடு, வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களும் நீங்கும்.

அலுவலக இடம்
ஒருவர் அலுவலகத்தில் தாம் அமரும் இடத்தில் மயில் இறகை வைப்பதன் மூலம், அவரது இடத்தின் அழகு மேம்படுவதோடு, உற்பத்தி திறனும் அதிகரிக்குமாம்.

பூச்சிகள் வராது
-------------------------------
மயில் இறகு வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும்.

அதுவும் இதனை வீட்டின் சுற்றில் வைத்தால், பல்லிகள் மற்றும் இதர பூச்சிகள் வருவதைத் தடுக்கலாம்.
அன்யோன்யம் மற்றும் புரிதல்

திருமணமான தம்பதியர்கள், தங்களின் படுக்கை அறையில் மயில் இறகை வைத்திருப்பதன் மூலம், தம்பதியருக்குள் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி, அன்யோன்யம் மற்றும் புரிதல் அதிகரிக்கும்.
மேலும் வாசிக்க"செல்வம் குவிய, கடன் தீரச்செய்யும் மயில் இறகு பரிகாரம்"

Post Comment

Thursday, 22 June 2017

திருமண பொருத்தம் -அதிர்ஷ்டமான கணவன் மனைவி- ஜோதிடம்


திருமண பொருத்தம் -அதிர்ஷ்டமான கணவன் மனைவி- ஜோதிடம்திருமண பொருத்தம் பார்க்கும்போது பெண்ணின் தகப்பனார், பையனின் தகப்பனார் எல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள்..பையனும் டாக்டர் பொண்ணும் டாக்டர் ...பொருத்தம் லேசா வந்தா போதும் ஜோசியரே...எங்க எல்லோருக்கும் பிடிச்சிருக்கு.பொண்ணும் பையனும் விரும்புறாங்க..நீங்க எதுக்கும் ஜாதகத்தை ஒரு பார்வை பார்த்துடுங்க என்று ஆரம்பிப்பவர்கள் தான் அதிகம்.இதுக்கு என்ன அர்த்தம்னா ஜாதகம் இரண்டும் சூப்பர்...முதல் தரமான பொருத்தம்னு நான் சொல்லிட்டா போதும் என்பதுதான் அவங்க விருப்பம்.அப்புறம் எதுக்கு ஜாதக கட்டத்தில் கிரகங்கள்,நட்சத்திரம்,திசாபுத்தி ரஜ்ஜு யோனி பொருத்தமெல்லாம் இருக்கோ தெரியல.

3ஆம் அதிபதியும் கெட்டு 3ல் சூரியனும் அமைந்த வசதியான அழகான பையனுக்கு தேற்வதை மாதிரி அழகான பொண்ணை கட்டிக்கொடுத்தாங்க...பெண் வீடு கோடீஸ்வர குடும்பம்...கல்யாணம் ஆகி பத்து நாள் கூட ஆகலை..பொண்ணு டைவர்ஸ் கேட்டுச்சு.காரணம் பையனுக்கு ஆண்மையே இல்லை...முதலிரவில் குறட்டை விட்டு தூங்கினா எந்த பொண்ணுதான் சகிப்பா..? இரவில் நல்ல  உறவு இல்லையேல் கள்ளக்காதல் அல்லது டைவர்ஸ்தான் முடிவு இன்றைய காலம் அப்படித்தான் இருக்கிறது.

ஜாதகத்தை நன்கு அலசுங்கள்....கிரக அமைப்பை நன்கு பாருங்கள்...பொறுமையா பார்த்து சொல்லுங்கள் என்று ஜாதகங்களை கொடுத்தால் ஜோதிடருக்கும் ஒரு ஆர்வம் வரும் தான் கற்ற ஜோதிட அறிவை வைத்து நன்குபலன் பார்த்து சேர்க்க உதவுவார்....டநட்சத்திர பொருத்தம் ஒன்பது இருக்கு ..ஜோசியரும் ஆஹா ஓஹோன்னுதான் சொன்னார் அப்புறம் எப்படி பிரிஞ்சாங்க..? திசாபுத்தி சரியில்லை...அஷ்டமாதிபதி திசை ,மாரகாதிபதி ,பாதகாதிபதி திசை ,நடக்கும் ஜாதகத்தை சேர்த்தால் பிரியத்தான் செய்வார்கள்...

பொண்ணுக்கு ஆயில்ய நட்சத்திரமாக இருந்தாலும் பத்தாம் அதிபதி வலிமையாக இருப்பின் மாமியாருக்கு ஒன்றும் ஆகாது ஆயுள் கெட்டி.

மூலம் நட்சத்திரமாக இருப்பினும் மூன்றாம் இடம் மாமனார் ஸ்தானம் வலிமையாக அமைந்தால் மாமனார் செல்வாக்காக இருப்பார் தீர்க்காயுளுடன் வாழ்வார்....மருமகள் வந்த பின் புகழும் செல்வாக்கும் அவருக்கு கூடும்.

நல்ல நட்சத்திரமாக இருந்தும் மாமனார் மாமியார் ஸ்தானம் கெட்டு ,கர்மாதிபதி திசை நடந்தால் குடும்பத்தோடு விபத்தை சந்திப்பார்கள் நிறைய ஜாதகங்களில் இதை பார்த்திருக்கிறோம்...

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் யோனி பொருத்தம் கொடுத்திருக்காங்க...அதை நன்கு கவனித்து சேர்த்தனும்....புலியோடு (விசாகம்)  ஆட்டை சேர்க்க முடியாது...(பூசம்)..அடித்து சாப்பிட்டு விடும்.

எருமையோடு (சுவாதி) எருமையை (அஸ்தம்)சேர்க்க கூடாது..இரண்டும் குட்டையில் கிடக்கும் எருமை போல கிடந்து வீடு குட்டி சுவராகிவிடும்.

யோனி என்பது தாம்பத்யம் எப்படி இரவில் உறவு எப்படி திருப்தியான தாம்பத்யமா என சொல்லக்கூடிய முக்கியமான பொருத்தம் அதை நன்கு கவனித்து சேர்க்க வேண்டும்..


அசுவினி - ஆண் குதிரை
பரணி - ஆண் யானை
கார்த்திகை - பெண் ஆடு
ரோகிணி - ஆண் நாகம்
மிருகசீரிஷம் - பெண் சாரை
திருவாதிரை - ஆண் நாய்
புனர்பூசம் - பெண் பூனை
பூசம் - ஆண் ஆடு
ஆயில்யம் - ஆண் பூனை
மகம் - ஆண் எலி
பூரம் - பெண் எலி
உத்தரம் - எருது
அஸ்தம் - பெண் எருமை
சித்திரை - ஆண் புலி
சுவாதி - ஆண் எருமை
விசாகம் - பெண் புலி
அனுஷம் - பெண் மான்
கேட்டை - கலைமான்
மூலம் - பெண் நாய்
பூராடம் - ஆண் குரங்கு
உத்திராடம் - மலட்டு பசு (சில பஞ்சாங்கங்களில் கீரி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.)
திருவோணம் - பெண் குரங்கு
அவிட்டம் - பெண் சிங்கம்
சதயம் - பெண் குதிரை
பூரட்டாதி - ஆண் சிங்கம்
உத்திரட்டாதி - பசு
ரேவதி - பெண் யானை


ஆண்,பெண் இருவருடைய யோனி வித்தியாசங்களை அவர்களுடைய ஜென்ம நட்சத்திரம் மூலமாக கண்டறிந்து அவை பரஸ்பரம் இணைவதற்கு ஏற்றவைதானா என்பதை கண்டறிவது யோனிப்பொருத்தம் பார்ப்பதின் நோக்கமாகும்.

மிருகங்கள் புணர்ச்சியில் ஈடுபடும்போது குண பேதங்கள் காணப்படும். உதாரணமாக ஆடுகள் அடிக்கடி புணர்ச்சியில் ஈடுபடும். ஆனால் புணர்ச்சி நேரம் மிகவும் குறைவுதான். நாய்கள் அடிக்கடி புணர்ச்ச்சியில் ஈடுபடுவதில்லை, ஆனால் புணர்ச்சி நேரம் அதிகமாகும்.


பூனை, புலி,சிங்கம் போன்ற மிருகங்கள் புணர்ச்சியின்போது மிகவும் ஆக்ரோஷமாக செயல்படும்.
யானை,நாகம் போன்றவை மறைவான இடத்தில் மட்டுமே புணர்ச்சியில் ஈடுபடுபவை.
அவரவர் ஜென்ம நட்சத்திரத்தை தெரிந்துகொண்டால் அவரின் எண்ணம் மற்றும் செயல்பாடுகள் செக்ஸ் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்ளலாம்.


நாயும் குரங்கும் சேர்த்தால் என்னாகும்..? 

குரங்கினை கண்டால் நாய் எப்படி துரத்தும் என பார்த்திருப்போம்..பூனையும் அப்படித்தான் நாய்க்கு ஆகாது...

எலியை கண்டால் பூனை விடாது ..பாம்பும் விடாது..இவை எல்லாம் இயற்கையில் பகை.

இப்படி இயற்கையான பகை விலங்குகளை சேர்ப்பது நிஜ வாழ்வில் அவர்களை ஒற்றுமையில்லாமல் ஆக்கிவிடும்.

ஒரே நட்சத்திரக்காரர்களை சேர்க்க கூடாது என்ன காரணம்..? இருவருக்கும் ஒரே திசை கடைசி வரை தொடரும் அவை வாழ்வில் கடும் சோதனைகளை தரும் 

எனவே ஒரே நட்சத்திரங்கள் வாழ்வில் முன்னேற்றம் தருவதில்லை திடுக்கிடும் திருப்பங்களை வாழ்வில் தந்துவிடும் அல்லது கிணற்றில் போட்ட கல்லாக வாழ்க்கை மிக மந்தமாக நகரும்.இதுவே ரஜ்ஜு பொருத்தம் எனப்படும்..

ஜாதகத்தில் இருவருக்கும் என்ன திசை நடக்கிறது என்பதை கவனித்து சேர்க்க வேண்டும்...

.கணவருக்கு இந்த திசை என்ன செய்யும் மாமனார்க்கு என்ன செய்யும் மாமியாருக்கு என்ன செய்யும் என்பதை கவனிக்க வேண்டும்.

இருவருக்கும் குடும்ப ஸ்தானம் கெட்டிருக்கிறதா இருவருக்கும் கணவன் மனைவி ஸ்தானம் நன்றாக இருக்கிறதா என்பதை ஆராய்வது முக்கியம்.

7ஆம் இடத்தில் ஒருவருக்கு பல கிரகங்கள் இருந்து இன்னொருவருக்கு 7 சுத்தமாக இருப்பின் ஒத்து வராது...தாம்பத்யம் சிறக்காது ..ஒருவர் செக்ஸ் ஆசை அதிகமுடையவர் இன்னொருவர் ஆசையே இல்லாதவர்....ஒருநாள் தாம்பத்யம் வைத்துக்கொண்டதும் என்னால முடியல 15 நாளைக்கு கிட்டயே வராதீங்க என்று சொன்னால் கணவன் என்ன செய்வான்..? 

ஆண்பெண் இருவருக்கும் யாரையும் பாதிக்காத நல்ல திசை நடப்பது முக்கியம்..எதிரெதிர் திசைகள் நடப்பதும் ஆகாது..ஒருவருக்கு சந்திர திசை இன்னொருவருக்கு ராகு திசை இது கிரகணம் போன்றதாகும். இவை வாழ்வை இருளாக்கிவிடும்.

ஜாதகத்தில் ஒருவருக்கு சுக்கிரன் இருக்கும் ராசியில் இன்னொருவருக்கு கேது இருந்தால் ஒருநாளும் சந்தோசம் இருக்காது.

சுக்கிரன் குரு சந்திரன் இருவருக்கும் எப்படி என்பதையும் பார்க்க வேண்டி இருக்கிறது..

திருமண பொருத்தம் பற்றி நிரைய கட்டுரைகள் எழுதி இருக்கிறேன்...தேடி அதையும் படித்து பாருங்கள்..நிதானமாக நன்கு ஆராய்ந்து பொருத்தம் பாருங்கள் அவசரப்பட்டால் காலம் முழுக்க கண்ணீர் சிந்த வேண்டி வரும்.
மேலும் வாசிக்க"திருமண பொருத்தம் -அதிர்ஷ்டமான கணவன் மனைவி- ஜோதிடம்"

Post Comment

Saturday, 10 June 2017

முழங்கால் வலி,மூட்டுவலி தீர உடல் உறுதியாக ஒரு எளிமையான உணவு

முழங்கால் வலி,மூட்டு வலி நீங்க பிரண்டை துவையல் செய்து சாப்பிடுங்கள்..கால் வலியை போக்க பிரண்டை, மல்லிதலை, தூதுவளை, கறிவேப்பிலை சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டால் உடல் சோர்வும் இருக்காது...


