Thursday, 8 September 2011

திருவண்ணாமலை-யோகி ராம்சுரத்குமார்


வியக்க வைத்த விசிறி சாமியார்
திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலய பிரம்ம தீர்த்தக்கரையில் புரவி மண்டபம் எதிரில் ஒரு மணி மண்டபம் அமைந்துள்ளது.தாண்டவ வேணான் என்பவர் 1972ம் ஆண்டில் இதை கட்டினார்.கிளி கோபுரத்திற்கு அருகில் தீப தரிசன மண்டபம் உள்ளது .இது 1202 ல் தோன்றியது.திருக்கார்த்திகை தீபத்தன்று பஞ்சமூர்த்திகள் இங்கிருந்தபடிதான் தீப தரிசனம் காண்பார்கள்.இதை கட்டியவர் மங்கையர்கரசியார்.


 சரித்திரங்கள் மூலம் இவற்றை நாம் அறிவோம்.ஆனால் சாஸ்திரங்கள் கூறும் சகல லட்சணங்கள் பொருந்திய யோகி ராம் சுரத்குமார்  என்கிற மஹாணை எண்ணில்லா மக்கள் கண்ணால் கண்டனர்.இதயத்தில் ஏந்தினர்,பயன் பல பெற்றனர்,பாராட்டி தொழுதனர்.

இந்த மஹானுக்கு உணவு ,உடை,குளியல்,இருப்பிடம் என எதுவும் முக்கியமில்லாது போய்விட்டது.அவரது உள்ளுணர்வு இறைவனின் வேலையாக ,யாருக்கு எங்கு,எப்போது,என்ன உதவி தேவையோ அப்போது அங்கு செல்லுமாறு கட்டளையிட்டது.ஏற்கனவே அவருக்கு இருந்த தேசப்பற்றும்,மக்கள் மீது இருந்த அன்பும்,வலுவடைந்தது .வேதங்கள் மீது இருந்த நம்பிக்கை அதிகமானது

பல நாட்கள் யோகியாருக்கு உணவு கிடைக்காது.சில நாட்களில் கெட்டுப்போன உணவே கிடைக்கும் .கிடைப்பது விருந்து உணவாக இருந்தாலும் ,காய்ந்த ரொட்டியாக இருந்தாலும் மகிழ்வோடு ஏற்றார்.
இனி யோகியார் நிகழ்த்திய அற்புதங்கள் பற்றி பார்ப்போம்.

தூத்துக்குடியை சேர்ந்த அந்த பெண்ணின் பெயர் பாமா.தனது தோழியின் மூலமாக யோகியாரை பற்றி தெரிந்து ,அவரை நேரில் பார்க்காமலேயே மிகுந்த ப்க்தி,நம்பிக்கையுடன் வணங்கி வந்தார்.இவருக்கு 7 பிள்ளைகள் .கணவர் பிடிவாத குணமுடையவர்.தான் சொன்னபடிதான் எதுவும் நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்.

இந்நிலையில் மிகவும் முயன்று மூத்த பெண்ணுக்கு திருமண நிச்சய நிகழ்ச்சி நடந்தது.திருமணத்திற்கு முதல் நாள் குறித்தாகி விட்ட நிலையில் என்னால் எதுவும் செய்ய முடியாது.உன்னால் திருமணத்தை நடத்த முடிந்தால் பார்த்துக்கொள் ‘’என்ரு உறுதியாக சொல்லிவிட்டார் பாமாவின் கணவர்.

சின்ன சின்னதாக கைவேலைகள் செய்து கிடைக்கும் மிக சாதாரண வருமானத்தில் திருமணத்தை நடத்த முடியாமல் ,திருமணத்தை நிறுத்தவும் முடியாமல் மனம் இல்லாமல் கலங்கி தவித்தார்.பலரிடம் கடன் கேட்டு பார்த்தார்.யாரும் அவருக்கு உதவ முன் வரவில்லை.நிச்சயம் செய்த திருமணம் நின்று போனால் தனது மகளின் வாழ்க்கை பாழாகி விடுமே என்று அஞ்சினார்.அப்போதுதான் அவருக்கு யோகி யாரின் நினைவு வந்தது.

அதுவரை தான் நேரில் பார்த்திராத யோகியாருக்கு தனது மன பாரத்தை கொட்டி ஒரு கடிதம் எழுதினார்.
மகளின் திருமண நாள் நெருங்க நெருங்க,பாமாவின் தவிப்பு அதிகமாகியது.அவரது கணவரின் கல் மனம் கடுகளவும் கரையவில்லை.அதே நேரம் ,யோகியாரின் கருணை மழை பாமாவின் மீது பொழிந்தது.
ஆரம்பத்தில் பணம் இல்லை எனறு கைவிரித்தவர்கள் ,திடீரென்று வலிய வந்து பாமாவுக்கு பணம் கொடுத்து உதவினார்கள்.இந்த பணத்தை உடனடியாக திருப்பி தர வேண்டாம்.உன்னால் எப்போது முடியுமோ அப்போது கொடுத்தால் போதும் என்று பெருந்தன்மையாக சொன்னார்கள்.

உதவி தேடிச்சென்ற போது எட்டி உதைக்காத குறையாக உதவ மறுத்தவர்கள் ,திடீரென ஒட்டி உறவாடுவது உதவுவது பாமாவிற்கு வியப்பை தந்தது.
எல்லாம் யோகியாரின் அற்புதமே என்று எண்ணியவர் தேடி வந்த உதவியை ஏற்றுக்கொண்டார்.அவர் எதிர்பார்த்ததையும் விட அவரது மகள் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது.
இந்த சம்பவத்திற்கு பின் பாமாவுக்கு யோகியாரின் மீது பக்தி பல மடங்கு உயர்ந்தது.


அதே நேரம்,அவர் எதிர்பார்க்காத அதிர்ச்சிகளும் காத்திருந்தன.உதவி கிடைத்த போது பக்தி நிலைக்குமா,வேறு தொல்லைகள் வந்தால் குறையுமா,மறையுமா என்பதை யோகியார் பார்த்திட,நினைத்தாரோ என்னவோ...பாமாவிற்கு அதன் பிறகு சில சோதனைகள் தொடர்ந்தன...

ஆம் அவருக்கு மூன்று முறை மாரடைப்பு வந்தது.பெயரே புரியாத சில நோய்களும் வந்து தொல்லை கொடுத்தன.ஆனால் யோகியார் மீது வைத்திருந்த பக்தியில் துளியும் குறைவில்லை.அதற்கு கைமேல் பலனும் கிடைத்தது.பகவானை நம்பிக்கையோடு தொழுதார்.வந்த வியாதிகள் வந்த வழியிலேயே திரும்பி சென்றன.

இன்றைக்கு 74 வயது ஆனாலும் திருவண்ணாமலை வந்து தனது உயிர் காத்த யோகியாரின் உருவமும்,சமாதி தரிசனமும் கண்டு வணங்கி செல்கிறார் பாமா.

 யோகியார் நிகழ்த்திய இன்னொரு அற்புதம்;


அன்றைய தினம் இரவு யோகியாரை நேரில் தரிசிக்க திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலய குருக்கள் தன் மகளுடன்,வந்திருந்தார்.பகவான்,குருக்கள் மகளிடம்,உங்கள் அப்பா எப்போதும் சிவபெருமான் சேவையில் ,பெரிய புண்ணியம் காரியம் செய்து கொண்டிருக்கிறார்.பெரிய பாக்கியம் அம்மா’’என்றார்.
நீங்கள் கூடத்தான் வினாயகர் சன்னதியில் எப்போதும் இருக்கிறீர்கள்.என்னை சொல்கிறீர்களே என்றார்.குருக்கள்.

மீண்டும் யோகியார் அதையே வலியுறுத்த,குருக்களின் மகள் பகவானை பார்த்து,நீங்கதான் அருணாச்சலேஸ்வரர்.என் பையனுக்கு உடல்நலமில்லாமல் இருந்தபோது எவ்வளவோ மருத்துவம் பார்த்தும் குணமாகவில்லை.அப்போது ஒரு நாள் இரவில் அருணாச்சலேஸ்வரர் என் கனவில் வந்து ‘’ராம்ஜி ஸ்வாமியை போய் பார்.’’என்ரார்.நான் உங்களை தேடி வந்தபோது நீங்கள் வீட்டில் இல்லை.டீக்கடையில் இருப்பதாக கேள்விப்பட்டு வந்தேன்.எனது மகனது உடல்நிலைப்பற்றி உங்களிடம் சொன்னேன்.நீங்கள் ஆசிர்வாதம் செய்து குணமாகி விடுவான் என்று சொல்லி அனுப்பினீர்கள்.என் மகனும் பூரண குணமடைந்தான்.’’என்றார்.

அந்த அம்மையார் சொன்னதை காது கொடுத்து கேட்டார் யோகியார்.ஆனால் பதில் எதுவும் கூறவில்லை.ஒரு சின்னப்புன்னகையோடு ஆசி கூறி அவர்களை அனுப்பி வைத்தார்.
ஆம்.எந்தவொரு அற்புதமாக இருந்தாலும் ,அதை தனது பக்தர்களே புரிந்து கொள்வார்கள் என்று அவர் நினைத்தார் போலும்.

இதே யோகியார் தன்னிடம் உதவி கேட்டு வந்த ஒரு பெண்ணிடம் ஒற்றை ரூபாயை கொடுத்து அவளது மகளுக்கு ஊரே வியக்க நடத்திய திருமணம் பற்றியும் ,உப்பு தண்னீரை நன்னீராக்கிய அதிசயம் பற்றியும் விரைவில் எழுதுகிறேன்.
யோகியார் பொன்மொழி;

யாரெல்லாம் இந்த பிச்சைக்காரனை நினைவில் கொண்டு ,தன்னுடன் அவன் இருப்பதாக உணறுகிறார்களோ,அவர்கள் அருணாச்சலேஸ்வரரால் ஆசிர்வதிக்கப்படுகிறார்கள்.

-
யோகி ராம் சுரத்குமார்


6 comments:

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

read first...
comment next....

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

திரு பாலகுமாரன்
அவர்கள் மூலம்
சாமி பற்றி நெறைய விசயம்..
படித்துள்ளன்.....
குழந்தை போன்ற மனம்
உடையவர் .....அவர் ஆசி
நம் எல்லோருக்கும்
வேண்டும் .....உங்கள் பதிவு
மனம் நெகிழ...மகிழ .. வைத்தது ....

Astrologer sathishkumar Erode said...

நன்றி யானை குட்டி

naren said...

நண்பரே,
உங்கள் பதிவுகளை கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து படிக்கும் பழக்கமுள்ளவன்.
உங்கள் பதிவு மற்றும் மின்னஞ்சல் திருடப்பட்டது என்பதை அறிந்து வருத்தம் அடைந்தேன்.

சோர்வடையாமல் தொடர்ந்து எழுதுங்கள். உங்களை தொடர்பவர்கள், வாசிப்பவர்கள் உங்கள் பின்னால் தான் இருப்பார்கள்.

நன்றி.

Astrologer sathishkumar Erode said...

நன்றி நரேன்

Unknown said...

விசிறி சாமியார் பற்றி எழுத்தாளர் பாலகுமாரனின் புத்தகம் ஒன்றில் படித்திருக்கிறேன்!