Saturday, 17 September 2011

பிரசன்ன ஜோதிடம் (வெற்றிலை ஆரூடம்)

பிரசன்ன ஜோதிடம் என்பது ஒருவர் வரும் நேரம்,கேள்வி கேட்கும் நெரம் பொறுத்து கணிதம் போட்டு பலன் சொல்வதாகும்.சில ஜோதிடர்கள் ஃபோன் மூலம் கேட்கும் நேரத்தை கணித்தும் சொல்ல்லி வருகின்றனர்.இப்போது நான் சொல்வது வெற்றிலை மூலம் பார்க்கப்படும் ஆரூடம். சோழி பிரசன்னம்,அகத்தியர் ஆரூடம் போன்ற வரிசையில் இந்த வெற்றிலை ஜோதிடமும் வருகிறது.இதை எப்படி கணிக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

சாதகம் பார்க்க வந்தவரை 24 வெற்றிலைக்கு மேல் வாங்கி வர சொல்லவும்.வாங்கி வந்த வெற்றிலையை 2 ஆல் பெருக்க வேண்டும்.வெற்றிலையை மீண்டும் 5 ஆல் பெருக்க வேண்டும்.
5 ஆல் பெருக்கியதை ஒன்று கூட்டி 7 ஆல் வகுக்க வேண்டும்.சைபர் வந்தால் 7 என கணக்கிடவும்.


1 வந்தால் சூரியன்
2 வந்தால் சந்திரன் 
3 வந்தால் செவ்வாய்
4 வந்தால் புதன்
5 வந்தால் குரு
6 வந்தால் சுக்கிரன்
7 வந்தால் சனி

அன்றைய கோட்சார கிரக நிலையை கட்டம் போட்டு மேற்க்கண்ட,கிரகம் வரும் கட்டத்தை லக்கினமாக எழுதி பலன் சொல்லவும்.

சில அடிப்படை பலன்கள்;

செவ்வாய் உள்ள இடத்தில் லக்கினம் வந்தால் மருத்துவ செலவு
சனி வந்தால் கோர்ட்,கேஸ் மருத்துவ செலவு,எண்ணிய காரியம் முடக்கம்,தாமதம்
கடகம்,விருச்சிகம்,மீனம் வந்தால் வந்த காரியம் முழு வெற்றி கிடைக்கும்
தனுசு,மிதுனம்,மீனம் வந்தால் வந்தவர் இரட்டை எண்ணத்துடன் வந்திருப்பார்.
மிதுன லக்கினம் வந்தால் ஒப்பந்தம்,ஆதாயம் கிடைக்குமா என கேள்வி அவர் மனதில் இருக்கும்.

ஆரூடம் பார்க்க வருபவர் பகல் 12 மணிக்குள் வந்தால் வெற்றிலையின் மேல்புறத்தில் இருந்து எண்ணவும்.

3 comments:

ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...

சார், இதெல்லாம் எமது முன்னோர்கள் வகுத்தது தானே! எப்புடி அந்தக்காலத்துல இம்புட்டு அறிவோட இருந்திருப்பாங்கன்னு நீங்க ஒருபோதும் ஆச்சரியப்பட்டதில்லையா?

இராஜராஜேஸ்வரி said...

பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

Jai said...

Instead of multiplying by 2 and by 5 and then adding; we can directly add the digits of tobacco which gives the same result.

For example, considering 37 tobacco leaves.

In Your case:
37x2 = 74
74x5 = 370 = (3+7+0) = 10

My case:
37 = (3+7) = 10

I don't know why you are making it a three digit unnecessarily.