/> கிரக அவஸ்தை யும் துங்க கணிதமும் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Monday, 10 April 2017

கிரக அவஸ்தை யும் துங்க கணிதமும்

ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை..!!

கிரகங்கள் ஜாதகத்தில் இருக்கும் நிலையை பொருத்து தனது திசா காலத்தில் பலன்களை தரும். ( ஆட்சி ,உச்சம், நட்பு ,பகை, நீசம், அஸ்தமனம் போன்ற நிலைகளில் ) இவைகள் ஒன்பது நிலையில் கிரக அவஸ்தைகள் என அழைக்கபடுகின்றன.


1.தீப்தாவஸ்தை (பிரகாசித்தல்) : ஒரு கிரகம் உச்ச வீட்டில் இருப்பது.
2.ஸ்திமிதாவஸ்தை (நிலையான தன்மை ) : ஒரு கிரகம் ஆட்சி வீட்டில் இருப்பது.

3.முகிதாவஸ்தை (மகிழ்ச்சி ) : ஒரு கிரகம் தனது அதிமித்திரன் வீட்டில் இருப்பது.

4.சாந்தவஸ்தை (அமைதி ) : ஒரு கிரகம் தனது நட்பு வீட்டில் இருப்பது.

5.ஹீனாவஸ்தை (பலக்குறைவு ) : ஒரு கிரகம் தனது சமன் வீட்டில் இருப்பது.

6.துக்காவஸ்தை (கவலை ) : ஒரு கிரகம் தனது பகை வீட்டில் இருப்பது.

7.விகலாவஸ்தை (வெறுப்பூட்டும் செயல் ) : ஒரு கிரகம் பாபக்கிரகங்களோடு சேர்ந்து இருப்பது.

8.கலாவஸ்தை (துஷ்டன் ) : ஒரு கிரகம் கிரக யுத்தத்தில் தோற்று இருந்தால்.
9.கோபாவஸ்தை (கோபம் ) : ஒரு கிரகம் சூரியனோடு சேர்ந்து அஸ்தமனம் அடைந்து இருந்தால்.


துங்க கணிதம் ;

ஒரு கிரகம் உச்ச வீட்டில் இருக்கும் போது 60 டிகிரி அல்லது 60 மதிப்பெண்கள்

அதே கிரகம் நீச வீட்டில் இருக்கும்போது 0 டிகிரி. அதாவது 0 மதிப்பெண்கள் .
.
நீச வீட்டில் இருந்து உச்ச வீட்டை நோக்கி செல்லும்போது ஒரு ராசிக்கு பத்து மதிப்பெண் வீதம் அதிகரித்த்துக்கொண்டே போகும்…உச்ச வீட்டில் இருந்து நீச வீடு வரை பத்து பத்து மதிப்பெண்களாக குறைந்து கொண்டே வரும்..

சுக்கிரன் மீனத்தில் உச்சம் 60 -மதிப்பெண்கள் மிதுனத்தில் சுக்கிரன் 30 மதிப்பெண்கள்-கடகத்தில் சுக்கிரன் 20 மதிப்பெண்கள் -சிம்மத்தில் சுக்கிரன் 10 மதிப்பெண்கள்-

கன்னியில் சுக்கிரன் 0 மதிப்பெண்கள்-மேசத்தில் சுக்கிரன் 50 மதிப்பெண்கள்
ரிசபத்தில் சுக்கிரன் 40 மதிப்பெண்கள்

இவ்வாறு சுக்கிரன் நீச வீட்டில் இருந்து உச்ச வீட்டை நோக்கி செல்லும்போது ஒரு ராசிக்கு 10 மதிப்பெண்கள் என உயர்ந்து கொண்டே செல்லும்.இவ்வாறு  ஒரு கிரகத்தின் பலத்தை அறிந்துகொள்வதே துங்க கணிதமாகும்.

ஒரு கிரகம் தன் நீச வீட்டை நோக்கி போய்க்கொண்டிருப்பது அக்கிரகத்தின் பலவீனமான அமைப்பை காட்டுகிறது அதன் திசாபுத்தி சுமாரான பலன் தரும் என்பது மட்டுமல்லாமல் அக்கிரகம் குறிக்கும் காரகத்துவமும் பாதிக்கப்படும்.Related Article:

Post Comment

No comments:

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner