Monday, 28 November 2011

தமிழ் பொண்ணுங்க விரும்பும் ஜோதிடம்

தமிழ் பொண்ணுங்க விரும்பும் ஜோதிடம்

இன்று பூராடம் நட்சத்திரம்.சுக்கிர நட்சத்திரத்துல் வேறு என்ன எழுதுவது.பெண்கள் பத்தி, காதல் பத்தி அதுல ஜோதிடத்தை கலந்து எழுதறேன்.பருவ வயசுல இருக்குற தமிழ் பொண்ணுங்க மட்டுமில்ல உலகத்துல இருக்குற எந்த டீன் ஏஜ் பொண்ணும் தனக்கு புடிச்ச அழகான வாலிபன் தனக்கு கிடைப்பானா என ஏங்கும்போது, அவனுக்கு பல விதத்துலியும் தூது விட்டு பார்ப்பா.அப்புறம் சாமி கிட்ட வேண்டுதல் வைப்பா.அதுக்கப்புறம் தன் தோழி கிட்ட சொல்லி புலம்புவா.அப்புறம் தன் ராசியையும்,காதலன் ராசியையும் சொல்லி ஜொசியம் பார்க்குறது.ராசி தெரியலைன்னா இரண்டு பெயரையும் சொல்லி பேர் பொருத்தம் இருக்கா னு கேட்குறது.

அப்புறம் கைரேகை,குறி சொல்லும் கிழவி என தன் காதல் நோய்க்கு மருந்து தேடி கொண்டிருப்பாள்.தமிழ் பொண்ணுங்க ரொம்ப விவரம்.தன் தோழியோடு போய் தன் ஜாதகத்தை காட்டி எனக்கு காதல் திருமணம் வாய்ப்பு இருக்கா..ன்னு கேட்பாங்க..பல பெண்கள் தன் தோழி முகவரி அல்லது ஹாஸ்டல் முகவரியில் இருந்து ஜோசியருக்கு கடிதம் எழுதுவாங்க.தபால் மூலமா ஜாதக பலன் கேட்பாங்க.எனக்கு இது போல தபால்,ஈமெயில் நிறைய வந்துகிட்டிருக்கு.


காதல் பருவ வயசுல வருவதுதான்.இது எதிர்பாலினரின் அழகான தோற்றமோ அல்லது கவர்ச்சியான பேச்சிலோ மனதை பறிகொடுத்து பின்பு கண்ணும் கண்ணும் காதல் விளையாட்டு விளையாண்டபின்,தன் உடலில் இருக்கும் பருவ வயசு ஆசை சுரப்பிகள் சுரக்க ஆரம்பித்ததும் அடந்த போதைக்கு அடிமையாகி விடுவர்.காதல் என்பது வளர்ச்சியடையாத காமத்தின் பெயர்.காதல் முற்றினா காமம்.

அவளை பார்க்காம இருக்க முடியலை..பார்த்தா பேசாம இருக்க முடியல...பேசினா தொடாம இருக்க முடியலை.தொட்டு பேசினா சில்மிசம் பண்ணாம இருக்க முடியலை..இப்படியே மேலே மேலே போகும்.ஆசை அடங்காது.கண்ல ஆரம்பிச்சு எங்கெங்கோ முடியும்.அதுதான் இயற்கையின் படைப்பு.இயற்கை அது நோக்கி போகத்தான் ஒவ்வொரு உயிரையும் படைச்சது.ஒவ்வொரு உயிரும் இப்படித்தான் ஆரம்பிக்குது.ஆனா மனிதர்களின் காதலும் விலங்குகளின் காதலும் ஒன்றல்ல.நமது காதல் புனிதமானது.

எப்படி..?

இறக்கும் வரை அது தொடரும்.ஆசை பட்டவங்களை நினைச்சுகிட்டே எத்தனை பேர் கல்யாணம் பண்ணிக்காம இருக்காங்க.அப்ப ஆசைபட்டவங்களை மறந்துட்டு கல்யாணம் பண்ணவங்க விலங்குகளா..? அப்படி இல்லை.ஆனா அவங்க துணையை நேசிக்குறாங்க.துணை தான் விரும்புனவங்க அளவு இல்லைன்னாமறுபடி அந்த பழைய காதல் பாடா படுத்திடும்.இப்படி மனசை ஒண்ணை படைச்சி தான் விரும்புனவங்களை நினைச்சு நினைச்சு ஏங்குறோமே அதுதான் மனிதனுக்குள்ள சிறப்பு.


ஜோசியத்துல காதல் கிரகங்களில் முக்கியமானவை சந்திரனும்,சுக்கிரனும்தான்.இவங்க தான் அழகுக்கும் அறிவுக்கும் கவர்ச்சிக்கும் அதிபதி.சந்திரன் கெட்டா காதல் தோல்வி.சுக்கிரன் கெட்டா பெண் சுகமே இல்லாத வாழ்க்கை.கன்னமும் ஒடுக்கு விழுந்து கவர்ச்சி இல்லாம இருப்பாங்க.சுக்கிரன் கெட்டு போனவங்களை எங்கு போனாலும் நாய் துரத்தும்.சுக்கிரன் நல்லா ஜாதகத்துல இருந்தா அவங்களை எப்பவும் நாய் நிறைய நாய் சுத்தும்.நடிகைகள் வீட்ல நிறைய நாய் வளர்ப்பாங்க..நடிகைன்னாலே சுக்கிரன் வலு பெற்றவங்கதானே.அதான் கவர்ச்சி கிரகம்.சினிமா,நாடகம்,கலைத்துறை கிரகம்.மனைவி ந்னு சொன்னதும் நான் எழுதுன..உங்களுக்கு எத்தனை மனைவி என்ற பதிவு நினைவுக்கு வருது.அதையும் படிங்க.

செவ்வாய் கலக காரகன்.சுக்கிரனுன் சேர்ந்தா காம சேட்டைகள் நிறைய செய்வான்.பஸ் ல காமலீலை செய்யறது ....ஈவ் டீசிங் எல்லாம் வரும்.

சனியும் சுக்கிரனும் செக்ஸ் வக்ரம்.

ராகுவும் சுக்கிரனும் பல பெண்கள் உடலுறவு,பக்கத்து வீட்டை நோட்டம் விடுறது.ஆம்பளைக இல்லைன்னா வீடு புகுந்துருவான்.

சுக்கிரனும்,சந்திரனும் சேர்ந்தா அடிக்கடி ’காதல்’ வரும்.எப்போதும் இன்பம் தான்.சுற்றி கோபியர் கொஞ்சும் ரமணா தான்.!!

ரிசபம்,கடகம்,துலாம் ராசிக்காரர்கள் தன் மனைவி /கணவன் மீது அதிக பிரியம் பாசம் உள்ளவர்கள்.சனியின் ராசிகளான மகரம்,கும்பம் கொஞ்சம் சுகம் குறைவு.

புதன் அறிவு கிரகம்.இவர் நல்லாருந்தா கலகலப்பா அறிவார்ந்த முறையில பேசி எதிராளியை கவுத்துருவாங்க...ஆண் பெண் வசியத்துக்கு மெயின் இவரும் ..இல்லையா.நம்ம விஜய் டிவியில சிவ கார்த்திகேயன் மாதிரி.உடனுக்குடன் சாதூர்யமா பேசறது,போரடிக்காத பேச்சு,ஜோக்கடிப்பது பெண்களுக்கு ரொம்ப பிடிக்கும்.உடனே மனசை பறி கொடுத்துருவாங்க.

கற்றோரை கற்றோரே காமுறுவர் என வள்ளுவர் சொன்ன மாதிரி உங்க அறிவுக்கும் டேஸ்டுக்கும் தகுந்த மாதிரிதான் உங்களுக்கு துணை கிடைக்கும்.நீங்க உங்க துணை அளவுக்கு இல்லைன்னா வாழ்க்கை கசந்துரும்.

மனைவியை காதலிக்க தெரியணும்.கட்டிலில் அசத்த தெரியணும்.ரொம்ப எதிர்பார்ப்பான மனைவியா இருந்து நீங்க..பெருசா எதையும் எடுத்துக்காத ஆளா இருந்தாலும் ஃபெயில் தான்.நீங்க மன்மத ராசா வா இருந்து உங்க மனைவி ஏய்யா சும்மா எரும கணக்கா உரசுற ...என எகிரும் டைப்பா இருந்தாலும் நீங்க ஃபெயில் தான்.

இதை கண்டுபிடிக்க காதல் செய்து புரிஞ்சிக்கிட்டு கல்யாணம் பண்ணிக்கனும்.இல்லைன்னா  ஜோசியர் கிட்ட ஜாதகம் காண்பிச்சு திருமண பொருத்தம் பார்த்து கல்யாணம் பண்ணனும்.நட்சத்திர பொருத்தம் மட்டும் பார்த்துட்டு 9 பொருத்தம் சூப்பர் பொருத்தம்.என கல்யாணம் செய்தா அப்புறம் ஒரேடியா கூவிவிடும்.

ஒரு ஜாதகத்துல சுக்கிரன்,சந்திரன் என இரு கிரகங்களையும் பார்த்தாலெ பல விசயங்களை அதாவது அந்தரங்க விசயங்கள்ல இவங்க எப்படினு சொல்லிடலாம்...!

அதுதான் பொருத்தம் பார்க்கும் முறை.ஆசை அதிகம் இருப்பவருக்கும் ஆசை ரொம்ப லிமிட்டா இருக்குறவங்களையும் கல்யாணம் பண்ணி வெச்சா விவகாரம் கோர்ட் வாசல்ல தான் முடியும்..!!

4 comments:

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,
நலமாக இருக்கிறீங்களா?
பூராட நட்சத்திரப் பெண்கள் பற்றி காதல் விடயங்களைக் கலந்து ஓர் ஜோதிடப் பகிர்வு தந்திருக்கிறீங்க.
அருமை பாஸ்.

naren said...

காதலர்களுக்கான முக்கிய ஜோதிட பதிவு. ஆனா கொஞ்சம் பயமாத்தான் இருக்கு.

Yoga.S. said...

வணக்கம்,அருமையான பதிவு!பெண்களுக்குப் பிடிக்குதோ இல்லையோ, நிரூபனுக்குப் பிடித்திருக்கிறதே?

வீராசாமி said...

சதீஸ் சார்!

சுக்கிரனை பற்றி இன்னும் எழுதிக்கொண்டே இருங்க சார். படிக்கும் பொழுதே என்னைப்போன்ற இளசுங்களை சுண்டி இழுக்கிறது. குறிப்பாக, காதல், காமம் பற்றி யாரும் சொல்லாத அறிய ஜோதிட விஷயங்களை நீங்கள்தான் வெளிப்படுத்துகிறீர்கள் என்று எனக்கு தோன்றுகிறது. தாங்களுக்கு மென்மேலும் ஜோதிட அறிவு மற்றும் அனுபவம் பெருக (குறிப்பாக இல்லற ஜோதிடத்தில்) கடவுளை வேண்டிக்கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு ஜோதிட ஞானம் மென்மேலும் பெருகினால்தானே ப்ளாக்கில் இன்னும் நிறைய எழுதுவீர்கள். அதற்காகத்தான் இந்த வேண்டுதல்.