Monday, 30 May 2011

எம்.ஜி.ஆர் வாழ்வில் திருப்பம் தந்த அதிர்ஷ்ட எண்-7


எம்.ஜி.ஆர் வாழ்வில் திருப்பம் தந்த அதிர்ஷ்ட எண்-7


எம்.ஜி.ஆர் வாழ்வில் பல திருப்பங்கள் ஏற்படுத்திய ஆண்டுகளில் கடைசி எண்ணாக ஆச்சர்யமாக 7 ஆம் எண் இருக்கிறது.....

1917 -ம் ஆண்டு எம்.ஜி.ஆர் கேரளா பாலக்காட்டில் பிறந்தார்...

1927-ம் ஆண்டு வறுமையால் தொழில் தேடி குடும்பத்துடன் இலங்கை கண்டிக்கு எம்.ஜி.ஆர் குடும்பத்தினர் செல்கின்றனர்.

1937-ம் ஆண்டு இலங்கையிலிருந்து தமிழகம் வருகிறார்கள் கும்பகோணத்தில் நாடக கம்பெனியில் தன் அண்ணனுடன் சேர்ந்து நடித்து,வாழ்கிறார்

1947-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் முதன்முதலாக சினிமாவில் நுழைகிறார் 1957-ம் ஆண்டு முதன்முதலாக சொந்த படம் நாடோடி மன்னன் தயாரிக்கிறார்...நண்பர்கள் இது விஷபரிட்சை..வேண்டாம் என தடுக்கிறார்கள்..படம் தோல்வியடைந்தால் என்ன செய்வாய் என்று கேட்கிறார்கள்....


படம் ஓடினால் நான் மன்னன்...ஓடாவிட்டால் நான் நாடோடி என பதில் சொல்கிறார்...


படமும் பெரிய வெற்றி....

1957-ம் ஆண்டு தேர்தலில்,காங்கிரசை எதிர்த்து அண்ணா வின் தி.மு.க கட்சி..30 சீட்டுகளை எம்.ஜி.ஆர் பிரச்சார உதவியுடன் பிடித்தது....
1967-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று 137 எம்.எல்.ஏக்களுடன் அண்ணா முதல்வர் ஆகிறார்...உன் பிரச்சார பலத்தால்தான் இந்த வெற்றி கிடைத்தது...உனக்கு போக்குவரத்து துறை மந்திரி பதவி தருகிறேன் வாங்க்ஜி கொள் என்கிறார் அண்ணா..உங்கள் அன்பே எனக்கு போதும் அண்ணா....எனக்கு சினிமா தொழிலில் நல்ல மார்க்கெட் இருக்கிறது..நான் சினிமாவிலேயே இருக்கிறேன் என்கிறார் எம்.ஜி.ஆர்

1969-ஆம் ஆண்டு அண்ணா புற்றுநோயால் சாகும் தறுவாயில் உங்களுக்கு பின் அடுத்த முதல்வர் யார் என கேட்க..என் தம்பி என கைநீட்டி விட்டு இறக்கிறார் அண்ணா....
அண்ணா கைகாட்டியது நெடுஞ்செழியனை......

அப்போது தி.மு.க வின் பலம் வாய்ந்த தலைவர்கள்....அண்ணாவின் தம்பிகளாக சொல்லப்பட்டவர்கள் ஐந்து பேர்...எம்.ஜி.ஆர்,கலைஞர்,மதியழகன்,ஈ.வே.ரா.சம்பத்,நெடுஞ்செழியன்.....தான் அவர்கள்...


அண்ணாவின் மறைவிற்கு பின் எம்.ஜி.ஆர் வீட்டிற்கு ஓடிவருகிறார் கலைஞர்...கதவை சாத்திவிட்டு தொப்பென எம்.ஜி.ஆர் காலில் விழுகிறார்..என்னென்னே இது..என பதறுகிறார் ,கலைஞரை தூக்கி உட்கார வைக்கிறார்...எம்.ஜி.ஆர்...

இல்ல தம்பி...நான் கதை வசனம் எழுதும்போது தம்பி எம்.ஜி.ஆருக்கு சான்ஸ் கொடுங்கள் என்பேன்..நீ நடிக்கும்போது கலைஞருக்கு வசனம் எழுத சான்ஸ் கொடுங்கள் என்று சொல்வாய்..அப்படி ஒருவருக்கு ஒருவர்....தோள் கொடுத்து வளர்ந்தோம்..இன்று நீ சினிமாவில் யாரும் பிடிக்க முடியாத உயரத்தில் இருக்கிறாய்..ஆனால் நான் புகழ் இல்லாமல் மங்கி கிடக்கிறேன்...எனக்கு முதல்வர் பதவி வேண்டும்...நெடுஞ்செழியன்,சம்பத் எனக்கு தரக்கூடாது என போட்டி போடுகின்றனர்...மதியழகன் எனக்கு ஆதரவு தருவதாக சொல்லி இருக்கிறார்..நீயும் சப்போர்ட் செய்தால் நான் முதல்வர் ஆகி விடுவேன்...என்றார்...

தன்னிடம் உதவி என்று யார் வந்தாலும் அவர்களிடம் இல்லை என சொல்லும் பழக்கம் எம்.ஜி.ஆருக்கு இல்லை...காலில் விழுந்த பிறகு மறுப்பது என்பது எம்.ஜி.ஆர் வரலாற்றில் இல்லை.....

சரி நான் பார்த்துக்கொள்கிறேன்..கவலைப்படாதீங்க..நீங்கதான் முதல்வர்...என சொல்லி அனுப்பி வைத்துவிட்டு,மீதி தலைவர்களிடம் கருணாநிதி ஆசைப்படுகிறார்...முதல்வராக அவரே இருக்கட்டும்..தப்பு செய்தால் ராஜினாமா செய்ய சொல்லிடலாம் என சொல்லிவிட்டார்...எம்.ஜி.ஆர் பிரச்சார கவர்ச்சியை நம்பி,தி.மு.க இருந்ததால் அதை மறுக்க முடியவில்லை..

அதன்பிறகு,
உதய சூரியனின் பார்வையிலே உலகம் விழித்துக்கொண்ட வேளையிலே....
அவர் வரவேண்டும்..புகழ் பெற வேண்டும்..என ஆசை துடிக்கிறது..

என பாடி நடித்தார் இது கலைஞரை முதல்வராக்கிய ஆசையை சொல்கிறது...

அதன் பின் பின்னொரு நாட்களில் மதியழகனும் கலைஞர் மீது கோபமாகத்தான் இருந்தார் என்பதை எம்.ஜி.ஆர் புரிந்துகொண்டார்...மு.க.முத்துவுக்கு எம்.ஜி.ஆர் வேசம் போட்டு...நம் கட்சிக்கு நம் குடும்பத்திலேயே ஒரு எம்.ஜி.ஆர் இருந்தால் நல்லது என கலைஞரின் சுயரூபங்கள் மெல்ல மெல்ல தெரிய வந்து,எம்.ஜி.ஆருக்கு ஆத்திரமூட்டியது....

கணக்கு வழக்கில்லாமல்,கட்சிப்பணம்,அரசு பணம் மாயமாகி கொண்டிருப்பதை கண்டு கொதித்து போய்,கலைஞரிடம் கணக்கு கேட்டபோது...எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு நீக்கினார்....நீதி கேட்டு எம்.ஜி.ஆர் ரசிகர்கள் படை திரண்டனர்..அவர்களை அமைதியாகும்படி கூறியபோதுதான்..புரட்சிதலைவர் வாழ்க...என்ற முதல் கோஷம் கிளம்பியது....

அந்த சமயத்தில் பாடிய பாடல்தான் ....

நேரம் வரை பார்க்கிறேன்....நானும் ஒரு கை பார்க்கிறேன்.....

1977-எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கிய முதல் தேர்தலில் திண்டுக்கல்லில் நின்றார்..கட்சிக்கு மாபெரும் வெற்றி....தமிழக முதல்வர் ஆனார் எம்.ஜி.ஆர்...எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்ட அநீதியை கண்டு மக்களும் கொதிதெழுந்ததால் .எம்.ஜி.ஆருக்கு சுலபமாக வெற்றி கிடைத்தது..

1987-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் மரணம்......

அவர் உயிருடன் இருக்கும் வரை கலைஞர் ஆட்சியை பிடிக்க முடியவில்லை....அவர் ராஜதந்திரம் எதுவும் பலிக்கவில்லை...எம்.ஜி.ஆரை மிக மோசமாக தி.மு.க பிரச்சாரம் செய்தது...அட்டைகத்தி வீரன்..தொப்பி தலையன்...குழந்தை அவருக்கு இல்லை என்பதை வைத்து மிக மோசமாக அவரை வர்ணித்தார்கள்...


எம்.ஜி.ஆர் தன் முதல் மனைவி இறந்தது முதல் இனி நான் எந்த கடவுளையும் கும்பிடமாட்டேன்..கடவுள் இருந்திருந்தால் என் மனைவி செத்திருப்பாளா என சொல்லிவிட்டு .....எந்த கோவிலுக்கும் செல்லாமல் வழிபடாமல் நாத்திகராக வாழ்ந்தவர்....

கடைசி காலங்களில் ஜானகி அம்மாளின் வற்புறுத்தலின் படி..கொல்லூர்..மூகாம்பிகை ஆலயத்திற்கு தங்கவாள் கொடுத்து வழிபட்டார்

1 comment:

Tamil Girl baby Names said...

உங்களின் வலைப்பூ நன்றாக உள்ளது.. வாழ்த்துக்கள்.