/> உங்க ராசி பற்றி முன்னோர்களின் கருத்து என்ன தெரியுமா | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Saturday, 17 February 2018

உங்க ராசி பற்றி முன்னோர்களின் கருத்து என்ன தெரியுமா

மேஷம் - தகடோடு எகரேல்.
மேஷ ராசிக்காரர்களோடு மோதுதல் கூடாது.இவர்களுக்கு கோபம் வந்தால் விலகி போக மாட்டார்கள் ..ஜெயிக்கும் வரை அடங்கிப்போக மாட்டார்கள் ரெண்டுல ஒண்ணு பார்க்காம என் சொத்தை வித்தாவது இந்த கேஸை ஒரு கை பார்த்துடுறான் ரகம்..பயமுறுத்தலாம்னு நினைச்சீங்கன்னா உங்களை நடுங்க வெச்சிடுவாங்க..
ரிஷபத்தானோடு தோரேல்.
ரிஷப ராசிக்காரர்களோடு பக்குவமாக நடந்துகொள்ள வேண்டும்.வாங்க போங்கன்னு மரியாதையாக பேசுவார்கள் மற்றவர்களும் நாகரீகமாக நடந்துக்கனும் என விரும்புவார்கள் அவமதித்தால் அவர்களை பிறகு திரும்பி கூட பார்க்க மாட்டார்கள் ..இவங்க பேசுவதே குழந்தை மாதிரி அதிராம இருக்கும்..அதனால இவங்க கிட்ட யார் பேசினாலும் பொறுமையா பேசும்படி இருக்கும்
மிதுனம் - தண்டு கொண்டு இல் புகேல்.
இவர்கள் புத்திசாலிகள் என்பதால் இவர்களிடம் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்.இவங்க வீட்டுக்கு போனாலும் இவன் எதுக்கு வந்திருக்கான் காரியம் இல்லாம வர மாட்டேனேன்னுசிந்திச்சுட்டே இருப்பாங்க..வந்தவங்க போகும் வரை பதட்டத்தோட இருப்பாங்க..பேசும்போதும் வார்த்தைகளை சரியா பயன்படுத்தனும்..சொல்லும் வார்த்தையை வைத்து நம்மை எடை போடுவார்கள்..பத்து வருசத்துக்கு முன்னாடி நீ இப்படி சொன்னே அதுல இருந்துதான் உன் கிட்ட நான் பேசுறதில்லைன்னு சொல்லும் ரகம்.

கடகம் - நண்டானுக்கு இடம் கொடேல்
எவ்வித பிரச்சினைகளையும் சாதுர்யமாக சமாளிப்பர்.ஒரு பிரச்சினைன்னு இவர் கிட்ட போனா..அப்புறம் இவரை சமாலிக்குறது பெரும் பாடாகிடும்..ஆனா நல்ல மனுசன்..அப்புறம் இவர் இல்லாம நீங்க எதையுமே செய்ய முடியாது அண்ணன் கிட்ட எதுக்கும் ஒரு வார்த்தை கேட்டு செய்வோம் எனும் நிலைக்கு கொண்டு வந்துடுவார் அந்தளவு நியாயஸ்தன்..அதே சமயம் நண்டுக்கு இடம் கொடுக்க கூடாதுன்னு ஏன் சொல்றாங்கன்னு கேட்டா குரங்கு அப்பம் பிரிச்சு கொடுத்த கதையை நினைக்கவும்..அப்புறம் இடத்தை கொடுத்தா மடத்தை பிடிச்சான் பழமொழியையையும் நினைச்சுக்குங்க..ஏன்னா இவர் ரொம்ப நல்லவர்..இவர் எலிமை பழகும் விதம் பார்த்து எல்லோரும் இவர் அன்புக்கு கட்டுப்பட்டுக்குவாங்க.

சிம்மம்- சிம்மத்தோன் சிம்மாசனத்தில் அமருவான்
பெரும்பாலான சிம்ம ராசிக்காரர்கள் அரசு பணியிலோ அல்லது அதிகார வட்டத்திலோ இருப்பார்கள் ..அதிகாரம் எங்கு இருக்கோ அங்கு இவர்களை காணலாம் 
எல்லாம் நான் பார்த்துக்கிறேன் போ என்ற வார்த்தைகளை இவர்களிடம் அடிக்கடி கேட்கலாம்.எங்கு இருந்தாலும் எப்படி இருந்தாலும் அங்கு இவர் ராஜாவாகவே இருக்க விரும்புவார்கள் எடுபிடியாக இந்த ராசிக்காரர்கள் இருக்க மாட்டார்கள் காரணம் ராசி அதிபதி நவகிரகங்களின் ராஜா சூரியன்.

கன்னி - கன்னி மகனை கைவிடேல்.
கன்னி ராசி ஆண் மகன் எனத் தெரிந்தால் நட்புக்கும் உறவுக்கும் அவசியம் தேவைப்படுபவர்கள். எனவே இவர்களின் நட்பை உதாசீன படுத்தவே கூடாது.கன்னி ராசி எளிமை இனிமை குதூகலம் ..இவங்க இருக்குற இடத்துல மகிழ்ச்சிக்கு அளவு இருக்காது.நண்பர்கள் மீது அதிக பாசம் கொண்டவர்கள் நண்பர்கள் சொன்னா சரி எந்த பிரதிபலனும் வேண்டாம் உனக்காக செய்றேன் என்பவர்கள் ..ஏமாளிகள் என்று நினைக்க வேண்டாம்..நம்மை ஏமாத்துறான் என தெரிஞ்சாலும் போய் தொலையறான் என நண்பனுக்காக சிரமபடுபவர்கள் கன்னி ராசிகாரர்கள்
துலாம் - துலாத்தான் எவ்விடத்திலும் தோளான்.
துலாம் ராசிக்காரர்கள் எதிலும் துவள்வது கிடையாது.காலையில் இருந்து அலைஞ்சிட்டு வந்தாலும் உற்சகம் குறையாது இன்னிக்கு ஒரு பார்ட்டி இருக்குன்னு சொல்லிட்டா போதும் ..அந்த பார்ட்டியை கொண்டாட்டமா மாத்த துலாம் ராசிக்காரர்களால் தான் முடியும்..ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான் ..எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் உற்சாகம் குறையாமல் செய்வார்கள் மற்றவர்களையும் உற்சாக படுத்திக்கொண்டே இருப்பார்கள் இவர்கள் இருக்கும் இடத்தில் எல்லோருக்கும் எனர்ஜி வந்துவிடும்

விருச்சிகம் - தேளானை பேணிக்கொள்.
விருச்சிக ராசிக்காரர்களை பொன் போல் பாதுகாக்க வேண்டும்.தேள் சின்னம் கொடுத்திருப்பாங்க..இவங்க சொல் தேள் விசம் போல் இருக்கும் என்பது மட்டும் காரணமல்ல...தேள் தன் குஞ்சுகளை முதுகில் சுமந்தபடி இரை தேடும்...யாரையும் நம்ப மாட்டார்கள் தன் குழந்தைகளின் மீது அளவு கடந்த பாசம் கொண்டவர்கள் குழந்தைகளுக்காக வாழ்கிறேன் என்ற வார்த்தை இவர்களின் வாயில் அடிக்கடி வெளிப்படும்..அதீத பாசம் கொண்ட இவர்கள் மனது நோகும்படி பேசி விட்டால் அதை எண்ணி எண்ணி அதிக துக்கம் அடைவார்கள் ...எப்போ எதை நினைச்சு கவலைப்படுவாங்கன்னு தெரியாது.எனவே இவர்களை பாதுகாப்பா பார்த்துக்கனும்..நீங்களும் இவங்ககிட்ட பாதுகாப்பா இருக்கனும் தவறு செய்தால் தேள் சும்மா விடாது.
தனுசு - வில்லானை சொல்லால் வளை.
தனுசு ராசிக்காரர்களை அன்பு சொற்களால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்..பக்தி பிரசங்கம் , கார்ப்பரேட் சாமியார்களின் அழகான பேச்சுக்கு அடிமையாகும் ராசிகளில் முதலிடத்தில் இருப்பது நம்மாளுதான். இவங்களும் அழகா பேசுவாங்க..அழகா யாராவது பேசினா அசத்தலா பேசினா நெக்குருகி மனம் மயங்கிடுவாங்க..அவங்க சொல்வதை எல்லாம் கேட்பாங்க..இவங்களை பாராட்டி பேசினா அவ்வளவு ஆனந்தம். பாராட்டை அதிகம் விரும்புவாங்க..மத்தவங்களை மனசு விட்டு பாராட்டுறதுல இவங்களை அடிச்சிக்க ஆளே இல்லை
மகரம் - மகரத்தோன் முதலைக் கண்ணீர் வடிப்போன்.
இந்த பழமொழிக்குதான் என் மகர ராசி நண்பர்களை எப்படி சமாளிக்குறதுன்னு தெரியல...ம்ம்....மகரத்துக்குல குரு நீசம் ஆகுறாதால செவ்வாய் அங்கு உச்சம் ஆகுறதால மகரத்தை சுயநல ராசி என்ற பார்வை இருக்கு..குரு நல்ல நிலையில் இருந்தா கவலை இல்லை..
.இருப்பினும் பெரும்பாலான மகரம் பொய் அதிகம் பேசுவதாலும் விண் புலம்பல்கள் அதிகம் இருப்பதாலும் இப்படி சொல்லி இருக்கலாம்..உதாரணத்துக்கு காசு பணம் நிறைய வெச்சிருப்பார்...காசில்லாத நண்பனை பார்த்தா அவன் காசு கேட்ருவானான்னு பயந்து பையனுக்கு காலேஜ் பீஸ் கட்டனும் பொண்ணுக்கு கல்யாணம் செய்யனும்..பணத்துக்கு என்ன பண்றதுன்னு ஒண்ணும் புரியல..என தேவையில்லாம புலம்பி கேட்குறவங்களை எரிச்சல் படுத்திடுவார்...
சொத்து இவ்வளவு வெச்சிட்டு இப்படி புலம்பறானே என கேட்பவர் கடுப்பாகிடுவார் இது போன்ற தேவையற்ற புலம்பல்..அடுத்தவர்களை குறை சொல்லிக்கொண்டே இருப்பதுதான் கொஞ்சம் மைனஸ் ..அதே சமயம் உழைப்பால் உயர்ந்தவர்கள் நிறைய பேர் மகர ராசிதான்.... இவருடைய ஜால வார்த்தைகளுக்கு மயங்கவே கூடாது. அதை செய்வேன் இதை செய்வேன்...என மற்றவரை நம்ப வைப்பதில் இவர் கில்லாடி..நான் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு இதை செய்தேன் தெரியுமா..கண்ணீர் அடிக்கடி விடுவார்கள்
கும்பம் - கும்பத்தோன் குன்நின்று வெல்வோன்.

 வெற்றியின் உச்சம் அடைய பாடுபடுவர். கும்பம் இரண்டாம் ராசி குரு என்பதால் இவர்கள் செல்வாக்கான நிலையை எட்டி பிடிக்க அதிகம் பாடுபடுவார்கள் மூன்ராம் வீடு செவ்வாய் என்பதால் இவர்கள் அதற்காக கடுமையாக உழைப்பார்கள் ..ஊர்ல ஒரு கோயில் கட்டனும் பழைய கோயிலை புதுப்பிக்கனும் குலதெய்வ கோயிலை சீரமைக்கனும் ஊர்ல ஒரு பள்ளிக்கூடம் வரனும் காலேஜ் வரனும் என பொது காரியத்துக்காக பாடுபடுவர்களில் இவர்கள் முக்கியமானவர்களாக இருப்பார்கள்
மீன மகனை விடேல். 

பொது நிகழ்ச்சிகளில் மீன ராசிக்காரர்கள் இருந்தல் நியாயமான தீர்வுகளுக்கு வழிவகுக்கும் வெளியூருக்கு செல்லுவது அதிக நாட்டம் கொள்வார்கள். அன்னதானம் முதல் ரத்ததானம் வரை செய்யும் மனப்பான்மை பெற்ற இவர்கள் நிதானம் மட்டும் பெற்றிருப்பார்கள். பிறருக்கு நல்ல ஆலோசனைகளை கூறுவார்கள். பிறருடைய சொத்துக்காகவோ, பொருளுக்காகவோ ஆசைப்பட மாட்டார்கள். மனதில் தோன்றும் எண்ணங்களைத் தயங்காமல் எடுத்துரைப்பார்கள். மனதிற்கு எது சரியொன்று தோன்றுகிறதோ அதை உடனடியாக செய்து முடிப்பார்கள். வெளிநாடு சென்று செட்டில் ஆக விரும்புவார்கள். மீனைப் போன்று துள்ளித் திரியும் சுறுசுறுப்பும் கண் தூங்காமல் உழைத்திடும் ஆற்றலும் கொண்டவர். பயந்த சுபாவமும் பெற்றிருப்பார்கள்.Related Article:

Post Comment

No comments:

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner