Monday, 2 January 2012

2012 எந்த ராசிக்காரர்களுக்கு நல்லாருக்கும்..? astrology

2012 எந்த ராசிக்காரர்களுக்கு நல்லாருக்கும்..? astrology


சனிப் பெயர்ச்சி பதிவுகளை வாசித்து உற்சாகப்படுத்திக்கொண்டிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!

விஜய் டிவி நீயா நானா வில் நேற்று மீண்டும் கோபிநாத் ஜோதிடம் தலைப்பில் விவாதம் நடத்தினார்.அவருக்கும் ஜோதிடம் நல்ல ஹிட்ஸ் கொடுக்கும் போல..2012 ல் எந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலனை கொடுக்கும் என்பது தலைப்பு.வழக்கம் போல ஜோதிடர் ஷெல்வீ தலைமை.ஜோதிட நிகழ்ச்சிகளுக்கு இவரையே ஏன் கோபிநாத் அங்கீகரிக்கிறார் என்பது ஒரு புதிர்.தமிழ்கத்தில் பத்திரிக்கைகளில் ராசிபலன் எழுதுபவர்தான் சிறந்த ஜோசியரோ என்னவோ.கடைக்கோடி சாதாரண கிராமத்தில் சொல்லும் ஜோசியன் பலன் இவர்கள் சொல்வதை விட நச்சுன்னு இருக்கும்.சென்னை ஜோதிடர்களை வைத்தே நிகழ்ச்சி நடத்துகிறார் கோபி.சரி அவருக்கும் ஏதோ சம்திங் கிடைக்கும் போல.

அந்த நிகழ்ச்சிகளில் விளக்கப்பட்ட பலன்களில் எனக்கு தோன்றியதையும் இந்த பதிவில் எழுதுகிறேன்...

விருச்சிக ராசிக்கு ஏழரை சனி ஆரம்பிக்கிறது.அவர்கள் பாசிட்டிவை விட நெகடிவை அதிகம் ஈர்த்துக்கொண்டு கவலைப்படும் ரகம் என்றார் ஒரு ஜோசியர்.உண்மைதான்.பொதுவாகவே இந்த ராசிக்கு சந்திரன் நீசம் என்பதால் பயந்த சுபாவம் உல்ளவர்கள்.சந்தேக குணம் அதிகம் உண்டு.இந்த ஏழரை சனி அவர்களுக்கு விரயத்தை அதிகம் தரும் என்பதுதான்...அதிகம் பேரின் கருத்து.வீடு கட்டலாம் வாங்கலாம் இல்லைன்னா..மருத்துவ செலவுதான்...புது வாகனம் வாங்குவதும்,நல்லது...

பொதுவா ராசிக்கு பலன் சொல்லும்போது லக்னத்தையும் பார்க்கணும் என ஒரு ஜோசியர் சொன்னார்.அவருக்கு சிறந்த கருத்தை ? கூறியவருக்கானபரிசு தரப்பட்டது...ராசி,லக்னம் ரெண்டுக்குமே பலன் பார்க்கலாம்..ஆனா சந்திரன் என்பதுதான் மனதையும் உடலையும் இயக்ககூடியது.லக்னம் உயிர்,குணத்தை சொல்லக்கூடியது.அதனால் இரண்டையும் பார்ப்பது நல்லதுதான்.ஆனா ராசிக்கு நல்லாருந்து,லக்னத்துக்கு சரியில்லைன்னா குழப்பம் தான்.முடிவெடுக்க முடியாம தடுமாற்றம் உண்டாகும்.அதிக தாக்கங்களை உண்டாக்கும் ராசிக்கு பார்த்தாலே போதும்.ஏன்னா...துலாம் ராசிப்படி ஜென்ம சனி நடக்குது சார்..விருச்சிக லக்னபடி உங்களுக்கு ஏழரை சனி ஸ்டார்ட் சார்..அதனால் நீங்க காலி சார்...என்றா சொல்ல முடியும்..?


இதைவிட அதிக தாக்கத்தை உண்டாக்கும் திசா புத்தியையும்,ஜாதகத்தில் கிரக பலம்,அதன் சாரம் பொறுத்தே சனிப் பெயர்ச்சி,குருப் பெயர்ச்சி பலன்களும் மாறிவிட வாய்ப்புண்டு...

ஐஸ்வர்யாராய்க்கு தாமதமாக குழந்தை பிறந்ததும்,ரஜினிக்கு திடீர் உடல்நலக்குறைவு உண்டானதும்,விஜய்,அஜீத்,சூர்யா வுக்கு தொடர் வெற்றி கிடைப்பதும் ராசிபலன் மட்டும் காரணம் அல்ல.அதையும் தாண்டி கிரக பலமும்,திசா புத்தியும்தான்!

ரிசபம்,சிம்மம்,கும்பம் ராசிக்காரர்கள் தப்பிச்சிட்டாங்க,சனி விலகிட்டார்.. என ஜோதிடம் சொன்னாலும், இன்னும் பல சிம்ம ராசிக்காரர்கள் துயரத்திலி ருந்து மீள வில்லை.கிரகபலம் நன்றாக இருக்கும், ஜெயலலிதா போன்ற சிம்ம ராசிக்காரர்கள் மட்டுமே பாதுகாப்பான சூழலை, வெற்றியை அடைந்திருக்கின்றனர்.ஆனாலும் நிதி நெருக்கடி,சசிகலா மன உளைச்சல்,முல்லைப் பெரியாறு என ஜெயலலிதா பல சவால்களை எதிர்கொள்வதின் சாரம் திசா புத்தியே.

ரிசப ராசிக்கு நல்லாருக்கும் என்றால் அது வயதை பொறுத்து மாறுபடும்..கருணாநிதிக்கு எத்தனை வயசு.அவருக்கு 6 ஆமிடத்து சனி நிம்மதியை கொடுத்து விடுமா..எதிரியை நிலை குலைய செய்யுமா என்றால் செய்யாது..கனிமொழி விடுதலை என நல்ல செய்திகள் வேண்டுமானால் மன நிம்மதியை கொடுத்திருக்கலாம்..எதிர்கட்சி கூட ஆகமுடியா நிலையில் அவருக்கு வேறு எது சந்தோசத்தை தர இயலும்..? ஆனாலும் ரிசப ராசிக்கு நல்லாருக்கே என்றால்...அவருக்கு ஜெயலலிதாவால் கடும் சோதனைகள் வராது..அதுவும்,அவருக்கு மட்டும் என்று சொல்லலாம்!!

rasipalan,jothidam,astrology,lucky stone

-------------தொடரும்7 comments:

A.R.ராஜகோபாலன் said...

அழகான கருத்துக்களை
ஜோதிடம் வாயிலாக
அருமையாக தந்தமைக்கு நன்றி
அன்பரே

Rathnavel said...

நல்ல பதிவு.
நன்றி.

Yoga.S.FR said...

வணக்கம் சதீஷ் சார்!உண்மைதான்! நான் கூட இங்கு(பிரான்சில்)இரவு நேரம் கோபிநாத் நிகழ்ச்சி பார்த்தேன்.சிரிப்புத் தான் வந்தது.செல்விக்கு ஏன் ஸ்பெஷல் இடம் என்று எனக்கும் தெரியவில்லை!கடந்த ஆண்டிலும் இதுபோல் ஓர் நிகழ்ச்சியில் செல்விக்கே விஷேட இடம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சி முடியும் நேரத்தில் தான் "அந்த"ஜோதிடரை கோபிநாத்,என்ன எதுவும் பேசாது இருக்கிறீர்கள் என்று கேட்டதும்,கொட்டித் தீர்த்தார் பாருங்கள், நச்!

naren said...

நானும் அந்த நிகழ்ச்சியைப் பார்த்தேன். உங்களையும் அழைத்திருக்கலாமோ என்று தோன்றியது.

நல்ல நேரம் சதீஷ்குமார் said...

நன்றி...யோகா,நரேன் சார்!!

நல்ல நேரம் சதீஷ்குமார் said...

ராஜகோபாலன்,ரத்னவேல் சார் நன்றி!!

திண்டுக்கல் தனபாலன் said...

ஒவ்வொரு விசயத்தையும் உங்கள் பாணியில் நன்றாக, விவரமாக சொல்லி உள்ளீர்கள்! நன்றி நண்பரே!