/> தமிழ் புத்தாண்டு ஏன் சித்திரையில் கொண்டாடுகிறோம்..? | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Friday, 13 April 2018

தமிழ் புத்தாண்டு ஏன் சித்திரையில் கொண்டாடுகிறோம்..?

சித்திரை மாதம் ஏன் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது..? 14.4.2018
====================

மேஷத்தில் பரணி என்ற நட்சத்திரத்தில் கிரகங்களின் அரசன் சூரியன் உச்சம் பெறுகிறார், அதை கருத்தில் கொண்டே சித்திரை மாதம் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. சூரியன் தனது பார்வையை பூமத்திய ரேகையில் செலுத்தும் இந்த காலத்தில், சம அளவு வெப்பத்தை மகர ரேகை மற்றும் கடக ரேகை பகுதிகளிலும் செலுத்தும் என்பதும் இன்னொரு அறிவியல் சூட்சுமம் ஆகும். இதில் இன்னொரு ஜோதிட சூட்சுமம் என்னவென்றால், கிரகங்களில் அதிக பலம் கொண்ட கேதுவின் நட்சத்திரமான அஸ்வினியில் தனது பயணத்தை தொடங்கி, குறைவான பலம் கொண்ட புதனின் நட்சத்திரத்தில் தனது பயணத்தை முடிகிறது.இத்தகைய சிறப்பு கொண்ட சூரியன், பூமியில் இருந்து பார்க்கும் போது, தமிழ் புத்தாண்டு அன்று சித்திரை மாத ஆரம்பத்தில் மேஷ ராசி மண்டலத்தில் இருக்கிறார். ஆதாவது பூமியின் நடுப்பகுதில் தனது ஒளிக்கதிர்களை செறிவாக செலுத்தும் காலம் இதுவே. இதை வேறு விதத்தில் கூற, பூமி சூரியனை சுற்றிவரும் நீள்வட்ட பாதையில் சூரியனை நெருக்கி செல்லும் காலம் என்றும் கூறலாம்.

மேஷ ராசியில் இருக்கும் அஸ்வினி என்ற நட்சத்திரத்தில் இருக்கும் போதே தமிழ் புத்தாண்டு ஏற்படுகிறது. அஸ்வினி என்ற நட்சத்திரம் குதிரை வடிவம் கொண்டது. சூரியன் எனும் அரசன் குதிரை (அஸ்வினி) மேல் பயணம் செய்கிறார் என்ற உவமையும் இங்கே செய்து பார்க்கலாம்.

எனவே அனைவரும் சூரிய வழிபாடு மற்றும் குல தெய்வ வழிபாடு செய்து, தமிழ் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடுங்கள். அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

--------------------------------------------------------------------------
சித்திரை 1 தமிழ் புத்தாண்டு 14.4.2018 சனிக்கிழமை அன்று காலை 8.10 க்கு விளம்பி ஆண்டாக பிறக்கிறது...!!

சித்திரை கனி வழிபடும் முறை

முக்கனிகள் மா,பலா,வாழை உட்பட கனிவகைகள் வாழை இலையில் வைத்து பச்சரிசி பரப்பி செம்பு குடத்தில் நீர் வைத்து மாவிலை வைத்து மஞ்சள் தடவிய தேங்காயை கலசம் போல் வைக்கவும்...குத்து விளக்கு அருகில் வைக்கவும் முகம் பார்க்கும் கண்ணாடி வைக்கவும். உப்பு,பருப்பு தானியங்கள் வைக்கவும்..பணம் ,காசுகள்,தங்கம்,வெள்ளி இவற்றை வெற்றிலை பாக்கில் வைக்கவும்.பஞ்சாங்கம் அல்லது கணக்கு நோட்டு புத்தகங்கள் வைக்கலாம் மஞ்சள் பில்ளையார் பிடித்து அருகம்புல் வைக்கவும்.மகாலட்சுமி படம் ஒன்றையோ திருப்பதி பெருமாள் படத்தையோ வைக்கலாம்..நாளை பிரம்ம மூகூர்த்தம் எனப்படும் 5 முதல் 6 மணிக்குள் சித்திரை கனியில் கண் விழித்து குத்து விளக்கேற்றி வழிபடவும்..!! சாப்பிடும்முன் அருகில் இருக்கும் அம்பாள் கோயில் சென்று வழிபடவும்!!Related Article:

Post Comment

No comments:

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner