Tuesday, 20 September 2011

ஜாதகத்தில் சனி அமர்ந்த நிலை பலன்கள்;


ஜாதகத்தில் சனி அமர்ந்த நிலை பலன்கள்;
ஜோதிட ரீதியாக கீழ்க்கண்டவை பொது பலன் மட்டுமே.உங்கள் லக்கினத்தை பொறுத்தவை கீழ்க்கண்ட கெடுபலன் கூடலாம் ..அல்லது அதிகரிக்கலாம்..சனிக்கு மகரம்,கும்பம் சொந்த வீடு.துலாம் உச்ச வீடு.மேஷம் நீச வீடு.சனி நீச வீடான மேசத்தில் இருந்தால் அந்த ராசிதார்ருக்கு மோசமான பலன் கிடைக்கும்.ஊர் ஊராக திரிய வேண்டிய நிலை ஏற்படும்.தொழிலில் பலவித பிரச்சனை ஏற்பட்டு கொண்டே இருக்கும்.சோம்பல்,சலிப்பு ,அதிகம் உண்டாகி ஆரோக்கியமும் பாதிக்கலாம்..எந்த காரியம் தொட்டாலும் தடங்கல் உண்டாகலாம்.கபட சுபாவம் வந்து ஒட்டி க்கொள்ளும்.சனி நீசமான மேச வீட்டுக்கதிபதி செவ்வாய் மகரத்தில் உச்சம் ஆனால் நீசபங்க ராஜ யோகம் ஏற்பட்டு நல்ல பலன்கள் உண்டாகும்.

ரிசபத்தில் சனி அமர்ந்தால் அது சுக்கிரனின் வீடு என்பதால் மனைவியால் மனக்கஷ்டங்கள் உண்டாகலாம்..சிலருக்கு கீழான பெண்களுடன் தொடர்பு உண்டாகி பண இழப்பு உண்டாகும்.விருச்சிகத்தில் சனி இருந்தால் ராணுவம்,போலீஸ் போல ஏதாவது ஒரு பொறுப்பான துறையில் நல்ல பணியாற்றுவார்கள்.ஆனால் சுதந்திரமாக அவர்களால் பணியாற்ற முடியாது.கொடூரமான மனோபாவம் கொண்டவர்களாக இருப்பர்.உடன் செவ்வாயும் இணைந்துவிட்டால் இன்னும் அதிகம்.

மிதுனம்,கன்னியில் சனி அமர்ந்தால் அவர்களுக்கு பெண் குழந்தைகள் அதிகம்.தேர்வுகளில் அடிக்கடி தோல்வி ஏற்படும்.நினைவாற்றல் குறைவாக இருக்கலாம்.பணக்கஷ்டம் காணப்படும்.நல்ல பணியில் இருப்பார்கள்.ஆனால் குறைவான சம்பளம் பெறுவர்.

கடகத்தில் சனி இருப்பவருக்கு அம்மாவால் மனக்கஷ்டம்,பிரச்சனை அல்லது தாயை பிரிந்து வாழும் சூழல் உண்டகும்.அடிக்கடி தாயாருக்கு உடல்நலக்குறைவு உண்டாகும்.

சிம்மத்தில் சனி இருப்பவருக்கு ஈகோ அதிகம் இருக்கும்.வாழ்வில் எந்த பிரச்சனையும் இல்லாவிட்டாலும் ஏதோ கவலையிலெயே ஆழ்ந்திருப்பர்.தந்தையாருடன் கருத்து வேறுபாடு,உறவினர் பகை உண்டாகும்.

தனுசு,மீனம் குருவின் வீடுகள்.இந்தராசிகளில் சனி இருந்தால் அவர்கள் புத்திசாலிகளாக இருப்பர்.தெளிவான மனநிலையோடு செயல்படுவார்கள்.அநீதிஎங்கு நடந்தாலும் தட்டி கேட்பார்கள்.இவர்களுக்கு அரசு பணி கிடைக்கும் வாய்ப்பு அதிகம்.நல்ல மனைவி,தீர்க்காயுள்,நல்ல அறிவான குழந்தைகள்,செல்வ வளம் எல்லாமே அமையும்.

மகரம்,கும்பம் போன்ற தன் சொந்த வீடுகளில் சனி இருந்தால் தொழில் சிறப்பாக அமையும்.ஆயுள் பலம் உண்டு.பிறரது பணம் இவர்கள் கைக்கு கிடைக்கும்.சிலர் பினாமிகளாக இருப்பர்.பலரை மேற்பார்வையிடும் கெளரவமான பணியில் இருப்பர்.குறிப்பாக மகரத்தில் சனி இருந்தால் அவர்கள் அளவோடு பேசுவர்.துலாம் சனிக்கு உச்ச வீடு.அங்கு சனி இருந்தால் பெரிய வேலையில் அமர்ந்து பெயரும்,புகழும் பெறுவார்.எதற்கும் குறைவிருக்காது.

ஒருவரது ராசியில் சனி திசை 19 ஆண்டுகள்..சிலருக்கு பெரும் நன்மையையும் ,சிலருக்கு பெரும் கெடுதலையும் செய்வார் சனி பகவான்.அதை பற்றி விரைவில் பார்ப்போம்.

5 comments:

நிரூபன் said...

வணக்கம் பாஸ்
கடந்த சில நாட்கள் கொஞ்சம் பிசியாகிட்டேன்.
வர முடியலை...

எல்லோர் வலையும் மீண்டும் இன்று தான் மேயத் தொடங்கினேன்.

மன்னிக்க வேண்டும்!

நிரூபன் said...

ஜாதகத்தில் சனி அமர்வதால் ஏற்படும் தீமைகளை விளக்கிச் சொல்லியிருக்கிறீங்க.
மிக நன்றி பாஸ்.

இராஜராஜேஸ்வரி said...

பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

Unknown said...

என்னுடைய ஜாதகத்தில் கன்யா லக்கினம்.6 ஆம் வீட்டிற்கு அதிபதி சனி. சனி துலாமில் உச்சம் பெற்றுள்ளார். இது நல்லதா

Unknown said...

6 ம் வீட்டிற்கு அதிபதி சனி உச்சம் பெறுவது நல்லதா