Thursday, 20 October 2011

ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2012 ;விருச்சிகம் future

ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2012 ;விருச்சிகம்

விசாகம் 4 ஆம் பாதம் முதல்,அனுசம்,கேட்டை முடிய

விருச்சிக ராசி.இது பெண்ராசி.இதன் அதிபதியாக வருகிற செவ்வாய் ஆண்கிரகம்.விடியற்காலையிலும் அந்தி பொழுதிலும் அதிக வலிமை உடைய ராசி.மனித உடலில் பிறப்பு உறுப்புகளை குறிக்கும் ராசி.திசைகளில் வடக்கை குறிக்கும்.நிறம் பொன்னிறம்.இதன் உருவகம் தேள்.இந்த ராசியில் நீசம் பெறும் கிரகம்.சந்திரன்.அதனாலோ என்னவோ இந்த ராசிக்காரர்கள் தாயின் அன்பை பெற துடிப்பர்.ஆனால் அது கிடைக்காத சூழல்.தாயை பிரிந்து வாழும் வாழ்க்கை.அல்லது தாயே எதிரி ஆகிவிடுவார்.இருப்பினும் தாயை பிரிந்து வாழ்வதே அதிகம் நடக்கிறது.


விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் அன்பாக பேசிக்கொண்டே இருப்பார்கள்.திடீரென முகத்தில் அடித்தார் போல பேசிவிடுவர்.பாராட்டியும் பேசுவர்.பழித்தும் பேசுவர்.இரண்டு குணம்..இவர்களுக்கு.இந்த குணம் விருச்சிக பெண் ராசிகார்களுக்கு அதிகம்.கொஞ்ச நேரத்திலியே அப்படியொரு சம்பவம் நடக்காதது போல இருப்பர்..புதிர் போல காணப்படுவர்.ஆனால் மற்றவர்களின் செயல்பாடுகளை வைத்து முன்கூட்டியே தீர்மானிக்கும் திறன் பெற்றவர்கள்.வருகிற நபரின் தோரணையை வைத்தே எதற்கு வந்திருக்கிறார் என்பதை அறிந்துகொண்டு அதற்கேற்ப முன்னெச்சரிக்கையாக பேச துவங்குவார்.அப்படி ஒரு கில்லாடி.


சாதரண நிலையில் பிறந்தவர்களும் கூட படிப்படியாக முன்னேறி நல்ல நிலையை எட்டி விடுவார்கள்.எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் விடாப்பிடியாக போராடி வெற்றி இலக்கை தொட்டு விடுவார்கள்.

விட்டு கொடுப்பதும்,பகிர்ந்து கொள்வதும்தான் வாழ்க்கை என்பதை இந்த ராசிக்காரர்கள் புரிந்துகொண்டால் வீழ்ச்சியே இல்லை.இந்த ராசிக்கார பெண்கள் கணவன் மீது எரிந்து விழுந்தாலும் கணவனே கண்கண்ட தெய்வம் என உயிராக இருப்பர்.ஆனால் சண்டை ஓயாது.புருசனுக்கு கொஞ்சம் முடியலைன்னா மனசு ஒடிஞ்சு போயிடுவாங்க..எல்லா கோயிலிலும் வேண்டுதல்,இரவும் பகலும் கணவனை கண்ணும் கருத்துமாக கவனித்தல் என இவங்க அன்பு அப்பதான் கணவனுக்கு தெரியும்.இதே ராசியில் பிறந்த பல பெண்கள் வெளியில் போக பயம்..அடுத்தவருடன் பேச பயம்...என பயம் மயமாக இருப்பவர்களும் உண்டு.

இதுவெல்லாம் எதற்கு சொல்றேன்னா 2012 முழுக்க ஏழரை சனி காலம்.இப்பவே அது சம்பந்தமா கவலைப்பட ஆரம்பிச்சிருப்பீங்க..கிரக நிலைகள் மாறிக்கொண்டேதான் இருக்கும்.கடும் உழைப்பும்,நமது வழக்கமான முயற்சியும் எப்போதும் தொடர்ந்தால் போதும் இதை சமாளித்து விடலாம்..

குரு உங்களுக்கு சாதகமாக இருக்கிறார்.வரும் டிசம்பர் 2011 ல் 26 ஆம் தெதியுடன் குரு வக்ரம் முடிந்ததும் பெரும் பாதிப்பு இல்லை.

ஏழரை சனி முதல் சுறறாக இருப்பின் (குழந்தைகளுக்கு வருவது) குழந்தைக்கு மருத்துவ செலவும்,தந்தைக்கு விரய செலவும் உண்டாகும்..கடன் வாங்கியாவது சுப செலவு பண்ணுங்க..வீடு கட்றது,மனை வாங்கறது மாதிரி..இல்லைன்னா கெட்ட செலவா வரும்..அடடாஅ..இந்த காசு இருந்த இப்படி பண்ணியிருக்கலாம்..வெட்டியா போச்சேன்னு புலம்பகூடாதில்லையா.

பரிகாரம்;சந்திரன் பவரை கூட்டுற மாதிரி பெளர்ணமியில் இரவில் பால்,தயிர்,இளநீர்,என பல பொருள் கொண்டு அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வாருங்கள்...நன்மைகள் கூடும்.No comments: