Monday, 10 October 2011

2012 ஆங்கில புத்தாண்டு பலன்கள்;கடகம் Cancer Horoscope

2012 ஆங்கில புத்தாண்டு பலன்கள்;கடகம்

புனர்பூசம் 4ஆம் பாதம்,பூசம்,ஆயில்யம்;

கடக ராசி ஒரு நீர் ராசி.லக்கினங்களில் புனிதமானது,உயர்ந்தது கடகம்.பெரிய மகான்களின் ராசி,லக்கினம் கடகம்.பெரிய தலைவர்களின் ராசி,லக்கினம் கடகம்.இதன் அதிபதி சந்திரன்.இவர் மனதிற்கும்,வசியத்திற்கும் அதிபதி அல்லவா.அதனால் இந்த ராசிக்காரர்கள் அறிவாளிகளாகவும்,பிறரை மயக்கும் பேச்சு திறமை உடையவர்களாகவும்,அழகாகவும் இருப்பார்கள்,சபையில் இவர்கள் இருந்தால் அதன் மதிப்பே தனி.கம்பீரமும்,இனிமையும் இவர்களிடம் அழகாக வெளிப்படும்.உயர்ந்த லட்சையங்களை கொண்டவர்கள்.கற்பனாவாதிகள்..சிந்தனசக்தி கொண்டவர்கள்,பிறருக்கு இவர்கள் சொல்லும் புத்திமதி மிக சரியாக இருக்கும்.இவர்கள் ஆலோசனையால் வெற்றி பெற்றவர்கள் பலர்.அதனலோ என்னவோ என்னால பலன் அடைஞ்சவங்க ஏராளம்.ஆனா என்னால உயர முடியலையே என இந்த ராசிக்காரர்கள் சிலர் புலம்புவர்.வான மண்டலத்தில் நண்டினை போல தோற்றமளிக்கும் கடகராசி நட்சத்திரக்கூட்டம்


நிறைய சம்பாதிப்பார்கள்.நிறைய செலவும் செய்வர்.மனுசன் சம்பாதிக்கிறது எதுக்கு அனுபவிக்கத்தானே என சொல்வர்.அது கரெக்ட் தானே.இவர்களிடம் உதவி பெற்றுவிட்டு சிலர் ஏமாற்றினாலும் ,மீண்டும் அவர்களுக்கே உதவி செய்வர்.போனா போறான் போ எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான்.அவன் குடும்பம் கஷ்டப்படுது அதான் உதவினேன் என்பர்.

குடும்பத்தினர் மீது இவர்கள் காட்டும் பாசம்,குழந்தைகள் மீது இவர்கள் காட்டும் அன்பு அளவிட முடியாதது.ஆன்மீகத்திலும் தெளிவான பார்வை கொண்டவர்கள்.எதையும் ஆராயும் பகுத்தறிவு சிந்தனாவாதிகள் என்றால் மிகையில்லை.நிறைய பயணம் செய்வர்.டென்சன் அதிகம் இருக்கும்.சேமிப்பு குறைவு.ஆனால் பணம் வந்து கொண்டே இருக்கும்.மது அருந்த ஆரம்பித்தால் மீள்வது கடினம்.கவர்ச்சியான உடல் அமைப்பு உடையவர்கள்.அடிக்கடி காதல் வயப்படுவார்கள்.சந்திரன் ராசிக்காரராச்சே.

நண்டு கொழுத்தா வலையில் தங்காது என்பது பழமொழி.அதுபோல இந்த ராசிக்காரர்கள் பணம் நிறைய இருந்தா அள்ளி இறைப்பர்.சொந்த பந்தம்,நண்பர்களுக்கு நிறைய செலவழிப்பர்.பயணம் கிளம்பிவிடுவர்.ஒரே ஜாலிதான்.பணம் தீரும் வரை.இவர்கள் குடும்பத்தாரை நண்பர்களை அதிகம் நேசிப்பர்.

வரும் 2011 டிசம்பர் 26 வரை உங்கள் ராசிக்கு யோகமான கிரகம் குரு வக்ரம் ஆகியிருப்பதால் பணக்கஷ்டம் அதிகமாக இருக்கும்.தொழிலில் மந்தம்,குடும்பத்தில் வாக்குவாதம் அதிகம் காணப்படும்.அதன் பின் இந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.பொறுமை,நிதானம் அவசியம்.

நவம்பர் 1 ஆம் தேதி சனி பெயர்ச்சி உங்களுக்கு பாதிப்பில்லை.4ஆம் இட சனி என்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.,சொத்து சம்பந்தமான வில்லங்கங்கள் வரலாம்.கவனம் தேவை.பார்ட்னர்களை நம்ப வேண்டாம்.யாருக்கும் ஜாமீன் போட வேண்டாம்.2012 ஆம் வருடம் உங்களுக்கு சிறப்பாகவே அமையும்.

பரிகாரம்;பெளர்ணமி தோறும் அம்மன் ஆலயங்களில் வழிபாடு.அபிசேகம் மிக சிறப்பு.


4 comments:

tamilvaasi said...

கடக ராசியினரே... அண்ணே சொல்றத கேட்டுக்கங்க...

Unknown said...

நல்ல தகவல் பாஸ்.ஆனால் நான் துலாம்

'பரிவை' சே.குமார் said...

நல்ல தகவல்.

Nagarajan said...

அண்ணே நீங்க சொல்றது சரிதான் ...ஒரே மனக்கஷ்டம் தான்....