Wednesday, 14 September 2011

சனி பெயர்ச்சி பலன்கள் 2011-2012


சனி பெயர்ச்சி -ரஜினி,ஜெயலலிதா,கருணாநிதிக்கு பாதிப்பா?-ஜோதிடம்   
சனி பெயர்ச்சி /கைரேகை/ஜோதிடம்/ஜாதகம்,குருபெயர்ச்சி/ராசிபலன்


சனி பெயர்ச்சிஇரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கிறது.சனி கடகத்திற்கு வரும்போது கடகம் சந்திரன் வீட்டிற்கு வரும்போது கடகம் சந்திரன் வீடு ,நீர் கிரகம் என்பதால் சுனாமி உண்டானது.கடல் கொந்தளித்தது.பேரழிவு ஏற்படுத்தும் 26 ஆம் நாளில் இது நடந்தது.
சனி சிம்ம வீடான சூரியன் வீட்டிற்கு வரும்போது சூரியன் அரசு கிரகம்,நெருப்பு கிரகம் என்பதால் முக்கிய மந்திரிகள் மரணம்,ரயில் விபத்து,விமான விபத்து,அரசியல் மாற்றம் போன்றவை உண்டானது.சனி வியாபார/தொழில் காரகனாகிய புதன் வீட்டிற்கு வரும்போது முக்கிய தொழில் அதிபர்கள் 2 ஜி ஸ்பெக்ட்ரம் வியாபார விசயத்தில் சிக்கி சிறையில் உள்ளனர்.இதில் இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றி வரும் நிறுவன  முக்கியஸ்தர்களும் சிறையில் உள்ளனர்.புதன் கல்விக்கு அதிபதி என்பதால் கல்வித்துறையில் பெரும் புயலை சமச்சீர் விசயத்தில் கிளப்பி இருக்கிறது.கல்விக்கட்டண பிரச்சனையும் கோர்ட்டில் இருக்கிறது.பெரிய அளவில் இவை மக்களால் பேசப்பட்டும் வருகின்றன...
சனி அடுத்து வரும்,நவம்பர் 1 ஆம் நாள் சனியின் உச்ச வீடான சுக்கிரனின் வீடு துலாம் செல்கிறார்.இங்கு சனி செல்லும்போது ஏற்படப்போகும் பாதிப்புகள் என்னவாக இருக்கும் என எனது யூகங்களை எழுதுகிறேன்.துலாம் சுக்கிரன் வீடு என்பதால் கலைத்துறை,உணவு,டெக்ஸ்டைல்,பெண்கள்,பெட்ரோலியம்,இவைகளில் பாதிப்பு வரும்.
ரஜினி,கருணாநிதி இருவரும் கலைத்துறை சார்ந்தவர்கள் .கலைத்துறை முக்கிய புள்ளியான இன்னொருவருக்கும் இவர்களுடன் சேர்ந்து பாதிப்பு உண்டாக்கும்.இவர்களை பற்றிய பரபரப்பு இப்போதே ஆரம்பித்து விட்டது.சனி துலாம் வீட்டை நோக்கி நகர நகர கலைத்துறையின் உச்ச நட்சத்திரம் ரஜினிக்கு உடல் பாதிப்பு,கருணாநிதிக்கு பெரும் வீழ்ச்சி (இவர் கதை வசனம் எழுதிய பொன்னர் ஷங்கர் சமீபத்தில்தானே வந்தது.இவர் ஆரம்பம் கலைத்துறைதானே) இன்று தன் மகள் சிறையில் இருப்பதால் கட்சி பணிகளை கவனிக்கவும் மனமின்றி அரசியலில் சலிப்புற்று அதிக பட்ச கவலையில் மாமல்லபுரத்தில் ஓய்வு எடுக்கிறார்.தனியே ஓய்வு எடுக்கிறார் என்றால் அந்தளவு வீட்டில் தொல்லைகள் என்று அர்த்தம்.

ரஜினியின் சிங்கப்பூர் சிகிச்சையும் மர்மம் நிறைந்ததுதான் அதை பற்றி பின்னர் எழுதுகிறேன்.

ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு பரபரப்பாக நடக்கிறது.சிம்ம ராசிக்கு குருபலம் வெற்றி தந்தாலும் ஏழரை சனி முழுமையாக நவம்பர் 15 வரை உள்ளதே.அதுவரை அவருக்கும் மன உளைச்சல்தான்.அதனால்தான் சனி பெயர்ச்சி முடியும் வரை சொத்து குவிப்பு வழக்கில் ஆஜராக கூடது.சனி பெயர்ச்சி ஆனதும் ஆஜரானால்,பிரச்சனை இருக்காது என நினைக்கிறார்.ஜெயலலிதாவுக்கு ஜோதிடத்தில் நிறைய நம்பிக்கையும் உண்டு.அதே சமயம் அவரே ஜோதிட கணக்குகளை தெரிந்து வைத்திருக்கிறார்.

சன்பிக்சர்ஸ் கலாநிதிமாறன் லோக்கல் போலீஸ் ஸ்டேசனில் ஆஜராக தேதி கேட்டு வாங்கியிருக்கிறார்.இவருக்கு இந்த நிலைமை வரும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.கந்திருஷ்டி என்கிறோம்.அது எந்திரன் விசயத்தில் அப்படியே விழுந்திருக்கிறது.வாஸ்து என்கிறோம்.அது முட்டை வடிவ சட்டமன்றம் கட்டி ஜீரோ ஆன கருணாநிதியை பார்த்து தெரிந்துகொள்வோம்.முட்டை வடிவ கட்டிடம் தமிழன்,இந்திய பாரம்பரியத்தில் இல்லை.உலகப்புக்ழ் பெற்ற தாஜ்மஹால் முதல் இந்தியனின் சாதாரண குடிசை வீடு வரை கூம்பு வடிவத்தில்தான் உள்ளது. இதை சுட்டி காட்டியபின் தான் தோட்டாதரணியை வைத்து அவசரமாக செட் போட்டார்கள்.அது எப்படி வேலை செய்யும்.

இந்தியர்களை சுரண்டும் சோனியா காந்தி, சிலிண்டர்,பெட்ரோலிய பொருள் மூலம் கொள்ளை லாபம் சம்பாதிக்கவே நினைக்கிறார்.ஒரு விதவை இந்தியாவின் முக்கிய ஆளுங்கட்சி தலைவர் அந்த நாடு சுபிட்சம் அடைவது எப்படி..?இந்திரா காந்தி ஆண்ட போது நடந்த ரத்த ஆறும்,வேதனையும்,துக்கமும்,பொருளாதார சீர்குலைவும்,தீய சக்திகளின் ஆதிக்கமும் தானே இப்போதும் இருக்கும்..?

சனி துலாம் வரும்போது பெட்ரோலிய பொருட்கள்,ஆடம்பர பொருட்கள் இன்னும் கடுமையாக உயரும்.அதற்க்குண்டான சகுனம்தான் சிலிண்டர் விலை மானியத்தை கட் செய்து 800 ஆக்க முயற்சிப்பது.
சனி சுக்கிரன் வீடான துலாத்தில் உச்சம் ஆகும்போது சுக்கிரன் ஸ்தலமகிய ஸ்ரீரெங்கத்திலும் மாற்றம் நிகழாதா..? கடப்பாரை போட்டு பல இடங்களில் தோண்டும் நிலை ஏற்படலாம்.ஜெ..இவ்வளவு நாளும் இல்லாமல் இப்போது சுக்கிரன் ஸ்தலத்தில் நின்று வெற்றி பெற்றாரே இதன் மூலம் ஸ்ரீரெங்கம் அதிகளவில் செய்திகளில் அடிபட்டதே..?இதுவும் சனி பெயர்ச்சியின் அறிகுறிதான்.


சனி துலாம் வீட்டில் இருக்க பிறக்கும் பிள்ளைகள் நல்ல சுறு சுறுப்புடன் இருப்பர்.பெண்கள் விசயத்தில்,அதிக சபலம் உடையவர்கள்.பணம் சம்பாதிப்பதில் கெட்டிக்காரர்கள்.

வாழ்க வளமுடன்.

No comments: