/> திருமணத்தடை நீக்கும் கிரகதோஷப் பரிகாரங்கள் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Sunday, 9 December 2018

திருமணத்தடை நீக்கும் கிரகதோஷப் பரிகாரங்கள்


 திருமணத்தடை நீக்கும் கிரகதோஷப் பரிகாரங்கள்
     ஆண், பெண் இருபாலருக்கும் ஜாதங்களில் தோஷம் இருப்பின் திருமணம் தள்ளிப் போகிறது.  தடைபடுகிறது. இது குரு தோஷம், சுக்கிர தோஷம்,  செவ்வாய் தோஷம் கால சர்ப்ப தோஷம் ஆகியவைகளால் ஏற்படுகிறது.

     குரு தோஷம்
   மகரத்தில் செவ்வாய் _ கடக  குரு வக்ரம் பெற தோஷம், ஆலங்குடி சென்று குரு பகவானுக்கு மஞ்சள் துணி சாற்றி அர்ச்சனை செய்து 24 நெய் விளக்கேற்றி 24 முறை வலம் வந்து வணங்க வேண்டும்.

சுக்கிர தோஷம்

Image result for manamagal
    
சுக்கிரன் சூரியன் சேர்க்கைப் பெற்று கேந்திரங்களில் நிற்க 8, 12 ல் நிற்க தோஷம். 3, 6 லும் சிறிதளவு தோஷம். இவர்கள் பரணி, பூசம், பூராடம் நட்சத்திரம் வரும் நாட்களில் ஸ்ரீ ரங்கம் சென்று, ஸ்ரீ ரங்கநாதரைத் தரிசித்து சுக்கிர தோச நிவர்த்தி சீட்டு வாங்கி  உண்டியலில் போட நிவர்த்தியாகும்.
  செவ்வாய் தோஷம்
   ஜாதகத்தில் 2 ,4,7,8, 12 ல் செவ்வாய் நிற்க தோஷமாகும். பாவர் சேர்க்கை பார்வை பெற்ற செவ்வாய் இவ்விடங்களில் நிற்க தோஷம் . இத்தோஷம் நீங்க, செவ்வாய்க் கிழமை இராகு கால வழிபாடு செய்தல் நன்று. செவ்வாய் திசையும் கூடுமானால் தசா காலம் முழுவதும் அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட குறை தீர்ந்து நிறை சேரும். நிம்மதி கூடும்.
கால சர்ப்ப தோஷம்
   அனைத்துக் கிரகங்களும் ராகு கேதுவின் பிடிக்குள் கட்டுண்டு செயலற்றிருப்பர். இத்துடன் நாக தோஷமும் சேர 33 வயதுக்கு மேல் நிலைத்த செளபாக்கியம் கிட்டும். இவர்கள் காளஹஸ்தி சென்று சர்ப்ப சாந்தி செய்வது நலம். சங்கரன் கோவிலுக்குச் சென்று சர்ப்ப சாந்தி செய்தல் அவசியம். வெள்ளியினால் செய்த ஒரு தலை நாகத்தை அர்ச்சனைத் தட்டில் வைத்து சங்கரர்  நாரயணார் நாகர் கோமதி அம்மனுக்கு அர்ச்சனை செய்து உண்டியலில் சேர்க்க வேண்டும். மணமான பின், வெள்ளியில் செய்த ஐந்து தலை நாகத்தை அர்ச்சனைத் தட்டில் வைத்து முன் போல் அர்ச்சனை  செய்து, கோமதி அம்மனுக்கு திருமாங்கல்யம் சூட்டி தான் முறையான பரிகாரம். எப்பிறவிகளிலும் நாக தோஷம், கால சர்ப்ப தோஷம் தொடராது என்பது திண்ணம். சூரியனார் கோயில் திங்களூர், வைத்தீஸ்வரன் கோயில் திருவெண்காடு, ஆலங்குடி, கஞ்சனூர், திருநள்ளாறு, திருநாகேஸ்வரம், கீழ் பெருபள்ளம், சென்று வர நவகிரகப் ப்ரீதி உண்டாகும். சேது ஸ்நானம் சாலச் சிறந்தது. பிரதோச காலங்களில் சிவன் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபட, முன் ஜென்ம _ தீவினைப் பயன் அகன்று நல்வினை சூழும்.
44 . ருது தோஷம் நீங்க
  ஒரு சில பெண்கள் மட்டும் ருதுவாகமல் அப்படியே இருந்து விடுவார்கள்.  வயதுக்கு வராத பெண்ணும் வெறுப்புடன் வாழ்வாள்.
16 வயதுக்கு மேல் பெண் ருதுவாகமல் இருந்தால் அந்த நிலையை அகற்ற கருணை காடும் தெய்வங்கள் அன்னை துர்க்கை, அங்காள பரமேஸ்வரி ஆவார்கள். வளர்பிறை ஏகாதசி திதியில் உங்கள் பகுதியில் அமைந்துள்ள துர்க்கை அம்மன் அல்லது அங்காள பரமேஸ்வரி ஆலயத்திற்கு குரு ஹோரையில் ஒன்பது விளக்குகள் போட வேண்டும். இதே போல ஒன்பது வளர்பிறை ஏகாதசி திதிகளில் விளக்குப் போட்டு வர, ருது தடையை தெய்வம் நீக்கி அருளும்.
   பரிகாரம்
   ஆலயம் சென்று வேண்டுதல் செய்ய முடியாதவர்கள், அவர்கள் பகுதியில் உள்ள ஒரு திருநங்கைக்கு வெற்றிலை பாக்கு உடன் 101 ரூபாய் கொடுத்து ஆசிர்வாதம் பெற்றால் 90 நாட்களுக்குள் பூப்பெய்தி விடுவார்கள்.
  Related Article:

Post Comment

No comments:

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner