/> ஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Wednesday, 9 May 2018

ஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்

10  ம் பாவகத்தில்  நிற்கும் கிரகங்கள் விபரம்
     
ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில் இந்த கிரகங்கள் இருந்தாலும் சொல்லப்பட்டுள்ள காரகத்துவ தொழில் அமையும் யார் வலிமையாக இருக்கிறார்களோ அது சம்பந்தமான தொழில் என யூகிக்கலாம் ..பத்தாம் அதிபதி 6,8,12ல் மறைந்திருந்தாலும் பாவ கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலும் தொழில் அடிக்கடி சரிவையும் சிக்கலையும் சந்திக்கும்...பத்தில் இருக்கும் கிரகம் பலமாக அமைந்து பத்தாம் அதிபதி வலிமை குறைந்திருந்தால் வலிமையாக இருக்கும் கிரகத்தின் தொழில் அமையும்.


சூரியன்  - அரசியல்வாதிகள்  , மந்திரிகள் , நீதிபதிகள் , அரசு ஊழியர் .

சந்திரன்  - நர்ஸ்பணிப் பெண் , உணவு சார்ந்த துறை , மதியுகம்

செவ்வாய்படை வீரர்கள் , மருத்துவர் , நிலக்கிழார்  , வியாபாரி , இன்ஜினியர் , ஆயில்  காப்பிட்டூத் துறை

புதன்ஆசிரியர்  , கணக்காளார்கள் , தணிக்கைத் துறை , ஏஜெண்டுகள் , முதல்வர்கள் , ஜோதிட நிபுணர்   ,

குருபணம் புழங்கும் , நீதிபதி , ஜீவல்லரி , அறநிலையம் , மதம் , அறிவு  சார்ந்த  தொழில் , காப்பகம் ,

சுக்கிரன் இசை , கலைஞர்கள் , நறுமணப் பொருள்கள்  , துணி , ரத்தினம் , பெண்கள் சம்பந்தம் , ஒட்டல்பத்திரிக்கை , மீடியா , வீட்டு உபயோக பொருள்

சனீஸ்வரர்  - ஆலைகள் , லேபர் காற்றை  வைத்து  செய்தல்  , கமிஷன் , தரகர் , ஏற்றுமதி , இறக்குமதி ,   எந்திரம் , பூமி ,தொடர்பு .
  10  ம் வீட்டு  அதிபதி       12  பாவங்களில் நிற்கும்  பலன் ;

1 . லக்னாதிபதி  10  ல் இருந்தால் தொழிலை இவர் தேடி செல்வார் . 10  ம் அதிபதி லக்னத்தில் இருந்தால்  தேடி வரும்  .

2 . 2 ம் அதிபதி 10  ல் அமைந்தால்  வாக்கால்  ஜீவனம் அமையும் .
10  ம் அதிபதி  2  ல் அமைந்தால் குடும்பத் தொழில் அமையும் .

3 . 3  ம் அதிபதி  10  ல் இருந்தால்  கஷ்டபட்டு தொழில்  அமையும் .
10  ம் அதிபதில் இருந்தால் தன் சொந்த முயற்சியால்  தொழில் அமையும் .

4 .  10  ம் அதிபதில் இருந்தால்  பல தொழில்கள் அமையும் . 10  ம் அதிபதி  4  லிருந்தாலும்   வாகனத் தொழில் அமையும் .

5 . 5 ம் அதிபதி 10  ல் இருந்தால் ஆன்மீகத் தொழில் மற்றும் பெரிய  பதவிகளைப் பெறலாம் .
10   ம் அதிபதி 5 ல் அமைந்தால் அரசு உத்தியோகம் அமையும் .

6 . 6 ம் அதிபதி 10 ல் இருந்தால் அடிமை  உத்தியோகம் , செய்ய முடியும் .10  ம் அதிபதி  6 ல் இருந்தால்  அடிமை தொழில் அமையும் .7  . 10  ம்  அதிபதி   8  ல் இருந்தால்  எந்த தொழிலும்  நிலையாக அமையாது .  10  ம் அதிபதி  9  ல் இருந்தால் தந்தை தொழில் அமையும் .
8 . 10  ம் அதிபதி 10  ல் இருந்தால் உன்னதமான தொழில்   அமையும் .


9 . 10  ம் அதிபதி  12  ல் இருந்தால்  பெரும்பாலும் இந்த  அமைப்பு  உள்ளவர்கள்  . வெளி நாட்டில்  வேலை  பார்ப்பவர்  ( ) வீட்டை விட்டு  வெகு தொலைவு  சென்று  வேலை  பார்ப்பவரகள்  .


Related Article:

Post Comment

1 comment:

Unknown said...

சார் கன்னி லக்னம் என்னுடையது, 10ம் வீட்டீல் ராகு இருந்தால் என்ன பலன்

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner