Tuesday, 31 January 2012

சர்க்கரை நோய் விரட்டும் அரிய மருந்து

சர்க்கரை நோயை விரட்டும் அரிய மருந்து

நம் முன்னோர்கள்,சித்தர்கள் நீரிழிவு நோயை விரட்ட பல்வேறு குறிப்புகளை நமக்கு கொடுத்து சென்றுள்ளனர்.அதன்படி நடந்தால் இயற்கை வைத்தியம்,சித்த வைத்தியம் போன்ரவற்றை பின்பற்றினால் சுலபமாக சர்க்கரை நொயை கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்..விரட்டியும் அடிக்கலாம்...

ஒரு சித்தர் பாடல் கீழ்க்கண்டவாறு சொல்கிறது;

‘’நல்ல மணிச்சம்பா
நாடுகின்ற நீரிழிவைக்
கொல்லும் மிகுந்த சுகங்
கொண்டளிக்கும் -மெல்லப்
பசியளிக்கும் மூத்தோரைப்
பாலர்களை நாளும்
முசியாமலே நன்கு
வளர்க்கு முன்’’

எனக் குறிப்பிடுகிறது.

மணிச் சம்பா அரிசியானது நீரிழிவைக் கொல்லும்;அதி மூத்திர ரோகத்தை நீக்கும்.தேகத்திற்கு நல்ல சுகத்தை தரும்.கிரமமான பசியை உண்டாக்கும்.இனி அரிசி சாதத்தை விடுங்க.சம்பா அரிசியை பொங்கி சாப்பிடுங்க..! நிறைய நடங்க...நடைப்பயிற்சி அவசியம்...தியானம்,யோகா முயற்சி செய்யுங்க..சும்மா இருந்ததால்தான் சர்க்கரை நோய் வந்தது...இனியும் சும்மா இருந்தால் மிகுந்த வேதனைதான்..வாழ்வே நரகமாகிடும்...இனியாவது சுறுசுறுப்பா செயல்படுங்க...

சர்க்கரை நோய் diabetes பற்றிய விழிப்புணர்வு வீடியோ;

புலிப்பாணி ஜோதிடம் 300- நிலம், வீடு,சொத்துக்கள் சேர்க்கும் யோக ஜாதகம்

புலிப்பாணி ஜோதிடம் 300- நிலம், வீடு,சொத்துக்கள் சேர்க்கும் யோக ஜாதகம்


அறிவித்தேன் அஞ்சுக்கு அஞ்சென்றாலும்
அப்பனே அப்பதிக்கு கோணந்தன்னில்
தெரிவித்தேன் திரவியம் காடியுண்டு
திடமான மனைகட்டி ஆளுவானாம்
குறிவித்தேன் ஆலயமும் பழுது பார்ப்பன்
கொற்றவனே ரஜிபர்த் திரமுங் கொள்வான்
புரிவித்தேன் பதியேனும் வியமா ரெட்டில்
பதறாதே பண்டு பொருள் விரயமாமே!

விளக்கம்;

ஐயனே! ஐந்திற்கு ஐந்தான பத்தாமிடத்ததிபதி அவனது ஸ்தானத்திற்கு  திரிகோணமான 1,5,9 ஸ்தானத்தில் நிற்க ஜாதகர் பொன் பொருள் நிலபுலன்கள் வாங்கி அதில் பெரிய வீடு கட்டிக் கொண்டு நலமுடன் வாழ்வான்.இவன் பழுதடைந்த கோவில்களை புதுப்பிப்பான்.பரோபகார சிந்தையுடன் பலருக்கு உதவியும் செய்வான்.ஆனால் லக்னாதிபதி 12,6,8 ஸ்தானங்களில் நின்றால் இந்த ஜாதகருக்கு எல்லா பொருள்களும் விரயமாகி பெரும் கஷ்டத்தை ஏற்படுத்தும் என்று கூறுகிறேன்!!
இன்னும் பல புலிப்பாணி ஜோதிட தகவல்களை பெற நல்ல நேரம் ப்ளாக்கின் வலது பக்கம் இருக்கும் கூகிள் சர்ச் கேட்ஜெட்டில் pulippaani jothidam  என தேடவும்!!

நியூமராலஜி (எண் ஜோதிடம்) முறையில் அதிர்ஷ்டப்பெயர் அமைப்பது எப்படி..? numerology

நியூமராலஜி ஜோதிடம் முறையில் அதிர்ஷ்டப்பெயர் அமைப்பது எப்படி..? numerology (எண் ஜோதிடம்)

நமது பிறந்த தேதிக்கு பொருத்தமான எண்களில் பெயர் அமைந்தால் மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும்.முன்னேற்றம் உண்டாகும்.பிரச்சினைகள் தீரும் என நியூமரலாஜி சொல்கிறது.

2,4,7,8 எண்ணுடைய தேதிகளில் பிறந்தவர்கள்தான் அதிகம் நியூமராலஜி படி பெயரை மாற்றிக்கொள்கிறார்கள் ..காரணம் இவர்களுக்கு பிரச்சினைகள்,தோல்விகள் அதிகம்.

2 ஆம் எண்களில் அதாவது 2,11,20,29 தேதிகளில் பிறந்தவர்கள் 2 ன் சந்திரன் சலனம் நிறைந்த எண் என்பதால்..,அதிக பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.பணம் தங்காமை,கடன்,குடும்ப வாழ்வு தோல்வி,மனைவியால் பிரச்சினை,தொழில் அமையாமை போன்றவை இவர்களுக்கு அதிகம்.முடிவே எடுக்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருப்பர்.இவர்கள் எண் 1,5,6 எண் வரும்படியான எண்களில் பெயர் அமைத்துக்கொண்டால் தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனது போல பல பிரச்சினைகளில் இருந்து தப்புவர்.பெயரை மாற்றினால் தலையெழுத்து மாறும் என நான் கதை விட மாட்டேன்.பெயரின் சிறு மாறுதல் செய்யலாம்..உதாரணம் K.SATHISHKUMAR என்பது 39 ஆம் எண்ணில் அமைந்துள்ளது.R.K.SATHISHKUMAR என்பது 41 ஆம் எண்ணில் அமைந்துள்ளது.இவ்வளவுதான் மாற்றம்.

அதே சமயம்..விஜயகுமார் என்ற பெயரை விஜய் என மாற்றினால்தான் நல்ல மாற்றம் வரும்.அது ஏன்..? அடுத்த பதிவில் சொல்கிறேன்..!!

Thursday, 26 January 2012

2012 ல் கல்யாண யோகம் கைகூடுமா..திருமண பொருத்தம் பார்க்கும் சூட்சுமம்

2012 ல் கல்யாண யோகம் கைகூடுமா..திருமண பொருத்தம் பார்க்கும் சூட்சுமம்;


ஜோதிடம் திருமண பொருத்தம் பார்க்க ராசிபலன் மட்டும் நம்பி இருக்கவில்லை.ராசிக்கட்டத்தைதான் பார்க்க சொல்கிறது.வெறும் நட்சத்திர பொருத்தம் மட்டும் பார்த்து விட்டு 9 பொருத்தம் இருக்குன்னு சொன்னான்.இப்படி ஆகிடுச்சே ஜோசியம் பொய் என புலம்பாதீர்கள்...

ஜோதிடத்தில் திருமண பொருத்தம் பார்க்கும் முறை எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்..கொங்கு மண்டலத்தில் ஜோதிடம் மிக துல்லியமாக பார்க்கப்படும்.இங்கு வெறும் நட்சத்திர பொருத்தம் மட்டும் பொஆர்ப்பதில்லை.பையன் ராசிக்கு பெண் ராசி பொருத்தம்,பெண் பிறந்த தமிழ் மாதம்,பையன் பிறந்த தமிழ் மாதம்..அதாவது சூரியன் நிற்கும் ராசியை கணக்கிட உதவும்...அதே போல சுக்கிரன் அமைப்பு இருவருக்கும் எப்படி...செவ்வாய் இருவருக்கும் எப்படி..இருவர் ஜாதகத்திலும் லக்னத்துக்கு 7,8 ஆம் இடங்கள் கிரகங்களுடன் இருக்கா,சுத்தமாக இருக்கா,பெண் ஜாதகத்தில் நாக தோசம்,செவ்வாய் தோசம் இருந்தால் பையன் ஜாதகத்திலும் அதே போல அமைப்பு வேண்டும்..என நுணுக்கமாக ஆய்வு செய்யப்பட்டே திருமண பொருத்தம் பார்க்கப்படுகிறது!

பெண்ணுக்கு நடக்கும் திசா புத்தி 6,8,12 க்குடையவன் என்றால் சூரியன்,சந்திரன் ,செவ்வாய் திசை என்றால் எச்சரிக்கை தேவை.பையனுக்கு 6,8,12 க்குடையவன் திசா புத்தி நடந்தால் எச்சரிக்கை தேவை..

2012 ல் யாருக்கெல்லாம் கல்யாண யோகம் இருக்கு என்பது அவரவர் ஜாதகத்தில் 7,9,5 க்குடையவன் புத்தி,,குரு,சுக்கிரன்,செவ்வாய் புத்தி நடந்தால் சொல்லலாம்...இவருக்கு இந்த வருசம் கல்யாணம் உறுதின்னு..

சிம்மம்,துலாம்,தனுசு,மீனம் ராசியினருக்கு குருபலம் இருப்பதால் இந்த வருசம் கல்யாண யோகம் இருக்கு.அஷ்டம சனி நடக்கும் மீனம் ராசிக்காரங்க சுப செலவு பண்ணிட்டா அஷ்டம சனியும் பரிகாரமும் ஆச்சு.கல்யாணம் பண்ணின மாதிரியும் ஆச்சு..துலாம் ராசிக்காரங்களுக்கும் அப்படித்தான்..சரியா.

(திருமண பொருத்தம் சூட்சுமம் தொடரும்)


பங்கு சந்தையால் ஒரு கோடி இழந்தவர் ஜாதகம்

பங்கு சந்தையால் ஒரு கோடி இழந்தவர் ஜாதகம்;இவர் ஒரு பெண்.ஜாதக ஆராய்ச்சிக்கு ஒரு ஜோதிடரிடம் வந்த ஜாதகம்.இவருக்கு சுக்கிர திசை வந்தபோது,உங்க கும்ப லக்னத்துக்கு யோகாதிபதி திசை வந்துவிட்டது.இனி நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும்,.நினைத்ததெல்லாம் நடக்கும் என புகழ்ந்திருக்கிறார்.இரண்டில் குரு இருப்பதால் நிதி சம்பந்தமான துறையில் வட்டிக்கு விடுதல்,பங்கு சந்தை போன்றப்வற்றில் ஆர்வம் இருக்குமல்லவா.உடனே இவரும் நான் பங்கு சந்தையில் முதலீடு செய்யலாமா எனக்கேட்க,தாராளமா செய்யலாம்.பணம் வந்து கொட்டும் என்றிருக்கிறார்.

பொதுவாக கும்ப லக்னத்துக்கு சுக்கிர திசை முதல் பத்து வருடத்துக்கு நல்லது செய்யாது என்பது விதி.அதன்படி..இவர் பங்கு சந்தையில் லட்சக்கணக்கில் முதலீடு செய்ய,சுக்கிரதிசை சூரிய புத்தி பெரும் நஷ்டத்துடன் முடிந்தது.குடும்பத்தினர் சென்ற காரும் விபத்தில் மாட்டிக்கொண்டது.கணவருக்கும் உடல் பாதிப்பு சூரிய புத்தியில் ஏற்பட்டது.கணக்கு பார்த்தால் பங்கு சந்தையில் ஒரு கோடி இழந்தார்.

பங்கு சந்தையில் முதலீடு செய்யுமுன்,உங்கள் ஜாதகத்தில் 6,8,12 க்குடையவர் திசா புத்தி நடக்கிறதா..உங்கள் வீட்டு குழந்தை ஜாதகத்திலும் உங்களுக்கும் ஒரே திசை நடக்கிறதா என்பதை கவனித்து முதலீடு செய்யுங்கள்...2க்குடையவன் 6,8,12 ல் மறைந்திருந்தால் எவ்வளவு முதலீடு செய்தாலும் நஷ்டம்தான்!!

அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்!!!

Wednesday, 25 January 2012

எம்.ஜி.ஆர் ,ரஜினி ஜாதகத்தில் காள சர்ப்ப யோகம்


எம்.ஜி.ஆர் ,ரஜினி ஜாதகத்தில் காள சர்ப்ப யோகம்;

எம்.ஜி.ஆர் எப்போதும் குன்றாத மக்கள் செல்வாக்கை பெற்றவர்.ரஜினியும் மக்கள் செல்வாக்கை மிக அதிக அளவு பெற்றவர்.இருவரும் சினிமா துறையில் யாராலும் உயரத்தை தொட்டவர்கள்.எம்.ஜி.ஆர் அரசியலிலும் சாதித்தார்.ரஜினி அரசியலுக்கு இதுவரை போகவில்லை.அவ்வளவுதான்.


                  எம்.ஜி.ஆர் ஜாதகம்; 
இருவரது ஜாதகங்களிலும் எத்தனையோ யோகங்கள் இருப்பினும்,காள சர்ப்ப யோகம் மட்டும் எடுத்துக்கொள்வோம்.இருவருக்கும் முக்கிய ஒற்றுமை காள சர்ர்ப யோகம் ஆகும்.அதாவது பெரும்பாலான கிரகங்கள் ராகு,கேது பிடிக்குள் இருப்பது காள சர்ப்ப தொசம் அல்லது காள சர்ப்ப யோகம் ஆகும்.

தோசமாக அமைந்தால் வாழ்வே சோதனையும்,போராட்டமாக காணப்படும்.யோகமாக இருப்பின் 30 வயதுக்கு பின் பெரும் அதிர்ஷ்டம் உண்டாகும்.இந்த அமைப்பு ரஜினி ,எம்.ஜி.ஆர் ஜாதகத்தில் உண்டு.
காள சர்ப்ப தோசம்,யோகம் கண்டுபிடிப்பது எப்படி..?ரஜினி ஜாதகம்;
சிம்மம் ராசியை உள்ளடக்காமல் இருக்கும் ராகு,கேது அமைப்பு காள சர்ப்ப தோசம் யோகமாக மாறும்.காள சர்ப்பத்துக்குள் சிம்மம் ராசி மாட்டியிருந்தால் காள சர்ப்ப தோசம் ஆகும்.

ரஜினி,எம்.ஜி.ஆர் ஜாதகத்தில் இருவர் ராசிக்கட்டத்திலும் சிம்மம் வீடு வெளியே இருப்பதை கவனியுங்கள்.இது காள சர்ப்ப யோகமாகும்.!! இந்த அமைப்பு எல்லா செல்வங்களையும்,அதிகாரம்,மக்கள் செல்வாக்கு,நிரந்தர புகழ்,போன்றவற்றை கொடுப்பதில்லாமல்,பாம்பு தன் வாலால் அப்படியே தூக்கி உச்சாணி கொம்பில் வைப்பது போல வைத்துவிடுவதுதான் காள சர்ப்ப யோகம்!Tuesday, 24 January 2012

எம்.எல்.ஏ,அமைச்சர் ஆகும் ஜாதகம் யாருக்கு..? அரசியல் ஜோதிடம்

எம்.எல்.ஏ,அமைச்சர் ஆகும் ஜாதகம் யாருக்கு..?


astrology;ஜோதிடம் முதலில் மன்னன் தன் எதிர்காலத்தை அறியவே பெரும்பாடுபட்டது.அதன்பின் தான் சாதாரண மக்களுக்கு பயன்பட தொடங்கியது.மன்னன் ஆகுபவர் யார் என்பதை முதலில் அடிப்படையாக கணித்து வைத்திருந்தால்தானே மன்னன் தன் எந்த வாரிசை இளவரசனாக அறிவிக்கலாம் என முடிவெடுக்க முடியும்..? அதை ஜோதிடர்கள்சரியாக கணித்து வைத்திருந்தார்கள்,அரசி கர்ப்பம் தரிக்கும் காலம் முதல் குழந்தை பிறக்கும் காலம் வரை ஜோதிடர்களே நாள் நிர்ணயித்தனர்.அவர்களுக்கு வாரிசு தேவை.அதற்காகவே பல பெண்களை மணந்தனர்.மன்னன் வாரிசை பெற்ரெடுக்கும் ராணியை தேர்ந்தெடுப்பதில் ஏற்பட்ட குழப்பம்தான் பெரும்பாலும் ஒவ்வொரு அரசனுக்கும்,இரண்டு,மூணு என ராணிகள் அதிகரித்தனர்.அப்போதைய மன்னன் யார் என்ற கணிதம் இன்று எம்.எல்.ஏ,அமைச்சர் ஆகும் யோகம் யாருக்கு என்பதை கண்டறியவும் உதவுகிறது.

மன்னன் ஆகும் ஜாதகம் எது என பார்த்தால் இது சுலபமாக புரிந்துவிடும்.ஆட்சி அதிகாரம் கையில் கிடைக்க வேண்டுமெனில்,எந்தெந்த கிரகம் பலம் பெற வேண்டும்..? எந்த லக்னத்தார் அமைச்சர்,ஆட்சி பொறுப்பேற்கின்றனர் என பார்ப்போம்.

அரசியலில் ஜொலிக்க வைக்கும் லக்னங்கள்;மேசம்,கடகம்,துலாம்,மகரம்.

அரசியல் கிரகங்கள்;குரு,சூரியன்,செவ்வாய்

மேசம்..செவ்வாய் ஆட்சி பெறும் லக்னம்,சூரியன் உச்சம் பெறும் லக்னம்,கடகம் குரு உச்சம் பெறும் லக்னம்,துலாம் ஜனவசியம் தரும்,சனி உச்சம் பெறும் லக்னம்.மகரம் ...முப்படைகளின் தளபதி,எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கச்செய்யும் செவ்வாய் உச்சம் பெறும் லகன்ம்.....ஆகவே தான் மன்னன் ஆகும் தகுதி கிடைக்க இந்த லக்னத்தில் பிறக்க வேண்டும்.

