Thursday, 22 December 2011

திருமண பொருத்தம்;வசியமான கணவன் - மனைவி

திருமண பொருத்தம்;வசியமான கணவன் - மனைவி’’எங்கிட்ட இல்லாதது அப்படியென்ன அவகிட்ட இருக்கு..?’’

‘’கிளி மாதிரி பொண்டாட்டி வீட்ல இருந்தாலும் குரங்கு மாதிரி ஒரு வைப்பாட்டி வெச்சிருப்பான்’’

இதெல்லாம் அடிக்கடி நம் சமூகத்தில் புழங்கும் டயலாக்.

இதை பேசுபவர்களுக்கு இன்னும் ரெண்டு டயலாக் நினைவு படுத்துகிறேன்.

வீட்டு சாப்பாடு ருசியா இருந்தா அவன் எதுக்கு ஓட்டல் சாப்பாடு சாப்பிடுறான்..?

தலையணை மந்திரம்,முந்தானையில புருசனை முடிஞ்சி வெச்சிக்க..இப்படி கிராமபகுதிகளில் சொல்வார்கள்.

இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்..? இருக்குங்க ஒரு பொண்ணு செக்க செவேல்னு அழகா இருந்தா மட்டும் கணவனுக்கு பிடிச்சிடாது.திகட்ட திகட்ட தாம்பத்ய சந்தோசமும் கொடுக்க தெரியணும்.நல்லா ருசியா சமைக்க தெரிஞ்ச பொண்ணுக்கு அந்த விசயமும் அத்துபடியா தெரியும்.

நல்லா கைநிறைய சம்பாதிக்க தெரிஞ்சா மட்டும் நல்ல கணவன் ஆகிட முடியாது.மனைவியை காதலிக்கவும் தெரியணும்.அப்பதான் அது நல்லதொரு குடும்பம்.அங்குதான் லட்சுமியும் தாண்டவமாடுவாள்.அய்ய இதுக்கு ஏன் லட்சுமி சாமியெல்லாம் இழுக்குறீங்க..அட..ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சிக்கிட்டு காதலிக்கும் கணவன் மனைவிக்கிட்ட லட்சுமி தங்காம வேற எங்க தங்கப் போறா..? டெய்லி...லட்சுமி ஸ்தோத்திரம் லட்சம் தடவை சொல்ற அய்யர் கிட்டியா.அட போங்க சார்.

நல்ல அன்பும்,தாம்பத்யமும் பின்னி பிணையும்போது அழகான அறிவான குழந்தைகளும் அந்த பெண் பெறுவாள்.வீடு இன்னும் பல மடங்கு சுபிக்சம் அடையும்.

கணவனுக்கு மனைவியோ மனைவிக்கு கணவனோ போரடிக்க கூடாது.ஆசை 60 நாள் மோகம் 30 நாள்னு முடியக்கூடாது.அதுக்கு மேலயும் இருவரும் ஒரு வீட்டில்,குடும்பம் நடத்தணும்னா சாதரணமா..? சமூகத்துக்காக போலியாக வாழ முடியுமா..? அதுவும் எத்தனை நாளைக்கு..?

ஜாதகத்தில் பொருத்தம் பார்க்கும்போது நட்சத்திரப் பொருத்தம் மட்டும் பார்த்து திருமணம் முடித்தால் ஜாதக கட்டத்தில் இருவருக்கும் கிரக பலம் இல்லாமல் இருந்தால் 9 பொருத்தம் இருந்தாலும் அந்த தம்பதிகள் பிரிவார்கள்.

என்ன சார் சொல்றிங்க..? 9 பொருத்தம் பார்த்து கல்யாணம் பண்ணினாலும் பிரிவாங்களா..?

ஆமாய்யா.நீ பாட்டுக்கு திருமண பொருத்தம் புத்தகம் பார்த்து 9 பொருத்தம் இருக்கு தாராளமா பண்ணலாம்னு சொல்ற ஜோசியர் கிட்ட ஜாதகம் பார்த்து கல்யாணம் பண்ணுவ.பொண்ணு ஜாதகத்துல ஏடாகூடமா கிரகங்கள் இருந்தாலும் பையன் ஜாதகத்துல விவகாரமா கிரகங்கள் இருந்தாலும் ரெண்டு பேரும் முறைச்சிகிட்டு பிரிஞ்சிடுவாங்க.அப்புறம் ஜோசியக்காரன் பார்த்துதான் பண்ணினோம் இப்படி ஆயிடுச்சி.எல்லாம் ஏமாத்து வேலைன்னு உலகத்துல இருக்குற எல்லா ஜோசியக்காரனையும் கடைசி வரை பழிச்சிக்கிட்டு திரிவீங்களா..?

நான் ஒவ்வொரு ஜாதகத்துலியும் கிரகங்கள் அமைப்பு என்னென்ன செய்யும்னு வரிசையா பல பதிவுகளில் எழுதி வருகிறேன்.அந்த அமைப்புகள் பற்றி யோசிச்சு பாருங்க.கிரக அமைப்புகள் ஒரு ஜாதகத்தில் எப்படி இருந்தா என்னென்ன பலன் தருமோ அதை அப்படியே செய்யும்.நட்சத்திர பொருத்தம் என்பது திருமண பொருத்தத்தில் ஒரு பகுதியாகும்.

ஆண் பெண் இருவரது லக்னத்தில் இருந்து பொருத்தம் பார்க்கணும்

ஆண் பெண் இருவரது ராசியில் இருந்து பார்க்கணும்

ஆண் பெண் இருவரது சுக்ரனில் இருந்து பார்க்கணும்

ஆண் பெண் இருவரது செவ்வாயிலிருந்து பார்க்கணும்

ஆண் பெண் இருவரது 7ஆம் பாவத்திலிருந்து பொருத்தம் பார்க்கணும்.

அதன் பின் தான் ஆண் பெண் இருவரது நட்சத்திரத்தில் இருந்து பார்க்கணும்.

இவ்வாறு பொருத்தத்தில் பல கணக்குகள் உள்ளன...அடுத்த பகுதியில் இன்னும் எழுதுகிறேன்..

2 comments:

சுதீப் said...

அண்ணே,

அட்ராக்ட்டிவான தலைப்பு வைக்கிறதுல ஒங்கள அடிச்சிக்க ஆளே கிடையாதுனே. நல்லாருக்குனே. பழைய சாஸ்திரம் சம்பிரதாயம்னு ஒரேடியா கொல்லாம, இன்டர்நெட்டுக்கு வர்ற இளசுங்கள தலைப்புகள வச்சே இழுத்துட்டு வந்துடுறீங்க. ரூம் போட்டு யோசிப்பீங்களோ.

திண்டுக்கல் தனபாலன் said...

பயனுள்ள தகவலுக்கு நன்றி நண்பரே!
சிந்திக்க :
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"