/> தை அமாவாசை 16.1.2018 அன்று இதை செய்தால் செல்வம் பெருகும்!! ஜோதிடம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Wednesday, 3 January 2018

தை அமாவாசை 16.1.2018 அன்று இதை செய்தால் செல்வம் பெருகும்!! ஜோதிடம்

தை அமாவாசை 16.1.2018 அன்று இதை செய்தால் செல்வம் பெருகும்!! ஜோதிடம்                             

தை அமாவாசை வரும் 16.1.2018 அன்று வருகிறது வழக்கமான அமாவாசை தினங்களில் நாம் செய்வது காலையில் குளித்துவிட்டு சிவன் சன்னதி சென்று வழிபட்டு வருவோம்...காக்கைகு சாதம் வைத்தபின் முன்னோர்களை நினைத்து வழிபடுவோம்..

தை அமாவாசை என்ன சிறப்பு என பார்த்தோமானால் தை மாதம் சூரியன் சனி ராசியாகிய மகரத்தில் இருப்பார் ..சூரியன் தந்தை ..சனி மகன் என ஜோதிடம் சொல்கிறது...மகனை தேடி தந்தை வரும் காலம்தான் தை மாதம்..முன்னோர்கள் உங்கள் வீடு தேடி இந்த அமாவாசையில் நிச்சயம் வருவார்கள் அவர்களை வரவேற்கும் விதமாக கோலம் போடக்கூடாது..அமாவாசை தினத்தில் கோலம் போடுவது முன்னோர்களை திசை திருப்பி விடும்.

அன்றைய தினம் ஆற்றங்கரை கடல்கரையில் அரிசி மாவில் பால்,தயிர்,தேன்,கரும்பு சர்க்கரை கலந்து உருண்டையாக்கி அதனுடன் எள் கலந்து உருண்டையாக்கி அதனை தர்ப்பை புல் கொண்டு தொட்டு முன்னோர்கள் பெயரை சொல்லி சமர்ப்பயாமே என மூன்று முறை சொல்லி என்னை ஆசிர்வாதியுங்கள் என மூன்று முறை சொல்லி ஒரு பாக்கு தட்டில் வைத்து நீருக்குள் நின்றவாறு அந்த மாவில் நீர் மூன்று முறை ஊற்றி ஆற்று நீரில் விட்டுவிடுங்கள் ...பசித்தவர்களுக்கு கொஞ்சம் அன்னதானம் செய்யுங்கள்

வீட்டுக்கு வந்து மதிய உணவு காக்கைக்கு வைத்தபின் உண்ணுங்கள்

உங்கள் முன்னோர்கள் ஆசி கிடைக்கும்..செல்வவளம் உண்டாகும்

வரும் தை அமாவாசை தினத்தில் தான தர்மம் செய்வது மிக சிறப்பு ...குடை,செருப்பு போன்றவற்றை இல்லாதவருக்கு கொடுத்து உதவலாம்

ஆதரவற்றை குழந்தைகள் முதியோர்களுக்கு அன்று நம் ஜோதிட நிலையம் சார்பாக அன்னதானம் செய்ய இருக்கிறோம் கலந்து கொள்ள விருப்பம் இருப்போர் ,பங்களிப்பு தொகை சிறியதாக இருப்பினும் அனுப்பலாம்..உங்கள் பெயரில் உணவு அளிக்கப்படும் ...செருப்பு,துணிகளும் அன்று வழங்க இருக்கிறோம்...!! வாட்சப் நம்பர் 9443499003


Related Article:

Post Comment

No comments:

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner