Tuesday, 18 October 2011

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2012;துலாம் ராசி lipra astrology

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2012;துலாம் ராசி lipra

சித்திரை 3 ஆம் பாதம் முதல்,சுவாதி,விசாகம் 3 ஆம் பாதம் வரை.

அன்பு,காதல்,பாசம்,நேசம் என மென்மையான உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துவதிலும்,தூண்டிவிடுவதிலும் இவர்களை மிஞ்ச ஆள் இல்லை.அழகான தோற்றம்,அன்பான பேச்சு என இளமையில் மட்டுமல்ல..முதுமையிலும் மன்மத ராசாக்கள் தான் இவர்கள்.பிறந்த வீட்டாருடன் பிணக்கு உண்டாகும்..தந்தை ஆகாத ராசி உங்களுடையது என்பதால் ஒரு பிரிவினையோ..அல்லது இழப்போ..கருத்து வேறுபாடோ தந்தையுடன் அடிக்கடி உண்டாவது உங்க ராசியின் இயல்பு.

அழகான மனைவி வேண்டும் என தேடிபிடித்து கல்யாணம் செஞ்சுக்கணும் என சின்ன வயதிலிருந்தே கனவு காண்பீர்கள்..அதன்படியே பெரும்பாலும் அமைத்துகொள்வீர்கள்.காதல் திருமணத்திற்கு அதிக வாய்ப்புண்டு.சுக்ரன் ராசியாச்சே.

மன்மத கலையிலும்,ஆபாசமாக பேசுவதையும் சிலர் விரும்புவர்.அதுவும் ஜாதகம் பாதிப்பாக அமைந்தவர்கள் மட்டும்.பெரும்பாலான இந்த ராசிக்காரகள் ஜோசியம் நம்புவதில்லை.உடலை அழகாக பேனி காப்பதில் கவனம் செலுத்துவீர்கள்.பிறரை மனசு விட்டு பாராட்டுவீர்கள்.அது உங்க நல்ல மனசுக்கு ஒரு நல்ல எடுத்துகாட்டு.நீங்க மனசு விட்டு பாராட்டுற அன்பிலேயே பலரும் உங்கள் நட்பை பெற துடிப்பர்.

சித்திரை நட்சத்திரக்காரர்கள் வெளியில் அன்பாக இருந்தாலும் வீட்டுக்குள் வந்தால் சிடு சிடுதான்..கோபம் வந்தா யாரா இருந்தாலும் பளார் விட்ருவாங்க.

சுவாதி நட்சத்திரகாரர்கள் குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பதில் கெட்டிக்காரர்கள்...நிறைய திறமைகள் கைவசம் இருக்கும்.அனுபவிப்பதில் இவர்களை மிஞ்ச ஆள் இல்லை.உடம்பை பார்த்துக்குங்க பாஸ்.மத்தவங்களை கணக்கு பண்றதுலியும்,எடை போடறதில்யும் இவங்க டாப்.பிறரை எடை போடுவதில் சமர்த்தர்கள் என்பதால்தான் துலாம் ராசிக்கு தராசு சின்னமாக அமைந்தது.

விசாகம்..குரு நட்சத்திரம் ஆச்சே.நுணுக்கமானவர்கள்.நிறைய சம்பாதிப்பவர்கள்.நண்பர்கள் அதிகம் உண்டு.பழக்க வழக்கமெல்லாம் வி.ஐ.பி யோடுதான்...

2012 ஆங்கில புத்தாண்டு எப்படியிருக்கும்..?

2011 நவம்பர் வரை சனி பெயர்ச்சி ஆனால் ஜென்ம சனி தொடங்குகிறது,ஜென்ம சனி மனதை குழப்பதில் வல்லவர்.அதனால் உங்கள் இயல்பு நிலை மாறும்...நிதானம் தவறும்.எச்சரிக்கையா இல்லாவிடில் விபத்துகள அதிகம் சந்திக்க நேரும்,சனியும்,சந்திரனும் உங்கள் ராசியில் சேர்வதால் கண்ணால் பார்ப்பதும் பொய்யாகும்.தீர விசாரிக்க அவகாசம் இல்லாமல் தவறான முடிவு எடுப்பீர்கள்.கவனம்.அதிக விரய செலவுகள் காத்திருக்கின்றன...குருபெயர்ச்சிஉங்கள் ராசிக்கு சிறப்பாக அமைந்து அதிக வருவாயை கொடுத்துக்கொண்டு,குடும்பத்தில் நிம்மதியை கொடுத்துக்கொண்டிருந்தாலும் சனி சாதகமாக இல்லாததால் புது முதலீடுகள் வேண்டாம்..வீடு,மனை,சொத்துக்கள் கடன் வாங்கி வாங்கினால் நன்மை உண்டு.க்டனாளியா இருந்தா நல்லது.சுப செல்வா செஞ்சுட்டா நல்லது.இல்லைன்னா கெட்ட செல்வா வரும்.அதுக்கு சொல்றேன்...2012 நீங்கள் கவனமாக செயல்பட வேண்டிய வருடம்.

பரிகாரம்;நின்ற கோலத்தில் இருக்கும் பெருமாளை வணங்குவது உத்தமம்.குளித்தலை,முசிறி வழியில் உள்ள குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி மிக விசேஷமானவர்.அங்கு சென்று திங்கள் கிழமையில் வழிபட்டு வருவது உத்தமம்.

4 comments:

முத்தரசு said...

இதை தான் எதிர் நோக்கி இருந்தேன். கணிப்புகள் எல்லாம் சூப்பர்

naren said...

சின்ன சந்தேகம்,
ஒருத்தருக்கு ஜாதகப்படி வேறு ராசியிருக்கும், ஆனால் ஆங்கில முறைப்படி birth date படி libra sign இருக்கும்.
அதனால் இந்த கணிப்பு ஜாதக கணிப்பு birth sign படி எடுக்க வேண்டுமா அல்லது ஜாதக ராசிப்படி எடுக்க வேண்டுமா?

sowri said...

Nice analysis...நின்ற விஷ்ணுவுக்கும், அமர்த்த விஷ்ணுகும் மற்றும் சயன கோல விஷ்ணுவிக்கும் எதாவது ஜோதிட விசேஷங்கள் உள்ளனவா ? தொடரட்டும் உங்களது சேவை.

இராஜராஜேஸ்வரி said...

பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.