/> ஸ்திர ராசியினர் ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் எப்படிப்பட்டவர்கள்? | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Thursday, 26 July 2018

ஸ்திர ராசியினர் ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் எப்படிப்பட்டவர்கள்?

ஸ்திரம் என்பது நிலையாக நிற்பது என்று அர்த்தம்...ஆணி அடிச்சா மாதிரி...முயலுக்கு மூணு கால் என்றால் மூணு கால்தான்..எந்த சுப்ரீம் கோர்ட் போனாலும் சரி.உன் கருத்தை நீ சொல்ல உரிமை இருக்கு...ஆனா என் கருத்தில் மாற்றம் இல்லை என நிலையாக இருப்பதுதான் ஸ்திர ராசிகள்..ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் ஆகியவை ஸ்திரம் எனப்படும்.

குடும்பத்துல மிலிட்ரி கண்டிசன் தான் எல்லாம்...இதை எப்படி தெளிவாக செய்வது என ஒரு வாரம் ப்ளான் செய்வது...யார்கிட்ட பேசினாலும் தெளிவா பிசிறு இல்லாம பேசுவது ..கொஞ்சம் பேச்சு சுத்தம் இல்லாத ஆள் எனில் அந்த ஆள் பக்கமே அண்டாம இருப்பதுதான் ஸ்திர ராசிகள்..இவன் ஆகாது என முடிவு செஞ்சிட்டா கதம்..கதம்..

.தான் உண்டு தன் வேலை உண்டு வருமானம் ,குடும்பம் உண்டு என ஒரு பாதையில் ஒரே மாதிரி போய்க்கொண்டிருக்கும் ராசிகள்....ராசிநாதன் நல்லா இருந்தா நான் சொன்னதில் துளியில் மாற்றம் இருக்காது.ராசிநாதன் என்றால் ரிசப ராசியினருக்கு சுக்கிரன் கெடாமல் இருக்கனும்...சுருக்கமா சொல்லனுமா ..இவங்க பிடிவாதக்காரங்க..தான் நினைத்த மாதிரிதான் எல்லாம் நடக்கனும் என நினைக்கிற க்ரூப்....

உபய ராசிகள் ,சர ராசிகள் எல்லாம் இவங்க பார்வையில் பிழைக்க தெரியாத க்ரூப்....எல்லாம் தெரிந்த ஆசாமிகள் சர ராசிகள் என்றால் எல்லாம் தெரிந்து அதை காசாக்கும் வித்தை தெரிந்தவர்கள் ஸ்திர ராசியினர்..இவங்க கிட்ட பேசும்போது நிதானமா பேசனும்..இவங்க உங்க பேச்சை மட்டும் கவனிப்பதில்லை...உங்களை ஸ்கேன் செய்து கொண்டிருக்கிறார்கள்...வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்...காசுனு வந்துட்டா கொள்ளைக்காரன்...பாசம்னு வந்துட்டா .....தோளில் சாய்ந்து கண்ணீர் விடுவாங்கன்னு நினைச்சீகளா....இரண்டு வார்த்தை பதமா பேசிட்டு கிளம்பிட்டே இருப்பாக...

சுயநலம் என சொல்லிட்டா கொஞ்சம் ஓவரா இருக்கும்...தன் பணியில் கவனமா இருப்பாங்கன்னு சொன்னா நல்லாருக்கும்..மைனஸ் ப்ளஸ் எல்லாம் கலந்து சொல்லிருக்கேன்...ராசிக்கு சொந்தக்காரக கோவிச்சுக்காதீக..வாட்சப்பில் பகிர்ந்தா ஈரோடு சதீஷ்குமார் ஜோசியர் சொன்னதுனு சேர்த்துக்குங்க..!!


Related Article:

Post Comment

No comments:

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner