Monday, 10 October 2011

தயாநிதி,கலாநிதியும் -சனி பகவானின் லீலைகளும்

தயாநிதி மாறன் எந்த நேரமும் கைது செய்யப்படுவார் என்ற சூழல் இந்தியா முழுவதும் இன்று காலை முழுவதும் பரபரப்பை கிளப்பி விட்டிருக்கிறது.ஸ்பெக்ட்ரம் ஊழல் பூதம் இப்போது பொருளாதாரத்தில் மிக வேகமாக வளர்ந்த,தொழிலில் அசுர வளர்ச்சி காட்டிய இந்த சகோதரர்களையும் விழுங்க போகிறது.கலாநிதி மாறன் இப்படி களி திங்கவா இவ்வளவு வேகமா முன்னேறினீங்க..? நீங்களும் ஒரு அம்பானியாகி என் தந்தை முரசொலி மாறனின் கனவு என 500 ரூபாய்க்கு டிடிஹெச் தருவீங்க..101 ரூபாய்க்கு தமிழனை ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் டில்லி கூட்டிட்டு போய் தொழில் புரட்சி பண்ணி உலகையே திரும்பி பார்க்க வைப்பீங்கன்னு நினைச்சேன்.இப்படி சில்லறைதனமா நடந்துகிட்டு மாட்டீகிட்டீங்களே சார்?

சன் டிவி வளர்ச்சி சாதாரண வளர்ச்சி அல்ல..இந்தியாவின் இயக்க சக்திகளில் முக்கியமானவர்கள் டாடா,அம்பானி,லட்சுமி மிட்டல் என்றால் அவர்களுக்கு அடுத்த இடம் நோக்கி மீடியா லைனில் முன்னேறியவர் கலாநிதி.அதற்கு இந்திய அரசு இயந்திரத்தை முற்றாக சுழல விட்டவர் தயாநிதி.5 வருடங்கள் அரசு இயந்திரத்தை தன் அண்ணன் கம்பெனிக்கு அடிமையாக்கியதற்கு தண்டனைதான் இப்போது அண்ணன்,தம்பி அனுபவிக்க போவது.....

ஒரு மனிதன் ராக்கெட் வேகத்தில் முன்னேறி அசுர வேகத்தில் குப்புற விழுவது ரொம்ப கொடுமை.உயரத்தில் இருந்து விழுந்தால் அடி பலமாக இருக்கும் என்பார்கள்.இன்று சன் டிவி பங்குகள் மிக வேகமாக சரிந்து கொண்டிருக்கின்றன...

சனி துலாத்தில் உச்ச வீட்டை நெருங்க,இன்னும் 20 தினங்களே இருக்கும் சூழலில் சனியின் ஆக்ரோச பார்வை நீதி மன்னன் சவுக்கடி சுழல ஆரம்பித்துவிட்டது.

இந்தியாவில் சனி பெயர்ச்சிக்கு பின் அல்லது நெருங்க, நெருங்க இன்னும் பல முகமூடிகள் கிழிந்து தொங்கும்.

முக்கிய தலைவர்களின் நிஜ முகம் சுப்ரீம் கோர்ட்டில் கிடுக்கு பிடியால் அல்லது மீடியாவின் சுற்றி வளைப்பால் அசிங்கப்பட நேரும்.

சனி கடகத்தில் நீர் ராசியில் வந்த போது சுனாமி வந்தது.கன்னியில் வந்தபோது தொழில் அதிபர்கள் சிறை சென்றனர்.ஆசிரியர்கள்,ஜோதிடர்கள் மதிப்பிழந்தனர்.அடிக்கடியில் செய்தியில் அடிபட்டனர்.கணக்காய்வாளர்கள் தவறுகள் தெரியவந்தன..சிம்மத்தில் இருந்தபோது பெரிய விபத்துகள் நடந்தன..

துலாத்துக்கு சனி பலமாகும்போது என்ன நடக்கும் என ஆய்வு செய்தே வருகிறேன்...

இவ்வளவு பெரிய ஆட்கள் சிறை செல்வது சாதாரண நிகழ்வு இல்லை.இதற்கு முன் இவ்வளவு கடும் நடவடிக்கை முன் எப்போதும் இல்லை.அதே போல சுப்ரீம் கோர்ட் இவ்வளவு வலிமையாக செயல்பட்டதும் இல்லை என்றே நினைக்கிறேன்.

இந்தியர்களின் கறுப்பு பணம் இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்குள் மீட்கப்பட்டு இந்தியா சுபிட்சம் ஆகும் என்பது என் கணிப்பு.

6 comments:

Unknown said...

உப்பை தின்னவன் தண்ணி குடிச்சு தானே ஆகணும்

//இந்தியர்களின் கறுப்பு பணம் இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்குள் மீட்கப்பட்டு இந்தியா சுபிட்சம் ஆகும் என்பது என் கணிப்பு.

சரியா தான் கணிச்சு இருக்கீங்களா? கேக்கவே ரொம்ப இனிப்பா இருக்கே ?

செங்கோவி said...

//இந்தியர்களின் கறுப்பு பணம் இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்குள் மீட்கப்பட்டு இந்தியா சுபிட்சம் ஆகும் என்பது என் கணிப்பு.//

கேட்கவே சந்தோசமா இருக்கு பாஸ்.

Astrologer sathishkumar Erode said...

வருகைக்கு நன்றி ரமேஷ் மற்றும் செங்கோவி...

MANO நாஞ்சில் மனோ said...

கேடி பிரதர்ஸ் உள்ளே போகும் நேரம் கவுண்டவுன் ஆகிட்டு இருக்குன்னு சொல்றீங்க பார்ப்போம், சந்தோசமா இருக்குது...!!!

naren said...

மாறன் சகோதரர்களுக்கு இந்த நிலைமைக்கு சனிபகவான் தான் காரணம் என்றால், உண்மையில் நீங்கள் முந்தைய பதிவில் சொன்னதைப் போல் சனிபகவான் உண்மையில் நல்லவர்தான்.

நல்ல பதிவு

• » мσнαη « • said...

//இந்தியர்களின் கறுப்பு பணம் இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்குள் மீட்கப்பட்டு இந்தியா சுபிட்சம் ஆகும் என்பது என் கணிப்பு.///

நல்ல விஷயம்தான்!!!

ஆனா அதுக்குள்ள எல்லோரும் பணத்தை முழுசா எடுத்துடுவான்களே!!!

இப்பவே SWIZZ ACCOUNT ல் இருந்து ஏகப்பட்ட பணத்தை திருப்பி எடுத்துட்டாங்களாம் !!!