பிரண்டையில் உள்ள மிகையான சுண்ணாம்பு சத்து(கால்சியம்) தான் எலும்பு மச்சையில் திரவம் அதிகமாக சுரக்க கால்சியம் தேவை..
அதுமட்டுமின்றி வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து பிரண்டை என போகர் நிகண்டுவில் குறிப்பிடபட்டுள்ளது குறிப்பாக, சிறுகுடலில் ஏற்படும் குறைபாடுகள் பிரண்டையால் உடனடியாக நிவர்த்தியாகும்.
பிரண்டை உப்பை சுமார் 300mg தேனில் அல்லது நெய்யில் தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றபட்டு உடல் குறைப்பு ஏற்படுகிறது சிறுகுடல் மற்றும் வயிற்றில் உள்ள வாயு முழுவதும் வெளியேறுவதை உடனடியாக உணரலாம்...
பெண்களுக்கு, மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி மற்றும் வயிற்று வலிக்கு பிரண்டை துவையல் (அ) உப்பை பயன்படுத்தினால் வலி இல்லாமல் போகும் பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டிற்கு இது ஒரு அருமருந்து..
நிறைய குறைபாடுகள் பிரண்டையால் குணமாகும்போது எதற்கு கால்சியம் மாத்திரை சாப்பிட்டு சிறுநீரகத்தை பாழ் பண்ணனும் யோசிங்க.....
வைரம் பிரண்டை சாற்றில் பொடியாகும் என்று போகர் ஏழாயிரத்தில் உள்ள குறிப்பை கவனிக்கவும் உலகிலேயே கடினமான பொருள் வைரம் தானே அதில் உள்ள கார்பன் பிணைப்பை உடைக்கும் தன்மை இதன் சாற்றுக்கு உண்டு எனும்போது ........
இதற்கு மற்றொரு பெயர் "வஜ்ஜிரவல்லி" தேகத்தை வஜ்சிரமாக்கும்
மேலும் வாசிக்க"முழங்கால் வலி,மூட்டுவலி தீர உடல் உறுதியாக ஒரு எளிமையான உணவு"

Post Comment

Friday, 26 May 2017

உங்க ஜாதகத்தில் தொழில் அதிபர் ஆகும் யோகம் இருக்கா..? ஜோதிட ஆய்வு

உங்க ஜாதகத்தில் தொழில் அதிபர் ஆகும் யோகம் இருக்கா..? ஜோதிட ஆய்வு செய்ய உதாரண ஜாதகத்துடன் விளக்கி இருக்கிறேன் ஜோதிடம் கற்பவர்களுக்கான விளக்கத்துடன் எழுதி இருக்கிறேன்..

கு ,சு,சனி
சூ,புத,கேது    
        ராசி
செ
சந்திராசந்தி


செ,ரா,சு,சனி

   அம்சம்
பு

கேது
சூ
இந்த ஜாதகர் 11.5.1939ல் பிறந்தவர்…திருவோணம் நட்சத்திரம் மகரம் ராசியில் பிறந்தவர்..
கடக லக்னத்தில் இருப்பு திசை சந்திரன் 7 வருடம் 9 மாதத்தில் பிறந்தவர்..அடுத்து என்னென்ன திசை வந்தது எப்படி வாழ்ந்தார் என்பதை கவனிக்கனும்..

இந்த ஜாதகத்தில் இருக்கும் முக்கியமான யோகங்கள் இருக்கிறதா என பார்க்கனும்..

இந்த ஜாதகத்தில் லக்ன யோகாதிபதிகள் எப்படி இருக்காங்கன்னு பார்க்கனும்..

லக்னாதிபதி தனாதிபதி தனகாரகன் எப்படி அவர் பொருளாதார நிலை இவர்களை வைத்துதான் ஆராயனும்..


அடுத்து தொழிலாதிபதி தொழில் காரகம் அதிர்ஷ்டகாரகன் பாக்யாதிபதி எப்படின்னும் பார்க்கனும்..

நாம பார்க்கப்போறது அவர் பொருளாதார நிலை தொழில் நிலை பத்திதான் எனவே அதை நன்கு ஆய்வு செய்தால் போதும்..

இவர் ஜாதகத்தில் என்ன யோகம் இருக்கிறது சந்திர மங்கள யோகம் இருக்கிறது…சந்திரனும் செவ்வாயும் இணைந்து செவ்வாய் உச்சம்…இதில் முக்கியமான விசயம் என்னன்னா…இருவருமே லக்னத்துக்குகெட்டவர்கள் இல்லை என்பதுதான் ஒரு யோகம் உண்டாகும்போது அவர்கள் லக்னத்துக்கு கெட்டவர்களாக கெட்ட ஆதிபத்தியம் உடையவர்களாக இருக்க கூடாது…

இங்கு லக்னாதிபதியும்,பூர்வ புண்ணியாதிபதியும் சேர்ந்து சந்திர மங்கள யோகமாக இருக்கிறார்கள் மிகச்சிறப்பு.
அடுத்து இவருக்கு சூரியன் உச்சம்,சுக்கிரன் உச்சம்,குரு ஆட்சி..

இவர் சந்திர திசையில் பிறந்தார்…செவ்வாய் திசை அடுத்து வந்தது..அதன் பின் 14 வயதில் ராகு திசை வந்தது..இவருக்கு ஒன்பதில் குரு இருக்கிறார் பாருங்கள்..ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு என்கிறார்கள் அல்லவா..அது கோட்சார குருவை சொல்லவில்லை இந்த குருவைதான் சொல்கிறார்கள்…

இவர் சர லக்னம் சர ராசியில் பிறந்தவர்…ராசியும் லக்னமும் சரமாக இருந்தால் வெளியூரில் பிழைப்பார்கள் ஸ்திரமாக இருந்தால் உள்ளூர்..

இவருக்கு ராசி லக்னம் சரமாக இருந்ததால் 4ல் அமர்ந்த ராகு திசையில் சொந்த ஊரை விட்டு வெளியேறினார் சவுதி அரேபியா சென்றார்…அங்கு நன்கு சம்பாதித்தார்..4ஆம் இடம் தாய்வீடு..தாய்நாடு..அங்கு இருக்கும் கிரகம் பாவராக இருந்து திசை ஆரம்பித்தால் தாய்வீட்டை பிரியும் நிலை உண்டாகும்.

12ஆம் அதிபதி பத்தில் இருந்தால் 11ஆம் அதிபதி ஒன்பதில் இருந்ததாலும் வெளிநாட்டு வாழ்க்கை…
12ஆம் 11 ஆம் இடம் நன்றாக இருந்தால் தொழில் ஸ்தானத்துடன் தொடர்பு கொண்டால் வெளிநாடு யோகம்.அங்கு தொழில்..


ஒன்பதில் குரு இருந்தாலும் வெளிநாடு சிறப்பு…ஒன்பதாம் இடம்தான் நீண்ட தூர பயணம் 3ஆம் இடம் குறுகிய பயணம்.

இந்த ஜாதகத்தில் நான்குக்கும் உடையவரும் லாபத்துக்கு உரியவருமான சுக்கிரன் திரிகோணத்தில் உச்சம் ஆகி இருக்கிறார் திரிகோணத்தில் இருக்கும் கிரகம் பாதகாதியானாலும் கெடுதல் செய்யாது பாவராக இருந்தாலும் நன்மை செய்யும் என்பது ஒரு விதி..இதை மறக்க கூடாது.


இவர் ஜாதகத்தில் பாக்யாதிபதி கெடவில்லை ஆட்சியாக இருக்கிறார்..தனாதிபதி சூரியன் கெட்டிருக்காரா இல்லை.அவர் லாபத்தில் உச்சம் ஆகி இருக்கிறார் ..பேங்க் பேலன்ஸ் குறிப்பது 11ஆம் இடம்..முன்னேற வேண்டும் என்ற தீரா தகத்தை தரும் அஸ்திவாரமான லக்னாதிபதி சந்திரன் கேந்திரத்தில் பூர்வபுண்ணியாதிபதியுடன் இருக்கிறார் அதுவும் உச்சம் பெற்ற கிரகத்துடன்…

அப்படி எனில் பொருளாதர நிலைக்குண்டான 2ஆம் அதிபதி வலிமை
சேமிப்புக்கான 11ஆம் இடம் வலிமை…அதன் அதிபதி உச்சமாகி வலிமை
தொழில் ஸ்தானம் வலிமை…அதன் அதிபதி கேந்திரத்தில் உச்சம் ..இது சம்பளத்துக்கு போகிற ஜாதகமா இல்லை.பலருக்கு சம்பளம் கொடுக்கும் ஜாதகம்..எப்படி..?

இவர் சவுதி அரேபியாவில் சம்பளத்தில் இருந்து கொண்டே இந்தியாவில் ஒரு தொழில் தொடங்கினார் உறவினரை கொண்டு நடத்தினார்,

தனது 30 வது வயதில் குரு திசை ஆரம்பித்த போது அங்கு வேலையை ராஜினாமா செய்துவிட்டு இங்கு வந்து பெரிய ஸ்டார் ஹோட்டல் கட்டினார்..100 பேர் வேலை செய்கின்றனர் கோடீஸ்வரர் ஆனார்..
குரு திசை அவருக்கு நிலையான தொழில் தந்தது பெரும் பணத்தை லாபத்தை கொடு்த்தது தொழில் அதிபர் ஆக்கியது…

குரு பாக்யாதிபதி பாக்யஸ்தானத்தில் உச்சம்..அது மகாலட்சுமி ஸ்தானம் அல்லவா..பணம் அள்ள அள்ள குறையாமல் சம்பாதித்தார்..
சில கிரக வலிமைகள் பல தோசங்களை நீக்கிவிடும்..அதில் ஒன்றுதான் திரிகோணாதிபதி வலிமை..குரு வலிமை.

ராகு திசையில் பெரும்பகுதி வெளிநாட்டில் இருந்தார் குரு திசையில் பெரும்பகுதி கொஞ்சம் கொஞ்சமாகத்தான் முன்னேறினார் உடனே பெரிய ஹோட்டல் கட்டவில்லை..

அடுத்து சனி திசை 52 வயதில் ஆரம்பம்..அதுவும் திரிகோணத்தில்..என்பதால் பெரும் கெடுதல் என சொல்ல முடியாது…வயதுக்குண்டான மருத்துவ செலவுகள் தரலாம்..ஆனால் வேறு குறை இல்லை
மேலும் வாசிக்க"உங்க ஜாதகத்தில் தொழில் அதிபர் ஆகும் யோகம் இருக்கா..? ஜோதிட ஆய்வு"

Post Comment

Tuesday, 16 May 2017

குருப்பெயர்ச்சி சனி பெயர்ச்சி எப்போது..?

குருப்பெயர்ச்சி சனி பெயர்ச்சி எப்போது..?

குரு இந்த வருடம் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு செல்கிறார்..சனி இந்த வருடம் கடைசியில் டிசம்பர் மாதம் திருநள்ளாறு கோயில் முறைப்படி வாக்கிய பஞ்சாங்கப்படி விருச்சிகம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு செல்கிறார்...

ராகு சிம்ம ராசியில் இருந்து கடகம் ராசிக்கும் கேது கும்பம் ராசியில் இருந்து மகரம் ராசிக்கும் வரும் ஜூலை மாதம் வாக்கிய பஞ்சாங்கப்படி மாறுகிறார்கள்..பலன்கள் விரைவில் வெளியாகும்...


மேலும் வாசிக்க"குருப்பெயர்ச்சி சனி பெயர்ச்சி எப்போது..?"

Post Comment

Monday, 15 May 2017

ஜோதிடம் சூட்சுமங்கள்- சுக்கிரன் தரும் சுகம்

ஜோதிடம் சுக்கிரனை நல்ல ஒளி கிரகம் என்கிறது..பிரகாசமான சுக்கிரனின் ஒளி மனிதனுக்கு சுகம் ,சந்தோசம்,மகிழ்ச்சி,ரசனையை தருகிறது இன்பத்தை,காதலை கொடுக்கிறது ..ஆணையோ பெண்ணையோ கவர சுக்கிர பலம் வேண்டும்..சுக்கிரனில்லையேல் சுகம் இல்லை...சொத்துக்கள் இல்லை வசதி வாய்ப்புகள் இல்லை.

லக்னத்துக்கு கேந்திரம் ,திரிகோணத்தில் சுக்கிரன் இருந்தால் நல்ல வசதி ,பண வரவு ,சுகம்,அழகான மனைவி,பெரிய வீடு,கார் எல்லாம் அமையும்...சுக்கிரன் பாவருடன் சேராமல் பகை வீட்டில் இல்லாமல் இருக்கனும்...லக்னத்துக்கு சுபரா இருந்தா சூப்பரா அமையும்..லக்னத்துக்கு கேந்திரம் இன்னும் நல்ல பலத்தை சுக்கிரனுக்கு கொடுக்கும்...4ல் சுக்கிரன் சுகவாசி..நல்லா சாப்பிட்டு நல்லா தூங்கி எதைப்பத்திய்டும் கவலைப்படாம வாழலாம் அப்பா மூலம் சொத்து கிடைச்சிடும் மாமனார் மூலமா சொத்து கிடைச்சிடும்..மாமனார் க்கு இரண்டாம் இடத்தில் சுக்கிரன் இருப்பதால் மாமனார் பணக்காரரா இருப்பார் நிறைய பண உதவி சங்கடமில்லாம செய்வார்..மனைவி அழகா அமைஞ்சிடும்..நச்சரிப்பு இருக்காது..ஊட்டி போகலாமான்னு கேட்டா..சுவிட்சர்லாந்து போகலாம் வாங்கன்னு சொல்லும் ஆளாக இருந்தா எப்படி இருக்கும்..அப்படி அமையும்.

7ல் சுக்கிரன் அழகு மங்கை மனைவியா வருமா என்பது விட மனைவி மையுமான்னு பல பேர்க்கு சந்தேகம்..சுக்கிரன் காரக நாஸ்தி ஆச்சேன்னுதான்..ஆனால் தாமதம் ஆனாலும் சொர்க்கம் காட்டும் மனைவி அமையும்...பங்காளி சொத்து எதிர்பாராம இவருக்கு கிடைக்கும் கூட்டாளி சம்பாஹிச்சு இந்தாப்பா உன் பங்குன்னு வீட்டுக்கே வந்து பெரிய அமவுண்டை கொடுப்பார்..

பத்தில் சுக்கிரன் தந்தை பணக்காரர் ..அப்பா சொத்தே பல கோடி மூணு தலைமுறை சாப்பிடலாம்னு ஊரார் சொல்லுமளவு வசதி இருக்குமான்னு கேட்டா சுக்கிரன் எந்தளவு வலிமையா இருக்கோ..9ஆம் அதிபதி வலிமையை பொறுத்து அப்படி அமையும்..மிதுன லக்னம் சனி 9ல் ஆட்சி..பத்தில் சுக்கிரன் உச்சம் என்றால் அவருக்கு இப்படி அமையும்.தந்தையால் பெரும் அனுகூலம்..ராஜாவீட்டு கன்னுக்குட்டி.

சுக்கிரனுடன் சேரும் கிரகம் சுப கிரகங்களாக இருந்தால் அதுவும் நிறைய அள்ளிக்கொடுக்கும்..4,5 ஆம் அதிபதிகள் சேர்க்கை 1,4 ஆம் அதிபதிகள் சேர்க்கை,1,9 அதிபதிகள் சேர்க்கை,10,11 ஆம் அதிபதிகள் சேர்க்கை,5,11 அதிபதிகள் சேர்க்கை,4,2 அதிபதிகள் சேர்க்கை ,2,5 அதிபதிகள் சேர்க்கை எல்லாம் மிக்கப்பெரிய யோகங்கள்..எக்காரணம் கொண்டும் இவர்களுடன் 6,8,12 ஆம் அதிபகள் கூடக்கூடாது எல்லாம் மொத்தமா போயிடும்..

சுக்கிரனுடன் பாம்பு கிரகங்கள் சேர்ந்தாலும் தவறு...பணம் கிடைப்பது கடினம்..சனி,செவ்வாய்,சூரியன், சேர்ந்தாலும் அவ்வளவு சிறப்பல்ல..ஆதிபத்தியம்,காரகத்துவம் நன்றாக இருந்தால் தவறில்லை..ஆனாலும் பாவ கிரகத்துடன் சிறுபாதிப்பை தராமல் இருக்காது..

சுக்கிரன் நீசமானாலும் ,சுக்கிரன் கேதுவுடன் இருந்தாலும் பணம் வருவதில் தடை இருக்கும்..சுக்கிரன் 6,8ல் இருந்தாலும் கடன் பிரச்சினை உண்டாக்கும்..

சுக்கிரன் கெடாமல் இருப்பதே சுகம் தரும் சொத்து தரும் இன்பம் தரும்.சுக்கிரன் வலுத்தவர் சுகவாசி..சுக்கிரன் கெட்டவர் சாமியார்.ரசனை இருக்காது எந்த சுகமும் அனுபவிக்க முடியாது..சதா நேரமும் அலைந்து கொண்டிருப்பர்.
மேலும் வாசிக்க"ஜோதிடம் சூட்சுமங்கள்- சுக்கிரன் தரும் சுகம்"

Post Comment

Tuesday, 9 May 2017

தமிழ் மொழிக்கு இவ்வளவு சிறப்புகளா..?

தமிழில் டீக்கு "தேநீர்',
காபிக்கு "குளம்பி' என்று
பெரும்பாலோருக்குத் தெரியும்.
மற்ற சில முக்கியமான உணவு
பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம்!

சப்பாத்தி - கோந்தடை

புரோட்டா - புரியடை

நூடுல்ஸ் - குழைமா

கிச்சடி - காய்சோறு, காய்மா

கேக் - கட்டிகை, கடினி

சமோசா - கறிப்பொதி, முறுகி

பாயசம் - பாற்கன்னல்

சாம்பார் - பருப்பு குழம்பு, மென்குழம்பு

பஜ்ஜி - தோய்ச்சி, மாவேச்சி

பொறை - வறக்கை

கேசரி - செழும்பம், பழும்பம்

குருமா - கூட்டாளம்

ஐஸ்கிரீம் - பனிக்குழைவு

சோடா - காலகம்

ஜாங்கிரி - முறுக்கினி

ரோஸ்மில்க் - முளரிப்பால்

சட்னி - அரைப்பம், துவையல்

கூல்ட்ரிங்க்ஸ் - குளிர் குடிப்பு

பிஸ்கட் - ஈரட்டி, மாச்சில்

போண்டா - உழுந்தை

ஸர்பத் - நறுமட்டு

சோமாஸ் - பிறைமடி

பப்ஸ் - புடைச்சி

பன் - மெதுவன்

ரோஸ்டு - முறுவல்

லட்டு - கோளினி

புரூட் சாலட் - பழக்கூட்டு

-----------------------------------------------------------


தமிழகக் கோயில் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகளாகட்டும், தூண்களில் ஒரு நூல் இழை கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்கலாகட்டும், இன்னும் ஆதித்தமிழர்கள் செய்த அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம், இதைப்பற்றிய தேடலை நாம் மேற்கொள்ள வேண்டாமா..?!

தமிழர் பயன்படுத்திய  அருமையான கணிதம்
1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை 
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> 6,0393476E-9 --> nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்.

இவ்வளவு நுண்ணியமான கணிதம் அந்தக் காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்த எண்களை வைத்து எத்தனை துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள், கணினியையும், கணிதப்பொறியையும் (கால்குலேடரையும்) தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது, அதை விட ஆயிரம் மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம்
சாதித்து விட்டோம்..!

'''வாழ்க தமிழ் வளர்க தமிழ்.'''
மேலும் வாசிக்க"தமிழ் மொழிக்கு இவ்வளவு சிறப்புகளா..?"

Post Comment

அழகர் ஆற்றில் இறங்குவது ஏன்..? சித்திரை திருவிழா

அழகர் ஆற்றில் இறங்குவது ஏன்? 10 நாள் விழாவின் சுவாரஸ்யக் கதை!!!


