/> அரசன் யோகம் பற்றிய ஜோதிட பாடல் விளக்கம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Wednesday, 18 July 2018

அரசன் யோகம் பற்றிய ஜோதிட பாடல் விளக்கம்   அரச யோகம்

கதிரவன் சிங்கதங்க  கரியவன் குடத்திலாஷி
மதியவன் மீனம்   நிற்க மங்கலனுச்சம் சென்மப்
பதியதும்   கயலதாகப் பாரதிலுத்தித்த  செல்வன்
நிதியுடன்   செங்கோற்றாங்கும்   நிருபனுமாவான்றானே

விளக்கம்
சூரியன்   சிங்கத்திலும்  , சனி கும்பத்திலும்   ஆட்சியாயிருக்க
சந்திரன் மீன  ராசியில்   கேந்திரமாயிருக்க  செவ்வாய்  மகர  ராசியில்
உச்சமாயிருக்க  மீனத்தில்   ஜெனனமானால்   சம்பத்துடைய  செங்கோல்
அரசனாவான்   என்பதாம் .  அரசனுக்கு  அரசனாவான்

சொல்லிட   ஜென்ம   நாதன் சோரிய  பஞ்சமத்தில்
வல்லவன்   றனக்கேசேயர்  வரசனுக்கர சேயாவர்
பல்லவர்   புகழத்தானே   பாரினில்   பிறக்க   வாழ்வான்
துல்லிய   தவத்தின் மிக்க   தூய  மாமுனியேகூறாய்

விளக்கம்
லக்கனாதிபதி   ஐந்தாமிடத்தில்  இருக்க  அரசனுக்கு  அரசனாவான்
மற்றவர்கள்  புகழத்தானேயுலகத்தில் பிறந்து  வாழ்வான் .


   மன்னனாவான்

கூட்டமாயைந்துபேரும் கூடி  யோரிடத்தினிற்கத்
தேற்றமாய்  மற்றோரெல்லாம்   தனித்தனி வரிசையாகில்
மூட்டிய உலகமெல்லா மொருவர்  யாளத்தக்க
நீட்டியல்   மன்னனாவான் என்பதாம் .


 விளக்கம்
கூட்டமாய்  ஐந்து  கிரகங்கள்  கூடியே   ஓரிடத்தில்   நிற்க
மற்றவர்க்க ளெல்லாம் தனித்தனியே வரிசையாய் இருப்பார்களானால்
உலகத்தையே  ஆளக்கூடிய  ஒரு  மன்னனாவான்  என்பதாம் .Related Article:

Post Comment

No comments:

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner