Thursday, 20 October 2011

ஜாதகத்தில் ராகு அமர்ந்த ராசி பலன்களும்,செய்யும் சேட்டைகளும்

ஜோதிடம்;ராகு அமர்ந்த ராசி பலன்கள்;

லக்கினத்தில் இருந்து ஒன்றில் ராகு;மனுசன் பிடிவாதம்னா பிடிவாதம் அப்படியொரு பிடிவாதம்.இவர்கள் கோணத்தில் இருந்து பேச துவங்கினால் எவர் சொன்னாலும் ஏறாது.ஆபத்து என்றாலும் ஆழ்ந்து யோசிப்பது இல்லை.தடாபுடாதான்.மனைவி,உறவு,சொந்தம் எல்லாம் இவர்களை கண்டாலே ஒதுங்குவர்.அந்தளவு பிறரை எகத்தாளமாக பேசுவதும்,நான் ஒருத்தந்தான் அறிவாளி என்பது போலவும் பேசுவர்.


இரண்டில் ராகு;விஷ வாக்கு.சுட்டு பொசுக்கும் வார்த்தை.சொன்னது நடக்கும்.அவன் வாயில விழுந்தா அவ்ளோதான் என்பார்களே அதேதான்.கல்லுமனசுகாரர்.ஏழாமதிபதி வலுத்தா ஒரு மனைவி.இல்லைன்னா ஸ்டெப்னி ஒண்ணு இருக்கும்.பாம்பு போல கொத்துவதால்தான்..நாகதோசம் என இந்த ஜாதகத்தை சொல்கிறோம்.இன்னொரு விசயம் என்னென்னா இவங்க முயற்சிக்கும் காரியங்களை எல்லாம் பாம்பு கொத்தி கொத்தி கெடுப்பது போல கெட்டுவிடுமாம்.இதனால் போராடிக்கொண்டே இருக்கிறார்கள்.ஜோசியம் பார்த்தா பார்க்க வ்ந்தவன் இடி விழுந்தா மாதிரி அதிர்ச்சியுடன் திரும்பி போவான்.காசு பணம் தங்காது.ஊரெல்லாம் கடன்.நிறைய சம்பாதிக்கவும் செய்வாங்க.

மூன்றில் ராகு;காசு,பணம் நிறைய சம்பாதிக்கலாம்.நல்ல பெயர்,புகழ் கிடைக்க வாய்ப்புண்டு.ராகு திசையும் நடந்தா வி.ஐ.பி யும் ஆவாங்க..என்னடா சைக்கிள்ல போனவன் திடீர்னு கார்ல போறானேன்னு ஊரு வாயை பொளக்கும்.உரம் போட்டு வளர்ப்பர் தைரியத்தை.மனுசன் என்ன வேணா பண்ணுவார் ஜாக்கிரதை.சினிமா துறையில் முயற்சி பண்ணலாம்.

நான்கில் ராகு;கொடுத்து கெடுக்கும் ராகு.தடுத்து நிறுத்தும் சுகத்தை.பாட்டன்,பூட்டன் சொத்துக்கு வேட்டு.இப்படி ஒரு அமைப்புடன் குழந்தை பிறந்தால் காலம் காலமாக இருந்த பூர்வபுண்ணியம் மண்ணோடு மண்ணாகும்.கல்வியும் போராட்டம்தான்.தடித்த வார்த்தைகள் பேசுவர்.அம்மாவுக்கு கேடு.இப்படி இருக்கும் ஜாதகர் பலர் சமூக விரோத காரியங்களிலும் ஈடுபடுவர்.ஆனா மாட்டிக்க மாட்டார்.பெண்களா இருந்தா...காமம்,செக்ஸ் விசயத்துல அடங்காத ஆர்வம் உடையவர்கள்.இதனால் உடல் சீக்கிரம் நலிவுறும்.அது பொண்ணா இருந்தாலும் அப்படித்தான்.

ஐந்தில் ராகு;எடுத்தவுடன் எதுவும் நடக்காது.ஒண்ணுக்கு பத்து முறை எதையும் முயற்சி பண்ணனும்.கட் அண்ட் ரைட்டா பேசுவாக.முதல் குழந்தை பெண்ணா இருந்தா நல்லது.இரண்டாவது ஆண் வாரிசு உண்டு.ஒரு அபார்சனும் ஏற்பட்டிருக்கும்.செவ்வாய்,ராகு இணைந்து 5 ல் இருந்தால் மந்திரவாதி.பேய்,பிசாசு எல்லாம் சொன்னபடி கேட்குமாம்.வராகி வசியம் பண்ணி வைத்திருப்பர்.குட்டி சாத்தான் சினேகமும் உண்டாம்.5 ஆம் இடத்து அதிபதியும் கெட்டுவிட்டால் குழந்தை இல்லை.ஜோதிடம் படிப்பர்.

ஆறில் ராகு;ஆறாம் இட ராகுவால் ஆதாயம் நிறைய காரிய சித்திக்கு வீரியமான இடம்.வெச்சக்குறி தப்பாது.எதிரிகளை வீழ்த்த எளிய வழி கிடைக்கும்.வருமான உயர்வுக்கு வழி தென்படும்.கேந்திரத்தில் குரு அமைய கொடுப்பினை வேண்டும்.அமைந்தால் பல லட்சங்களுக்கு அதிபதி.அடிக்கடி உடம்பு பாதிக்கும்.அதனால் பலான விசயங்களும்,பலான பலான விசயங்களும் தவிர்க்கப்பட வேண்டும்.


----------------------------(தொடரும்)----------------------------------------


4 comments:

'பரிவை' சே.குமார் said...

நீங்க சொல்றது புரியுது. ஆனா நமக்கு எங்க இருக்காருன்னு தெரியலையே...
சொன்னீங்கன்னா நல்லாயிருக்கும்.

உணவு உலகம் said...

ராகு அமருமிடம் -நல்லா சொல்லியிருக்கீங்க.

செங்கோவி said...

சூப்பர் பாஸ்...தொடருங்கள்.

arul said...

please post the effects of ragu in next 6 places