Sunday, 25 September 2011

விஜயகாந்த் ஜாதகம் என்ன சொல்கிறது..?

விஜயகாந்த் ஜாதகம் என்ன சொல்கிறது..?


விஜயகாந்த் பிறந்த தேதி;25.8.1952
வருடம்;நந்தன வருடம் ஆவணி 10,திங்கள்
பிறந்த ஊர்;மதுரை
நட்சத்திரம் 2 ஆம் பாதம்
ராசி;கன்னி
லக்கினம்;சிம்மம்
திதி;பஞ்சமி
யோகம்;சுப்ரம நாம யோகம்
கரணம்;பவ கரணம்

http://www.astrosuper.com
அரசியல் தலைவர்களின் ஜாதகங்களை பார்க்கும் போது முதலில் அரசு கிரகங்களான குரு,செவ்வாய்,சூரியன் அமைப்பு எப்படி இருக்கிறது என பார்ப்பது அவசியம்.லக்கினமே இவருக்கு சூரியனின் வீடான சிம்மத்தில் அமைந்திருக்கிறது.இது அடக்கி ஆளும் லக்கினம்..நேர்மை,நியாயம் விரும்பும் லக்கினம்...அதற்கேற்றார்போல் பிறர் நடக்கவில்லையெனில் கடும் கோபத்தை ஏற்படுத்தும்..நம் வீடுகளில் இந்த லக்கினத்தில் பிறந்தவர்களை பார்த்தால் அவர்களும் இப்படித்தான் இருப்பர்.கோபத்தில் கண் சிவப்பர்..காரணம் நெருப்பு கிரகம் சூரியனின் லக்கினம் அல்லவா.

சிம்ம லக்கினத்தில் பிறந்த விஜயகந்த் லக்கினாதியின் பலம் பெற்று,5 ஆம் பாவாதிபதி குரு பாக்கியத்தில் அமர்ந்து,சூரியனை பார்ப்பதும்,செவ்வாய் 10 ஆம் இடத்தை பார்ப்பதும்,குருவுக்கு கேந்திரத்தில் புதன் இருப்பதும் நல்ல பலத்தை தரக்கூடிய அமைப்பே.

எந்த ஒரு சிறப்பிற்கும் பூர்வ புண்ணியாதிபதி பலம் பெற்றிருக்க வேண்டும்.பூர்வ புண்ணிய ஸ்தானத்தை எந்த கிரகமும் பலவீனப்படுத்தக்கூடாது..நடக்கும் திசா புத்திகளும் அவர்களுக்கு துணை புரிய வேண்டும்..அவர்களே சாதனை படைக்கின்றனர்.

ஜென்ம சனியில் இவர் தமிழகத்தில்,எதிர் கட்சி தலைவராக புகழ் பெற்றாலும்..கூட்டாளி கிரகம் சனி ஆயிற்றே..அதனால் இவர் நெருப்பு ஆசனத்தில் அமர்ந்திருப்பது போலத்தான் அமர்ந்திருப்பார்...மனைவியால் இவருக்கு கட்சியில் குழப்பம் ஏற்படும் வாய்ப்பும் எதிர்காலத்தில் உண்டு.6 ல் ராகு இருப்பதால் இவரது எதிரிகளுக்கு இவர் சொம்ம சிப்பனமாக விளங்குவார் என்றாலும்...எதிரி கிரகம் சனி 2 ஆம் வீட்டில் அமர்ந்து இவர் வாயாலே இவர் கெடுவார்..என்றுதான் சொல்கிறது..அதாவது இவர் கருத்து தெரிவித்தால் அது எதிரிகளை எரிமலையாய் தகிக்க வைக்கும்...ஜெயலலிதாவே சொல்ல தயங்கிய பல கருணாநிதி ரகசியங்களை முச்சந்தியில் போட்டு உடைத்தாரே விஜயகாந்த்...அதற்கு காரணம் வாக்கில் உள்ள சனிதான்...நாக்குல சனி இருக்குடா...என்பார்களே..அது இதுதான்..இவருக்கு பேச்சு ஸ்தானத்தில் சனி இருப்பதால் ரோஷம் வந்தால் எதிரியை பற்றி மிக மட்டரகமாக விமர்சிப்பார்....(நான்..ஒரு ஆஃப் அடிச்சிட்டு வந்தா நீங்கல்லாம் காலி....சட்டமன்ற தேர்தல் 2011,சங்ககிரி கூட்டத்தில் விஜயகாந்த் பேச்சு).

தற்சமயம் இவருக்கு புதன் திசையில்,கேது புத்தி நடக்கிறது..வரும் 2013 ஆம் வருடம் அக்டோபர் மாதம் வரை இவருக்கு தோல்விகளும்,கட்சியில் பல அதிர்ச்சிகரமான திருப்பங்களும்,கட்சி நிதி இல்லாமல் தடுமாறி...தன் சொத்துக்களை விரயம் செய்யும் சூழலும் விஜயகாந்துக்கு ஏற்படலாம்...2013 முடியும் வரை விஜயகாந்த் இப்போது இருப்பது போல வயே பேசாமல்,இருப்பது அவருக்கு மிக நல்லது...இல்லையேல் அவர் குடும்பத்தார் மீது வழக்குகள் பாய்ந்தாலும் ஆச்சர்யமில்லை...


6 comments:

Anonymous said...

விஜயகாந்த் கும்ப லக்னம்.

ConverZ stupidity said...

எது எப்படியோ... என்கிட்ட இருக்கிற கொஞ்சூண்டு ஜோதிட அறிவுக்கு, இவருக்கு இதுதான் கடைசி பிறவின்னு தெரியுது.

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் பாஸ்,
விஜயகாந் ஜாதகத்தினையும், அவரின் எதிர்கால அரசியல் நடை முறையினையும் நன்றாக அலசியிருக்கிறீங்க.

பொறுத்திருந்து பார்ப்போம். என்ன நடக்கிறது என்று...

'பரிவை' சே.குமார் said...

கேப்டனின் சாதகம் பஞ்சாயத்துத் தேர்தலில் தெரியும்...
கேபடன் சூரியனாகவே இருக்கட்டும்.

Anonymous said...

இதெல்லாம் அவர்ட்ட சொல்லிராதீங்க...நரசிம்ம ராவாயிருவார்...

உணவு உலகம் said...

இன்னைக்கு விஜயகாந்த் ஜாதகம்-சாதகமா? ரைட்டு.