/> February 2017 | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Tuesday, 14 February 2017

தெய்வ சக்தி கொண்ட காராம்பசு

நாட்டு மாட்டில் உடல் முழுவதும் கறுப்பாக உள்ளதுதான் காராம்பசு.இதன் பாலை கறந்து ,தைப்பூசம் நாளில் முருகனுக்கு அபிசேகம் செய்து அந்த பாலை அருந்தி நோய் நீங்க பெற்றார்கள் நம் முன்னோர்கள்..செம்பு,பித்தளை ,பஞ்சலோகம் தவிர எந்த பாத்திரத்திலும் பாலை வைக்க மாட்டார்கள்.
ஆனால் இன்று ஒரு பெரிய சில்வர் பாத்திரத்தை கோயிலில் வெச்சிருக்காங்க..அதுல கோயிலுக்கு வரவங்க எல்லாம் பாக்கெட் பாலை கொண்டு வந்து ஊத்துறாங்க..அதை எடுத்து அபிசேகம் செய்றாங்க...சுவாமி சிலை கருங்கல் சிலை ஆனாலும் ,பஞ்சலோகம் ஆனாலும் அபிசேகம் செய்யப்படும் பொருளோடு சேர்ந்து வினைகள் புரிந்து நம் உடலுக்கு நன்மை செய்வதுதான் அபிசேகத்தின் அடிப்படை தத்துவம்.அதை முறையாக செய்வோம்..!!
******************************


கோயிலுக்கு இரவை பகலாக்கும் லைட்ஸ் கோயிலை சுத்தி வைக்குறது,டைல்ஸ் போட்டு வழவழன்னு நடக்க முடியாதபடி மாத்துறது,காதை கிழிக்கும் கரண்ட் மேளம் வைக்குறது,ரெக்கார்டு டான்ஸ்,ஆர்க்கெஸ்ட்ரா வைக்குறது ,,சில்வர் பாத்திரம் பயன்படுத்துவது இது எல்லாம் ராமேஸ்வரத்திலும் தீர்க்க முடியாத பாவ செயலாகும்...காரணம் பல ஆயிரம் மக்களின் ஆரோக்கியம்,மன சாந்தியை ஒரே நேரத்தில் கெடுக்கிறீர்கள்.
அக்காலத்தில் கோயில்களில் அதுவும் உள்புறத்தில் மட்டும் பரத நாட்டியம்,வீணை இசை,கதை சொல்தல்,புராண கதை,மக்களுக்கு நல்லவை சொல்லல் என இருந்தது.மக்கள் நடக்க டைல்ஸ் போட மாட்டார்கள்..பிரம்மாண்டம்,ஆன கோயில் கட்டியவர்களால் அதை செய்யவா முடியாது..? கோயிலில் அடிப்படை தத்துவமே ஆரோக்கியம்,மன சாந்திதானே..?
இரண்டையும் டைல்ஸ் கெடுக்கும்..கண்களின் ஒளியை பலப்படுத்துவது தீபம்..அதிக வெளிச்சமுள்ள லைட்ஸ்..தெய்வ சக்தியை குறைக்கும்..சிறிய வெளிச்சத்தில் மட்டுமே கடவுளை தரிசிக்க வேண்டும்....!!
**************************
நாட்டு மாட்டில் உடல் முழுவதும் கறுப்பாக உள்ளதுதான் காராம்பசு.இதன் பாலை கறந்து ,தைப்பூசம் நாளில் முருகனுக்கு அபிசேகம் செய்து அந்த பாலை அருந்தி நோய் நீங்க பெற்றார்கள் நம் முன்னோர்கள்..செம்பு,பித்தளை ,பஞ்சலோகம் தவிர எந்த பாத்திரத்திலும் பாலை வைக்க மாட்டார்கள்.
ஆனால் இன்று ஒரு பெரிய சில்வர் பாத்திரத்தை கோயிலில் வெச்சிருக்காங்க..அதுல கோயிலுக்கு வரவங்க எல்லாம் பாக்கெட் பாலை கொண்டு வந்து ஊத்துறாங்க..அதை எடுத்து அபிசேகம் செய்றாங்க...சுவாமி சிலை கருங்கல் சிலை ஆனாலும் ,பஞ்சலோகம் ஆனாலும் அபிசேகம் செய்யப்படும் பொருளோடு சேர்ந்து வினைகள் புரிந்து நம் உடலுக்கு நன்மை செய்வதுதான் அபிசேகத்தின் அடிப்படை தத்துவம்.அதை முறையாக செய்வோம்..!!
***********************************
இலுப்பை மரங்களை அதிகளவில் வளர்ப்போம்;
பச்சை இலுப்பை வெட்டி
பவளக்கால் தொட்டி கட்டி
பவளக்கால் தொட்டிலிலே

பாலகனே நீயுறங்கு..’

இந்தத் தாலாட்டுப் பாடலைப் பலரும் அறிந்திருப்பார்கள். குழந்தை பிறந்தவுடன், வலிமையான இலுப்பை மரத்தால் செய்த தொட்டிலில் படுக்க வைப்பது தொன்றுதொட்டு இருந்து வரும் நடைமுறை. பால் வடியும் மரமான இலுப்பை மரத்தொட்டிலில் குழந்தையை உறங்க வைத்தால், தாய்க்கு வற்றாமல் பால் சுரக்கும் என்பதும் நம்பிக்கை.
அக்காலத்தில் ஊர் ஊருக்கு இலுப்பை மரத்தோப்புகள் இருக்கும் இம்மரம் இருக்கும் இடத்தில் கெட்ட சக்திகள் அண்டாது...மாந்த்ரீக பாதிப்புகளில் இருந்து ஊரை காக்க ஒவ்வொரு ஊர்க்காரர்களும் இதை வளர்த்தனர் என்றும் சொல்வர்.இலுப்பை கொட்டைகளை ஆட்டி எண்ணெய் எடுத்து அதில் விளக்கேற்றி காற்றில் பரவும் விஷக்கிருமிகளை அழித்தனர்..
ஒரு மரத்துல வருஷத்துக்கு 50 கிலோவுக்கு மேல பருப்பு கிடைக்கும். ஒரு கிலோ பருப்பை செக்குல கொடுத்து ஆட்டுனா... 300 மில்லி எண்ணெய் கிடைக்கும். இலுப்பைப் புண்ணாக்கு, இலை ரெண்டுமே நிலத்துக்கு உரமாவும் பயன்படும். சுமார் 30 வருஷத்துக்கு முன்பு வரை, இதையெல்லாம் பயன்படுத்திதான் மண்ணை வளமாக்கி, செழிப்பா விவசாயம் செய்தனர்...இது பூச்சிக்கொல்லி மருந்தாகவும் பயிர் வளர்க்கும் உரமாகவும் பயன்பட்டிருக்கிறது!!
இலுப்பை ஒரு மூலிகை மரம். அதுல நிறைய நோய்களுக்கான மருந்து இருக்கு. முன்ன இலுப்பை எண்ணெயைத்தான் சமையலுக்குப் பயன்படுத்துவாங்க. அதுல செய்யுற பலகாரங்களும்., சாப்பாடும் அவ்வளவு ருசியா இருக்கும். சர்க்கரை வியாதி, மலச்சிக்கல், இடுப்புவலி, மூட்டுவலியை குணமாக்கும் சக்தி உண்டு.
ஆடு, மாடுகளுக்குக்கூட புண் வந்தா, இதைத்தான் தடவுவாங்க.இலுப்பை இலை, பட்டையை வெந்நீரில் போட்டு குளிச்சாலும், தோல் நோய்கள் ஓடிடும். இலுப்பைப் பிண்ணாக்கைத் தலையில தேய்ச்சுக் குளிச்சா பேன், பொடுகெல்லாம் காணாம போயிடும்...இலுப்பை மரங்களை அதிகளவில் வளரசெய்வது முக்கியம்!!
மேலும் வாசிக்க"தெய்வ சக்தி கொண்ட காராம்பசு"

Post Comment

Friday, 10 February 2017

வாழ்வில் முன்னேற்றம் தரும் தெய்வீக மூலிகை சாம்பிராணிமூலிகை சாம்பிராணி சேர்க்கப்பட்டிருக்கும் பொருள் வெண்கடுகு.இது கெட்ட சக்திகளை விரட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.பேயை விரட்டும்.கண் திருஷ்டியை நீக்கும்.ஹோமங்களில் தன்வந்திரியில் இது அதிகமாக சேர்க்கப்படுகிறது.காரணம் இது நோயை விரட்டும் முக்கிய மூலிகை.இதன் புகையை சுவாசிப்பதால் உடலில் சுரப்பிகள் நன்கு சுரக்கும்.
வீட்டில் அமைதி இன்மைக்குக் காரணமே தீய சக்திகள்தான் என்பது மட்டும் சத்தியமான உண்மை. ஒற்றுமையாக இருந்து வந்த குடும்பங்கள் கூட சிறு சிறு பிரச்சனைகளினால் மன ஒற்றுமை இன்றி சிதறும் என்பதின் காரணம் அந்த தீய ஆவிகளின் செயல்பாடினால்தான்..இந்த பிரச்சினையை முக்கியமாக தீர்க்கவும் வெண் கடுகு,மருதாணி விதை உதவுகிறது.
அத்துடன் முதல் தர சாம்பிராணி மற்றும் சில மூலிகைகளை சேர்த்துதான் மூலிகை சாம்பிராணி தயாரிக்கிறேன்.என் நண்பர்களுக்கும் ,உறவினர்களுக்கும் கொடுத்து வருகிறேன்.வாரம் இருமுறை வீட்டிலும்,தொழில் செய்யுமிடத்தில் நெருப்பில் சாம்பிராணி பொடியை போட்டு வந்தால் போதும்.
இதன் தரத்தை இன்னும் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி அடுத்த வாரத்தில் இன்னும் சிரப்பாக தயாரிக்க உள்ளேன்...தேவைப்படுவோர் இன்பாக்ஸில் தகவல் சொல்லவும்.தயாரித்தபின் தகவல் தருகிறேன்.நன்றி
.-ஆர்.கே.சதீஷ்குமார் ஜோதிடர்.https://www.facebook.com/Astrosathishkumar
மேலும் வாசிக்க"வாழ்வில் முன்னேற்றம் தரும் தெய்வீக மூலிகை சாம்பிராணி"

Post Comment

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner