/> அட்சய திருதியை அன்று இதை செய்ய மறக்காதீங்க..!! | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Monday, 16 April 2018

அட்சய திருதியை அன்று இதை செய்ய மறக்காதீங்க..!!

அட்சய திருதியை 18.4.2018

வருகிற புதன் கிழமை அட்சய திருதியை வருகிறது...சூரியனும் ,சந்திரனும் உச்ச்சமாக இருக்கும் நாள்தான் அட்சய திருதியை..சிவனும்,சக்தியும் பரிபூரணமாக ஆசியை வழங்கும் நாள்
பரசுராமர் அவதரித்த நாள்...(நான் பிறந்ததும் அட்சய திருதியை 🙂 )


அட்சய திருதியை நாளில் நமது வேண்டுதல்கள் பலிக்கும்.செய்யும் காரியங்கள் புனிதமடையும்.தானம் செய்யும் பொருட்கள் உங்களுக்கு பல்கி பெருகும்.நீங்க தங்கம் தானம் செய்தா தங்கம் பெருகும் வெள்ளி தானம் செய்தா வெள்ளி பெருகும். அதை மட்டும் செய்ய மாட்டீங்களே..🙂
.தங்கம் வெள்ளி வாங்குவதோடு சரி..

ஆனா அக்காலத்தில் மன்னர்கள் செய்திருக்கிறார்கள் திறமையானவர்களையும் கலைஞர்கள்,புலவர்களையும் அழைத்து இந்நாளில் தங்கம்,வெள்ளி பரிசு கொடுத்திருக்கிறார்கள்..வசதி இருப்போர் செய்து பாருங்க...போன அட்சய திருதியைக்கு ஒரு நண்பர் அரை கிராம் தங்கம் எனக்கு வழங்கினார்...அடுத்த முறை ஒரு ஏழைப்பெண்ணுக்கு கொடுங்க என சொல்லிவிட்டேன்.

திருமணம் ஆகாத ஏழைபெண்களுக்கு வசதி இருப்போர் இந்நாளில் உதவுங்கள் உங்கள் வம்சத்தில் எல்லோருக்கும் குடும்ப ஒற்றுமை உண்டாகும்

உடல் ஊனமுற்றோர்களுக்கு துணிகள் ,வாக்கிங் ஸ்டிக் போன்றவற்றை கொடுங்கள் உங்கள் வம்சத்தில் யாருக்கும் அங்க ஊனம் உண்டாகாது
ஆதரவற்றோர்க்கு அன்னதானம் செய்யுங்கள் ..வம்சத்தில் யாவருக்கும் பசி பஞ்சம் வராது

ரத்த தானம் செய்யுங்கள் வம்சத்தில் யாருக்கும் விபத்து உண்டாகாது

ஏழைக்குழந்தைகள் கல்விக்கு உதவுங்கள் ..சரஸ்வதி அருள் கடாட்சம் உங்க குடும்பத்துக்கு உண்டாகும்

வசதி குறைந்தவர்கள் அன்று நல்ல நேரத்தில் கல் உப்பு ஒரு கிலோ,பசும்பால்,மஞ்சள்,அரிசி இவற்றை வாங்கி வீட்டில் சேமிக்கலாம்.பெருகும்.

இவற்றில் எதை முடியுமோ அதை மறக்காமல் செய்து விடுங்கள் ..சிவசக்தி அருள் பெறுங்கள் !!

அட்சய திருதியை 18.4.2018 நல்ல நேரம்
தங்கம் ,வெள்ளி வாங்க இந்நாளில் எல்லோருக்கும் விருப்பம் இருக்கும்...ஏனெனில் இது ஒரு பெருகும் நாள் ..

தங்கம் வாங்குவது மட்டுமல்லாமல் இந்நாளில் நீங்க யார்கிட்ட எல்லாம் அதிகமா கோவிச்சுக்கிட்டு இருக்கீங்களோ அவங்களுக்கு பிடிச்சதை வாங்கி கொடுத்து சந்தோசப்படுத்துங்க..அதிக அன்பை காட்டுங்க..அன்பு பெருகும்.

அதுக்காகத்தான் மனைவிக்கு தங்கம் வாங்கி தரோம்னு சொல்றீங்களா...அதுவும் சரிதான்.கணவருக்கு மனைவி பதிலா எதுவும் செய்யனுமே..? கணவருக்கு வெள்ளை ,மஞ்சள் நிற ஆடைகளை வாங்கி கொடுங்க..

தங்கம் வாங்கி அணிய நல்ல நேரம் காலை 9 மணிமுதல் 10 மணி வரை
பகல் 1.30 முதல் 3 மணி வரை
மாலை 4 மணிமுதல் 5 மணி வரை


Related Article:

Post Comment

No comments:

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner