/> செல்வவளம் உண்டாக ஜோதிட சூட்சும பரிகாரம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Tuesday, 1 January 2019

செல்வவளம் உண்டாக ஜோதிட சூட்சும பரிகாரம்


அனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ..நம் ப்ளாக்கில் இனி நிறைய ஜோதிட பதிவுகள் வர இருக்கின்றன...தவறாது வருகை புரிந்து உங்கள் ஆதரவை தெரிவிக்க கேட்டுக்கொள்கிறேன்..

         

நம் முன்ஜென்ம பாவ கர்மங்கள் நம் பல துன்பத்துக்கு காரணமாக இருக்கும் இந்த வினைகளை தீர்த்துக்கொள்ள இடம்புரி வினாயகரை வழிபட வேண்டும் ....கடுமையான துன்பத்தில் இருப்பவர்கள் மணக்குள வினாயகரை வழிபட்டுவிட்டு பிள்ளையார்பட்டி சென்று கர்ப்பக வினாயகரை தரிசனம் செய்தால் நம் துன்பங்கள் யாவும் விலகும்...மணக்குள வினாயகர் போக முடியாதவர்கள் உங்கள் ஊரில் இருக்கும் மிக பழமையான வினாயகரை வழிபாட்டாலே போதும்..அதன் பின் கர்ப்பக வினாயகர் கோயில் செல்லவும் 


புதையல், ரத்தினங்கள், சிலைகள் பதுக்கி வைத்திருக்கும் இடம் ஆகிய இடங்களில் மட்டுமே வெள்ளெருக்கு முளைக்கும் என விருட்ச நூல்களில் கூறப்பட்டுள்ளது. ஏனென்றால் வெள்ளெருக்கில் 2 வகை உண்டு. “ வெள்ளெருக்கு பூக்குமே வேதாளம் பாயுமேஎன்ற பாடலும் சங்க காலத்தில் பிரபலம். எனவே வெள்ளெருக்கு செடி எதற்கு அருகில் வளர்ந்துள்ளது என்று பார்க்க வேண்டும். தீய சக்தி உள்ள இடத்தில் இருக்கும் வெள்ளெருக்கு செடியின் வேரைக் கொண்டு விநாயகரை உருவாக்க கூடாது.

      எனவேதான் வெள்ளெருக்கு வேரை எடுக்கும் முன்பாக வேப்பிலை, கூழாங்கற்கள் , மா, இலை, வில்வ இலை, ஆகியவற்றை மாலை போல் கோர்த்து அந்த வெள்ளெருக்கு செடியை சுற்றி காப்புக்கட்டி, ஒரு வாரம் கழித்த பின்னரே வெள்ளெருக்கு வேரை எடுத்து அதனை பதப்படுத்தி விநாயகர் செய்ய வேண்டும்.

     வெள்ளெருக்கு செடிக்கு உயிர்ப்பு சக்தி உள்ளதால்,அதனைப்பார்த்தவுடன் வெட்டி விடாமல் மேற்கூறிய பரிகார முறைகளை கடைப்பிடித்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

    இடம்புரி விநாயகர் வினைகளை தீர்க்க கூடியவர் என சிற்ப சாஸ்திரம் கூறுகிறது.  வலம்புரி விநாயகர் வல்லமை, வளமை, செல்வ பாக்கியம் ஆகியவற்றை அளிக்க கூடியவர் பிள்ளையார் பட்டியில் உள்ள கற்பக விநாயகர் வலம்புரி வகையைச் சார்ந்தவர்.

    இடம்புரி விநாயகர் தீய சக்திகளை அழிக்கும் வலம்புரி வல்லமை உடையவர். எனவேதான் திருஷ்டி, வாஸ்து, சாஸ்திரம் ஆகிய குறைக்களுக்காக வைக்கப்படும் விநாயகர் இடம்புரி விநாயகராக இருந்தால் நல்லது.
     
வெள்ளெருக்கு வேரில் உருவான விநாயகரே மிகவும் சக்தி வாய்ந்தவர். பொதுவாக வெள்ளெருக்குச் செடிக்கு தனி சக்தி உண்டு. வெள்ளெருக்கு தேவ மூலிகை அல்லது விருட்சம் என்றும் கூறலாம். அரிதான பொருள் இருக்கும் இடத்தில்தான் வெள்ளெருக்கு செடி முளைக்கும் என சங்க கால நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 பிரான்மலை என்ற ஊரில் உள்ள சிறப்பு மிக்க குடைவரை கோட்டை கோயிலில், வலம்புரி விநாயகர் சங்க நிதி, பதும நிதி ஆகியோருடன் இணைந்து உள்ளார். மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் திருவலஞ்சுழியிலும் வலம்புரி விநாயகர்களை வழிபடலாம். வலம்புரி விநாயகரை வழிபட வேண்டிய வரங்களை பெறலாம்

கடன் பிரச்சினை அதிகம் இருப்பவர்கள் செவ்வாய்க்கிழமையில் வரும் அனுசம் நட்சத்திரம் நாள் அன்று கடனில் சிறிது திருப்பி கொடுத்தால் கடன் வேகமாக நீங்கும்..

சம்பத்துதாரை உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு இரண்டாவது நட்சத்திரம் சம்பத்து தாரை...

இந்த சம்பத்து தாரையில்தான் அதிகமான வருமானம் வரும் இனிமையான செய்திகள் வரும்...எதிர்பார்த்த பண வரவு கிடைக்கும்...கேட்கும் உதவிகள் கிடைக்கும்...இதை தெரிந்து கொண்டால் இதை கடைபிடித்தால் நீங்கள் வெற்றிகரமான மனிதர் ஆகிவிடுவீர்கள் .


 உங்கள் நட்சத்திரத்திற்கு அடுத்த நட்சத்திரமானசம்பத்து நட்சத்திர நாளில் செய்யப்படும் அனைத்து காரியங்களும் 100சதவிகிதம் வெற்றியைத் தந்தே தீரும் என்பது சத்தியம்.

இதை எப்படி அறிந்துகொள்வது?
உங்கள் நட்சத்திரத்திற்கான சம்பத்து தாரை நட்சத்திரங்கள் எவை என்பதைப் பார்ப்போம்.

                                      Image result for மான் கொம்பு

அஸ்வினி:- இதற்கான சம்பத்து நட்சத்திரங்கள்
பரணி, பூரம், பூராடம்
பரணி :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
கார்த்திகை, உத்திரம்,உத்திராடம்
கார்த்திகை:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
ரோகிணி, அஸ்தம்,திருவோணம்
ரோகிணி:- இதன் சம்பத்து நட்சத்திரம்
மிருகசீரிடம்,சித்திரை,அவிட்டம்
மிருகசீரிடம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
திருவாதிரை, சுவாதி,சதயம்
திருவாதிரை:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி
புனர்பூசம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
பூசம், அனுசம்,உத்திரட்டாதி
பூசம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
ஆயில்யம்,கேட்டை,ரேவதி
ஆயில்யம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
மகம், மூலம்,அசுவினி
மகம் :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
பூரம்,பூராடம்,பரணி
பூரம் :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
உத்திரம், உத்திராடம்,கார்த்திகை
உத்திரம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
அஸ்தம்,திருவோணம்,ரோகிணி
அஸ்தம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
சித்திரை, அவிட்டம், மிருகசீரிடம்
சித்திரை:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
சுவாதி,சதயம்,திருவாதிரை
சுவாதி :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
விசாகம், பூரட்டாதி, புனர்பூசம்
விசாகம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
: அனுசம்,உத்திரட்டாதி, பூசம்
அனுசம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
கேட்டை,ரேவதி,ஆயில்யம்
கேட்டை:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
மூலம், அசுவினி,மகம்
மூலம் :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
பூராடம்,பரணி,பூரம்
பூராடம் :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
உத்திராடம், கார்த்திகை, உத்திரம்
உத்திராடம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
திருவோணம், ரோகிணி,அஸ்தம்
திருவோணம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
அவிட்டம்,மிருகசீரிடம்,சித்திரை
அவிட்டம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
சதயம்,திருவாதிரை,சுவாதி
சதயம்:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
பூரட்டாதி, புணர்பூசம், விசாகம்
பூரட்டாதி:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
உத்திரட்டாதி, பூசம், அனுசம்
உத்திரட்டாதி:- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
ரேவதி,ஆயில்யம்,கேட்டை
ரேவதி :- இதன் சம்பத்து நட்சத்திரங்கள்
அசுவினி,மகம்,மூலம்

இது மட்டுமில்லாமல் உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு நான்காவது நட்சத்திரம் சேமதாரையாகும்...4,13,22 வதாக வரும் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உங்களுக்கு நல்ல நண்பர்களாக திகழ்வார்கள் அவர்களால் உங்கள் வாழ்வில் உயர்வும் உண்டாகும்..
நான்காவது நட்சத்திரத்துக்கு உண்டான சின்னங்களை பயன்படுத்துவதால் தொழிலில் மேன்மை அடைய முடியும்..

                                       Image result for வில் அம்பு


நட்சத்திர குறியீடுகள்:
1. அஸ்வினி நட்சத்திரத்துக்கு குதிரைத் தலை அல்லது குதிரை உருவம்.

2. பரணிக்கு மண் பாத்திரம், அடுப்பு அல்லது முக்கோண வடிவம்
3. கிருத்திகை நட்சத்திரத்துக்கு கத்தி, வாள் மற்றும் ஹோம தீ ஜூவாலை 4. ரோகிணிக்கு தேர், வண்டி, கோவில், ஆலமரம் மற்றும் சக்கரம்
5. மிருகசீரிஷம் நட்சத்திரத்துக்கு மான் தலை மற்றும் தேங்காயின் கண்
6. திருவாதிரை நட்சத்திரத்துக்கான குறியீடு மனித தலை, வைரம் மற்றும் நீர்த்துளி
7. புனர்பூசம் நட்சத்திர சின்னம் வில் மற்றும் அம்புக்கூடு 8. பூசம் நட்சத்திரத்துக்கு தாமரை, புடலம் பூ, அம்பு மற்றும் பசுவின் மடி
9. ஆயில்யத்துக்கு சர்ப்பம் மற்றும் அம்மி ஆகியவை.
10. மகம் நட்சத்திரத்துக்கு வீடு, பல்லக்கு மற்றும் நுகம்
11. பூரம் நட்சத்திரத்துக்கு கட்டிலின் இரு கால்கள், சங்கு மற்றும் மெத்தை 12. உத்திரம் நட்சத்திர குறியீடுகள் கட்டில் கால்கள் மற்றும் மெத்தை
13. ஹஸ்தம் நட்சத்திரத்துக்கு கைகள் அல்லது உள்ளங்கை
14. சித்திரைக்கு முத்து மற்றும் ஒளி பொருந்திய ரத்தினக் கற்கள். 15. சுவாதிக்கு புல்லின் நுனி மற்றும் காற்றில் அசையும் தீபச்சுடர்
16. விசாகத்துக்கு முறம், தோரணம் மற்றும் பானை செய்யும் சக்கரம்
17. அனுஷம் நட்சத்திரத்துக்கு குடை, மலரும் தாமரை மற்றும் வில் வளைவு
18. கேட்டைக்கு குடை, குண்டலம் மற்றும் ஈட்டி
19. மூலம் நட்சத்திரத்துக்கு அங்குசம், சிங்கத்தின் வால் மற்றும் யானை தும்பிக்கை
20. பூராடம் நட்சத்திரத்துக்கு விசிறி, முறம் மற்றும் கட்டில் கால்கள்21. உத்திராடம் நட்சத்திரத்துக்கு யானை தந்தம், மெத்தை விரிப்பு, கட்டில் கால்கள்
22. திருவோணத்துக்கு காது, மூன்று பாதச்சுவடுகள் மற்றும் அம்பு
23. அவிட்டம் நட்சத்திரத்துக்கு மிருதங்கம் மற்றும் உடுக்கை
24. சதயத்துக்கு பூங்கொத்து மற்றும் வட்ட வடிவம்
25. பூரட்டாதிக்கு கட்டிலின் இரு கால்கள், வாள் மற்றும் இரு மனித முகங்கள்
26. உத்திரட்டாதி நட்சத்திரத்துக்கு கட்டில் கால்கள் மற்றும் இரட்டையர்கள்
27. ரேவதி நட்சத்திரத்தின் சின்னங்கள் மீன் மற்றும் மத்தளம்

ஜோதிடத்தில் முக்கியமான இந்த சூட்சுமங்களை படித்து அதனை உங்கள் வாழ்வில் பயன்படுத்தி வெற்றி பெற என் வாழ்த்துக்கள்
Related Article:

Post Comment

2 comments:

sujatha said...

Thanks sir

yacob8@gmail.com said...

Wish you all a very happy, prosperous and a successful new year! - Yacob.A

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner