/> மேசம் ராசி லக்னத்தாருக்கு என்ன தொழில் அமையும்..? ஜோதிடம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam

Thursday, 5 September 2019

மேசம் ராசி லக்னத்தாருக்கு என்ன தொழில் அமையும்..? ஜோதிடம்

மேஷ லக்கினம் முதல் லக்னமும் முக்கிய லக்கினமாகும். இந்த லக்கினத்தில் பிறந்தவர்கள் தொழில்ரீதியாக சாதனை செய்கிறார்கள். இஅந்த லக்கினக்காரகளுக்கு லக்னாதிபதி செவ்வாய் அட்டாமதிபதியாகிறார்

இவர் 3,6,10,11 ல் இருக்கும் போது அபரிதமான ராஜ யோகத்தை உண்டாக்குகிறார். தொழிலில் வெற்றி, அரசு வழியில் யோகம், நிலையான உத்தியோகம் போன்ற நற்பலன்கள் உண்டாகின்றன.

          லக்னாதிபதி செவ்வாயும், பத்தாமதிபதியும் சனியும் இணைந்து காணப்பட்டால் கலைத்துறையில் புகழ் தொழிலில் வெற்றி யாவும்.அழகு  நிலையம் நடத்தும் தொழில், பசுமாடு தொடர்புள்ள தொழில், இனிப்பு தொடர்புள்ள தொழில்கள் யாவும் உண்டாகும்.

         சனி பகவான் விருச்சிக ராசியாகிய 8 ம் இடத்தில் அமையப் பெற்றால் அரசு உத்யோகம் அமையும். சனியும், செவ்வாயும் பகை என்பதால் போரட்டம் நடக்கும். ரியல் எஸ்டேட், பூமி சிமெண்ட் விற்கும் தொழில், கட்டிடம் கட்டும் இன்ஜியர்கள், விவாசாயப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள். சுரங்கங்களில்  வேலை செய்பவர்கள். சிற்ப கலைஞர்கள் போன்ற அமைப்பு பெற்றவராக இருப்பார்கள்.
        சனி பகவான் 9 ம் இடமாகிய தனுசுவில் இருந்தால் உயர்ந்த உத்தியோகம் அமையும். இராணுவத்தில் உயர்ந்த பதவிகள், போலீஸ் உத்தியோகம், பூர்வீக சொத்து கிடைக்கும். கமிஷன், ஏஜென்ஸி தொழில் செய்வார்கள். தொழிலில் உயர்வுகள் உண்டாக்கியபடி இருக்கும்.

        சனி பகவான் மகரத்தில் ஆட்சி பெற்று 10 ல் காணப்பட்டால் சொந்ததொழில் செய்வார்கள். அடிமைத் தொழிலை விரும்ப மாட்டார்கள். இரும்பு சம்பந்தப்பட்ட தொழில், மீன் வியாபாரம், பெட்ரோல் பங்க், எண்ணெய் வியாபாரம், தயிர் வியாபாரம், மெக்கானிக் தொழி, டிங்கர் தொழில், அச்சுத் தொழில், கலப்படம், கள்ளச் சாராயத் தொழில் எனப் பல தொழில்களைச் செய்யும் வாய்ப்புண்டு.டாஸ்மாக் பார் தொழில் என்றும் குட சொல்லலாம் 

        சனி பகவான் 11 ம் இடமாகிய லாபஸ்தானத்தில் இருந்தால் ரயில் வே, பஸ் நிர்வாகம், பஞ்சாயத்து, போன்ற இடங்களிம் வேலை கிடைக்கும். இரும்பு, செங்கல், கரும்பு பயிரிடுதல், அடுப்பு கரி, வியாபாரம், மிஷின் தொழில் யாவும் உண்டாகும்.

   சனி பகவான் 12 ம் இடமாகிய மீனத்தில் அமையப் பெற்றிருந்தால் அரசு உத்தியோகம் அமையும். தொழிலில் கூர்மையாக இருப்பார்கள். அடிக்கடி பயணம் செய்து சம்பாதிப்பார்கள். தர்ம ஸ்தாபனம், நீதிமன்றம் , மீன் தொடர்பானவை கப்பலில் ஏற்றுமதி இறக்குமதி போன்ற தொழில்கள் அமையும்
            


Related Article:

Post Comment

No comments:

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner