Friday, 30 December 2011

2012 ஆங்கில புத்தாண்டு ராசி பலன் ;மீனம்

2012 ஆங்கில புத்தாண்டு ராசி பலன் ;மீனம்


மீனம் பெண் ராசி.உபயராசி.இதன் அதிபதியான குரு சுபகிரக வரிசையிலும் ஆண் கிரக வரிசையிலும் இடம் பெறுகிறார்.மனித உடலில் பாதத்தை குறிக்கும் ராசி.இங்கு சுக்கிரன் உச்சமும்,புதன் நீசமும் பெறுகிறார்கள்.இது ஒரு குட்டை ராசி.திசைகளில் வடக்கை குறிக்கிறது.இது ஒரு நீர் ராசி.இந்த ராசிக்காரர்கள் பேசுவதை விட செய்து முடிப்பதில் வல்லவர்கள்.சொல்ல மாட்டேம் செய்வோம் என்ற கொள்கை உடையவர்கள்.முன்னோர்களின் நம்பிக்கை,ஆச்சாரங்களில் பற்றுள்ளவர்கள்.அதை கடைபிடிப்பவர்கள்.மரியாதை கொடுப்பார்கள்.மரியாதை எதிர்பார்ப்பவர்கள்.தன் மான சிங்கம்.குழந்தைகள் மீது அன்பு அதிகம்.நுணுக்கமான பார்வை உடையவர்கள்.இவர்கள் அனுமானம் பெரும்பாலும் சரியாகவே இருக்கும்.பணம் சம்பாதிப்பதில் கெட்டிக்காரர்கள்.பணம் வந்து கொண்டே இருக்கும்.தன் காரியத்தில் குறியாக இருப்பார்கள்.

அதிக செலவாளிகள்.நண்பர்களால் நிறைய விரயம் உண்டு.பேச்சுத்திறமையில் இவர்களை வெல்ல ஆள் இல்லை.வாக்குவாதம் பண்ணி ஜெயிக்க முடியாது.எல்லா விசயமும் அத்துபடி.மற்றவர்களை எளிதில் தன் பக்கம் திருப்பி விடுவார்கள்.அதே சமயம் மற்றவர்களிடம் அதிகம் ஏமாந்துவிடுவார்கள்.குறிப்பா அண்ணே நீதான் என்னை காப்பாத்தணும்.என இவரிடம் சரண் அடைந்தால் போதும் கசிந்து உருகிவிடுவார்.அண்டா,குண்டா அடகு வெச்சாவது பணம் கொடுதுருவார்.பலர் இவரை ஏமாற்றுவது இப்படித்தான்.கடக ராசிக்காரர் மாதிரி இவரும் பெரிய மனசுக்காரர்.

இவர் ரேஞ்சே வேற.இவர் யார் பேச்சையும் கேட்க மாட்டார்.யாரிடமும் அடிமையாகவும் இருக்க மாட்டார்.நான் சொல்லுவேன் ஆயிரம் பேருக்கு புத்திமதி..எனக்கு என்ன நீ அட்வைஸ் பண்றதுன்னு எகிறிடுவார்.கொஞ்சம் அதிகாரமா தான் பேசுவார்.இதை பொறுத்துக்கிட்டா குடும்பத்தாருக்கும்,நண்பர்களுக்கும் கஷ்டம் இல்ல.

அஷ்டம சனி வந்துருச்சே.சனிப் பெயர்ச்சி இப்படி சதி பண்ணிருச்சேன்னு மனசுக்குள்ள வேதனை படாதீங்க..குருவின் ராசிக்காரருக்கு சனி அதிகம் கஷ்டம் கொடுப்பதில்லை.இருப்பினும் பனம் தண்ணீர் மாதிரி விரயம் ஆகும்.கடன்படும் நேரம் இது.தொழிலில் பல மாற்றங்களை உண்டக்கும்.அது விரும்பதகாததா இருக்கும்.குரு உங்க ராசிக்கு சாதகமா இருப்பதால் பிரச்சினை இல்லை.பேச்சில் மட்டும் நிதானம் அவசியம்.ஏன்னா சனி வாக்கு ஸ்தானத்தை பார்ப்பது,உங்க பேச்சால் பகையை சம்பாதிச்சு கொடுத்துரும்..கடன் கொடுக்கவோ வாங்கவோ வேணாம்...முதலீடுகள் கவனமா செய்யுங்க..சுப செலவு ஏதாவது செய்யுங்க..இல்லைன்னா கெட்ட செலவா வந்துடும்.மருத்துவ சிகிச்சை செய்து கொள்ள நினைப்பவர்கள் தள்ளிப்போடாம உடனே செய்யலாம்..வீடு கட்ட,வாங்க செய்யலாம்..கல்யாணம் போன்ற சுப செலவுகள் செய்து பணத்தை விரயம் ஆக்கும் காலம்..இது.

திருச்செந்தூர் முருகனை தரிசனம் பண்ணிட்டு வாங்க..எல்லாம் முருகன் பார்த்துப்பார்!

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2012 happy new year!!3 comments:

Sankar Gurusamy said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

திண்டுக்கல் தனபாலன் said...

மற்றவர்களிடம் ஏமாந்து விடுவார்கள்! இது உண்மை நண்பரே!
தங்களுக்கு மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.