Friday, 24 June 2011

ஈரோடு எனக்கு பிடித்த கோயில்கள்,சுற்றுலா இடங்கள்!!

இரண்டு ஓடைகள் ஓடிய பகுதி ஈரோடை என அழைக்கப்பட்டு ஈரோடு என மறுவியது..பகுத்தறிவு பகலவன் பெரியார் பிறந்த ஊர்... மஞ்சள் தங்கம் போல விளையும் ஊர்..மஞ்சள் நகரம் என புகழ் பெற்றது ஈரோடு..ஜவுளிகளை பொறுத்தவரை இங்குதான் மிக மலிவு..பெங்களூரை விட இங்கு மலிவு..பெரிய கடைகளை விட கனி மார்க்கெட் எனப்படும் சிறு வியாபாரிகளிடம் சேலை..,ரெடிமேடு ரகங்கள் வாங்குவதையே மக்கள் விரும்புகிறார்கள்...இங்கு பேரம் பேசி வாங்கினால்தான் தீபாவளி கொண்டாடின மாதிரி இருக்கும்...
.
பெரிய மாரியம்மன் கோயில்;
ஈரோட்டில் புகழ்பெற்ற கோயில்கள் என்றால் பெரிய மாரியம்மன் கோயில்  ,ஈஸ்வரன் கோயில் போன்றவை..இவை நகரின் மத்தியில் அமைந்துள்ளன..பெரிய மாரியம்மன் கோயில் சொந்தமான இடத்தை ஆங்கிலேயர்கள் முறைகேடாக ஆக்கிரத்து கட்டியதுதான் சி.எஸ்.ஐ சர்ச்.சி.மற்றும் சி.எஸ்.ஐ. ஹாஸ்பிடல்...பெரிய கோயிலாக இருந்த பெரிய மாரியம்மன் ஆலயத்தை இடித்து விட்டு அம்மனை தூக்கி எறிந்து விட்டனர்..அதன் பின்னர் இந்து பக்தர்கள் சிலையை கைப்பற்றி ,சிறிய அளவில் கோயில் அமைத்து வழிபட்டு வருகின்றனர்..இக்கோயிலுக்கு சொந்தமான இடம் இன்னும் முறைகேடாக கிறித்துவ மிசனரிகள் அனுபவித்து வருகின்றனர்...பெரிய மாரியம்மன் கோயில் நிலத்தை மீட்பொம் என முழக்கமிட்டு ஓர் இயக்கம் துவக்கப்பட்டுள்ளது..

ஸ்ரீ ராகவேந்திரர் கோவில்;


  ஈரோடு.காவேரி கரையில் பிருந்தாவனம் அமையப் பெற்றது சிறப்பாகும். தமிழகத்திலேயே மிகப் பெரிய பிருந்தாவனம் ஈரோடு ராகவேந்திர சுவாமி கோயிலில் அமைந்துள்ளது.இந்த பிருந்தாவனத்தை காண பக்தர்கள் கூட்டம் அதிகம் வருகிறது. மந்திராலயத்தின் மூல பிருந்தாவனத்திலிருந்து புனித மண் எடுத்து வந்து ஈரோடு பிருந்தாவனத்தில் ஸ்தாபனம் செய்யப்பட்டுள்ளது.இந்த கோவிலின் அமைதியும்,சுத்தமும் வேறு எங்கும் வராது..நான் இங்கு போனபோது சட்டை,பனியன் எல்லாம் கழட்டிட்டுத்தான் வரணும் என்றார்கள்..கழட்டி விட்டு உள்ளே சென்று பார்த்தேன்...ராகவேந்திரரை வணங்கி விட்டு சிலர் தியானம் செய்து கொண்டு இருந்தார்கள்..நானும் அமர்ந்தேன்...கண்ணை மூடி இருந்தாலும் சட்டை பாக்கெட்டில் செல்ஃபோனை வைத்து விட்டு வந்துவந்துட்டோமே ஃபோன் வந்தால்? என தோன்றியது..இன்னும் ஒருமுறை போக வேண்டும்....

கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில்;

 எனக்கு பிடிச்ச இடம்..காவிரி கரை ஓரத்தில் இருக்கும் ஸ்தலம்..பிரம்மா,விஸ்ணு,சிவன் மூவரும் இருக்கும் ஸ்தலம்..அகத்தியர் ,சிவபெருமான் பார்வதி திருமணத்தை தரிசனம் செய்த ஸ்தலம் என்பார்கள்..பிரம்மாவுக்கு சிறப்பான சன்னதி அமையப்பெற்ற ஒரே ஸ்தலம்..அதனால்தான் திங்கள் கிழமை தோறும் 5000 கர்நாடகா பக்தர்கள் பிரம்மாவை வணங்கி செல்கின்றனர்...கர்ம வினை தீர்க்கும் ஸ்தலம்..சனி பகவான் சிவனை பார்த்தபடி அமர்ந்துள்ளார்..சிவன் சுடுகாட்டை பார்த்தபடி அமர்ந்துள்ளார்..காசிக்கு அடுத்து சுடுகாட்டை பார்த்தபடி இருக்கும் ஒரே ஸ்தலம்...

காவிரி இடமிருந்து வலமாக தன் போக்கை மாற்றிக்கொள்ளும் இடம்..சனி தன் வாகனத்தில் அமர்ந்த கோலம்...அதாவது காக்கை மேல் அமர்ந்திருப்பார்..காக்கை மீது அமர்ந்திருக்கும் சனிபகவான் வேறு எங்கும் இல்லை...சனி வாகனத்தில் அமர்ந்திருப்பதால்,சனிக்குண்டான தொழில் வாகனம் என்பதால் வாகன தொழில் செய்பவர்கள் இங்கு வந்து வழிபட சிறப்பு உண்டாகும்..அடிக்கடி விபத்தை சந்திப்பவர்களும் இங்கு வந்து வழிபட்டால் தோசம் நீங்கும்...கோயில் மிக பெரிதாக இருக்கிறது...பெருமாள் .,ஸ்ரீரெங்கம் பெருமாள் கோலத்தில் அருள் பாலிக்கிறார்..
.
ஒவ்வொரு தனி சன்னதியும் பெரிய அளவில் தாரளமாக இருக்கும்..தினசரி சுற்றுலா பயணிகள் வருகை இருந்துகொண்டே இருக்கும்...சிவன் சிறிய மலை முகடு போல தோன்றுகிறார்...காரணம் இமயமலையிலிருந்து சிதறிய ஒரு துண்டு தான் இத்தலத்து இறைவன் என்கிறார்கள்....


பவானி கூடுதுறை;

காவிரி,பவானி,அமிர்த நதி மூன்றும் இணையும் நதி கூடலே பவானி கூடுதுறை...இதில் அமிர்த நதி மட்டும் கண்ணுக்கு தெரியாது...சங்கமேஸ்வரர் சன்னதி மூலவர் லிங்கத்தின் அடியில் இருந்து அந்த நதி உற்பத்தி ஆகி கலப்பதாக ஐதீகம்...

கோயிலை சுற்றி அடிக்கு 1008 லிங்கம் பூமிக்கு அடியில் இருப்பதாக சொல்கிறார்கள் அதனால் செருப்பு அணிந்த படி செல்லக்கூடாதாம்..பவானி,கொடுமுடி இரண்டு ஸ்தலங்களிலும் பரிகாரங்கள்,திதி கொடுப்பது புகழ் பெற்றது....களத்திர தோசம்,நாகதோசம்,பித்ரு தோசம் போன்றவற்றிற்கு பரிகாரம் செய்து சாந்தி செய்கிறார்கள்..இங்கு பரிகாரம் செய்து கொண்டால் உடனே பலிக்கும்..இதனால் வெளியூரில் இருந்து எல்லாம் இங்கு வருகிறார்கள்..இந்த தலத்தில் பெருமாள் சன்னதியும் உண்டு..இங்கு திருப்பதி பெருமாள் கோலத்தில் அருள்பாலிக்கிறார்..

பண்ணாரி அம்மன்;

மிக புகழ் பெற்ற சக்தி வாய்ந்த அம்மன் கோயில்.சத்தியமங்கலம் மைசூர் சாலையில் அமைந்துள்ளது..வருடாந்திர குண்டம் திருவிழாவில் துணை கலெக்டர்,போலிஸ் எஸ்.பி உட்பட இரண்டு லட்சம் பேர் குண்டம் இறங்குகிறார்கள்...திருச்சி மாவட்டத்திற்கு சமயபுரம் என்றால் ஈரோடு மாவட்டத்திற்கே காவல் தெய்வம் பண்ணாரி அம்மன்..பலரின் குல தெய்வமாகவும் திகழ்கிறது..சிலருக்கு குல தெய்வம் எது என தெரிய வில்லை என்றால் பண்ணாரி அம்மனையே குலதெய்வமாக நேர்ந்து கொள்கிறார்கள்

. மைசூர் செல்லும் பஸ்,லாரிகள் அனைத்தும் இங்கு நின்று வழிபட்டபின்னரே செல்கின்றன..வீரப்பனும் அடிக்கடி வந்து கொண்டிருந்தானாம்..இங்கிருந்து காட்டுக்குள் ஒரு அம்மன் கோயில் இருப்பதாக சொல்கிறார்கள்..பெயர் காட்டு பண்ணாரி.ஆனால் யானை,புலி,கரடி இவற்றிடமிருந்து தப்பித்தால் தரிசனம் செய்து வரலாம்..அந்தளவு திகிலான பயண தரிசனம்..


கொடிவேரி அணை;
கோபியில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் 20 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது இந்த அணை.அன்னக்கிளி முதல் பல கிராமத்து பிண்ணனியில் எடுக்கப்பட்ட படங்கள் ஒரு சீனாவது இங்கே எடுத்திருப்பார்கள்.நீண்ட இடைவேளைக்கு பிறகு சினிமாக்காரர்கள் மீண்டும் இந்த இடத்தை தேடி வரத்தொடங்கியுள்ளனர்.சின்ன பட்ஜெட் படங்களுக்கான சொர்க்கம் இது.பவானி சாகர் அணை யிலிலிருந்து திறந்து விடப்படும் நீரின் அடுத்த தேக்கம் இது.ஞாயிற்றுக்கிழமை தம்பதிகள் குடும்பத்துடன் வருகிறார்கள் என்றால்,வாரம் முழுக்க காதலர்களின் வேடந்தாங்கலாக திகழ்கிறது.இப்போது பெய்த மழையில் கரை புரண்டு ஓடுகிறது மழை நீர் .மீன் கடைகள் நிறைய இருக்கும்.அருமையான இயற்கை சூழ்நிலை மனதை அள்ளும்.ஈரோட்டுக்காரங்களுக்கு இதுதான் முக்கிய சுற்றுலா தலம்.பட்ஜெட் பயணம் ஆச்சே.


Tuesday, 14 June 2011

ராசிபலன் 13.6.2011 முதல்19.6.2011 வரை


மேசம்;

உங்களுக்கு என்ன சார்..அதட்டி பேசியே காரியம் சாதிச்சிடுவீங்க..இல்லைன்னா சூழ்நிலையை..கண்காணிச்சு சுதாரிப்பா நடந்துக்குவீங்க.எக்குதப்பா யார் பேசினாலும் டென்சனாக வேண்டாம்..அனுசரிச்சு போக ட்ரை பண்ணுங்க..ராசியில் .குரு உட்கார்ந்திருக்கார்.ஜென்மத்துல அவர் இருக்கிறதால.வீடு மாத்துற வேலை இருந்தா மத்திக்குங்க...தொழில் சம்பந்தமா அடிக்கடி பயணம் உண்டாகலாம்..அலைச்சல்தான்...உங்கள் பேச்சுக்கு பலம் கூடும்..பொருள் வரவு திருப்தியாக அமையும்..வருமானம் உயரும்..குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்..
எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சந்திராஸ்டம தேதிகள்;14,15 


ரிசபம்;


என்ன சார் ரொம்ப ஜாலியா இருக்கீங்க..ஓகே..ஆனா செயலில் ஒண்ணையும் காணோம்..உங்க வேலையை சுத்தமா மறந்துட்டீங்களே...உங்கள் தொழிலில் எதிர்பாராத வருமானம் ,திடீர் பண வரத்துகள் போன வாரம் போலவே இந்த வாரமும் தொடருது..அதுக்கு காரணம் உங்க ராசினாதன் சுக்கிரன்..ராசியிலேயே ஆட்சி பெற்றதுதான்...உங்க பவர் என்னன்னு உங்களுக்கே இப்பதான் புரியுது...குடும்பத்தில் சில மனக்கசப்புகள் தொடர்கிறது..மனைவியிடம் கருத்து வேறுபாடு ,டென்சன்.அதிகமாகிறது..கொஞ்சம் கவனமா இருங்க... உங்களை மாதிரி செல்லம் கொஞ்ச ஆள் இல்லைனாலும் உங்களையும் மீறி சில வாக்குவாதம் இருக்கத்தான் செய்யுது...பணத்தை வீணடிக்காம அக்கவுண்ட்ல பத்திரப்படுத்துங்க..கடன்கள் அடைபடும் வாரம்...வங்கி கணக்கு தொகை உயரும் வாரம்..


எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சந்திராஸ்டம தேதிகள்;16,17


மிதுனம்;

கணக்கு புலி..உங்களை மத்தவங்க அப்பாவின்னு நினைச்சிகிட்டு இருப்பாங்க..ஆனா உங்க மனசுக்குள்ள ஓடுற கணக்கு அவங்களுக்கு எங்கே புரிய போகுது...பிசினஸ் திட்டங்கள்...கொஞ்சம் மந்தம்தான் என்றாலும்,ராசியாதிபதி புதன் மறைஞ்சதால எல்லா காரியமும் கொஞ்சம் மெதுவாகத்தான் போகும்..அதுக்காக டென்சன் ஆக வேண்டாம்..வீடு சம்பந்தமான சொத்து சம்பந்தமான விசயங்களில் நல்ல செய்தி வரும்..குருபலம் இருக்கிறதால தைரியமா புது முயற்சிகளில் ஈடுபடலாம்...பண வரவு திருப்திகரமாக இருக்கும்... 


எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சந்திராஸ்டம தேதிகள்;18,19
கடகம்;

நகைச்சுவை அரசர்,வசியகாரர் நீர்தான் அய்யா...எல்லோரையும் அனுசரித்து செல்லும் பாசக்கார நண்பன் நீங்கள்..ஆனா உங்களுக்கே கடுக்கா கொடுக்கும் நபர்கள் அதிகம்..விட்டு தள்ளுங்க...இது போல சிலபேர் இருக்கத்தான் செய்றாங்க..ஜாமீன் கையெழுத்து,சிபாரிசு பண்றது ,கடன் கொடுக்குறது இதையெல்லாம் நீங்க நிறுத்த போறதும் இல்ல..ஏமாற்றம் நிக்க போறதும் இல்ல..


ஆனாலும் உங்க உதவும் குணம் தொடரட்டும்.லாப ஸ்தானத்துல அரசு கிரகங்கள் இருப்பதால் அரசு சார்ந்த ஆதாயங்கள் கிட்டும்/..பெரிய மனிதர்களின் தொடர்பு உண்டாகும்...மதிப்பு,மரியாதை உயரும்படியான சம்பவங்கள் நடக்கும்...வருமானம் ,லாபம் அதிகரிக்கும்..அம்மா வழி சொந்தங்கள் மூலம் நீண்ட நாள் எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும்..

சிம்மம்;

காட்டுக்கு ஒரே ராஜா, சிங்க ராஜா ராசிக்காரரே....உங்கள் பிரச்சனை அலைகள் ஓய்ந்து வெளிச்ச புள்ளிகள் தெரியணுமே...புதிய தொழில் /பணியிடம் அமைதியாக செல்லும்...குருபலம் இருப்பதால் பண சிக்கல் நெருக்கடி குறையும்..தொழில் ரீதியாக புதிய திட்டம் தயார் செய்வீர்கள்...அப்பாவிடம் இணக்கம் காட்டுங்கள்...அவர் மூலமா இன்னும் சந்தோசமான செய்திகள் வரப்போகிறது...குடும்பத்தில் நிம்மதி,சந்தோசம் நிறையும் வாரம்.

கன்னி;


ஜென்ம சனி வந்துடுச்சேன்னு கவலைப்படாதீங்க...உங்க தனித்தன்மை,உற்சாகத்தை இழக்காதீங்க...தொழிலில் முன்பு இருந்த சுறுசுறுப்பு குறைஞ்சிருக்கு..அல்லது தொழிலில் ஒரு தேக்க நிலை இருக்கு..இதுக்கா கவலைப்படுறீங்க..குரு பார்வை சிறப்பா இருக்கு சமாளிச்சிடலாம்...இன்னும் 6 மாசத்துல ஜென்ம சனி முடிஞ்சிடும்..இந்த வாரம் கடுமையாக உழைத்து பெரிய லாபம் ஒன்றை சம்பாதிப்பீர்கள்..அலைச்சல் இருந்தாலும் இறுதியில் சந்தோசம் உண்டு....வெளியூர் பயணம் இருக்கு.

துலாம்;சுக்கிரன் ராசி நேயரே...சுக்கிரன் பலம் அடையும் போதெல்லாம் உங்க தன்னம்பிக்கை பல மடங்கு பெருகுமே! பணம் வரவு அதிகரிக்குமே..ஜாலிக்கும் குறைவில்லை..மனைவியின் நீண்ட நாள் ஆசையை நிறைவேத்துவீங்க..உல்லாச பயணம் போவீங்க...வங்கி கணக்கில் பணம் உயர்வதை கண்டு பூரித்து இருப்பீர்கள்..வேலை பளு அதிகரிக்கும் வாரம்..சிரமமா இருந்தாலும் முடிச்சிடுங்க..தள்ளிப்போட வேண்டாம்!

விருச்சிகம்;

நீங்க தைரியமானவராக காட்டிக்கொள்ளும் சுபாவம் உடையவர்..ஆனா நிறைய சந்தேகங்களும்,பயமும்,டென்சனும் இருப்பது உங்களுக்குத்தான் தெரியும்..கிரகம் பலமா இருக்கிற ஜாதகமா இருந்தா உங்களை துதி பாடினாத்தான், உங்களை சார்ந்து இருப்பவர்கள் தப்பிக்கலாம்...இல்லைன்னா ஆள் காலி..கொஞ்சம் கோபம் அதிகமோ...அடிக்கடி வாக்கு வாதத்துக்கு போயிடுறீங்க...அநியாயம் எங்கு நடந்தாலும் தட்டி கேட்பீங்க..ராசியில் ராகு இருப்பதால் துணிச்சல் அதிகரிக்கும் ..துணைவருடன் அதிக வாக்கு வாதமும் இருக்கும்..அதிக நெருக்கமும் இருக்கும்..எல்லாமே டாப்புதான்...ஒரு நாள் செல்லம் கொஞ்சுவதும்,அடுத்த நாள் வீடு அதிர கத்தி தீர்ப்பதும் நடக்கும்.செலவுகள் நிறைய காணப்படுகிறது....கவனமா செயல்படுங்க..

தனுசு;குருபலம் பெற்ற ராசிக்காரர் நீங்கள்...மக்களுடன் நெருங்கி பழககூடியவர் நீங்கள்.ராசிக்கு ஐந்தில் குரு நிற்பதால் வெற்றி உங்கள் பக்கம்..சொத்து சார்ந்த பிரச்சனைகள் தீரும்.வர வேண்டிய பழைய பாக்கிகள் வந்து சேரும்.தொட்டது துலங்கும் வாரம்.

மகரம்;

உடல்நலனில் அடிக்கடி பிரச்சனைகள் உண்டாக காரணம் நாலில் இருக்கும் குருதான்..மருந்து,மாத்திரை செலவுகள் இன்னும் இருக்கு..போனவாரம் போலவே மந்தமான வாரம்தான் என்றாலும் புதிய நண்பர்களை சந்திப்பீர்கள்...கோயில் வழிபாட்டிற்கு சென்று வருவீர்கள்...அலைச்சல்கள் காணப்படும்..செலவுகள் அதிகம் இருக்கு கவனம் தேவை.

கும்பம்;அஷ்டம சனி இன்னும் விடலைன்னாலும்...போன வாரத்தை விட இந்த வாரம் உற்சாகம் தரும் வாரமாக இருக்கும்...செலவுகள் அதிகரித்த காலத்தில்,நஷ்டம் நடந்துருச்சி அதை பத்தி கவலைப்பட்டு பலன் இல்லை...இன்னும் ஆறு மாசம் அஷ்டம சனி முடிஞ்சிரும்...இந்த வாரம் 4 ல் செவ்வாய் சுக்கிரன் என இருப்பதால் அபரிதமான வருமானம் ஒன்ணு காத்திருக்கு..சொத்து சம்பந்தமான நல்ல செய்தி கிடைக்கும் விற்பனை ஆகாமல் இருந்த சொத்து லாபத்துல விக்க வாய்ப்பிருக்கு...ஒரு பிரச்சனை பைசல் ஆகிடும்...அம்மா வழி உறவில் நல்ல செய்திகள் வரும் வாரம்...

மீனம்;

தொழிலில் பரபரப்பான முன்னேற்றம் தரும் வாரம்...வர வேண்டிய வருமானம் நிற்காம வந்து சேரும்...அருமையாக பேசி காரியத்தை கச்சிதமாக முடிப்பதில் வல்லவரான நீங்கள்..இந்த வாரமும் ஜொலிப்பீர்கள்...குருதான் வாக்கு ஸ்தானத்தில் இருக்காரே உங்க பேச்சுக்கு நல்ல செல்வாக்குதான்..போற இடம் எல்லாம் மரியதை ,புகழ் கிடைக்கும்..சின்ன சின்ன பணிகளும் நல்ல வெற்றியை வருமானத்தை தேடித்தரும்!

தைரியமான செயல்பாடுகள் தேவை..இந்த வாரம் 3ல் பலம் வாய்ந்த கிரகங்கள் இருப்பதால்...உங்களுடைய நீண்ட நாள் பணிகளை முடியுங்கள்..மனதில் இருப்பதை செயல்பாட்டுக்கு கொண்டு வாருங்கள்..தயங்க வேண்டாம்..எதுவா இருந்தாலும் வெற்றி நிச்சயம்..குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும்..தெய்வ பலம் மிகுதியாக உள்ளது..தெய்வ காரியங்களை செய்து முடிப்பீர்கள்.....


Read more: http://www.astrosuper.com/2011/06/12.html#ixzz1PDhlucq0

Monday, 13 June 2011

1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்!


1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்!
இது 1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்..இன்றைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.அதிகாரம் அத்தனையையும் மூடி மறைத்துவிட்டது.அப்போது முதன்முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்திருந்தார் கருணாநிதி.


தலைமுறைக்கும் தாந்தான் முதல்வராக இருக்க வேண்டும் என அடித்தளம் அமைத்துக்கொண்டிருந்த நேரம் .அதே காலகட்டத்தில் ஜவகரிஸ்ட்என்ற பத்திரிக்கையும் வெளிவந்து கொண்டிருந்தது!அதன் ஆசிரியர் ஒன்றும் அறியப்படாதவர் அல்ல.ஒரு காலத்தில் கலைஞர் கருணாநிதி மேடையேறி பேச உழைத்துக்கொண்டிருந்த என்.கே.டி.சுபிரமணியம்!

அவர் நடத்திய ஜவகரிஸ்ட் பத்திரிக்கையில் ,இந்த தேதியில் சென்னையில் உள்ள இந்த மருத்துவமனையில்,இந்த நேரத்திற்கு ராசாத்தி என்கிற தர்மாம்பாளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.மருத்துவமனையின் பதிவேட்டில் அந்த பெண் குழந்தைக்கு தகப்பனார் மு.கருணாநிதி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.யார் அந்த கருணாநிதி..?என்ற ஒரு பெட்டி செய்தியை வெளியிட்டிருந்தார்.அந்த செய்தி முதல்வராக இருந்த கருணாநிதியை கோபப்பட வைத்துவிட்டது.முதல்வர் பதவிக்கு களங்கம் ஏற்படுத்தியதாக பொங்கி எழ வைதது.அரசியலில் நேர்மை,தூய்மை,அப்பழுக்கில்லாத ஒழுக்கத்தை எல்லாம் அண்ணாவிடமிருந்து அப்படியே எடுத்துக்கொண்டவரல்லவா..?

‘’ராசாத்தி..தர்மாம்பாள் யார் என்றே எனக்கு தெரியாது.எனக்கு அப்படி எந்த பெண் குழந்தையும் இல்லை’’என்று கூறி பரபரக்க வைத்தார்.இது ஒழுக்கத்திற்கே சவால் விடும் செய்தியல்லவா..?விட்டுவிடக்கூடாது...என்று நீதிமன்றத்துக்கும் போனார்...பெண் குழந்தை ..மகள்.ஏன்று யாருமே தெரியாது என்றார்..

பிறகு நடந்தது என்ன என்பது இன்றைய மூத்த தி.மு.கவினருக்கே வெளிச்சம்.செய்தியை வெளியிட்ட பத்திரிக்கை ஆசிரியரை நீதிமன்றம் வரை இழுத்தடிக்க,அந்த காலகட்டத்தில் அவரால் எந்த ஆதரத்தையும் நிரூபிக்க முடியாமல் போக தண்டனைக்கு உள்ளானதாகவும் நடந்தேறியது..என்ற பழைய வரலாற்றை ஒரு நேர்காணலில் போட்டுடைத்தவர் காங்கிரஸ்காரரான திருச்சி வேலுசாமி.

சரி.41 ஆண்டுகள் உருண்டோடி விட்டது.இன்று ஏன் இது சந்திக்கு வருகிறதென்றால்.....

எந்த பெண் குழந்தையை தன் மகளே இல்லை என மறுத்தாரோ...எந்த பெண் குழந்தையை வெளியில் சொன்னால்கூட தன் பெயருக்கு இழுக்கு என மூடி மறைத்தாரோ...,அந்த மகள் கனிமொழிக்காகத்தான் இன்று த்னது தன்மானத்தோடும் மணிமுடியையும் இழந்திருக்கிறார் கருணாநிதி.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு மூடி மறைத்த ,மறுத்த மகள் கனிமொழிக்காக இன்று தன் எல்லா அதிகாரத்தையும் பயன்படுத்திவிட்டார்..ஊர் அறிய உலகறிய!