எம்.ஜி.ஆர்,இந்திராகாந்தி, முதலமைச்சர் ஜெயலலிதா,கருணாநிதி,விஜயகாந்த் ,ஜாதகங்களில் இந்த அமைப்பு இருப்பதால் அரசியலில் பிரகசிக்க முடிந்தது.இன்று திடீர் அமைச்சர் ஆகும் யோகம் பெற்றவர்கள் முதல் அன்று தி.மு.க ஆட்சிக்கு எப்போ வந்தாலும் இவர்தான் அமைச்சர் என குத்தகைக்கு எடுத்தவர்கள் வரையிலுமான அனைவர் ஜாதகத்திலும் இந்த அமைப்பு நிச்சயம் இருக்கும்!!

உங்கள் ஜாதகம் யோகமானதா கண்டறிவது எப்படி..?

உங்கள் ஜாதகம் யோகமானதா கண்டறிவது எப்படி..?


ஜோதிடம் சொல்லும் குறிப்புகளில் முக்கியமானது ஒரு ஜாதகத்தில் லக்னமும்,சந்திரனும் மிக முக்கியம்.லக்னாதிபதியும் சந்திரனும் கெட்டுவிட்டால் சூரியனை பார்க்கணும்,சூரியனும் கெட்டுவிட்டால் சனியை பார்.சனியும் கெட்டுவிட்டால் ஜாதகத்தை மூடி வைத்துவிடு.அந்த ஜாதகனுக்கு நீ எந்த வழியையும் காட்ட முடியாது என எனது குருநாதர் அடிக்கடி சொல்வார்.

உங்கள் ஜாதகம் யோகமானதா இல்லையா என்பதை அறிய லக்னாதியும் ,லக்னமும்,சந்திரனும் 6,8 க்குடையவன் சாரத்தில் அதாவது நட்சத்திரத்தில் இருக்க கூடாது.இது மிக முக்கியம்.

அந்த அமைப்பு உள்ள ஜாதகர் வாழ்நாள் முழுவதும் போராட்டத்தையும்,சோதனையையும்,தோல்விகளையும்,நஷ்டத்தையுமே சந்திக்கிறார்...

அவருக்கு அமைவது எல்லாமே சொத்தைக்கத்திரிக்காய்தான்.பெற்றோர்,மனைவி,குழந்தைகள்,தொழில் எல்லாமே சரியிருக்காது.

ஏன் அப்படி..? லக்னம் என்பது தன்னம்பிக்கை குறிக்கும் முக்கிய இடம்,சந்திரன் என்பது மனதில் இருக்கும் உறுதி,தெளிவு,வைராக்யம் ,முயற்சி ஆகும்.சந்திரனும்,லக்னமும் கெட்டுவிட்டால் எதை அனுபவிக்க முடியும்..?

தொட்டது எல்லாமே தோல்விதான்.திண்ணையில் படுத்து தூங்குபவர்கள்,சோம்பேறிகள்,பிச்சைக்காரர்கள் ,ஜெயிலில் இருப்பவர்கள் ஜாதகத்தில் இந்த அமைப்பை பார்க்க முடியும்.

எம்.எல்.ஏ,அமைச்சர் ஆகக்கூடியவர், ஜாதகம் எப்படியிருக்கும் என்ற பதிவை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்


Monday, 23 January 2012

நெரூர் சதாசிவம் பிரம்மேந்திரா;அற்புத அனுபவம்

நெரூர் சதாசிவம் கோயில்;அற்புத அனுபவம்

கரூர் பஸ் நிலையத்தில் இருந்து நெரூர் செல்லும் 4 ஆம் நம்பர் டவுன் பஸ் ஏறினால் ,சதாசிவம் கோயில் அடையலாம்.காவிரி கரையின் ஓரத்தில் புதுக்கோட்டை மன்னர் கட்டிய பிரம்மாண்ட மதில் சுவர்களுடன் அழகிய சிவன் ஆலயத்துடன் சதாசிவம் கோயில் அமைந்திருக்கிறது.


ஆங்கிலப்புத்தாண்டு அன்று ஒரு முறையும் பொங்கல் தினத்தன்றும் இங்கு சென்று வந்தேன்.சதாசிவம் என்பது சதா சிவத்தையே எண்ணி தவம் புரிந்த ஒரு மகானின் அதிர்ஷ்டானம் ஆகும்.மகா ஜீவ சமாதி.அளவுகடந்த இறைபேராற்றல் நிறைந்த இவரது உடல் முழுமையான சித்தர் முறைப்படி சமாதி செய்யப்பட்ட இடம்.இவரது வரலாறு எழுதப்பட்ட நூலில் ஜீவ சமாதி செய்யப்பட்டது பற்றி பெரிய விளக்கமே உண்டு.இவரது காலம் மிக பழையானது.ஆனால் இவர் ஜீவ சமாதியில் இருந்து வெளிப்படும் ஆகர்ஷ்ண சக்தி இந்த பூமி உள்ள அளவும் இருக்கும்.அந்த சக்தி நம்மை முழுமையாக ரீசார்ஜ் செய்து விடுவதுதான் இந்த ஆலயத்தின் சக்தி.

இவரது பாதம் பகுதியில் காசி விஸ்வநாதர் லிங்கம் அமைத்து பூஜை செய்யப்படுகிறது.வடநாட்டில் இருந்தும்,வழிபட இங்கு வருகின்றனர்.இந்தியாவின் முக்கிய தலைவர்கள்,ஆன்மீக வாதிகள்,நடிகர்,நடிகைகள் வந்து செல்கின்றனர்.மன அழுத்தம்,தீராத நோய்கள்,கடுமையான நெருக்கடியில் தவிப்பவர்கள் இங்கு சென்றால் பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்..தியானம் செய்ய அருமையான இடம்.பெளர்ணமி,அமாவாசை தினங்களில் கூட்டம் அதிகம் காணப்படும்.மாலை 4 மணி முதல் இங்கு அமர்ந்து தியானம் செய்தால் மனம் மிக லேசாவதை உணரலாம்.அடிக்கடி செல்லும் ஈர்ப்பையும் உண்டாக்கும்!!

Saturday, 21 January 2012

தை அமாவாசை

தை அமாவாசை

முன்னோர்களை நினைத்து அவர்களுக்கு பித்ரு பூஜை செய்து வழிபட வேண்டிய நாள் தை அமாவாசை.நாளை ஞாயிர்றுக்கிழமை.இந்த விசேஷ நாளாகும்.

ராமேஸ்வரம்,திருப்புல்லாணி,கோடியக்கரை,பூம்புகார்,திருவெண்காடு,திருச்சி அம்மா மண்டபம்,ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை,கொடுமுடி காவிரி கரை ஆகிய இடங்கள் பித்ருபூஜை செய்ய மிக உகந்த தலங்கள்.வடநாட்டில் காசி,ப்த்ரிநாத்,கங்கைகரையெங்கும் பித்ருபூஜை செய்ய உகந்த இடங்களாகும்.

பித்ருதோசம் இருப்பவர்களும்,இதுவரை சரியான முறையில் இறந்தோருக்கான சடங்குகளை செய்யாதவர்களும் இந்த தை அமாவாசையில் செய்வது மிக சிறப்பு.

ஜாதகத்தில் பாக்யஸ்தானம் வலு இழந்தவர்களும்,சூரியன் பாதிப்புக்குள்ளானவர்களும்,இறந்து போன எந்த உயிருக்காகவும் உங்களுக்கு உறவே இல்லாவிட்டாலும் இந்த பூஜையை செய்யலாம்...உங்கள் உறவில் யாருக்கேனும்,பல காலம் அவர்களுக்கு திதி கொடுக்காமல் இருந்தால் மறக்காமல் இந்த நாளில் செய்யுங்கள்.

இதை செய்வதால் என்ன பலன்..? உங்கள் வம்சத்தில் இறந்து போன முன்னோர்களை நினைத்து செய்யும் இந்த பூஜையானது,இறந்து போனவர்களுக்கு ஆத்ம சாந்தி கிடைக்க செய்கிறது.அவர்களின் பரிபூர்ண ஆசியும்,வழிகாட்டலும் உங்களுக்கும் உங்கள் வம்சத்தாருக்கும் கிடைக்கிறது.

முன்னோர்களை நினைத்து வழிபாடு என்பதால் உங்கள் குல தெய்வம் கோயிலுக்கும் சென்று வரலாம்.குலதெய்வம் கோயில் சென்று வர இது உன்னதமான நாள் ஆகும்.

பித்ருபூஜைக்கு உண்டான பொருட்களில் முக்கியமனவை;நாட்டுக்காய்கறிகள் கொஞ்சம்..அதாவது வாழைக்காய்,நீர்பூசணி சிறிது துண்டு,பச்சரிசி மாவு,எள்,நல்லெண்ணை,மஞ்சள்,குங்குமம், சூடம் ஒரு பாக்கெட்,நெய் பாக்கெட் ,வரமிளகாய்,உப்பு ஒரு பாக்கெட் ,பருப்பு 100 கிராம்,உளுந்து 100 கிராம் இவை எதுக்கு என்றால் அந்த காலத்தில் பித்ருபூஜை செய்ததும் பிராமணர்களுக்கு தானமாக தருவார்கள்.அது இன்றும் கடைபிடிப்பதற்காகத்தான்.அவரவர் வசதியை பொறுத்து பூஜை அமைத்துக்கொள்ளலாம்...எள்ளும் தண்ணியும் இறைத்தால் போதும் எனும் சிம்பிள் திதியே முன்னோர்களுக்கு போதுமானது.

Friday, 20 January 2012

புலிப்பாணி ஜோதிடம் சொல்லும் புத்திர தோசம்,நாகதோசம்,காள சர்ப்ப தோசம்

புலிப்பாணி ஜோதிடம் சொல்லும் புத்திர தோசம்,நாகதோசம்,காள சர்ப்ப தோசம்

ஒருவருடைய ஜாதகத்தில் புத்திர ஸ்தானமாகிய 5 ஆம் இடத்தில் ராகு அல்லது கேது இருந்து செவ்வாயால் பார்க்கப்பட்டால் கடுமையான புத்திர தோசம் உண்டாகிறது.அடிக்கடி கருச்சிதைவும்,குழந்தை பிறந்து இறத்தலும் உண்டாகிறது!சிலருக்கு புத்திர பலனே இருப்பதில்லை.இதை புலிப்பாணி பாடல் மூலம்,சொல்கிறார்;

‘’பாரப்பா இன்னமொரு பகரக் கேளு
பஞ்சமத்தில் கருநாகம் மறைந்தவாறும்
சீரப்பா ஜென்மனுக்கு புத்திர தோசம்
தீர்ப்பதற்கு விபரம் சொல்வேன் மைந்தா
கூறப்பா கோதையுமே அரசு சுத்தி 
குற்றமில்லாக் கன்னியற்கு உத்தம ஸ்தான செய்து
வீரப்பா விலகுமடா தோசம்
விதியுள்ள ஜென்மனவன் ஜெனிப்பான் பாரே’’

ஜாதகத்தில் ராகு 5ல் இருப்பின் அரச மரத்தை சுற்றி வந்து ,சுமங்கலிகளுக்கு குங்குமம்,மஞ்சள் முதலான மங்களப்பொருட்கள் கொடுத்து வண்ங்கினால் தோசம் நீங்கும் என்கிறார்.12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இனிப்பு கொடுத்து அவர்களுக்கு உணவும் கொடுத்து வசதி இருப்பவர்கள் உடைதானமும் செய்தால் இந்த தோசம் நீங்கும்.

காளசர்ப்ப தோசம்;

ராகு,கேதுவுக்கு நடுவில் அனைத்து கிரகங்களும் அமைந்து இருந்தால் அது காள சர்ப்ப தோசம் எனப்படும்.எம்.ஜி.ஆர்,ரஜினி ஜாதகத்தில் இந்த அமைப்பு இருக்கிறது.காள சர்ப்ப யோகம்,காள சர்ப்ப தோசம் என்று இருவகை உண்டு.ஆனாலும் ராகு,கேது பிடிக்குள் அனைத்து கிரகங்களும் இருந்தால் அந்த ஜாதகர் 30 வயதுக்கு மேல் நல்ல முன்னேற்றம் அடைவார்.அதுவரை போராட்டமான வாழ்க்கையாக இருக்கும்.


Thursday, 19 January 2012

கைரேகை ஜோதிடம் 2

கைரேகை ஜோதிடம் 2

ஒன்பது கிரகங்களையும் அதன் தன்மைகளுக்கு ஏற்ப மூன்று பெரும்பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன..அவை;
1.மண்டல கிரகங்கள்(சூரியன்,சந்திரன்)
2.தாரா கிரகங்கள் ( செவ்,குரு,புதன்,சுக்கிரன்,சனி)
3.சாயா கிரகங்கள் எனும் நிழல் கிரகங்கள் -ராகு கேது

மேற்க்கண்ட மண்டல ,தாரா கிரகங்களுக்கு மட்டும் உள்ளங்கையில் கிரக மேடுகள் என்று ஏழுவகை மேடுகள் உள்ளன..ராசி மண்டலங்களில் ராகு,கேது க்களுக்கு சொந்த வீடு (ராசி) கிடையாது.

அதே போலத்தான் உள்ளங்கையில் மேடுகள் கிடையாது.ராசிகளில் எந்த ராசியில் அவர்கள் இருக்கிறார்களோ அந்த ராசியே அவர்கள் சொந்த ராசியாக கருதப்படுகிறது.இதுவே உண்மையும் ஆகும்.உள்ளங்கையில் ஏழுவகை மேடுகள் காணப்படுகின்றன.கிரகமேடுகள் மற்றும் ரேகைகள் பற்றி புரிதல் இருந்தால் அதன் பலன்களை இனம் காண சுலபமாக இருக்கும்.கீழே உள்ள படத்தில் கிரக மேடுகளை சுட்டிக் காட்டியுள்ளேன்.பார்க்கவும்.

கிரக மேடுகள்;

1.குரு மேடு
2.சனி மேடு
3.சூரிய மேடு
4.புதன் மேடு
5.செவ்வாய் மேடு
6.சந்திர மேடு
7.சுக்கிர மேடு
ஜோதிடத்தில் ஏழு கிரகங்கள் உல்ளங்கையில் ஏழு மேடுகளில் ஆட்சி செய்கின்றன..ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் கெட்டிருந்தால் அவர் உள்ளங்கையிலும் சுக்கிரன் மேடு தாழ்ந்து,அதிக குறுக்கு கோடுகளுடன் காணப்படும்.சுக்கிரன் நன்றாக இருந்தால் கட்டை விரலுக்கு கீழ் உள்ள மேடு பருத்து சின்ன சின்ன கோடுகள் இன்றி தூய்மையாக காணப்படும்.இது குடும்ப வாழ்வை பற்றி சொல்லும் முக்கிய இடம்.

கிரக மேடுகள் என ரேகை சாஸ்திரத்தில் palmistry யில் சொல்லப்படுபவை ஜாதகத்தில் ராசிக்கட்டங்களில் கிரகங்கள் ஆட்சி உச்சம் பெற்றதை கணிப்பதை போன்றதாகும்.சூரிய மேடு பலமாக இருந்தால் சூரியன் பலமாக இருக்கிறது என அர்த்தம்.ஆக கையில் கிரக மேடுகள் முக்கியம்.


கைரேகை ஜோதிடம்

கைரேகை ஜோதிடம்

மனிதனின் உள்ளங்கையில் காணப்படும் ரேகைகளில் முக்கியமானவை 16.அதன் விபரங்களை கீழே கொடுத்துள்ளேன்.இது புரிந்தால்தான் ரேகை ஜோதிடத்தில் முக்கிய பலன்களை அறிய முடியும்.


1.ஆயுள் ரேகை
2.புத்தி ரேகை
3.இருதய ரேகை
4.விதிரேகை
5.சூரிய ரேகை
6.ஆரோக்கிய ரேகை
7.சுக்கிர வளையம்
8.குரு வளையம்
9.சனி வளையம்
10.சந்திர ரேகை
11.இச்சா ரேகை
12.கங்கண ரேகை
13.செவ்வாய் ரேகை
14.திருமண ரேகை
15.சக்கர ரேகை
16.சங்கு ரேகை

 `மேற்க்கண்டுள்ள படத்தில் இதன் எண்களையும் ரேகைகளையும் குறிப்பிட்டுள்ளென்.படத்தை பெரிதாக்கி பார்க்க முடியும்னு நினைக்கிறேன்.இந்த ரேகைக்கான பலன்கள் அடுத்தடுத்த பதிவில் தொடர உத்தேசம்.

Saturday, 14 January 2012

வேட்டை சினிமா விமர்சனம் vettai movie review

வேட்டை சினிமா விமர்சனம் vettai  movie reviw


இளைஞர்களுக்கு மிக பிடித்த ,அமலாபால்,சமீரா ரெட்டி..வயசு பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிச்ச ஆர்யா,மாதவன், யூத்களின் ஃபேவரிட் இசை கலைஞன் யுவன் ஷங்கர் ராஜா..ரன்,பையா,சண்டக்கோழி போன்ற ரொமான்ஸ் படங்களை கொடுத்த யூத் அண்ட் கலர்ஃபுல் இயக்குனர் லிங்குசாமியின் கூட்டணி என்றால் படம் பட்டய கிளப்ப வேண்டாமா..? கிளப்பியிருக்கிறது..! 

மாதவன்,ஆர்யாஇருவரும்அன்ணன்தம்பிகள்.இவர்களின்அப்பாபோலீஸ்.திடீரெனஅப்பாஇறந்துவிட,அந்தபோலீஸவேலைமாதவனுக்குவருகிறது.
மாதவன்பயந்தசுபாவமும்துணிச்சலும்இல்லாதவர்.எனக்குஇந்தவேலையேவேண்டாம்எனமறுக்க,நம்மஅப்பா,தாத்தாஎல்லாம்போலீஸ்.அதனாலநீயும்போலீஸ் ஆகணும்.. என்ன பிரச்சினை வந்தாலும் நான் பார்த்துக்கிறேன்..நீ டூட்டியிலஜாயின்பண்ணுஎனஅண்ணனுக்குதெம்பூட்டிஎனஆர்யாவற்புறுத்திஅவரைஏற்கவைக்கிறார்.


தூத்துக்குடிஏரியாவில்போலீஸ்வேலையில்சேரும்போதே..மாதவனுக்கு திகிலடைய வைக்கும்படி பிரச்சினைகள் உருவாகிறது.அந்த ஏரியா தாதாக்கள் மாரி,அண்ணாச்சி இருவரும் மாதவனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்கிறார்கள்.மாதவன் தன் தம்பி ஆர்யாவை வைத்து அவர்களை அடக்குகிறார்.அண்ணனுக்காக தம்பி சண்டை போடுகிறார்.கடத்தலை தடுக்கிறார்.கடத்தப்பட்ட குழந்தையை மீட்கிறார்.

 தன் அன்ணன்களை எதிர்ப்பவர்களையெல்லாம் பந்தாடுகிறார்.இந்த விசயம் வில்லன்களுக்கு தெரிந்து விட,அடிபட்ட எதிரிகள் அண்ணன் தம்பிகளை சும்மா விடுவார்களா என்ன செய்தார்கள்...அதை அண்ணன் தம்பிகள் எப்படி வெற்றிகரமாக முறியடிக்கிறார்கள் என்பதே கதை.

மாதவன் இந்த படத்தில் பயம்,துணிச்சல் இல்லாத கோழையாக நடித்திருக்கிறார்.ஆர்யா ஆக்‌ஷன் சரவெடி.அன்ணனுக்காக தம்பி துடிப்பதும்,தம்பிக்காக அண்னன் துடிப்பதும் ஓவராக இல்லாமல் எதார்த்தமாக இருப்பது ப்ளஸ்..அண்ணன் மாதவனை துணிச்சல் மிக்கவனாக மாற்றுகிறார்.உன் எதிரிகளை நீயே வேட்டையாடு என சொல்லிவிட்டு ,ஆர்யா ஒதுங்க மாதவன் ஒவ்வொரு எதிரியையும் வேட்டையாடுகிறார்.

அக்கா தங்கையாக சமீராரெட்டி ,அமலா பால்..இருவரும் நல்ல அழகு.சமீரா அக்கா மாதிரிதான் எப்பவும் இருப்பார்.அது இந்த படத்தில் நன்றாகவே பொருந்தியிருக்கிறது.

நீ பயந்தாங்கொள்ளி ..அவங்க துணிச்சலானவங்க..உன்னை சரிபண்ண அவங்களாலதான் முடியும் என என மாதவனுக்கு சமீரா வை திருமணம் செய்து வைக்கிறார் ஆர்யா.அப்படியே அவர் தங்கை அமலாபாலையும் இவர் கரெக்ட் செய்யும் காட்சிகள் அழகு.

படத்தில் நகைச்சுவை காட்சிகள் கம்மி.அமெரிக்க மாப்பிள்ளை ஒருவருக்கு அமலாபாலை கல்யாணம் செய்துவைக்க அக்கா சமீரா முடிவுசெய்வதும்..அமெரிக்க மாப்பிள்ளையை ஏமாற்றி ஆர்யாவும் அமலாபாலும் காதலிக்கும் காட்சிகள் கொஞ்சம் நகைச்சுவை.

.கல்யாண நாளில் அமெரிக்க மாப்பிள்ளை ஓடிப்போக.,ஆர்யாவை வேலையில்லாதவன் என திட்டிக்கொண்டிருக்கும் சமீராவையே ,ஆர்யாவின்காலில் விழுந்து தன் தங்கையை கல்யாணம் பண்ணிக்க என கெஞ்ச வைக்கும்அண்ணன்,தம்பிபோடும் நாடகம் ரசிக்க வைக்கிறது...


பப்பப்பா பாடல் மட்டுமே கலக்கலாக இருக்கிறது.யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் இது மட்டுமே ஜொலிக்கிறது.இந்த பாடல் ஒளிப்பதிவும் அருமை.

சும்மா இருக்கிறவந்தான் உன்னையே சுத்தி வருவான்..உன் கூடவே இருப்பான் என சமீரா பேச்சும் காட்சியும்,க்ளைமாக்சில் மாதவன் மீது பெட்ரோலை ஊற்றி வில்லன் கொளுத்த போகும்போது என் அப்பன் ரத்தம் இன்னும் ஒண்ணு வெளியே இருக்குடா...அது வந்ததும் உங்க கதை காலி என என மாதவன் பேசும்போது தியேட்டரில் விசில் பறக்கிறது..!

அமலா பால்,சமீரா ரெட்டி நடிப்பு காட்சிகள் கம்மி.கதை முழுவதும் ஆர்யா,மாதவனை சுற்றியே நடக்கிறது.

ஆர்யா ஒவ்வொருமுறையும் வில்லன்களை புரட்டியெடுக்கும்போதும்,மாதவந்தான் அதை செய்தார் என ஸ்டேசனுக்கு வந்து பரிசு கொடுப்பதும்,முத்தம் கொடுத்தும் நாசர் பாராட்டி விட்டு செல்லும் போலீஸ் உயர் அதிகாரியாக நடித்திருக்கிறார்.

தம்பி ராமதுரை மைனா சினிமாவுக்கு பின் நல்ல குணசித்திர வேடம்.நீங்க சாதிப்பீங்க சார் எனக்கு நம்பிக்கை இருக்கு என ஒவ்வொரு முறையும் சொல்லும் காட்சிகளிம் மாதவன் துணிச்சல் அடைவதும் நன்றாக இருக்கிறது.

படம் வேகமாக பயணிக்கிறது...ஆக்‌ஷன் சினிமா விரும்பிகளுக்கு இந்த படம் ரொம்ப பிடிக்கும்.அண்ணன், தம்பி பாசத்தை எதார்த்தமாக படைத்திருக்கிறார் இயக்குனர் லிங்குசாமி.

நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!!

Thursday, 12 January 2012

ஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்த ராசி பலன்கள்


ஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்த ராசி பலன்கள்


ஒருவருடைய ஜனன ஜாதகத்தில் சுக்கிரனை குரு பார்வை செய்தால் ஒன்றுக்கும் மேற்பட்ட களத்திரம் உண்டாகிறது.இவைகளில் முதல் மனைவிக்கு மூன்று பிள்ளைகளும் இரண்டாம் மனைவிக்கு இரண்டு குழந்தைகளும் உண்டாகும் என ஜோதிடம் சொல்கிறது.

சுக்கிரன் சர ராசியில் அமையப் பெற்றுக் கேது சாரம் உண்டானால் மனைவிக்கு பிறக்கும் குழந்தைகள் இறக்கும் நிலை உண்டாகும்.
ஸ்திர ராசியில் சுக்கிரன் அமையப்பெற்றாலும் சுக்கிரனோடு சூரியன்,புதன் ஆகியோர் கூடினாலும்,பார்த்தாலும் இரண்டு மனைவிகள் உண்டாவார்கள்.முதல் மனைவிக்கு புத்திர இழப்பும் இரண்டாம் மனைவிக்கு சற்புத்திர அமைப்பும் உண்டாகிறது.

சுக்கிரன் உபய ராசியில் இருக்க அவரோடு ராகு,செவ்வாய் இணைந்து காணப்பட்டால் மூன்று மனைவிகள் அமைகிறார்கள்....

சுக்கிரன் 7ல் அமையப்பெற்று ஜென்மத்தில் குரு அமையப் பெற்ற ஜாதகருக்கு எண்ணற்ற மனைவியர் உண்டு.ஆனால் அந்த மனைவிகளுடன் தாம்பத்யம் மட்டும் வைத்துக்கொண்டு,அவர்களை காப்பாற்றாமல் ஏமாற்றுவார்.

களத்திரகாரகனாகிய சுக்கிரன் நீசம் பெர்று 6,8,12ல் அமையப்பெற்றால் மனைவிக்கு கெடுதியும் உடல் நலக்குறைவும் கண்டமும் அமையப்பெறுகிறது.

ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் எந்த வீட்டில் இருக்கிறாரோ அந்த வீட்டுக்கு அதிபதி 6,8,12 ல் மறையப் பெற்றால் மனைவிக்கு அசுப பலன் அமையப் பெறுகிறது...!!

சுக்கிரன் ஆட்சி அல்லது உச்சம் பெற்று லக்கினத்துக்கோ அல்லது சந்திரனுக்கோ கேந்திரம் பெற்று அமையப்பெற்றால் மாளவியா யோகம் கிட்டுகிறது.சுக வாழ்வில் குறிப்பாக பெண்கள் சுகத்தில் அதிக ஈடுபாடு இருக்கும்.நல்ல உடல் அமைப்பு,மற்றவர்களை வசீகரம் செய்யும் நிலை,அசையாத ஸ்திர சொத்துக்கள் சேரும்.பெருமை,புகழ் யாவும் உண்டாகும்!!!

குரு பகவான் பயோடேட்டா

குரு பகவான் பயோடேட்டா

ரத்தினம்;புஷ்பராகம்

தாது;அரிதாரம்

உலோகம்;தங்கம்

மிருகம்;மான்

பறவை;கவுதாரி,நீர்க்கோழி

சமித்து;அரசமரம்

மலர்;சரக்கொன்றைப்பூ

அன்னம்;தயிர் சாதம்

திசை;வடக்குசெடி;வெள்ளைக்கரும்பு,சிவப்பு முள்ளங்கி,மணத்தக்காளி

கொடி;சீந்தில்கொடி

காய்;தேங்காய்

பழம்;இனிப்புள்ள மாதுளை,இலந்தை,பேரிட்சை,திராட்சை

மருந்து;தாழைவேர்,லவங்கம்,சிறுநாகப்பூ

சமையல் பொருள்;புளி,வெந்தயம்

நட்சத்திரம்;புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி,

ராசி;தனுசு,மீனம்,

உச்சமடையும் ராசி;கடகம்

நீசம் பெறும் ராசி;மகரம்

ஆட்சி பெறும் ராசி;மீனம்,தனுசு

நிறம்;மஞ்சள்

வாகனம்;யானை

அதிதேவதை;தட்சிணாமூர்த்தி

கோயில்;ஆலங்குடி

தெய்வம்;திருச்செந்தூர் முருகன்

பார்வை;5,7,9 ஆம் பார்வை

ஜாதகத்தில்;புத்திரகாரகன்,தனத்துக்கு அதிபதி,பணிவு,அடக்கம் மரியாதை .,ஆன்மீகத்தில் ஈடுபாடு,உடல் அங்கத்தில் தோல் இவற்றுக்கு அதிபதி...குரு ஜாதகத்தில் கெட்டுப்போனா மேற்க்கண்டவையும் கெட்டுப்போகும்.

சகட யோகம்;குருவுக்கு 6,8,12ல் சந்திரன் அமையப் பெற்றால் சகட யோகம் ஏற்படுகிறது.பொருளாதார ரீதியில் ஏற்றத்தாழ்வுகள் வண்டிச்சக்கரம் போன்று வாழ்வு அமைப்பு போன்ற சோதனைகள் உண்டாகிறது.

இல்வாழ்க்கை;குருவுக்கு 5ல் சனி அமையப்பெற்றாலோ 5 ஆம் விட்டில் மேலும் அசுபர்கள் காணப்பட்டாலோ திருப்தியற்ற இல்வாழ்க்கை ஏற்படுகிறது.நண்பன் எதிரியாக மாறுவான்.ஊரே இவர்களை விமர்சனம் செய்யும்.பூர்வபுண்ணியமும் கெட்டுவிடுகிறது.

சனி பயமுறுத்தும் பயோடேட்டா 2 ஆயுள் பலம்

சனி பயமுறுத்தும் பயோடேட்டா 2சனியின் காரகத்துவம் அல்லது அதன் சக்தி வெளிப்படும் பொருட்கள்,காய்,பழங்கள் மற்றும் செயல்பாடுகளை இங்கு கொடுத்துள்ளேன்.இவற்றில் எல்லாம் சனியின் சக்தி அடங்கியுள்ளது.உதாரணமாக பேரீச்சம்பழம் என்பது சனி கிரகத்தின் பழமாக நம் முன்னோர் குறிப்பிடுகின்றனர்.சனி இரும்புக்காரகன் என்றும் நம் முன்னோர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே குறித்துள்ளனர்.பேரிச்சம்பழம் இரும்பு சத்து கொண்டது என இன்றைய விஞ்ஞானம் ச்ப்போது சொல்கிறது.எவ்வளவோ படிச்சிட்டு ஆராய்ச்சி பண்ணி,இவங்க சொல்றதை நம் சித்தர்களும்,முன்னோர்களும் எப்பவோ கண்டுபிடிச்சிட்டாங்க..அப்போ நம் முன்னோர்கள் சொன்னதையெல்லாம் மூட நம்பிக்கைன்னு இப்போ,சொல்ற இந்த புத்திசாலிங்க.,,அதையெல்லாம் ஆராய்ச்சி செஞ்சி கண்டுபிடிச்சு அறிவிக்க இன்னும் பல நூறு வருசம் ஆகலாம் ..அவனுக எப்பவோ சொல்லட்டும்..நாம் முன்னோர்கள் சொலலியதை ,நமக்கு அன்போடு ,தன் வாழ்நாளெல்லாம் அர்ப்பணித்து கண்டறிந்து சொன்னதை புறந்தள்ளாமல் மதிப்போம்! அதன்படி நடப்போம்!!

சனி பகவானுக்கு உகந்தவைகள்;

பழம்;புளிப்பு மாதுளம் பழம்,பேரிச்சை,இலந்தை

காய்;மாங்காய்,நெல்லிக்காய்

மருந்து வகை;மிளகு,துளசி,ஓமம்,கடுக்காய்,தாளிசபத்திரி

வாசனை;கற்பூரம்

இருப்பிடம்;குகை,சமையல் அறை,சிறை..குப்பை தொட்டி

கொட்டை;பருத்திகொட்டை

தேவதை;ஐயப்பன்,சாஸ்தா,முனி,கருப்பணசாமி

காரகன்;ரட்சகன்

மகன்;மாந்தி

தூரம்;  பூமியில் இருந்து சனி உள்ள தூரம் தோராயமாக 1277 மில்லியன் கிலோ மீட்டர்களாகும்.

சனியின் வேறு பெயர்கள்;  சவுரி-கதிர்மகன் -காரி-நீலன் -கரியன் -முடவன் -சாவகன் -கீழ்மகன் - சகோளன் -பச்சுமன் முதுமகன் -நஸிதன்

வர்க்கோத்தமம் -சனியின் நட்சத்திரமான அனுசம் 4 ஆம் பாதத்தில் வர்க்கோத்தமம் பெறும்.

சனியும் ஆயுளும்;சனி 3,8 ஆம் இடங்களில் இருந்தாலோ லக்னத்தை பார்வையிட்டாலோ,பூரண ஆயுள் பலம் உண்டாகும்.சனி எட்டில் இருந்தால் ஆயுள் பலம் உண்டு.ஆனால் நீண்ட நாள் படுக்கையில் இருந்து வருத்தி அதன்பின் தான் மரணம் உண்டாகும்.

பரிகார செவ்வாய்;ஜாதகத்தில் செவ்வாய் தோசம் இருந்து,செவ்வாய் ;சனியுடன் இருந்தாலோ செவ்வாய் பார்த்தாலோ பரிகார செவ்வாய் என சொல்ல வேண்டும் என மூல நூல்கள் குறிப்பிடுகின்றன....பரிகாரம் செய்தால் தோசம் நீங்கும்.

சனி தன்மை;சனி ஒரு தாது கோள் என சொல்லப்படுகிறது

சனியும் சந்திரனும்;ஜாதகத்தில் சந்திரனுக்கு 12ல் சனி கோட்சாரப்படி வரும் காலம் ஏழரை சனியாகும்.சந்திரனுக்கு 4 ஆமிடத்தில் வருவது கண்டக சனியாகும்,சந்திரனுக்கு எட்டில் வருவது அஷ்டம சனியாகும்...இவை மூன்றும் அவரவர் பூர்வ புண்ணியம்,ஜாதகத்தில் சனி அமர்ந்த நிலையை பொறுத்து பலன் தரும்.

Monday, 9 January 2012

சனிப்பெயர்ச்சி யால் உங்களுக்கு வருமானம் உயருமா?

சனிப்பெயர்ச்சி யால் உங்களுக்கு வருமானம் உயருமா?

சனி கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகிவிட்டார்.இதனால் ஒவ்வொரு ராசிக்கும் உண்டான பலன்களை நாம் எழுதி வருகிறோம்...பொதுவான ராசிபலன்களை படிக்கிறோம்.ஒருவர் வேலை தேடி வருகிறார் என்றால் அவருக்கு வேலை வாய்ப்பை இந்த சனிப் பெயர்ச்சி தருமா என்பதையும்,உங்கள் தொழிலில் நல்ல லாபம் கிடைக்குமா,வருமானம் பல மடங்கு உயருமா என்பதையும் எப்படி கண்டுபிடிப்பது என்பதை ஜோதிடம் சொல்கிறது..

சனிப் பெயர்ச்சியால் ஜோசியர்களுக்கு வருமானம் கூடும் என கமெண்ட் போட காத்திருக்கும் அன்பர்களே...! முழுசா படிங்க ;-))

உங்கள் ராசி எதுவானாலும் சரி.சனி எப்படி பலன் கொடுத்தாலும் சரி.இது பொதுவான பலனை தரும்.சனிப் பெயர்ச்சியால் மனம் சோர்ந்து இருப்பவர்களுக்கு நான் சொல்லும் செய்தி டானிக் காக அமையலாம்.நான் சொல்லும் அமைப்பு உங்கள் ஜாதகத்தில் இல்லாவிட்டால் சோர்ந்தும் போக வேண்டாம்.நமது சனிப் பெயர்ச்சி ஆராய்ச்சி தொடரும்!

சனி தொழில் காரகன்.ஒருவரது தொழிலை பற்றி சொல்வதில் சனி முக்கிய பங்கு வகிக்கிறது.சனி வலுத்தாலோ,நீசமானாலோ தந்தை சிறப்பான தொழில் செய்வார்.அவர் காலத்துக்கு பின்னரே உங்களுக்கு முன்னேற்றமுண்டாகும்.அல்லது அவர் வேலை,தொழிலை நிறுத்தியபின்பே உங்களுக்கு வளர்ச்சி.சூரியன் வலுத்தாலும் நீசமானாலும் இதே பலன்தான்! ஜாதகத்தில் சனிக்கு முன்னும்,பின்னும் ராசிகளில் கிரகங்கள் இருப்பது தொழில் பலத்தை குறிக்கும்.சனியுடன் ஏதேனும் ஒரு கிரகமாவது சேர்ந்து இருப்பது நல்லது.

விருச்சிகம்,மீனம்,துலாம்,என நீங்கள் எந்த ராசியாக இருப்பினும் உங்கள் ஜாதகத்தில் குரு,துலாம் வீட்டில் இப்போது இருக்கும் சனி பார்வை படும் ராசியில் இருந்தால்,வேலை வாய்ப்பு கிடைக்கும்,வருமானம் உயரும்,தொழிலில் புதிய மாற்றம்,பணி உயர்வு,விரும்பிய இட மாறுதல் கிடைக்கும்.

அதாவது சனி பார்வை 3,7,10 ஆகும்.இதில் இப்போது துலாம் வீட்டில் இருந்து சனி தனுசு,மேசம்,கடகம் ஆகிய ராசிகளை பார்க்கிறார்.இங்கு உங்கள் ஜாதகத்தில் குரு இருந்தால் இந்த பலன்கள் உங்களுக்கு கிடைக்கும்!

Thursday, 5 January 2012

2012 எந்த ராசிக்காரர்களுக்கு யோகம்..?

2012 எந்த ராசிக்காரர்களுக்கு யோகம்..?

ராசிபலன் ,ஜோதிடம் அடிப்படையில் 2012 யார் யாருக்கு நல்லாருக்கும் என பத்திரிக்கை,டிவி,இணையம் தொடர்ந்து அலறிக்கொண்டிருந்தாலும்,நாம் பார்த்தவரை...ரிசபம்,மிதுனம்,சிம்மம்,தனுசு,மகரம்,கும்பம், ராசிக்காரர்களுக்கு சனி நல்லது செய்கிறார்..கெடுதலே செய்யலை..நன்மையை அள்ளி தரப்போகிறார் என்பதுதான் ரிசல்ட்.

மத்த ராசிக்காரங்கதான் பாவம் சனி கிட்ட வசமா மாட்டிக்கிட்டாங்க என்ற விமர்சனம் எல்லா மட்டத்திலும் மக்களால் பேசப்படுகிறது.சாதாரணமாக இப்போதெல்லாம் மக்கள் அதிகம் சனி,குரு பெயர்ச்சியை கவனிக்கிறார்கள்.காரணம் மீடியா.இதனால் ஜோதிடர்களாகிய எங்களுக்கு நல்ல லாபம்தான்.ஜோதிடத்தின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது.ஜோதிடம் பற்றி கவலைப்படாதவர்களும் ஜாதகத்தை தூசு தட்டி பத்திரம் பண்ணி வைக்கிறார்கள்.ஜோதிடம் ஒரு கணக்கு.எதிர்காலம் பற்றி ஒரு கோடாவது எங்களால் போட்டு காட்ட முடிகிறது..இதனை பயன்படுத்தி நீங்கள் ரோடே போடலாம்!!

நாத்திகம் பேசுபவர்களும் ,ஜோதிடத்தை கிண்டல் செய்பவர்களும் சனிப் பெயர்ச்சிக்கு யார் நம் ராசிக்கு என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதை சும்மா ஒரு பார்வை! பார்த்து விடுவார்கள்.என்னதான் எழுதியிருக்கான்னு பார்ப்போம்..அப்படீங்கிற மாதிரி..ஆனா அவங்களுக்கும் பயம் உண்டு.நம்பாதவனுக்கு எப்படி பயம் வரும்..?ஆனா படிக்கிறான்..!

உங்கள் ராசி எதுவானாலும் சரி.விருச்சிகம் ராசி ஏழரை சனி ஆரம்பித்தாலும் சரி.உங்கள் ஜாதகத்தில் லக்னத்துக்கு சுபர் திசை நடந்தாலோ,1,4,7,10 க்குண்டான கிரகத்தின் திசை நடந்தாலோ,அல்லது குரு திசை,புதன் திசை,சுக்கிர திசை நடந்தாலோ..வளர்பிறை சந்திரனில் பிறந்து சந்திர திசை நடந்தாலோ பெரிதாக சனி கோட்சாரம்,சனிப் பெயர்ச்சி பாதிப்பதில்லை.

(சனி பகவான் பயோ டேட்டா சனி பகவான் பற்றி சுவாரஸ்யமான 50 தகவல்கள் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்)

சுக்கிர திசை கொஞ்சம் கோளாறானவராக இருந்தால் பெண்களால் பணம் விரயமாகும்...குரு திசை குரு கெட்டவராக இருப்பின் கடன் தொல்லை உண்டாகும்...சந்திரன் பாவ கிரகங்களுடன் இருந்து திசை நடத்தினால் உடல் ஆரோக்கியம் பாதிக்கும்.

ராகு திசை,கேது திசை,செவ்வாய் திசை,சூரிய திசை,6,8,12 க்குடையவர் திசை நடந்து,துலாம்,விருச்சிகம்,கடகம்,மீனம் ராசியாக இருப்பின் கடன்,தொழில் மந்தம்,நஷ்டம்,ஏமாற்றம்,குடும்பத்தில் குழப்பம் காணப்படும்..

உங்கள் ஜாதக ராசிக்கட்டத்தில் குரு,சுக்கிரன்,புதன்,சந்திரன் போன்ற சுப கிரகங்கள் பலம் பெற்று காணப்பட்டால் உங்கள் பிரச்சினைகள் எதுவானாலும் அதை சமாளிக்கும் ஆற்றலும்,தன்னம்பிக்கையும் உங்களிடம் அதிகம் காணப்படும்..எவனா இருந்தாலும் வெட்டுவேன் என செவ்வாயும் பலமாக இருந்தால் அப்புறம் என்னங்க..உங்க ரூட்டுல நீங்க போய்கிட்டே இருங்க..சனி நல்லது!!


Wednesday, 4 January 2012

சனி பகவான் பயமுறுத்தும் பயோடேட்டா

சனி பகவான் பயமுறுத்தும் பயோடேட்டா1.ஆயுள்காரகர் என்றழைக்கப்படும் சனீஸ்வரர் அலிகிரகமாகும்(ஆணுமில்லாத பெண்ணுமில்லாத நிலை அலியாகும்)உலகில் துன்பங்களை அளிக்கும் சனிதான் பிறவியின் ஆயுளை நிர்ணயம் செய்யும் ஆயுள்காரகன் ஆகிறார்.

2.சனி பாபக் கிரகமாவார்.அதிலும் கொடிய பாபர் என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

3.குலம்-சூத்திர குலம்.(கீழ் சாதி)

4.மொழி-அன்னியம்(ஆங்கிலம் என பலர் சொல்கின்றனர்)

5.குணம்;தாமசம்(மெதுவான செயல்)

6.உயரம்;குட்டையானவர் என்பதுடன் முடவானவர் என்று கூறப்படுகிறது.

7.நிறம்;நீலம் (கறுப்பும் சொல்லப்படுகிறது..எனினும் சனியின் நிறம் நீலம்தான்.சனிக்கு நீலன் என்ற பெயரும் உள்ளது.பலரும் கறுப்பு என்றாலும் நீலமும் உகந்த நிறம்.

8.உடல் உறுப்பில் பாதத்துக்கு ஆதிபத்தியம் பெறுபவர்.

9.நரம்பு சம்பந்தமான ஆதிபத்தியம் பெறுபவர்.

10.அடிமை எனும் அந்தஸ்து பெறுபவர்.

11..தானியம்; எள்.

12.திசை; மேற்கு

13.வாகனம்; காகம்

14.ஆசனம்; பிறை

15.சுவை; கசப்பு

16.உலோகம்; இரும்பு

17.வஸ்திரம்; கிழிந்த ஆடை

18.மலர்; கருங்குவளை

19.பஞ்சபூத தத்துவத்தில்;நிலம்

20;சமித்து(தாவரம்); வன்னி

21.வாசனை திரவியம்;புனுகு

22.இடம்; குப்பைத் தொட்டி,கழிவுநீர் தேங்கும் இடம்,சாக்கடை

23.கிரக ஷேத்திரம்; திருநள்ளாறு

24;அம்சம்; ஈஸ்வர அம்சம்

25.கிழமை; சனிக்கிழமை

26.வலிமை; இரவில் வலிமை பெறும் இவர் சூரியனின் மைந்தன்.இரவில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிதுர்காரகன் சனியே ஆவார்.பகலில் பிறக்கும் குழந்தைகளுக்கு சூரியன் பிதுர்காரகன் ஆவார்.சூரியன் பிதுர்காரகன் என அழைக்கப்பட்டாலும் பகல்,இரவு பாகுபாடு உணர்ந்து பிதுர்காரகனை கணக்கிடுவது சரியாக பலன் சொல்ல ஏதுவாக இருக்கும்.

27.பார்வை; தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆகிய இடங்களை பார்வை செய்கிறார்.

28.எண்கணித ஜோதிடத்தில் சனி எண்;8..இந்த எண் என்றாலே பலரும் அலறுவர்.வாகன எண்களில் கூட இதை பலரும் பயன்படுத்துவதில்லை.நாத்திகம் பேசுவோர் இந்த எண் உள்ள வண்டியை வாங்க சொல்லுங்கள்..ஹிஹி என்பார்.8ஆம் எண் ஜாதகத்தில் சனி வலுத்தோருக்கும்,8ல் பிறந்தோர்க்கும் நன்மையே செய்கிறது.அவரா போய் விரும்பி வாங்கினா கஷ்டம்தான்.தானா அமையணும்.

29.உச்சம் பெறும் ராசி;துலாம்.(20 பாகைகள் வரை பரமோச்சம்)

30.நீசம் பெறும் ராசி;மேசம் (20 பாகைகள் வரை பரம நீசம்)

31.ஆட்சி பெறும் ராசி;மகரம்,கும்பம்

32தாயார்; சாயாதேவி

33.மனைவி; நீலாதேவி

34.ராசிக்கட்டத்தை கடக்கும் காலம்;30 வருடம்.(அதாவது முழு ரவுண்ட்

35.ஒரு ராசியில் தங்கும் காலம்;இரண்டரை வருடம்..ராசியை அதாவது 3 கட்டங்கள் கடக்கும் காலம், உங்கள் ராசி நடுவில் இருப்பின் அது ஏழரை சனி..அதாவது ஏழரை வருடம் சனி பிடிக்குள் வருகிறீர்கள்.

36.பலன்; ராசியில் பிரவேசித்து 4 மாதம் கழித்து பலன் தர தொடங்குவார்

37.அஸ்தங்கம்;சூரியனுடன் 17 பாகைக்குள் வரும்போதுஅஸ்தமனம் அடைந்து அஸ்தங்க தோசம் அடைவார்

38.அஸ்தமனம் ஆகும் ராசிகள்; கடகம்,சிம்மம்

39.அதிதேவதை; யமன்

40.பிரதி அதிதேவதை;பிரஜாபதி

41.அவதாரம்;சனி பகவான் மகாவிஸ்ணுவின் கூர்ம அவதாரம் என சொல்லப்படுகிறது

42.மூலத்திரிகோண ராசி;கும்பம்

43.நட்பு ராசிகள்;ரிசபம்,மிதுனம்,கன்னி

44.பகை ராசிகள்;கடகம்,சிம்மம்,விருச்சிகம்

45.சமம் பெறும் ராசிகள்;தனுசு,மீனம்

46.நட்பு கிரகங்கள்;புதன்,சுக்கிரன்,ராகு,கேது

47.பகை கிரகங்கள்;சூரியன்,சந்திரன்,செவ்வாய்

48.சமம் கிரகம்;குரு

49.சனி திசை காலம்;19 வருடம்

50.சனி நட்சத்திரங்கள்; பூசம்,அனுசம்,உத்திரட்டாதிMonday, 2 January 2012

2012 எந்த ராசிக்காரர்களுக்கு நல்லாருக்கும்..? astrology

2012 எந்த ராசிக்காரர்களுக்கு நல்லாருக்கும்..? astrology


சனிப் பெயர்ச்சி பதிவுகளை வாசித்து உற்சாகப்படுத்திக்கொண்டிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!

விஜய் டிவி நீயா நானா வில் நேற்று மீண்டும் கோபிநாத் ஜோதிடம் தலைப்பில் விவாதம் நடத்தினார்.அவருக்கும் ஜோதிடம் நல்ல ஹிட்ஸ் கொடுக்கும் போல..2012 ல் எந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலனை கொடுக்கும் என்பது தலைப்பு.வழக்கம் போல ஜோதிடர் ஷெல்வீ தலைமை.ஜோதிட நிகழ்ச்சிகளுக்கு இவரையே ஏன் கோபிநாத் அங்கீகரிக்கிறார் என்பது ஒரு புதிர்.தமிழ்கத்தில் பத்திரிக்கைகளில் ராசிபலன் எழுதுபவர்தான் சிறந்த ஜோசியரோ என்னவோ.கடைக்கோடி சாதாரண கிராமத்தில் சொல்லும் ஜோசியன் பலன் இவர்கள் சொல்வதை விட நச்சுன்னு இருக்கும்.சென்னை ஜோதிடர்களை வைத்தே நிகழ்ச்சி நடத்துகிறார் கோபி.சரி அவருக்கும் ஏதோ சம்திங் கிடைக்கும் போல.

அந்த நிகழ்ச்சிகளில் விளக்கப்பட்ட பலன்களில் எனக்கு தோன்றியதையும் இந்த பதிவில் எழுதுகிறேன்...

விருச்சிக ராசிக்கு ஏழரை சனி ஆரம்பிக்கிறது.அவர்கள் பாசிட்டிவை விட நெகடிவை அதிகம் ஈர்த்துக்கொண்டு கவலைப்படும் ரகம் என்றார் ஒரு ஜோசியர்.உண்மைதான்.பொதுவாகவே இந்த ராசிக்கு சந்திரன் நீசம் என்பதால் பயந்த சுபாவம் உல்ளவர்கள்.சந்தேக குணம் அதிகம் உண்டு.இந்த ஏழரை சனி அவர்களுக்கு விரயத்தை அதிகம் தரும் என்பதுதான்...அதிகம் பேரின் கருத்து.வீடு கட்டலாம் வாங்கலாம் இல்லைன்னா..மருத்துவ செலவுதான்...புது வாகனம் வாங்குவதும்,நல்லது...

பொதுவா ராசிக்கு பலன் சொல்லும்போது லக்னத்தையும் பார்க்கணும் என ஒரு ஜோசியர் சொன்னார்.அவருக்கு சிறந்த கருத்தை ? கூறியவருக்கானபரிசு தரப்பட்டது...ராசி,லக்னம் ரெண்டுக்குமே பலன் பார்க்கலாம்..ஆனா சந்திரன் என்பதுதான் மனதையும் உடலையும் இயக்ககூடியது.லக்னம் உயிர்,குணத்தை சொல்லக்கூடியது.அதனால் இரண்டையும் பார்ப்பது நல்லதுதான்.ஆனா ராசிக்கு நல்லாருந்து,லக்னத்துக்கு சரியில்லைன்னா குழப்பம் தான்.முடிவெடுக்க முடியாம தடுமாற்றம் உண்டாகும்.அதிக தாக்கங்களை உண்டாக்கும் ராசிக்கு பார்த்தாலே போதும்.ஏன்னா...துலாம் ராசிப்படி ஜென்ம சனி நடக்குது சார்..விருச்சிக லக்னபடி உங்களுக்கு ஏழரை சனி ஸ்டார்ட் சார்..அதனால் நீங்க காலி சார்...என்றா சொல்ல முடியும்..?


இதைவிட அதிக தாக்கத்தை உண்டாக்கும் திசா புத்தியையும்,ஜாதகத்தில் கிரக பலம்,அதன் சாரம் பொறுத்தே சனிப் பெயர்ச்சி,குருப் பெயர்ச்சி பலன்களும் மாறிவிட வாய்ப்புண்டு...

ஐஸ்வர்யாராய்க்கு தாமதமாக குழந்தை பிறந்ததும்,ரஜினிக்கு திடீர் உடல்நலக்குறைவு உண்டானதும்,விஜய்,அஜீத்,சூர்யா வுக்கு தொடர் வெற்றி கிடைப்பதும் ராசிபலன் மட்டும் காரணம் அல்ல.அதையும் தாண்டி கிரக பலமும்,திசா புத்தியும்தான்!

ரிசபம்,சிம்மம்,கும்பம் ராசிக்காரர்கள் தப்பிச்சிட்டாங்க,சனி விலகிட்டார்.. என ஜோதிடம் சொன்னாலும், இன்னும் பல சிம்ம ராசிக்காரர்கள் துயரத்திலி ருந்து மீள வில்லை.கிரகபலம் நன்றாக இருக்கும், ஜெயலலிதா போன்ற சிம்ம ராசிக்காரர்கள் மட்டுமே பாதுகாப்பான சூழலை, வெற்றியை அடைந்திருக்கின்றனர்.ஆனாலும் நிதி நெருக்கடி,சசிகலா மன உளைச்சல்,முல்லைப் பெரியாறு என ஜெயலலிதா பல சவால்களை எதிர்கொள்வதின் சாரம் திசா புத்தியே.

ரிசப ராசிக்கு நல்லாருக்கும் என்றால் அது வயதை பொறுத்து மாறுபடும்..கருணாநிதிக்கு எத்தனை வயசு.அவருக்கு 6 ஆமிடத்து சனி நிம்மதியை கொடுத்து விடுமா..எதிரியை நிலை குலைய செய்யுமா என்றால் செய்யாது..கனிமொழி விடுதலை என நல்ல செய்திகள் வேண்டுமானால் மன நிம்மதியை கொடுத்திருக்கலாம்..எதிர்கட்சி கூட ஆகமுடியா நிலையில் அவருக்கு வேறு எது சந்தோசத்தை தர இயலும்..? ஆனாலும் ரிசப ராசிக்கு நல்லாருக்கே என்றால்...அவருக்கு ஜெயலலிதாவால் கடும் சோதனைகள் வராது..அதுவும்,அவருக்கு மட்டும் என்று சொல்லலாம்!!

rasipalan,jothidam,astrology,lucky stone

-------------தொடரும்