எல்லோருக்கும் ஐப்பசியில் தீபாவளி வரும். ஆனால், மதுரைவாசிகளுக்கு, சித்திரையிலும் ஒரு தீபாவளி. அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை அந்த அளவுக்கு மிக விமரிசையாகக் கொண்டாடி வருகிறார்கள். திருவிழா நடக்கும் பத்து நாட்களும் ஊரே திமிலோகப்படும். மதுரை மற்றும் சுற்றிலுமுள்ள ஊர்களில் இருந்து குடும்பத்துடன் புறப்பட்டு வந்து சேருவார்கள். சுமார் பத்து லட்சம் பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூடும் திருவிழா இது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தைச் சொல்வதற்கு முன், அவர் குடிக்கொண்டிருக்கும் அழகர்மலையின் சிறப்பையும் சொல்லியாக வேண்டும்.

மதுரைக்கு வடக்கே சுமார் இருபது கிலோ மீட்டர் தொலைவில், அழகர்மலை கம்பீரமாகக் காட்சி தருகிறது. பார்ப்பதற்கு காளை வடிவிலிருப்பதால் இந்த மலைக்கு 'விரிஷபாத்ரி' என்று ஒரு பெயர் உண்டு. தன்மேல் ஏவி விடப்பட்ட சாபத்துக்கு விமோசனம் கேட்டு, எமதர்மன் இந்த மலைக்கு வந்து பெருமாளை வேண்டித் தவமிருந்தான். தவத்தை மெச்சி, எமதர்மனுக்கு பெருமாள் சாபவிமோசனம் தந்தபோது, 'இதேபோல் இங்கேயே தங்கியிருந்து பூலோக பக்தர்களுக்கும் அனுக்கிரகம் பண்ண வேண்டும்' என்று எமதர்மன் கேட்டுக்கொண்ட காரணத்துக்காக, இந்த மலையில் பெருமாள் குடிகொண்டதாகப் புராணம் சொல்கிறது.

எங்கும் இல்லாத சிறப்பாக இங்கு கள்ளழகராக அவதாரம் எடுத்து எழுந்தருளியிருக்கும் சுந்தரராஜப் பெருமாள் சங்கு, சக்கரம், வில், வாள், கதை என பஞ்சாயுதங்களுடன் காட்சி தருகிறார். அதுமட்டுமின்றி, இங்கு மட்டும்தான் பெருமாளின் கையில் உள்ள சக்கரம் புறப்படத் தயாராக இருக்கிறது. பக்தர்களிடமிருந்து அபயக்குரல் வந்தால், கண நேரமும் தாமதிக்காமல் துஷ்டர்களை அழிக்க வேண்டும் என்பதற்காக சக்கரத்தைப் பிரயோக நிலையிலேயே வைத்திருக்கிறார் பெருமாள்.

மூலவருக்கு அடுத்தபடியாக அதிமுக்கியமானவர் சோலைமலைக்கரசராக விளங்கும் உற்சவர்தான். 'அபரஞ்சி' என்ற அரியவகை தங்கத்தாலானவர் சோலைமலைக்கரசர். 'அபரஞ்சி' என்பது தேவலோகத் தங்கம் என்பதால், இந்தப் பெருமாளையும் தேவலோகப் பெருமாளாக பூஜிக்கிறார்கள். உலகத்திலேயே அபரஞ்சி தங்கத்திலான பெருமாள் சிலைகள் இரண்டு இடங்களில்தான் இருக்கின்றன. ஒன்று - அழகர் கோயிலில்! இன்னொன்று திருவனந்தபுரத்திலுள்ள அனந்த பத்மநாபசுவாமி கோயிலில்.

அழகர் ஆற்றில் ஏன் இறங்குகிறார் என்று பார்ப்போமா?

சுதபஸ் என்ற முனிவர், நூபுரகங்கையில் தீர்த்தமாடி, பெருமாளை நோக்கித் தவமிருந்தார். அந்தச் சமயத்தில் துர்வாச மகரிஷி, தன் பரிவாரங்களோடு அவ்வழியாக வந்தார். பெருமாளையே நினைத்துக் கொண்டிருந்த முனிவர், ரிஷி வந்ததைக் கவனிக்காமலிருக்கவே ஆத்திரமடைந்த துர்வாசர் 'மண்டூகோ பவ' (தவளையாக போகக் கடவாய்!) என சாபமிட்டார். உடனே தவளையாகிப் போன சுதபஸ், சாபவிமோசனத்துக்கு வழிகேட்டபோது, 'விவேகவதி தீர்த்தக்கரையில் (வைகை) நீ தவம் பண்ணிக்கொண்டிரு. சித்ரா பௌர்ணமிக்கு மறுநாள் அழகர் அங்கு வந்து உனக்கு சாபவிமோசனம் கொடுப்பார்' என சொல்லியிருக்கிறார் துர்வாசர். அதன்படி வைகைக் கரையில் தவம் பண்ணிக் கொண்டிருந்த சுதபஸ் முனிவருக்கு, விமோசனம் கொடுக்க அழகர் மதுரைக்கு வந்து போனதாகப் புராணங்கள் விவரிக்கின்றன.

சித்ரா பௌர்ணமிக்கு நான்கு நாள் முன்னதாகச் சித்திரைத் திருவிழா தொடங்கிவிடுகிறது. முதல் இரண்டு நாட்கள் கோயிலில் இருப்பார் அழகர். மூன்றாம் நாள் மாலை மதுரையை நோக்கிப் புறப்படுகிறார். ஆரம்ப காலத்தில் கோயிலைவிட்டு கிளம்பும் அழகர், அலங்காநல்லூர் போய்ச் சேருவார். அங்கு அழகரை குதிரை வாகனத்தில் தூக்கிவைத்து (ஆற்றில் இறங்குவதற்காக) அலங்காரம் செய்வார்கள். அழகருக்கு அலங்காரம் செய்யும் ஊர் என்பதால், அலங்காரநல்லூராக இருந்து, பின்பு அலங்காநல்லூராக மாறிப்போனதாகச் சொல்கிறார்கள். அலங்காநல்லூரில் இருந்து தேனூருக்கு வந்து வைகை ஆற்றில் இறங்கும் அழகர், அதன் பிறகு வண்டியூருக்கு வந்து மண்டூக முனிவருக்கு (சுதபஸ்) சாபவிமோசனம் கொடுப்பார். இதனால் மண்டூர் என அழைக்கப்பட்டு அதுவே மண்டியூராகிப் பிறகு வண்டியூராகிப் போனதாம்.

கள்ளர் கொண்டை, கொண்டையில் குத்தீட்டி, கையில் வலைதடி (பூமராங்), இடுப்பில் ஜமதாடு (ஒருவகை கத்தி) என விதவிதமான ஆயுதங்களுடன் மதுரை நோக்கிப் புறப்படுகிறார் கள்ளழகர். அழகர் மலையிலிருந்து தங்கப்பல்லக்கில் புறப்பட்டுவரும் அவர், வழிநெடுக பக்தர்களால் ஏற்பாடு செய்யப்படுகிற ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் ஆசி வழங்கிவிட்டு, நான்காம் நாள் இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலுக்கு வந்து சேருகிறார். அதற்கு முன்னதாக மதுரை எல்லையான மூன்றுமாவடியில் அழகரை மக்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி களைகட்டுகிறது.

நான்காம் நாள் இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலில் கள்ளழகருக்கு அபிஷேகம் நடக்கும். இந்த அபிஷேகத்துக்கும் நூபுரகங்கையிலிருந்து தீர்த்த நீர் தலைச்சுமையாகக் கொண்டு வரப்படுகிறது. அபிஷேகம் முடிந்ததும் அழகருக்கு அலங்காரம். இதிலும்கூட ஒரு நம்பிக்கை. அழகருக்கான ஆடைகள், அலங்காரப் பொருட்கள் அனைத்தும் ஒரு பெரிய மரப்பெட்டியில் இருக்கும். இந்தப் பெட்டிக்குள் சிவப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள், ஊதா...என பல வண்ணங்களில் பட்டுப்புடவைகள் இருக்கும். கோயிலின் தலைமைப் பட்டர் அந்தப் பெட்டிக்குள் கைவிட்டு ஏதாவதொரு புடவையை எடுப்பார். அவர் கையில் எந்த வண்ணப் புடவை சிக்குகிறதோ, அது அன்றைய தினம் அழகருக்கு அணிவிக்கப்படும். அழகர் எந்த வண்ணப் புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் நல்லது - கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பச்சைப்பட்டு கட்டி வந்தால் நாடு செழிப்பாக இருக்கும்.
சிவப்புப் பட்டு கட்டிவந்தால் அந்த வருடம் போதிய விளைச்சலுமிருக்காது. நாட்டில் அமைதியும் இருக்காது. பேரழிவு ஏற்படும்.

வெள்ளை மற்றும் ஊதாப்பட்டு கட்டி வந்தால் நாடு இடைப்பட்ட நிலையில் இருக்கும். மஞ்சள்பட்டு கட்டிவந்தால், அந்த வருடத்தில் மங்களகர நிகழ்வுகள் நடக்கும். இப்படி நம்பிக்கை இருப்பதால் 'ஆற்றில் இறங்க வரும்போது அழகர் என்ன கலர் பட்டுடுத்தி வரப் போறாரோ?' எனப் பக்தர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

ஐந்தாம் நாள் பௌர்ணமியன்று, அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம். இதற்கு தல்லாகுளத்தை விட்டு கள்ளழகர் கிளம்பியதுமே தண்ணீர் பீய்ச்சும் வைபவம் தொடங்குகிறது. அந்தக் காலத்தில் அழகர் வருவதற்குப் புதிதாகப் பாதை அமைத்ததால் தூசி கிளம்பாமல் இருப்பதற்காகவும், வெப்பத்தைத் தணிப்பதற்காகவும் தண்ணீர் பீய்ச்சும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். காலப்போக்கில் தண்ணீர் பீய்ச்சுவது ஒரு முக்கிய வைபவமாக மாறிப்போனது. அழகர் ஆற்றில் இறங்கி வண்டியூர் போய்ச் சேரும் வரை இந்த வைபவம் கலகலப்பாக நடக்கிறது. ஆற்றிலிறங்கும் அழகரை மதுரையில் உள்ள வீரராகவப் பெருமாள் எதிர்கொண்டு அழைப்பார். ஆற்றுக்குள் இருவரும் மாலை மாற்றி மரியாதை பண்ணிக் கொள்வார்கள். அதன்பிறகு மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் தருவதற்காக வண்டியூரை நோக்கிக் கிளம்புவார் அழகர். வழிநெடுக வரவேற்பு பெற்றுக்கொண்டு ஐந்தாம் நாள் இரவு வண்டியூர் போய்ச் சேருகிறார் அழகர். ஆறாம் நாள் அதிகாலையில் அழகருக்கு ஏகாந்த சேவை. பயணக்களைப்பு நீங்குவதற்காக சந்தன அலங்காரம் பண்ணிக்கொள்ளும் கள்ளழகர், வண்டியூர் பெருமாள் கோயிலை வலம் வருவார். அதன்பிறகு சர்ப்பவாகத்தில் புறப்பட்டு தேனூர் மண்டபம் (இந்த மண்டபம் வைகை ஆற்றுக்குள் திருமலைநாயக்கரால் கட்டிக் கொடுக்கப்பட்டது. ஏற்கெனவே தேனூரில் நடந்து கொண்டிருந்த வைபவங்கள் இப்போது இந்த மண்டபத்தில் நடக்கிறது) வந்து சேருகிறார் அழகர்.

தேனூர் மண்டபத்தில் தங்க கருட வாகனத்துக்கு மாறும் அழகர், அங்கிருந்து மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் தருகிறார். பிறகு தேனூர் மண்டபத்திலிருந்து மதுரை நோக்கிவரும் அழகர், ராமராயர் மண்டகப்படி மண்டபத்துக்கு ஆறாம்நாள் இரவு வந்து சேருகிறார். அன்றிரவு அங்கு தங்குகிறார். இரவு முழுவதும் தசாவதார அலங்காரங்களில் தோன்றி பக்தர்களைப் பரவசப்படுத்தும் அழகர், ஏழாம் நாள் காலையில் அங்கிருந்து அனந்தராயர் பல்லக்கில் (திருமலை நாயக்கரின் திவானால் செய்து கொடுக்கப்பட்ட இது முழுக்கத் தந்தத்தால் இழைக்கப்பட்டது) தல்லாகுளத்திலுள்ள சேதுபதிராஜா மண்டபம் வரைக்கும் வருவார். அன்றிரவு அங்கு அழகருக்கு அலங்காரம் கலைக்கப்பட்டு பூப்பல்லக்கில் ஜோடனை நடக்கும்.
எட்டாம்நாள் அதிகாலையில் பூப்பல்லக்கில் மலைநோக்கிக் கிளம்பும் அழகர் வழிநெடுக பூஜை புனஸ்காரங்களை ஏற்றுக்கொண்டு ஒன்பதாம் நாள் காலையில் அழகர் கோயிலைச் சென்றடைவார். பத்தாம் நாள் பயணக்களைப்பு நீக்குவதற்காக உற்சவசாந்தி அபிஷேகம் நடக்கிறது. அத்துடன் சித்திரைத் திருவிழாவின் பத்து நாள் கொண்டாட்டங்கள் சுபமாக நிறைவுற்று மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புகிறது மதுரை.

காவல் ஜமீன்!
அந்தக் காலத்தில் கள்ளழகரின் பாதுகாவலராக வெள்ளியங்குன்றம் ஜமீன்தார் நியமிக்கப்பட்டிருந்தார். இன்றுவரை அந்த ஜமீன் வாரிசுகள்தான் கள்ளழகருக்குப் பாதுகாப்பு. இன்றும் ஜமீன்தார் வந்து அவருக்குரிய மரியாதைகள் வழங்கப்பட்ட பிறகுதான் கோயிலைவிட்டு மதுரைக்குக் கிளம்புவார் அழகர். அந்தக் காலத்தில் அழகருக்குப் பாதுகாவலாகக் குதிரை பூட்டிய சாரட் வண்டியில் அழகரைப் பின்தொடர்ந்து வந்துகொண்டே இருப்பார் ஜமீன். இப்போது வண்டிதான் மாறியிருக்கிறது. பத்து நாட்களும் அவர் அழகருடன் இருப்பார். இப்போதும் அதே வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
மேலும் வாசிக்க"அழகர் ஆற்றில் இறங்குவது ஏன்..? சித்திரை திருவிழா"

Post Comment

Tuesday, 25 April 2017

நட்சத்திர சாரம் தரும் திசாபுத்தி பலன்கள்

நட்சத்திர சாரம்


ஜோதிடத்தில் நட்சத்திரத்தின் முக்கிய பங்கு என்ன? ஏன் நட்சத்திரங்கள் ஒரு அங்கமாக ஜோதிடத்தில் இருக்கிறது.
ரிஷிகளும் முனிவர்களும் நட்சத்திரத்தின் வல்லமையை உணர்ந்திருந்தனர். சூரியன் போல பல மடங்கு வெளிச்சமும், ஆற்றலும் கொண்டவை நட்சத்திரங்கள்.


எனவே தான், நட்சத்திரம் பற்றிய ஆய்வு செய்து அதை பற்றி விளக்கி உள்ளனர். ஒவ்வொரு நட்சத்திரத்தை ஒவ்வொரு கிரக பலத்துடனும் காரகத்துடனும் முடிவாக வெளிட்டனர். அதில் திரிகோண ஸ்தானத்தில் வரும் நட்சத்திர காரகம் இயற்கையால் ஒரே மாதிரி அமைப்பில் இருந்ததை கண்டு வியந்து, திரிகோணத்தின் மகிமை அறிந்தனர்.


வானில் ராசி மண்டலம் என்பது, பல நட்சத்திர கூட்டங்களை உள்ளடக்கியது என்கிறது விஞ்ஞானம். ஒரு கிரகம் ஒரு ராசியில் உள்ளே செல்லும் போது, நட்சத்திர கூட்டம் வழியேதான் செல்கிறது. மேலும் ஒரு பாவத்தின் ஆதிபத்திய பலனை, கிரகங்கள் நட்சத்திரம் மூலமே பெற்று தருகிறது. இதில் இருந்து நட்சத்திர சாரம் என்பதன் முக்கியத்துவம் அறியலாம்.


ஒவ்வொரு கிரகமும், சூரியனின் கட்டுப்பாட்டிலும். சூரிய ஒளியை பிரதிபலிகிறது என்பதை தாண்டி, சூரியனை போல பல மடங்கு ஒளி பெற்ற நட்சத்திரங்களில் உள்ளே செல்லும் போது, நட்சத்திர காரகதுவதையும் பூமிக்கு பிரதிபலிகிறது என்பதே முழு உண்மை. எனவே நட்சத்திர பலம் அறிய நட்சத்திர அதிபதிகளை முனிவர்கள் வகுத்து சென்றனர்.உங்கள் ஜாதகத்தில் என்ன திசை நடக்கிறது..? அந்த கிரகத்தின் நட்சத்திரம் என்ன..? அந்த நட்சத்திர அதிபதி நல்லவரா கெட்டவரா என்பதையும் பார்த்துக்கொள்ளுங்கள்…மிதுன லக்னத்துக்கு சுக்கிர திசை நடக்கிறது..சுக்கிரன் நன்றாக இருக்கிறார்..ஆனால் அவர் இருப்பது செவ்வாய் நட்சத்திரத்தில்.செவ்வாய் லக்ன பாவி…அதனால் திசை சிறப்பான யோகத்தை தரவில்லை என அறியலாம் இதுவே புதன் நட்சத்திரத்தில் இருந்தால் புதன் சுகாதிபதி சொத்துக்களை நிறைய தருவார்.


சாரம் தரும் பலன்களின் விளக்கம்----------------------------------------------------------------------------
ஒரு ராசியில் அமரும் லக்ன நட்பு கிரகம், லக்னத்திற்கு கேந்திர திரிகோண அமர்ந்து, அது பெற்ற சார நாதன் லக்ன நண்பனாக இருந்து, அந்த சாரநாதன் கிரகம் அமர்ந்த வீட்டுக்கு கேந்திர திரிகோணம் பெற நல்ல பலன்கள் ஏற்படும்.
2. லக்ன நட்பு கிரகமும் லக்ன எதிரி சார நாதனும்

-------------------------------------------------------------------------------
ஒரு ராசியில் அமரும் லக்ன நட்பு கிரகம், லக்னத்திற்கு கேந்திர திரிகோண அமர்ந்து, அது பெற்ற சார நாதன் லக்ன எதிரியாக இருந்து, அந்த சாரநாதன் கிரகம் அமர்ந்த வீட்டுக்கு மறைவில் இருந்து பலம் பெற பலமான யோகம் தரும் ஏற்படும்.
ஒரு ராசியில் அமரும் லக்ன எதிரி கிரகம், லக்னத்திற்கு கேந்திர திரிகோண அமர்ந்து, அது பெற்ற சார நாதன் லக்ன நண்பனாக இருந்து, அந்த சாரநாதன் கிரகம் அமர்ந்த வீட்டுக்கு கேந்திர திரிகோணம் பெற நல்ல பலன்கள் ஏற்படும்.


ஜோதிட கலையில் லக்னம் என்னும் உயிர் ஸ்தானத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து உடல் ஸ்தானமாக கருதப்படும் சந்திரன் நின்ற வீட்டிற்கு இரண்டாவது பட்சமாக முக்கியத்துவம் கொடுக்கபட்டு அவர் அவர்கள் பலாபலன்கள் பார்க்கப்பட்டும் சொல்லப்பட்டும் வருகிறது. இது இப்படி இருக்க சத்தியரிஷி, அத்திரி, சட்டமுனிவர் போன்றோர் கருத்துப்படி நட்சத்திர சாரகதிப்படி பலன்களை காணும் போது அப்பலன்கள் நடைமுறைக்கு ஏற்க்குறைய ஒத்து வருவதை காணலாம்
மேலும் வாசிக்க"நட்சத்திர சாரம் தரும் திசாபுத்தி பலன்கள்"

Post Comment

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner