Tuesday, 20 December 2011

சனிப் பெயர்ச்சி பலன்கள் 2011-2014 சிம்மம்

சனிப் பெயர்ச்சி பலன்கள் 2011-2014 சிம்மம்
(மகம்,பூரம்,உத்திரம் 1 ஆம் பாதம் வரை)


சனிப்பெயர்ச்சி இன்று 21.12.2011 காலை திருநள்ளாறு சனிபகவான் ஆலயத்திலும்,அனைத்து சிவாலயங்களிலும், சிறப்புற கொண்டாடப்பட்டது.சனிபகவான் தரிசனம் செய்ய,லட்சக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாறில் குளத்தில் நீராடினர்.இன்னும் ஒரு வாரம் வரை அக்குளத்திலும் கருவறையிலும் சனி கிரகத்தின் கதிர் அலைகள் நிரம்ப காணப்படும் .ஒரு வாரம் வரை வழிபடலாம்..நம் முன்னோர்கள் சனியின் தாக்கத்திலிருந்து நாம் தப்பிக்க .மிக நுணுக்கமுடன் அமைக்கப்பட்ட கோயில்தான் திருநள்ளாரு.ஒருவர் வாழ்வில் ஒருமுறையேனும் சென்று வரவேண்டும்.சனிபகவான் நீதி தவறாதவர்.சனி பகவான் அருளால் தாங்களும் தங்கள் குடும்பமும் பூரண ஆயுள்,பூரண உடல்நலம்,மனநலம் பெற நானும் பிரார்த்திக்கின்றேன்..

சனி கன்னி வீட்டில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார்..இதன் மூலம் சிம்ம ராசியை சேர்ந்தவர்களுக்கு என்ன பலன்கள் நடக்கும் என்பதை பார்ப்போம்;

இதுவரை உங்கள் ராசிக்கு ஏழரை சனியாக கடந்த ஏழரை வருடங்களாக ஆட்டுவித்த சனி பகவான் இப்போது முற்றிலும் விலகிவிட்டார்.இதுவரை தொழில் தடை,விபத்து,குடும்பத்தினருக்கு மருத்துவ செலவு,கடன் தொல்லை,இடமாற்றம் என அனுபவித்து மன உளைச்சலில் இருந்து வந்தீர்கள்..குடும்பத்தினருடன் வாகுவாதம்,நிம்மதியின்மை என இருந்துவந்த உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி நிம்மதியை தரும்....

பொதுவாக சிம்மம் ராசிக்கு சனி அதிக பாதிப்புகளை தரக்கூடியவர்.ஆனால் சனி விலகும் போது அதிக நன்மைகளையும் அந்தந்த ஜாதகத்தின் யோக திசாபுத்தி அடிப்படையில் கொடுத்துவிடுகிறார்.ஜெயலலிதாவுக்கு ஜாதகத்தில் பல யோகங்கள் இருக்கின்றன..திசையும் வலிமையாக இருப்பதால் தமிழ்க முதல்வர் ஆனார்.உங்களுக்கு திசா புத்தி பலவீனமாக இருந்தால்..பாதிப்பு முழுமையாக விலகாது.அதே சமயம் பாதிப்புகள்,தடைகள்,தோல்விகள் போன வருடம் போல் இருக்காது...

தொழில் இனி நல்ல வளர்ச்சியை அடையும்.பணம் பல வழிகளிலும் வந்து சேரும்.இதுவரை பல டாக்டர்களையும் பார்த்தும் குணமாகாத நோயும் இனி குணமாகும்..அலைச்சல்கள் குறையும்.தொட்ட காரியங்கள் இனி துலங்கும்.உறவினர்களால் ஏற்பட்ட கசப்பனுபவங்கள் மாறும்.அவர்களே உங்களை நாடி வருவர்.மனைவி,கணவன் உறவு சீராகும்..உங்கள் எதிரிகள் அகலுவர்.இதுவரை உங்கள் கண்ணை மறைத்து வந்த ,உங்கள் முன்னேற்றத்துக்குஉங்கள் பலவீனங்களை நீங்கள் அறீவீர்கள்.களைவீர்கள்.

சனிபார்வை 5,9,12 ஆம் இடங்களில் விழுவதால் பிள்ளைகளாலும்,பெற்றோர்களாலும் ஆதாயம் கூடி வரும்..குடும்பத்திற்கு தேவையான பொருட்களோ,மனை,வீடு கட்டும்,வாங்கும் யோகமோ கூடிவரும்..திருமண முயற்சிகள் கைகூடும்.

சனி வக்ரம்;27.3.2012 முதல் 11.9.2012 வரை சனி வக்ரம் பெற்று மீண்டும் கன்னிக்கு பின்னோக்கி வருகிறார் சனி.இக்காலத்தில் மிக எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.

யாருக்கும் வாக்கு கொடுத்தால் அதை நிறைவேற்றுவது கடினம்.தொழிலில் கவனம் தேவை.பேச்சால் பல பிரச்சினைகள் உருவாகும் காலம்.கவனம்..பண நஷ்டம் உண்டாகும் காலம் இது.எச்சரிக்கை.இந்த 6 மாதமும் கவனமுடன் செயல்படுங்கள்.

சனி உங்கள் ராசியை விட்டு அகன்று விட்டாலும் இனி வரும் காலத்தில் கவனமாக இருக்க வேண்டிய காலங்கள்;அதாவது மாறிய சனி உங்கள் ராசியை பார்த்து மீண்டும் முறைக்கும் காலங்கள்;

15.2.2012 முதல் 2.8.2012 வரை
26.3.2013 முதல் 15.8.2013 வரை
10.4.2014 முதல் 28.8.2014 வரை..

இக்காலம் உங்கள் ராசிப்படி சிறப்பான காலம் அல்ல.எனவே கவனம் தேவை.

சனியின் கிரக சஞ்சாரம்; (பொதுவானது) நந்தன வருடம் ஆரம்பம் முதல் வைகாசி 5 வரை துலாத்திலும்,பின்னர் ஆடி 17 வரை வக்ர சஞ்சாரமாக கன்னியிலும் பின்னர் வருடம் முடிய துலாம் வீட்டிலும் சஞ்சரிக்கிறார்...இக்காலகட்டத்தில் கலைகள் அபிவிருத்தியாகும்.தொழில் வியாபாரங்கள் மேன்மை அடையும்.அரசு வழி ஆதரவுகள் அதிகம் மக்களுக்கு கிடைக்கும்.

பரிகாரம்;உங்க ராசிக்கு முருகன் வழிபாடும்,ஆஞ்சநேயர் வழிபாடும் மிக உன்னத பலன்களை தரும்.ஏழரை சனி முடிஞ்சிட்டதால சனி பகவானை கண்டுக்க கூடாதுன்னு இல்ல.போய் ஒரு நன்றி சொல்லிட்டு வரலாம்..திருநள்ளாறு செம கூட்டமா இருக்கும்.பெயர்ச்சியாகும் அன்னிக்கே போகணும்னு இல்ல.இன்னொரு நாள் கூட போகலாம்..திருக்கொள்ளிக்காடு திருவாரூர் பக்கத்துல இருக்கு.அங்க போயிட்டு வருவது ரொம்ப பெஸ்ட்.இது பொங்கு சனி ஆலயம்.அதாவது சனி இரண்டாவது சுற்று நடப்பவர்களுக்கு வழிபாடு செய்ய அருமையான ஆலயம்.பொங்கு சனி உங்க திறமைகளை வெளிக்கொணரும்.இதை பத்தி எழுதறேன்.

ஜெயலலிதா சிம்மம் ராசிக்கு அவருக்கு கடந்த 5 வருசமா ஆட்சியை இழந்து சனியால் பல சோதனைகளை அனுபவித்தார்.உடல்நலக்குறைவும் அடிக்கடி உண்டானது.வழக்குகளை சந்தித்தார்.இருப்பினும் சனி முடியும்போது அவருக்கு பெரும் மக்கள் செல்வாக்கை கொடுத்தது.அவருடைய கட்சி இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வாக்கு சதவீதத்தில் வெற்றி பெற்றது.இருப்பினும் சனி இன்னும் முடியலை என்பதுக்கு ஏற்ப..சனியின் முக்கிய வேலையான கோர்ட் படியேற செய்வதையும் செய்து விட்டது.காவல்நிலையமோ,கோர்ட்டோ ஏதேனும் ஒரு சூழ்நிலையில் சிம்ம ராசிக்காரர்கள் பலர் அனுபவித்து இருக்கிறார்கள்.அதுபோல ஜெயலலிதாவும் பெங்களூர் கோர்ட் அதுவும் சிறை வளாகம்...பார்த்தீங்களா.சனி தன் பணியை செவ்வனே முடிக்காம போக மாட்டார்.தன்னை சுர்றி இருந்த துரோகிகளை இனம் கண்டு இப்போதுதான் ஜெயலலிதா வெளியேற்றியிருக்கிறார்.ஏன் இத்தனை நாளா தெரியவில்லையா என்று கேட்டால்,சனி போகும்போதுதான் எதிரிகளை அழிக்க ஆயுதம் கொடுப்பார்.எதிரி நம்மிடம் வசமாக சிக்குவதும் அப்போதுதான்.

ரொம்ப டார்ச்சர் பண்ணிட்டோம் பாவம்னு பரிதாபப்பட்டு நன்மைகளையும் செய்துவிடுகிறார்.நன்மையே செய்ய வேணாம்.என்னை விட்டா போதும்னு சொல்றீங்களா.அதுவும் சரிதான்.

2 comments:

முன்பனிக்காலம் said...

முடியல ஏழரை வருஷமா...இனிமே மச்சி ஓபன் தி பாட்டில் தான்னு சொல்றீங்க..பார்ப்பம்..

சி.பி.செந்தில்குமார் said...

சனி பெயர்ச்சிலயாவது நல்லது நடந்தா சரி