Tuesday, 29 November 2011

ஜெயலலிதா நம்பும் நியூமராலஜி -ஜோதிடம்

ஜெயலலிதா நம்பும் நியூமராலஜி -ஜோதிடம்


தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஜோதிடம்,ஆன்மீகம்,எண் கணிதம் மீது மிகுந்த நம்பிக்கை உண்டு.அரசியல் ரீதியாக கட்சி ரீதியாக ஒவ்வொரு செயல்பாட்டையும்,  ஜோதிட கணித அடிப்படையில் கணக்கிட்டுத் தான் அமைத்துக் கொள்வார்.இது அனைவரும் அறிந்த உண்மைதான்.அவர் நியூமராலஜி நம்பிக்கையும் எப்போதும் கொண்டிருக்கிறார் என்பதையும் தினமலர் அவ்வப்போது சுட்டிக் காட்டும்.

எண்கணிதம் பற்றி விஜய் டிவியில் நீயா நானா வில் கிண்டல் அடித்து ஒரு நிகழ்ச்சி நடந்தது.அதில் பலர் மன பலவீனர்களாக நியூமராலஜி நம்பிக்கையாளர்களை கிண்டல் செய்தனர்.அப்படி பார்த்தால் தமிழ்க முதல்வர் ஜெயலலிதாவின் நியூமராலஜி நம்பிக்கையை என்னவென்று சொல்வது..?அவர் எந்த நம்பிக்கையில் அதை செய்கிறார்..? கருணாநிதி குடும்பத்தார் திருப்பதி செல்வதும்,சாமியார்களை சந்திப்பதும்,பரிகாரம் செய்வதும்,கனிமொழி விடுதலை ஆக வசந்தி ஸ்டான்லி எனும் தி.மு.க எம்.பி மொட்டை அடித்து கொண்டதும் எதற்காக..? விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சியில் நியூமராலஜி நிகழ்ச்சி மூலம் எண்கணித ஜோதிடம் இன்னும் பிரபலமடைகிறது.இதை பற்றி அறியாதவர்களும் அறிந்து கொண்டனர்.என்னை போன்ற நியூமரலஜிஸ்ட் களுக்கு இதில் சந்தோசமே.அதில் நியூமராலஜிக்கு ஆதரவாக வாதிட்டவர்களுக்கு எனது நன்றி.

நியூமராலஜி,ஜோதிடம்,கடவுள் எல்லாம் உண்மையே.நம்பிக்கை உள்ளோருக்கு நன்மை நடந்து கொண்டே இருக்கிறது.கடவுள் மறுப்பாளர்களில் பெரியாரை பெண் விடுதலை பற்றிய விழிப்புணர்வூட்டிய தலைவர் என்று வேண்டுமானால் சொல்லலாம், ஆனால் அவர் கடவுள் மறுப்பு கொள்கையால் தமிழ்கத்திலும் இந்தியாவிலும் கடவுள் வழிபாட்டை நிறுத்திவிட்டார்களா..? மாறாக பல ஆயிரம் மடங்கு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.பெரியாருக்கு பின் கடவுள் மறுப்பாளர்கள் யாரும் பிரபல முடியவில்லை என்பது வேறு விசயம்.

 15.11.2011 சனி பெயர்ச்சிக்கு பின் பெங்களூர் சென்று முழுமையாக வழக்கிற்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.காரணம் அவரது ராசியான சிம்மத்திற்கு ஏழரை சனி முழுவதுமாக விலகி இருந்தது.சனி பெயர்ச்சிக்கு பின் தான் பஸ் கட்டணத்தை பால் விலை உயர்வை அறிவித்தார்.காரணம் ஏழரை சனி முடிந்தால் தனக்கு .எதிர்ப்புகள் கடுமையாக இருக்காது என்பதற்காக.

ஜெயலலிதா நினைத்தால் கருணாநிதி போல கட்டணத்தை உயர்த்தாமல் காலம் தள்ள முடியும்.ஆனால் பல முறை டீசல் விலை உயர்வுக்கு பின் எல்லா விலை வாசியும் பொருளாதாரத்துக்கு தகுந்தாற்போல உயர்ந்திருக்கும்போது பஸ் கட்டணம் உயரவில்லை எனில் அது நல்ல நிர்வாகத்துக்கு அழகல்ல.வரும் 1 ஆம் தேதி முதல் பீர் விலை பிராந்தி விலை எல்லாம் 100 ரூபாயாம்.இதுக்கு எதிர்ப்பே இருக்காதே.தமிழக அரசின் நிதி நிலை உயர்ந்தால்தான் இந்த அரசு மக்கள் வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்த முடியும்.

ஜெயலலிதா ராசி எண் 7;

கடந்த 91-96 ஆம் ஆண்டுகளில் அவர் முதல்வராக பொறுப்பேற்ற பின் 9 ஆம் எண் அவரது ராசி எண்ணாக இருந்தது.தேர்தலில் ஜெயலலிதா வெளியிட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 160 பேர் இடம்பெற்றனர்.ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்ற தேதி 16.முதல்வரான பின்,7 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.அமைச்சர்வையில் இடம் பெற்றவ்ர்கள் 34 பேர்.இவ்வளவு ஏன் நேற்று அ.தி.மு.க வில் பா.ம.க,தி.மு.க,தே.மு.தி.க வினர் பலர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க வில் இணைந்தனர்.மொத்தம் எத்தனை பேர் தெரியுமா.12,130 கூட்டு எண் 7.எம்.ஜி.ஆர் வாழ்வில் பல திருப்பங்களை தந்தது இந்த 7 ஆம் எண் தான்.அதனால் ஜெயலலிதா வும் அதை பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார் என நினைக்கிறேன்.ஜெயலலிதா பிறந்த நட்சத்திரம் மகம்.அதன் அதிபதி கேது.7 ஆம் எண்ணின் அதிபதி கேது.அதனாலும் இவர் 7 ஆம் எண்ணை பயன்படுத்தலாம்...ராசியான நிறம் பச்சை பயன்படுத்தி வந்தவர் இப்போது மெரூன் கலரும் பயன்படுத்துகிறார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில், அவர்களுக்கென சென்னையில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. இப்பஸ்களின் துவக்க விழா இன்று நடந்தது. விழாவில், முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு பஸ்களை துவக்கி வைத்தார். இப்பஸ்களில் மாற்றுத்திறனாளிகளுக்கென 7 சக்கர நாற்காலிகள் வைக்கப்பட்டிருக்கும். மேலும், ஹைட்ராலிக் முறையில் அவர்கள் பஸ்சினுள் செல்ல சிறப்பு வழியும் அமைக்கப்பட்டுள்ளது.


ஊனமுற்றோருக்கு சிறப்பு பஸ் அறிவிப்பை பார்த்தால் இது சனி பகவானுக்கான பரிகாரம் தான்.என்பது புரியும்.மாற்று திறனாளிகளுக்கு நல்லது செய்யும் முதல்வருக்கு நன்றி.


எம்.ஜி.ஆர் வாழ்வில் திருப்பம் தந்த 7ஆம் எண் பற்றி படிக்க;


4 comments:

முத்தரசு said...

பெங்களுரு கோர்ட்டில் கேட்கப்பட்ட கேள்விகள் 1339 = 7 சர்தான்

Yoga.S. said...

என்னமோ சொல்லுறீங்க,போங்க சார்.எனக்குத் தெரிஞ்சு ஏழாம் எண்ணில பொறந்தவங்க........................வேணாம்,விட்டுடலாம்!

பாலா said...

இதெல்லாம் ஒரு மன சந்தோஷத்துக்காக பாத்துக்க வேண்டியதுதான். மற்றபடி எனக்கு ஈடுபாடு இல்லை.

naren said...

அம்மா ராசி ஏழா!!??? மக்களின் ராசி ஏழரையாக இல்லாமல் இருந்தால் நல்லது.