Friday, 18 November 2011

ஜாதகத்தில் சந்திரன் - பொது பலன்கள் -ஜோதிடம்; பாகம் 2

ஜாதகத்தில் சந்திரன் - பொது பலன்கள் -ஜோதிடம்; பாகம் 2

இதன் முதல் பகுதியை படிக்காதவர்கள் இங்கு செல்லவும்.

ஜாதகத்தில் லக்கினத்தில் இருந்து 7 வது கட்டத்தில் சந்திரன் இருந்தால்;

அழகு மனைவி பாக்யமாக அமையும்.(சந்திரன் லக்கினத்துக்கு 6க்குடையவ்,எட்டுக்குடையவனாக இருப்பின் மற்றவர்கள் பழிக்கும் அழகில்லா மனைவி)வசதியான இடத்தில் சம்பந்தம் உண்டாகும்.மாமியார் ஒத்துழைப்புடன் பல வசதி வாய்ப்புகள் கிடைக்கும்.மனைவிக்கு மரியாதை கொடுப்பவர்.உரல் போறது தெரியாது.ஊசிக்குத்தான் ஊரைக் கூட்டுவார்.உயர்ந்தவர்களோடு உறவை ஏற்படுத்திக்கொள்வார்.ஆனால் போக எண்ணம் அதாங்க காம எண்ணம் 80 வயது வரை போகாது.மன்மத ராசா தான்.பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாடிய கதைதான்.

எட்டில் சந்திரன்;

சந்திரன் மறைஞ்சிட்டா என்னாகும்..? உடல்காரகன் ஆச்சே.மெலிந்த தேகம்..என்ன சாப்பிட்டாலும் தேறாது...பீர் குடிச்சும் பார்த்துட்டேன்.புரட்டீன் பவுடர் சாப்பிட்டு பார்த்துட்டேன்...ம்ஹீம்..உடம்பு தேறவே இல்லை என சிலர் அலுத்துக்கொள்வர்.சதா சர்வ காலமும் ஏதாவது வியாதியால் துன்பபடுவர்.முக்கியமாக ஆஸ்துமா,சளி..காய்ச்சல்...

உப்பு பெறாத விசயத்திலும் தப்பு கண்டுபிடித்து சண்டை போடுவார்.பொறாமை குணம் ஜாஸ்தி..நம்மால முடியலையேன்னுதான்.அம்மா காரகன் கெட்டா அம்மாவுக்கும் கெடுதலே.சின்ன வயசுலியே அவங்களை இழந்துடலாம்.அல்லது அவர்களை பிரிந்தே வாழலாம்.

ஒன்பதில் சந்திரன்;

பக்திமான்.கோயில் குளத்தை சுத்தம் செய்தல்,கோயில் குளத்துக்கு அள்ளி கொடுத்தல்,கோயில் குளத்தின் மீது அக்கறை இவர்களுக்கு அதிகம்.எதிரியும் கஷ்டமா இருக்குன்னு கண் கலங்கினா இவரும் கண் கலங்கிடுவார்.பாக்கெட்ல எவ்ளோ இருந்தாலும் அள்ளி கொடுத்துட்டு தான் மறு வேலை.மாதா,பிதா,குரு,தெய்வம் ஒன்றாக பாவிக்க கூடியர்,சித்தர்களும் இவர்களுக்கு காட்சியளிப்பர்.திருப்பதி பெருமாள் வரத்தால் பிறந்தவர்கள்.வருடம் இருமுறையாவது அங்கு சென்று வந்தால்தான் நிம்மதி.அம்பாள் என்றால் உருகுவர்.எல்லா ஆன்மீக பயணமும் மேற்க்கொள்வர்.தந்தைக்கு பாதிப்பு.தாய் வழி,தந்தை வழி சொந்தங்கள் உதவாது.சுக போக வாழ்க்கை உண்டு.

பத்தில் சந்திரன்;

கைராசி டாக்டர் பலரை பார்த்திருக்கிறேன்.மருத்துவம்,சித்தா,முறையாக பயின்றால் 3ல் குரு இருப்பின் பிரபல மருத்துவர்.இவர்கள் கடும் உழைப்பாளிகள்.முழு கவனம் செலுத்தி தனக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை செய்வர்.வசதி வாய்ப்பும் செல்வ வளமும் ஏராளமாக அமையும்.ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உண்டு.பெண்கள் மூலம் அதிக ஆதாயம் உண்டு.டாக்டராக இருந்தாலும் பெண் கஷ்டமர் உண்டு.லேடீஸ் டெய்லரா இருந்தாலும் பெண் வருமானம் உண்டு.பெண் வழி சொத்து உண்டு.கையெழுத்து போடுறது வீட்டுக்கார அம்மணிதான்.அட..மனைவிக்கு தான் அந்த யோகம்னு சொல்ரேன்.

பதினொன்றில் சந்திரன்;

சர லக்னத்தை சேர்ந்தவங்களுக்கு பாதக ஸ்தானம் ஆனாலும் சங்கடம் இல்லை.வியாபாரமே சிறப்பு.பெரும்பாலானவர்கள் முதலாளி அந்தஸ்தை பெற்றிருப்பார்கள்.தீர்க்க தரிசன செயல்பாடு.கடல் கடந்து செல்லவும்,அயலூருக்கு போய் ஆதாயம் தேடவும் வாய்ப்புண்டு.கால்நடை விருத்தி உண்டு.

பனிரெண்டில் சந்திரன்;

அன்பு,கருணை,இரக்கம்,தயாள குணம் என்பதையெல்லாம் மறந்து கடின மனம் கொண்டவர்களாக மாறுவர்.இந்த சந்திரனை பாவ கிரகங்கள் பார்த்தால் அங்க குறைபாடும் உண்டாகும்.பணக்க ஷ்டம் வந்து கொண்டே இருக்கும்.பணம் தங்குவதில்லை.மந்திரம்,தந்திரம்,எந்திரம் என மனம் அலைபாயும்.செய்வினை செய்ய போகிறேன்,எனக்கு செய்வினை வெச்சிட்டாங்க என்பார்.எப்போதும் டென்சன் பார்ட்டி.

4 comments:

rajamelaiyur said...

நிறைய தகவல்கள் .. நன்றி

rajamelaiyur said...

இன்று என் வலையில்


விஜய் Vs அஜித் : யாருக்கு ரசிகர்கள் அதிகம் ஒரு மெகா சர்வே

perumal shivan said...

எங்க போயிருந்திங்க ஒரு வாரமா பதிவ காணோம் ?
பார்த்து பார்த்து ஏமார்ந்து போனேன் .

சரி 7 ஆம் வீட்டில் சந்திரன் எனது
அந்த உரல் - ஊசி எந்த விசயத்தில பாஸ் ?
அப்புறம் பிள்ளை இல்லா வீட்டில் கிழவனுக்கு கொண்டாட்டம் ? ஏன் பிள்ளை இருக்காதா ???

பதில் சொல்லவும் சதீஷ் அவர்களே !

Astrologer sathishkumar Erode said...

சரி 7 ஆம் வீட்டில் சந்திரன் எனது
அந்த உரல் - ஊசி எந்த விசயத்தில பாஸ் ?//
எல்லா விசயத்துலியும் தான்.பெருசா நஷ்டம் ஆவது தெரியாது.சின்ன சின்ன விசயத்துல ரொம்ப ஜாக்கிரதையா இருப்பாங்க...

பில்ளை இல்லா வீட்டில்னா பசங்களை எல்லாம் செட்டில் பண்ணி அனுப்பிச்சிட்டு இவரு போடுற ஆட்டம்னு கூட எடுத்துக்கலாம்..