Thursday, 25 August 2011

ஆண்மையற்ற ஆண்கள் ஜாதகம்;astrology

ஆண்மையற்ற ஆண்கள் ஜாதகம்;


ஜோதிடம் மனிதனின் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு வைத்துள்ளது.இக்காலத்தில் வசதிகளையும்,படிப்பையும் பார்த்துவிட்டு திருமணம் செய்து ...வைக்கிறார்கள்..ஆனால் ஜாதகத்தை சரியான முறையில் அலசாமல் ஏமாற்றப்படுவது இக்காலத்தில் சகஜமாகிறது...100 பவுன் தங்கம்,ஒரு கார் என வரதட்சணையும் கொடுத்து,அழகான பெண்ணையும் கொடுத்து..முதலிரவில் அந்த கட்டிய கணவன் ஆண்மையற்றவன் என தெரிய வந்தால் அப்பெண்ணின் மன நிலையை நினைத்து பார்க்கவே அச்சமாக இருக்கிறது!


இது பிரபல நடிகைகளுக்கே நடந்திருக்கிறது!ஒரு ஆணின் ஜாதகத்தில் வீரியம் என சொல்லப்படும்...லக்கினத்தில் இருந்து மூன்றாமிடத்தில் சூரியன் இருந்தாலும்,சுகஸ்தானம்,பதினொன்றாமிடம் போன்றவை கெட்டிருந்தாலும் செயல் கிரகம்..செவ்வாய் ,சுக்கில கிரகம் சுக்கிரன் கெட்டிருந்தாலும் ஆண்மை இல்லை..வீரியமும் இல்லை..அல்லது தாம்பத்தியம் பிடிக்காமல் போய்விடுகிறது..அல்லது முறையற்ற உறவுகளில் அவனுக்கு விருப்பம் போய் விடும்..!

ஜாதகத்தில் எட்டாமிடம் என்பது ஆண்,பெண்களின்  மர்ம உறுப்பு குறிக்கும் இடம்..இதில் ஆறாம் அதிபதி,அல்லது சனி போன்றவை சம்பந்தம் ஆனாலும் மர்ம உறுப்பில் வியாதி போன்றவை உண்டாகும்...

சுக்கிரன்,செவ்வாய்..சேர்ந்து இருந்தால் மர்ம உறுப்பில் வியாதிகள் அவ்வப்போது வந்து போகும்...செவ்வாய் ரத்தக்காரகன்..அவன் சுக்கில கிரகத்தோடு சேர்ந்து இருக்கும்போது ..பால்வினைநோய்கள் தாக்குகின்றன....செவ்வாய் திசையும் வந்து சுக்கிரன் செவ்வாய் இருந்து...சனி அல்லது கேது சேர்ந்திருந்தால் மேக வெட்டை எனப்படும் மர்ம உறுப்பில் புண்கள் முதல் எய்ட்ஸ் வரை வர வாய்ப்பு உண்டு....ராகுவும் சந்திரனும் சேர்ந்திருந்தாலும் இப்பிரச்சனை உண்டாகும்..சந்திரன் உடல்காரகன் அல்லவா...சுக்கிலம் எனப்படும் விந்துவை கட்டுப்படுத்தினால் விரயம் ஆகாமல் அடக்கியிருந்தால் ,ஆன்மீகத்தில் முன்னேற்றம் உண்டாகும்..தேகப்லம் உண்டாகும்....ஆன்ம விழிப்புணர்வு உண்டாகும் என சொல்வார்கள்..விந்து வீணாக்கமல் இருந்து தியானம்,யோகா செய்தால்தான் பலன் உண்டு....

கடினமான வேலை செய்பவர்களுக்கும்,அதிக மன உளைச்சலில் இருப்பவர்களுக்கும் வீரியம்,ஆண்மை சம்பந்தமான பிரச்சனைகள் வருவதாக மருத்துவம் சொல்கிறது..இப்ப இருக்குற காலத்துல அப்பன் காசுல செட்டில் ஆனவந்தான்,ஜாலியா இருக்க முடியும்.சுயமா சம்பாதிக்குறவன் ஓடிக்கிட்டே இருக்கான்.காதல்,பெண்கள் என்பதை நினைக்கவே நேரமில்லை...இதுதான் மன உளைச்சலை தரும் முக்கிய இடம்.

பேங்க்ல பணம் போடணும்,வீடு வாங்கணும் என எல்லையில்லாதஆசைகள்..நிகழ்காலசந்தோசத்தைகெடுத்துவிடுகின்றன...எட்டாமிடம்ஆண்களின்மர்மஉறுப்பையும்,மூன்றாமிடம்வீரியத்தையும்குறிக்கிறதுஎன்பதால்,பெண்வீட்டார்திருமணபொருத்தம்பார்க்கும்போது,ஜாதகத்தில் லக்கினத்தில் இருந்து ஏழாம் இடத்தை மட்டும் பார்க்காமல் ஆண் ஜாதகத்தில் எட்டாமிடம்,மூன்றாமிடம்,12 ஆம் இடத்தையும் ஆய்வு செய்ய வேண்டும்...பிறகே முடிவு செய்ய வேண்டும்..

இப்போதெல்லாம் முதலில் பையன் சம்பளம் என்ன என கேட்குறாங்க..அப்புறம் சொந்த வீடு இருக்கான்னு பார்க்குறாங்க...வீட்ல நம்ம பொண்ணுக்கு தொந்தரவில்லாமல் இருக்க,கூட பொறந்தவங்க எத்தனை பேர் இருக்காங்கன்னு பார்க்குறாங்க..அப்புறம்தான் செவ்வாய் தோசம்,நாக தோசம் இருக்கா,பையன் நட்சத்திரம் என்னன்னே கேள்வி வருது..அப்புறம் எங்க போய் ஆண்மை உள்ள ஜாதகம்,ஆண்மை இல்லாத ஜாதகம்னு பார்க்க போறாங்க..

அந்த காலத்துல பெரிய குண்டாங்கல் பாறையை தூக்கினாத்தான் கல்யாணம்,காளையை அடக்கினாத்தான் கல்யாணம் என்ற முறை இருந்தது.அதில் விசயம் இருக்கு.அதில் அவன் ஆண்மை மட்டுமில்லாமல் அவன் உழைப்பு,முயற்சி,பெண்ணின் மீது இருக்கும் காதல் எல்லாமே வெளிப்படும்.

எலும்பும்,தோலுமா,சோடப்புட்டி கண்ணாடி போட்டுகிட்டு,சாஃப்ட்வேர் இஞ்சினியர்.. மாசம் ஒரு லட்சம் சம்பளம்னு சொல்வான்..லட்டு மாதிரி,கும்முன்னு இருக்குற பொண்ணை அப்படியே அப்பன்காரன் காசு பணத்துக்கு ஆசை பட்டு தூக்கி கொடுத்துருவான்....அந்த சாஃப்ட்வேர் இஞ்சினியர் லட்சக்கணக்குல பணம் போட்டு கார் வாங்கினாலும்,என் வண்டின்னு சொல்லிக்கலாம் ஆனா இவனால் வண்டி ஓட்ட முடியாது..டிரைவர் தான் ஓட்ட முடியும்..அது மாதிரிதான்...இப்ப நடக்குது....

5 comments:

மாதவன் said...

சொல்லுக பாஸ்,

ஆர்.கே.சதீஷ்குமார் said...

சொல்லுக பாஸ்,//
அதான் சந்திரன் இருக்காரே மாதவன்...குழந்தையும் கையில வெச்சிருக்கீங்க..;-))

perumal shivan said...

//அந்த காலத்துல பெரிய குண்டாங்கல் பாறையை தூக்கினாத்தான் கல்யாணம்,காளையை அடக்கினாத்தான் கல்யாணம் என்ற முறை இருந்தது.//
boss eppallam thookka sonninganna naatla kalyaaname nadakkaathu !

kalakkuringa boss kalakunga!

perumal shivan said...

entha mathiri pathuvu somma phoravaniyum utkanthi padikkavachidum athu eppadi boss title pudikkiringa ?
makkalin manamarinthavanthaano jothidan ?

pathuvu super !

Unknown said...

வணக்கம்........