/> குரு வக்ரம் எந்த ராசியினருக்கெல்லாம் யோகம்? | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Wednesday, 7 March 2018

குரு வக்ரம் எந்த ராசியினருக்கெல்லாம் யோகம்?

குரு வக்ரம் ராசிபலன் 2018

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் 


ஜோதிடரீதியாக கோட்சாரப்படி இப்போது குரு துலாம் ராசியில் இருக்கிறார் குரு பெயர்ச்சியில் யாருக்கெல்லாம் அவயோகமான பலன்களை குரு கொடுத்தாரோ அவர்களுக்கு எல்லாம் குரு நன்மையான பலன்களை தனது வக்ர காலத்தில் செய்வார் என்கிறது ஜோதிடம் 

பங்குனி மாதத்தில் மீனம் ராசியில் சூரியன் இருப்பார் அந்த சூரியனுக்கு எட்டாவது ராசியில் குரு சஞ்சரிக்கிறார் இது வக்ரகாலம்..இது மூன்று மாதங்கள் வரை இருக்கும் 

வக்ர காலத்தில் எந்தெந்த ராசியினருக்கு குரு நன்மையை செய்வார் யாருக்கெல்லாம் தீமையான பலன்களை செய்வார் என சுருக்கமாக பார்க்கலாம் 

குரு எந்த லக்னம் எந்த ராசியினருக்கு இயற்கையில் பகையாக இருக்கிறாரோ அவர்களுக்கு எல்லாம் முதலில் நன்மையே உண்டாக்கும் ..உதாரணமாக ரிசபம்,துலாம் இந்த இரு ராசியினருக்கும் குரு நன்மையை செய்ய மாட்டார் கெடுதல்தான் அதிகம் செய்வார் மிதுனம் ,கன்னி ராசி லக்னத்தாருக்கும் குரு பாதகம் செய்பவர் தான் ..கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம் அடிப்படையில் நம்ம கடன்காரனுக்கு உடம்பு சரியில்லைன்னா அப்பாடி தப்பிச்சோம்..இன்னும் கொஞ்சம் நாளைக்கு கடன் காசை கேட்டு தொல்லை பண்ண மாட்டான்னு சந்தோசப்படுவீங்கதானே அது மாதிரிதான்குரு வக்ர காலத்தில் கொஞ்சம் நற்பலன்கலும் கிடைக்கும் குரு பெயர்ச்சிக்கு பின் யாருக்கெல்லாம் தொடர்ந்து கெடு பலன்கள் அதிகம் நடந்துதோ அவங்களுக்கு எல்லாம் குரு இந்த காலத்தில் நன்மையை செய்வார் ...

வரும் வெள்ளிக்கிழமை குரு வக்ரம் ஆரம்பம்...குரு வக்கிரமாகும்போது குருப்பெயர்ச்சியில் பாதகமான பலனை அடைந்தவர்கள் சற்று நன்மையான பலன்களை காண்பார்கள் ..மூன்று மாதங்கள் வரை இருக்கும் ..குறிப்பாக ரிசபம்,கடகம்,சிம்மம்,துலாம்,விருச்சிகம்,கும்பம்,மீனம் ராசியினருக்கும் நல்ல பலன்களை செய்வார் என எதிர்பார்க்கலாம்Related Article:

Post Comment

No comments:

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner