/> திருநள்ளார் சனீஸ்வரனை வழிபடும் முறை | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Sunday, 8 April 2018

திருநள்ளார் சனீஸ்வரனை வழிபடும் முறை

திருநள்ளார் பயணம் செய்பவர்கள் கவனத்திற்கு ..சனிக்கிழமை மட்டும்தான் அங்கு போக வேண்டும் என்ற அவசியம் இல்லை.அன்று மட்டும்தான் சனி பகவான் உங்களை பார்த்து சரி இவருக்கு இனி கஷ்டம் கொடுக்க கூடாது என முடிவு செய்வார்னு நினைக்காதீங்க...உங்க பிறந்த கிழமை பிறந்த நட்சத்திரம் பிறந்த மாதத்திலும் செல்லலாம் ..ஜென்ம நட்சத்திரத்தில் உங்க இஷ்ட தெய்வத்தை வழிபடுவதால் கேட்ட வரம் கிடைக்க அதிக வாய்ப்புண்டு.
திருநள்ளார் குளத்தில் குளித்தவுடன் துணியை அவிழ்த்து குளத்தில் விட்டு விடுவதால் சனி அந்த துணியோடு போய்விடுவார் என்று நம்ப வேண்டாம் .
நளமகாராஜா வழிபட்டதால்தான் நாமும் திருநள்ளார் போகிறொம் அவர் எல்லா கஷ்டத்தையும் அனுபவிச்சிட்டு சனி முடியும் போதுதான் அங்கு போனார் அதுவும் சனியை வழிபட அல்ல.தர்ப்பணேஸ்வரரை வழிபடத்தான்.முதலில் சிவன் அதன் பின் அம்பாள் அதன் பின் சனியை வழிபடுவதே முறையாகும்.


கோயிலுக்குள் செல்லும் முன் வாசலில் உள்ள வினாயகருக்கு இரண்டு நெய்தீபம் ஏற்றி வழிபட்டபின் ...சிவபெருமானை வில்வம் வைத்து வழிபட வெண்டும் உங்கள் பெயர் ராசிக்கு அர்ச்சனை செய்து கொள்ளவும்..அதன் பின் அம்பாளுக்கு மலர்மாலை அணிவித்து வழிபடவும் அதன் பின் சனீஸ்வரருக்கு எள்தீபம் ஏற்றி வழிபடவும்..

அங்கு மதியம் 12 மணியளவில் மரகதபச்சை லிங்க வழிபாடு பூஜை நடக்கும் விசாரித்துக்கொள்ளவும் அதனை பார்த்து வந்தால் இன்னும் சிறப்பு....

ரிசபம்,மிதுனம்,கன்னி ராசியினர்   சனிக்கிழமை  மாலை 6 மணிக்கு பெருமாள் கோயில் சென்று துளசி மாலை சார்த்தி இரண்டு நெய்தீபம் ஏற்றி வழிபடவும் சனியால் ஏற்படும் துன்பம் விலகும்

விருச்சிகம் தனுசு மகரம் ராசியினர்  சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வெற்றிலையில் கிராம்பு வைத்து மாலையாக கட்டி அனுமனுக்கு சார்த்தி இரண்டு நெய்தீபம் ஏற்றி வழிபடவும் ஏழரை சனி துன்பம் விலகும்


Related Article:

Post Comment

No comments:

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner