Wednesday, 2 November 2011

ஜாதக அலங்காரம் சொல்லும் அஷ்டலட்சுமி யோகம்

ஜாதக அலங்காரம் சொல்லும் அஷ்டலட்சுமி யோகம்;

ஜாதக அலங்காரம் தமிழின் முக்கியமான ஜோதிட நூல்.இந்த புத்தகம் படித்து இதன் பாடல்களை மனனம் செய்யாத ஜோதிடர்கள் தொலிலே செய்ய முடியாது.அந்தளவு ஜோதிட அடிப்படை பாடம் ஜாதக அலங்காரம்.கீரனூர் நடராசன் அய்யா அவர்களுக்கு நன்றி.

''விளையும் புதனும் சூரியனும் விரும்பி
எட்டில் நான்கு ஒன்றில்
வளையக்குடின் மன்னவனாம்
மதியும் கதிரும் உடன்கூடி
இளையா தன்மகன்மத்தில் இரண்டில்
இருக்கக் கீர்த்தி உளன்’’

ராகு 6ல் இருந்து அதற்கு கேந்திரத்தில் குரு நின்றால் அதற்கு அஷ்டலட்சுமி யோகம் என்று பெயர்,திரண்ட செல்வமும் செழிப்பும் சாதகரை வந்தடையும்

மிகவும் வறுமைகோட்டில் வாடிய ஒரு சாதகர் திடீரென வசதியுடையவராக மாறிவிட்டாரெனில் அத்ற்கு வழிவகுத்து நிற்பவை 2 யோகங்கள்தாம்.
1.நீசபங்க ராஜயோகம்
2.விபரீத ராஜயோகம்

நீசம் பெற்ற கிரகம் அமர்ந்த ராசி வீட்டுக்குறிய கிரகம் அல்லது அந்த வீட்டுக்குறிய உசாதிபதியான கிரகம் சந்திரனுக்கு கேந்திரத்தில் இருந்தால் நீசபலன் மாறி நல்ல பலன் விளையும்.நீசன் நின்ற ராசிநாதன் ஆட்சி உச்சம் பெற்றாலும் நீசம் பங்கமாகும்.ஒரு கிரகம் ராசியில் நீசமாகி அம்சத்தில் ஆட்சி உச்சம் பெற்றாலோ அல்லது ராசி சக்கரத்தில் பரிவர்த்தனை யோகம் பெற்றாலோ நீசபங்க ராஜயோகமாக மாறும்.பல கோள்கள் நீசத்திலிருந்தாலும் ஒரு கோள் நீசம் கெட்டாலும் இந்த யோகம் செல்லும் என்பதை விளக்கும் பாடல்;
’’
’’கண்டருளு நீசபங்க ராஜயோகம்
காணும்வகை நீசத்தானத்து வேந்தும்
திண்டிறல் சேர்ந்திடும் மனைஉச்சவேந்தும்
திங்கள்கேந்திரம் தன்னிற்சேர்ந்தாராகில்
மண்டியிடு நீசபலனொழிந்துகீர்த்தி
மகாராசனென வாழ்ந்திடுவான்
கொண்டபலர் நீசத்திலிருந்தாலுமொரு கோள்
குறிநீசங் கெடில் எல்லா கோளு நன்றே’

6,8,12 வீடுகளின் அதிபதிகள் ஒன்றுகூடி மேற்படி மரைவு ஸ்தானங்களில் இருப்பது விபரீத ராஜயோகமாகும்.
லக்கினாதிபதி இருந்த வீட்டுக்குடையவன் உச்சமாக கேந்திரத்தில் இருந்தாலோ அல்லது திரிகோணத்தில் இருந்தாலோ ஒருவனுக்கு ராஜயோகத்தை வழங்குவான்.

ரஜினி,கமல்,ஜெயலலிதா,விஜயகாந்த்,கருணாநிதி,விஜய்,சூர்யா போன்றோர் ஜாதகங்களில் இந்த அமைப்பு நிச்சயம் இருக்கும்...திடீரென மந்திரி ஆவோர்...லாட்டரியில் பணம் விழுந்து கோடீஸ்வரர் ஆனோர் .பங்கு வர்த்தகம் மூலம் பெரும் லாபம் அடைந்தவர்கள் ஜாதகங்களிலும் இந்த அமைப்பு காணப்படும்.

கடுமையான உழைப்பின் மூலம் போல பெரும் கோடீஸ்வரர்களான லட்சுமி மிட்டல் முதல் அம்பானி ஜாதகம் வரை இந்த அமைப்பு ஜாதகத்தில் உண்டு.

4 comments:

இராஜராஜேஸ்வரி said...

அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் அண்ணாச்சி,
நலமா?
தீபாவளி கொண்டாட்டம் எல்லாம் எப்படி?
அஷ்டலக்சுமி ஜோகம் பற்றி அறிந்து கொள்ள உதவும் அருமையான பதிவு.

FUNNY INDIAN PICS BLOGSPOT said...

NICE

I HAVE ALL THOSE YOGAM YOU MENTIONED...

6TH LORD MARS IN 12TH

8TH LORD IN 6TH

Anonymous said...

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html