Tuesday, 28 February 2012

ஜோதிடம்;ராகு கேது தோசம் நீங்க - திருப்பாம்புரம்

ஜோதிடம்;ராகு கேது தோசம் நீங்க - திருபாம்புரம்

கும்பகோணம் -கொல்லுமாங்குடி-காரைக்கால் சாலையில் கற்கத்தி என்ற பேருந்து நிறுத்தத்தில் இருந்து தெற்கே 3கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த தலம்.இங்கு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில் உள்ளது.ஒரு முறை வினாயகர் கைலாயத்துக்கு சென்று சிவபெருமானை ஆராதித்து வழிபாடு செய்தார்.அப்போது ஈசனின் கழுத்தை சுற்றியிருந்த பாம்பு.வினாயகர் தன்னையும் வணங்கியதாக கர்வம் கொண்டது.இதையறிந்த சிவபெருமான் ஆவேசம் அடைந்து நாக இனம் முழுவதும் சக்தி இழந்து தவிக்குமாறு சாபமிட்டார்.உடனே பாம்புகள் ஆதிசேஷன் தலைமையில் சேஷபுரீஸ்வரர் ஆலயத்திற்கு சென்றுசாப விமோசனம் பெற்றன.சிவபெருமானின் பஞ்சமுகங்களை குறிக்கும் வகையில் அமையப்பெற்று பஞ்சலிங்கத்தலமாக இத்தலம் விளங்குகிறது.நவகிரக தோசங்கள் யாவும் இத்தலத்தில் நிவர்த்தியாகிறது.

சனிப்பெயர்ச்சியால் துன்பப்படுபவர்களும் ,ராகு திசை,சனி திசை,கேது திசை,சூரியதிசையால் துன்பப்படுபவர்களும் இங்கு வந்து வழிபட்டால் தோசம் நீங்கும்...சினிமா நடிகர் நடிகைகள் பலர் இங்கு ரகசிய பரிகாரங்கள் செய்வதும்,ஜெயலலிதா முதல் விஜயகாந்த் வரை அரசியல் பிரபலங்களும் இங்கு வந்து செல்வதுண்டு..காரணம் நாகம் நம் வாய்ப்புகளை கொத்தி கொத்தி தடுத்துவிடுமாம்...அதனால் இங்கு வந்து செல்லும்போது நம் செயல்பாட்டை மூர்க்கத்தனமாக மாற்றும் நாகதோசம் சமாதானம் ஆகும்..ஒரு சிலருக்கு இரண்டில் ராகு இருக்கும்..அவங்க பேச்சை காது கொடுத்து கேட்க முடியாது..அந்தளவு திமிராக ஆணவமாக கொடூரமாக பேச்சு இருக்கும்..வாய திறந்தாலே சண்டைதான்..இதுக்கு காரணம் இரண்டில் ராகு...அது லக்னத்துக்கு சுபர் சாரத்தில் இருந்தால் பெருசா பாதிக்காது...சனி,செவ்வாய் சாரத்தில் இருந்தால் இன்னும் மோசம்தான்..குடும்பமும்,வருமானமும் சிறப்பில்லாமல் கடனாளியாக இருப்பார்கள்....தைரியமும், இழந்துவிடுவர்.

5ல் ,9ல் ராகு கேதுக்கள் இருந்தால் பெண் குழந்தை பிறக்கும்..இல்லையேல் கர்ப்பம் அடிக்கடி கலையும்...குழந்தைகளால் தொல்லைகளும் உண்டாகும்....இதுவும் நாகதோசமே...7ல் ராகு,கேது அந்நியத்தில் திருமணம் நடக்கும்..வேறு மதமோ ஜாதியோ உள்ளவரை மணப்பர்..காதல் திருமணமாக இருக்கலாம்..அல்லது வரப்போகும் கணவன் அல்லது மனைவியால் நிம்மதி குலையும் இருவருக்கும் நான் பெரியவனா நீ பெரியவனா என்ற சண்டை நடக்கும்...பிரிவு வரை செல்லும்..பெரும்பாலும் விவாகரத்துக்கு கோர்ட்டில் நிற்பவர்கள் இவர்கள்தான்..செக்ஸ் குறைபாடு,காமம் ஒருவருக்கு குறைவு,ஒருவருக்கு அதிகம்...படுக்கையறையில் சந்தோசம் இல்லாமல் போவதே பல குடும்பங்களில் ஓயாத சண்டைகளுக்கு காரணம்..எத்தனை நாளைக்குதான் கணவன் அமலா பால்,நயன் தாரா வை நினைச்சுக்கிட்டு இருப்பது..மனைவி சூர்யா,அஜீத்,விஜய் ந்னு நினைச்சுக்கிட்டு இருப்பா..ரெண்டு பேரும் ஒரு வீட்டில் ஏதோ வண்டி ஓடும்...நாக தோசம் அதிக பேராசையையும்,அதிக டென்சனையும்,அதிக காமத்தையும் உண்டாக்கும்...இந்த ஆலயம் செல்வது தோசம் நீங்க மேற்க்கண்ட குறைகள் நீங்க,நல்ல கணவன்,மனைவி அமையும்..

Thursday, 23 February 2012

ஜோதிடம்;ஒவ்வொரு கிரகமும் ஜாதகத்தில் என்ன வேலை செய்கின்றன..?


நவக்கிரக காரகத்துவம்;

நவக்கிரக காரகத்துவம் என்றால், நவக்கிரகங்கள் தரும் பலன் என்று பொருள். எந்த கிரக என்னென்ன வகையான பலன்களை அளிக்க முடியும். எந்தெந்த பலன்களுக்கு கராணம் ஆகிறார் என்பதாகும். 27 நட்சத்திரங்கள் 9 கிரகங்களின் சாரம் பெற்று பன்னிரு ராசிகளில் பவனி வரும்போது என்ன பலன் தருவார் என்பதை அறிய இந்த அத்தியாயம் மிகமிக அவசியம் ஆகும்.

சூரியன்

சூரியன் பிதுர்காரகர். அதாவது தந்தையை குறிப்பவர். பிதா, ஆத்மா, சிரசு, பற்கள், வலதுகண், சிலிர்த்த தலைமுடி, பித்ததேகம், வைத்தியம், ஒற்றைத்தலைவலி, ஜூரம், வியாதியாதியான பெண், சித்தம் பேதலித்த பெண்ணுடன் போகம், பெயர், புகழ், தைரியம், அரசசேவை, உத்யோகம், சைவானுஷ்டானம், தவம் புரிதல், சதாசிவன், பஞ்சலோகம், இரசவாதம், யானை, கோதுமை, மாணிக்கம், மிளகு யாத்திரை, பகல்பொழுது, ஒளி, மலை, காடு, கிராம சஞ்சாரம் இவைகளுக்கெல்லாம் சூரியனே காரகர் ஆவார்.

சந்திரன்

சந்திரன் மாத்ரு காரகர். அதாவது தாயைக் குறிப்பவர். மாதா, பராசக்தி, நல்விருந்து, ஆடை, குதிரை, தூக்கம், உடல் பருத்தும் இளைத்தும் சீறும் இருத்தல், நினைவிழத்தல், கூயரோகம், சீதளநோய்கள், இடது கண், புருவம், குடை, உத்யோகம், புகழ், முத்து, நிலையாக ஒரு இடத்தில் நில்லாமை, வெண்கலம், வெண்ணெய், அரிசி, உப்பு, மச்சம், உழவன், சத்திரம்,கந்தபுஷ்பம், சாமரம், பலம், உப்பளவர், வண்ணார், குளியல் இவைகளுக்கெல்லாம் சந்திரனே காரகம் ஆவார்.

செவ்வாய்

செவ்வாய் சகோதரர் காரகர். பூமி, சுப்ரமணியர், பத்ரகாளி, கோபவான், குயவன், அக்கினி முகமாக செய்யும் தொழிலினர். யுத்தம், இரத்தம், சாயம், வீரதீரச் செயல்கள், செம்பு, பவழம், துவரை, அக்னி பயம், காயம், பகை, கடன், சோரம், வீர்யம், உற்சாகம், ஆடு, படைத்தலைமை, அதிகாரம், அரசியல் பதவி, விதவை ஸ்திரிபோகம், திடீர் மரணம் இவைகளுக்கெல்லாம் செவ்வாயே காரகர் ஆவார்.

புதன்

புதன் அம்மான் காரகர். மாமன், கல்விஞானம், விஷ்ணு, வியாபாரி, கணக்கன், தானாதிபதி, தூதுவன், தேர்ப்பாகன், வாக்கு வன்மை, கதை, கவிதை, கட்டுரை, சங்கீதம், ஜோதிடம், உபந்நியாசம், மேடைப்பேச்சு, உபாசனை, யுக்தி, புத்தி, சத்தியவசனம், வைஷ்வ நியமம், வியாபாரங்கள், கடித பரிவர்த்தனை, தற்காலத்தில் கெரியர், சிற்பத்தொழில், திருநங்கை, தேர், தாதன், தாதி, நாட்டிய வகைகள் முதலானவைகளுக்கும் அண்டரோகம், வாதநோய், விஷரோகம், பிறன் இல் விழைதல், (தாசிலோலன்) பிரபஞ்சமுணர்ந்தவன், நிலையானபேச்சு, புத்திகுறைவு, மரகதப்பச்சை ரத்தினம் ஆகியவைகளுக்கும் இளங்கன்று, இலை, பாசிப்பயறு, வெந்தயம் இவைகட்கும் புதனே காரகர் ஆவார்.

வியாழன் (எ) குரு

வியாழன் புத்திர காரகர். புத்திரர், பிரம்மா, ஞானம், அஷ்டமாசித்துகள், உபதேசம், புத்தி, யுக்தி, யோகப்பயிற்சி, ஆசானாயிருத்தல், உபதேசம், விவகார ஆலோசனை, அரச பதவி, குடும்பத்தலைவன், அரசு சேவை, செல்வம், செல்வாக்கு, ஒழுக்கம், அரச வெகுமதி, பட்டங்கள், விருதுகள், சுருதி, ஸ்மிருதி, ஆன்மீக நெறிகள், ஆன்மீக ஒழுக்கம், சாந்தம், தங்கம், வைடூரியம், புஷ்பராகம், சேமேதேகம், மலர் வகைகள், கனி வகைகள், இனிப்பு, கண்கள், சுற்று வர்க்கம், சித்தர் பரம்பரை, ரிஷி வர்க்கம், தேனி, கடலை, சீரகம் ஆகியவைகட்கு வியாழன் (எ) குருவே காரகர் ஆவார்.

சுக்ரன்

சுக்ரன் களத்திரகாரகர். மனைவி, வீடு, பட்டப்பெயர், பகல்கால மாதா, பல பெண்கள் தொடர்பு, தாசிலோலன், சங்கீதவாத்யம், பரதநாட்டியம், மற்றும் அதில் நாட்டம், வாசனை மலர்கள், புனுகு, ஜவ்வாது, கஸ்தூரி, மற்றும் பரிமள வகைகள், கட்டில் மெத்தை சப்பிரமம் முதலானவைகளுக்கும் வெண்சாமரம், அரசவர்க்க மங்கை, அழகி, போகபாக்யம், அழகு, இளமை, மைவிழி, செல்வவளம், வாகனம், மாலை, கொடி, பொம்மைகள், முதலானவைகளுக்கும் ரத்தினம், வைரம், வெள்ளி, கப்பல் போக்குவரத்து மற்றும் வணிகம், அகடவிகடம்  பேசுதல், மிமிக்ரி செய்தல், ஆசை, பெண்தெய்வவழிபாடு, மக்களிடம் செல்வாக்கு மக்களுக்காக வாதிடல் மற்றும் போராடுதல் மக்கள் சேவைக்கு அறநிலை அமைத்தல் நட்பு, பசு, பால், தயிர், அன்னம், மொச்சை, புளி, ஈயம், தேவஇனப்பெண்கள், இலட்சுமி கடாட்சம், ஆகாய, சமுத்திர யாத்திரை ஆகியவைகளுக்கு சுக்ரனே காரகர் ஆவார்.

சனி 

சனி ஆயுள்காரகர். இரவுக்கால தந்தை சாத்தான், உபாயம், ஜீவன மார்க்கம், எருமை விருத்தி, இரும்பு, ஆளடிமை சேவக விருத்தி, வயல், விவசாயம், நீலரத்தினம், ஆகியவைகளுக்கும் மரவேலை, களவு, ஆத்ம பலமின்மை, சிறைமடல், இராஜதண்டனை, வீண்வார்த்தை, வெட்கமின்மை, துன்பம், ஏட்டிக்கு போட்டியாக வாயாடுதல், கடன், அபகர்மா, நீதிக்கு புறம்பானவை. நாத்திகம் பேசுதல், மதுவர்க்கம் அருந்துதல், போதை வஸ்துக்கள், நீச ஸதிரி, விதவை மாதர், ஊனமான ஸ்திரியும் இன்பம் அனுபவித்தல், அலி, அங்கஹீனம், சித்த சுவாதீனமின்மை, மேகநோய், பித்தநோய், எள், கடுகு, உளுந்து, நல்லெண்ணை ஆகியவைகட்கும் சனியே காரகர் ஆகிறார்.

ராகு

யோகம் ராகு தந்தை வழிபாட்டன் வம்சம், எதிர்பாராத புகழ், ஜாலவித்தை (மேஜிக்) செப்படி வித்தை (ஏமாற்றுதல்), களவு, பலவகை வேடத்தொழில், மறைமுக வருவாய் பெறுதல், சேவகத் தொழில், சொந்த ஊர்விட்டு அயலூர் வாசம், தன் குலத்துக்கு விரோதமாக நடத்தல், கண்கட்டி வித்தைகள், உடல்நலம் குன்றிய பெண்ணிடம் இன்பம் அனுபவித்தல், குஷ்டம், வீக்கம், அதிகம் பேசுதல், வாய்வு பிடிப்பு, பித்தம், வயிற்றுவலி, வெட்டுக்காயம், பிளவைக்கட்டிகள் போன்ற நோய்களுக்கும் வளர்ப்பு பிராணிகள், சிறைப்படல், லஞ்சம் வாங்குதல், மதம் மாறுதல் போன்றவைகளுக்கு ராகுவே காரகர்.

கேது

ஞானம், தாய்வழி பாட்டன் வம்சம், கட்டத்தொழில், கம்பளம், சுயஇன்பம், நீசத்தொழில், விபசாரம், பாபத்தொழில், அயல்தேச ஜீவனம், ரணம், விஷரோகம், குஷ்டம், குன்மம் முதலியவைகளுக்கும் தீயினால் கண்டம், தற்செருக்கு, சதா சுகமின்மை, சிறைப்படல் ஆகியவைகட்கு கேதுவே காரகன் கேது மோட்சகாரகன் என்று கூறுவது மரபு.

Sunday, 19 February 2012

வாஸ்து சாஸ்திரம்;மனையடி சாஸ்திரம்;குடி போக நல்ல நாள்,ராசிபலன் பார்த்தல் எப்படி..?

வாஸ்து சாஸ்திரம்;மனையடி சாஸ்திரம்;குடி போக நல்ல நாள்,ராசிபலன் பார்த்தல் எப்படி..?1. அடிமனை கோல (வீட்டிற்கு அஸ்திவாரம் போட)

சித்திரை, வைகாசி, தை மாதங்களில் 
குரு, சுக்கிரன் இருவரும் அஸ்தங்கததோஷம் அடையாமல் பிரகாசமாக இருக்கும்பொழுது
அசுவினி, ரோகிணி, மிருகசீர்ஷம், புனர்வசு, மகம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், கேட்டை, உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதையம், உத்திராடம், திருவோணம், ரேவதி என்ற நஷத்திரங்களில்
ரிக்தை, பௌர்ணமி, அமாவாசை தவிர மற்ற திதிகளில்
திங்கள், புதன், வியாழன், வெள்ளி, சனி இவர்களின் வாரங்களில்
இவர்களுடைய லக்னங்களில்
அடிமனைகோலினால் நன்மையுண்டாகும்.

2. வீடு கட்ட ஆரம்பிக்க
ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி என்ற இந்த மாதங்களில் வீடு கட்டும் வேலை எதுவும் செய்யக்கூடாது.
மேற்கண்ட மாதங்களிலும் ஆடி மாதத்திலும் வாஸ்து நிர்மாணம், கிருகப்பிரவேசம் செய்தால் தரித்திரனாகிவிடுவான்.

3. க்ருஹ ப்ரவேசத்திற்கு நல்ல காலம்

1. சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை என்னும் மாதங்களில்
2. அசுவனி, ரோகிணி, மிருகசீர்ஷம், புனர்வசு, பூசம், உத்திரம், ஹஸ்தம், சுவாதி, மூலம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதையம், உத்திரட்டாதி, ரேவதி என்னும் நஷத்திரங்களில்
3. திங்கள், புதன், வியாழன், வெள்ளி, சனி என்ற வாரங்களில்
4. 2-ம் இடம் சுத்தியுள்ள ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், கும்பம் என்ற லக்னங்களில்
கிரகப்பிரவேசம் செய்யவேண்டும்.

4. முடிக்காமல் கிருஹப்பிரவேசம் கூடாது.

மேற்கூரை கட்டாமலும்
கதவு போடாமலும்
கவர், தரை பூசாமலும்
பஞ்ச மகாயக்ஞம் செய்யாமலும்
பிராமண போஜனம் செய்விக்காமலும்
வீட்டில் பிரவேசித்தால் அந்த வீட்டில் பேய் புகுந்து விடும். பிராணஹானியும் ஏற்படும். ஆகவே மேற்கண்டவைகளை முடித்த பிறகே கிருகப்பிரவேசம் செய்யவேண்டும்.

உங்கள் ஜாதகத்தில் இந்த யோகங்கள் இருக்கிறதா..?


உங்கள் ஜாதகத்தில் இந்த யோகங்கள் இருக்கிறதா..?
சூரிய யோகங்கள்

1. வேசி யோகம் : சூரியனுக்கு 2ல் சந்திரன், ராகு கேதுக்களைத் தவிர ஏதேனும் கிரஹம் இருப்பது, பண வருவாய், சத்ருக்கள் ஜெயம்.
2. வாசி யோகம் : சூரியனுக்கு 12ல் சந்திரன் ராகு கேதுக்களைத் தவிர மற்ற கிரஹம் இருப்பது, பேரும் புகழும் உண்டாகும்.
3. சுப உபயசாரி யோகம் : சூரியனுக்கு இரு பக்கங்களிலேயும் (இருராசிகளிலேயும்) கிரகங்கள் இருப்பது. நல்ல பணவருவாய், பேரும் புகழும் உண்டாகும்.

பஞ்ச மஹாபுருஷ யோகங்கள்

1. பத்ர யோகம் : புதன் ஆட்சி அல்லது உச்சத்தில் லக்னத்திற்கோ அல்லது சந்திரனுக்கோ கேந்திரத்தில் நிற்பது. கம்பீரத்தோற்றம், சபைகளில் பேசும் திறமை, நல்ல பணவருவாய்.
2. ருசக யோகம் : அங்காரகன் ஆட்சி அல்லது உச்சத்தில் நின்று லக்னத்திற்கோ அல்லது சந்திரனுக்கோ கேந்திர திரிகோணங்களில் இருப்பது. நல்ல பேரும் புகழும், தீர்க்காயுள், பணவருவாய், சத்ருக்களை வெல்லும் திறமை, உத்தரவுகளைப் பிறப்பிக்கும் பெரிய உத்தியோகங்கள்.
3. சசயோகம் : சனி பகவான் ஆட்சி உச்சங்களில் ருது கேந்திரத்தில் நிற்பது. நல்ல படிப்பு, சொத்து, வாகனங்கள், பெரிய உத்தியொகம், ஆயினும் பொல்லாத குணம் உள்ளவன்.
4. ஹம்ஸ யோகம் : குரு பகவான் ஆட்சி உச்சம் பெற்று லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திரத்தில் நிற்பது. நல்ல பேருள்ள சீமான், பணவருவாய் உண்டு.
5. மாலவ்ய யோகம் : சுக்கிரன் ஆட்சி உச்சம் பெற்று லக்னத்திற்கோ சந்திரனுக்கோ கேந்திரத்தில் நிற்பது. நல்ல தோற்றமுள்ள தேகமுடையவன், பேரும் புகழும் உள்ளவன். தனவான், வாகனங்கள் உள்ளவன். காமம் அதிகம் உள்ள ஜாதகன்.

அஷ்டலஷ்மி யோகம்
இராகு 6ல் நின்று குரு கேந்திரத்தில் இருப்பானாகில் இந்த யோகமாகும். எல்லாவித சுகங்களும் சந்தோஷங்களும் உண்டு.

தர்ம கர்மாதிபதி யோகம்
9க்கும் 10க்கும் அதிபதிகள் ஒன்று கூடுவதோ அல்லது பார்ப்பதோ அல்லது பரிவர்த்தனமோ உண்டெனில், இந்த யோகமாகும். நல்ல புத்திமான், பெரும் பதவி, பண வசதி பேரும் புகழும் உண்டாகும்.

அகண்ட சாம்ராஜ்ய யோகம்;
2,9 அல்லது 11க்குடையவன் ஆட்சி உச்சம் பெற்று பலமாகி நின்று, குரு ஐந்துக்கோ அல்லது பத்துக்கோ அதிபதியாகி கேந்திரங்களில் இருந்தால் இந்த யோகமாகும். தீர்க்க ஆயுள், நல்ல பணவசதி, பேரும் புகழும் உண்டாகும்.

வசுமதி யோகம்
சுபக்கிரகங்கள் உபசய வீடுகளில் (3,6,10,11) இருப்பது. நல்ல பணவசதி பேரும், புகழும் பெரும் உத்யோகம்.

குரு சண்டாள யோகம்
பிரஹஸ்பதிக்கு ராகு, கேது அல்லது சனியின் சேர்க்கை.
ஜாதகன் மதப்பற்று இல்லாதவன். கடவுள் பேரில் நம்பிக்கை இல்லாதவன்.

கால சர்ப்ப யோகம்
லக்னமும் எல்லாக் கிரஹங்களும் ராகு கேது இவர்களின் மத்தியில் இருப்பது. காலசர்ப்ப யோகத்தில் பிறந்தவர்கள் அனேக கஷ்டங்களை அனுபவித்து தன்னுடைய சுய உழைப்பினால் முன்னேறக்கூடியவர்கள்.

விபரீத ராஜயோகம்
துர்ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 6,8,12 அதிபதிகள் ஒன்று கூடியோ அல்லது தனித்தனியாகவோ 6,8,12 வீடுகளில் இருப்பது. இந்த ஜாதகத்தில் பிறந்தவர்கள் ஏழையாய் இருந்தாலும் ஒருசமயத்தில் திடீரென நினைக்க இயலாத ராஜயோகத்தை அடைந்து பணக்காரர் ஆகிவிடுவார்கள்.

நீசபங்க ராஜயோகம்
கிரகங்கள் தம் நீச ராசியில் இருந்தால் நீசராவார். ஆயினும் இவர்கள் நின்ற ராசிநாதன் ஆட்சியோ உச்சமோ பெற்றாலும், அல்லது லக்னத்திற்கோ சந்திரனுக்கோ கேந்திரத்தில் இருந்தாலும் நீசம் பங்கமாகி, 'ராஜயோகம்' வருகிறது.
இவர்களுக்கும் திடீர் சம்பத்துகளும் பெயரும் புகழும் உண்டாகும்.
குறிப்பு: ஜாதகங்களிலே நல்ல யோகங்கள் இருப்பது மட்டும் போதாது. அக்கிரகங்களின் தசைகள் வயது காலத்தில் வந்தால்தான் யோகங்களுக்கும் பலன் உண்டு மற்றும் யோகக்கிரகங்கள் துர்ஸ்தானங்களில் இல்லாமல் நல்ல இடங்களில் அமர வேண்டும். அசுபக்கிரகங்களின் சேர்க்கையோ பார்வையோ உண்டானால் யோகபங்கமாகும்.

Saturday, 18 February 2012

ஜோதிடம்;ஜாதகத்தில் சந்திரனால் உண்டாகும் யோகங்கள் விளக்கம்


ஜோதிடம்;ஜாதகத்தில் சந்திரனால் உண்டாகும் யோகங்கள் விளக்கம்;நல்ல நேரம் சதீஷ்குமார்

1. துருதுரா யோகம் : சந்திரனுக்கு முன்னும் பின்னும் ராசிகளில் சூரியன், ராகு கேதுவைத் தவிர இதர கிரஹங்கள் இருப்பின், இந்த யோகம் ஏற்படும். இதனுடைய பலன்கள், சம்பத்து, வாகனங்கள், நல்ல குணங்கள்.

2. அநபா யோகம் : சந்திரனுக்கு 12வத ராசியில் ராகு கேதுக்களைத் தவிர கிரகங்கள் இருப்பது, இதன் பலன்கள்; நல்ல ஆரோக்கியமும் பேரும் புகழும் உண்டாகும்.

3. சுநபா யோகம் : சந்திரனுக்கு 2ல் சூரியன் ராகு கேதுக்களைத் தவிர மற்ற கிரகங்கள் இருப்பது. உழைத்து சம்பாதித்தல், நல்ல புத்திமான், ராஜாவுக்குச் சமானம்.

4. கேமத்துருமம் : சந்திரனுக்கு பின்னும் முன்னும் கிரகங்கள் இல்லாமை. இது ஒரு பொல்லாத யோகம். தரித்திரமும் பீடையும் உண்டாகும்.
ஆனால் சந்திரனுக்கு கேந்திரத்தில் ஏதேனும் ஒரு கிரஹம் இருந்தால் இந்த தோஷ பரிஹாரமாகும்.

5. கேசரி யோகம் அல்லது கஜகேசரி யோகம் : சந்திரனுக்கு ஏதேனும் ஒரு கேந்திரத்தில் (1,4,7,10-ல்) பிரஹஸ்பதி இருப்பது. இது ஒரு நல்ல யோகம். நல்ல பெயரும் புகழும் உண்டு. தீர்க்க ஆயுள், பணவருவாய் பகைவர்களை வெல்லும் திறமை.

6. சந்திரமங்கள யோகம் : சந்திரன், செவ்வாய் சேர்க்கை. இதன் பலன்கள் நிலச்சொத்து, பேரும் புகழும். ஆயினும் சில சமயத்தில் மனக்கோளாறு அல்லது சஞ்சலம் உண்டாகலாம்.

7. அதியோகம் : சந்திரனுக்கு 6,7,8 வீடுகளில் சுபர்கள் குரு, புதன், சுக்கிரன் ஒன்றாகவோ அல்லது தனித்தனியாகவோ நிற்பது. இது ஒரு பலமான யோகம். இந்த யோகம் உடையவர்கள் பெரும்பாலும் மிகப்பெரிய உத்தியோகங்களிலே இருப்பார்கள். போலீஸ் முதலான துறைகளில் ஈடுபடுவோர். நல்ல பணவசதி உண்டு. பேரும் புகழும் உண்டு. இதேபோல் லக்னத்திற்கு 6,7,8ல் சுபர்கள் இருந்தால் அது லக்ன அதியோகம் எனப்படும். அதுவும் ஒரு நல்ல யோகமே.

8. சகடயோகம் : சந்திரனுக்கு குரு 8 அல்லது 12ல் இருந்தால் சகடம் எனப்படும். இந்த யோகத்தில் பிறந்தவர்கள் சக்கரம் போல் நிலையில்லாத வாழக்கையே பெறுவர். சதா கஷ்டங்கள் ஏற்படும்.

Friday, 17 February 2012

ஜோதிடம் வளர்ந்த வரலாறுபல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது ஜோதிடக்கலை.அன்று இடுப்பில் கோவணமும் கையில் தண்டமுமாக பித்தர்கள் மாதிரி சுற்றித் திரிந்தவர்களுக்கு ஜோதிடம் எப்படித் தான் வசமானதோ தெரியவில்லை.கண்ணுக்குப் புலப்படாமல் மாயமாய் இருக்கும் கிரகங்கள், பூமியில் உள்ள மனித இனத்தை எப்படி ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது என்பதை ஆறாம் அறிவுக்கு அப்பாற்பட்ட ஞான ஒளியின் மூலமாக உணர்ந்து பாடல்களும் ,வெண்பாக்களுமாகத் தொகுத்ததில் 4,50,000 பாக்கள் என்பது உதிரி தகவல்.
 • 1.சூரியன்
 • 2.பிரம்மன்
 • 3.வியாசர்
 • 4.வசிஸ்டர்
 • 5.அத்திரி
 • 6.பராசுரர்
 • 7.கசியபர்
 • 8.நாரதர்
 • 9.கர்க்கர்
 • 10.மரிசீ
 • 11.மனு
 • 12.ஆங்கீரசர்
 • 13.உலோமர்
 • 14,பெளலசர்
 • 15.சிஸ்னவர்
 • 16.யவனர்
 • 17.மரு
 • 18.செளனகர்
ஆகிய 18 பேர் முக்கியமானவர்கள் என ஆதி ஜோதிட வரலாறு ஓலைச்சுவடிகள் குறிப்பிடுகின்றன.
வேத காலத்தில் பிறந்து இதிகாச காலத்தில் வளர்ந்து, இலக்கிய காலத்தில் முழு வளர்ச்சி அடைந்தது ஜோதிடம்.கி.பி.169 ல் யவனேஸ்வரர் என்பவரால் யவன ஜாதகம் எனும் நூல் இயற்றப்பட்டது.கி.பி.258 ல் இதே பெயரில்இன்னொரு நூல் வெளியிடப்பட்டது.பிற்காலத்தில் கி.பி.587 ல் வராகமிகிரர் எனும் சிறந்த ஜோதிட அறிஞர் தோன்றினார்.இவர் பஞ்ச சித்தந்திகா,பிருஹத் சம்ஹிதை,பிருஹத் ஜாதகம்,பிருஹத் யாத்திரை ,லஹு ஜாதகம் ,பிருஹத் விவாஹ படலம் ஆகிய நூல்களை எழுதினார்.
வராஹிமிரரது மைந்தர் பிருதுயசன் ஹோராட் பன்சாசிகா எனும் நூலை எழுதினார்.கி.பி.1172ல் கணித மேதை பாஸ்கராச்சாரியார் சித்தாந்த சிரோமணி எனும் நூலை இயற்றினார்.இவர் 1118 ல் கரணகுதூகலம் எனும் நூலை இயற்றினார்.கல்யாண வர்மா என்பவர் சாராவளியை எழுதினார்.கி.பி 12 ஆம் நூற்றாண்டுக்குப்பின் கணிதம் மற்றும் வானவியலை காட்டிலும் சோதிடத்தில் பல நூல்கள் தோன்றின.சாமுத்ரிகா லட்சணம்,கைரேகை,பிரஸ்னம்,எனும் தனிதனி பிரிவுகள் தோன்றின.
பலன்களை நிர்ணயிப்பதில் பல தீபிகை ,ஜாதகாதோசம்,ஜாதக சந்திரிகை,பிருஹத் பாரசரீயம் என்பன முக்கியத்துவம் பெற்றன.இது போன்ற நூல்கள் இன்றளவும் வட மொழியில் 74 நூல்கள் உள்ளன.
தமிழில் ஜோதிட நூல்களை பொறுத்தவரை மொத்தம் 66 உள்ளன,அவற்றில் சாதக அலங்காரம் முக்கியமானது.இதை கீரனூர்நடராஜன் எழுதினார்.மங்களேஸ்வரியம்,வீமகவி ஜோதிடம்,சாதக சூடாமணி,சினேந்திரமாலை,தாண்டவமாலை,சாதக சிந்தாமணி,சந்திர காவியம்,ஆனந்த களிப்பு ,புலிப்பாணி ஜோதிடம்,அவசியம் படிக்க வேண்டிய நூல்கள்.அனைத்து ஜோதிடர்களிடமும் இந்த நூல்கள் இருக்கும்.ஜோதிட நூல்கள் ஜோதிடர்களுக்கு வழிகாட்டியாக திகழ்கின்றன. குரு இல்லாமல் ஜோதிட புத்தகம் மட்டும் படித்து ஜோதிடர் ஆக முடியாது என்றாலும் ,சில நூல்கள் ஜோதிடர்கள் படித்து மனனம் செய்வது அவசியம்.அவற்றில் முக்கியமானவை ;புலிப்பாணி ஜோதிடம்.இது பாடல்கள் நிரம்பியது.பாடல்கள் மூலம் கிரக சேர்க்கை அதன் பலன்களை சொல்கிறது.புலிப்பாணி சித்தர் எழுதியது.தமிழின் மிக பழமையான ஜோதிட நூல்களில் முக்கியமானது.எண்ணற்ற ஜோதிட நூல்கள் இருப்பினும் அவற்றை எளிய தமிழில் எழுதி தற்காலத்தில பல சோதிடர்கள் எழுதி வருகிறார்கள்.அவற்றை படிப்பது சுலபமாக இருக்கும்.அவர்களில் ஆத்தூர் மாதேஸ்வரன்,சி.ஜி.ராஜன்,சிவதாசன் ரவி,முருகு ராஜேந்திரன்,புலியூர் பாலு,சுப.சுப்ரமணியன், முக்கியமானவர்கள்.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருவானது இந்த ஜோதிடக்கலை.இந்த கிரகவியல் கலைக்கு என்றுமே தேய்பிறை கிடையாது.மகான்களால் உருவாக்கப்பட்டு மன்னர் வம்சத்தால் பாதுகாக்கப்பட்டு,இன்று மனித இனத்துக்கு மகத்தான வழிகாட்டியாக விளங்குகிறது.இந்தக் கலை வசப்பட வேண்டுமானால் அதற்கும் கிரகங்கள் ஒத்துழைக்க வேண்டும்.
ஜோதிட சாஸ்திரம் உருவான காலம் தொட்டே ஜோதிடர்களுக்கு என்று ஒரு மரியாதை இருந்து வந்திருக்கிறது.இன்று பிரதமரும் முதல்வரும் எப்படி தங்கள் அலுவல் பணியின் துவக்கத்தில் சந்திக்கும் நபராக உளவுத்துறை உயர் அதிகாரி இருக்கிறாரோ,அதைப்போல அன்று மன்னர்கள் ஆண்ட காலத்தில் ,அரசர் சந்திக்கும் முதல் நபர் அரண்மனை ஜோதிடரைத்தான்.அதுவும் பல தேர்வுகளுக்கு பின்னரே அந்த அரண்மனை ஜோதிடரை தேர்ந்தெடுத்திருப்பார் அரசர்.
ஜோதிடரும் மன்னரின் ஜாதகத்தை மனக்கண் முன் நிறுத்தி அன்றைய கோட்சார நிலையை கருத்தில் கொண்டு தினப்பலன் சொல்வார். தான் போர் தொடங்க வேண்டிய நட்சத்திரம் எது என ஆராய்ந்து,,தன் நட்சத்திரத்துக்கு 6 வது நட்சத்திரத்தில் ராவணன் மீது போர் தொடங்கினால் வெற்றி பெறலாம் என சூட்சுமம் உணர்ந்து செயல்பட்டான் ராமன்என ராமயணம் சொல்கிறது.
ஜோதிடர்களுக்கு வழிகாட்டியாக பழமையான ஜோதிடப் பாடல்களும், வெண்பாக்களும், வடநாட்டு ஜோதிட நூல்களும் விளங்குகின்றன…மேலும் அவரவருக்கென்று ஜோதிட குருக்கள் இருக்கின்றனர்.அந்தந்த பகுதியில் வசிக்கும் ஜோதிடர்களிடம் பல வருடங்கள் ஜோதிடம் பயின்று அதன் பின்பே ஜோதிடர்களாக தொழில் தொடங்குகின்றனர்.ஆனால் இன்று அண்ணாமலை பல்கலைகழகம்,மதுரை காமராஜர் பலகலைகழகம் போன்றவையும் ஜோதிடத்துக்கு என்று பட்டயம் வழங்கி பாடம் சொல்லி தருகின்றன.இவர்கள் நடத்தும் பாடங்கள் மிக நுணுக்கமாகவும் ,பழம்பெருமையும் ,கிரக கணக்கீடுகள் துல்லியமாகவும் இருக்கின்றன.ஜோதிடம் என்பதே கணக்குதான்.அறிவுகிரகம் புதன் வலுத்தவர்களும்,ஆன்மீக உணர்வை தருகிற ,பிறருக்கு நல்ல வழிகாட்டியாக திகழ வைக்கும் குருவும் ,வலுத்தவர்களும் தான் இக்கலையில் பிரகாசிக்க முடியும்.அதே போல மன திடம் தருகிற சந்திரனும்,ஜோதிட கிரகம் என சொல்லப்படும் செவ்வாயும் நன்கு அமைய வேண்டும்.இவை லக்னத்தில் இருந்து வாக்கு ஸ்தானம்,பத்தாமிடம் எனும் தொழில் ஸ்தானம் போன்றவற்றில் சிறப்பாக அமைய வேண்டும்.அவர்கள்தான் இதை படிக்க முடியும்.தொழிலாக செய்ய முடியும்

-கட்டுரை.காமில் நான் எழுதிய கட்டுரை

Monday, 13 February 2012

சனி வக்ரம் ;ராசிபலன்-எண் ஜோதிடம்

சனி வக்ரம் ;ராசிபலன்-ஜோதிடம்-எண் ஜோதிடம்-வாஸ்து-கைரேகை


சனி வக்ரம் ராசிபலன் அடிப்படையில் கடந்த இரு பதிவுகள் எழுதியிருக்கிறேன்..எல்லா ராசிகளுக்கும் எழுதுவத்ற்குள் சனி வக்ரம் முடிஞ்சிரும் போலிருக்கு..ஓகே இனி வேகமா எல்லா ராசிக்கும் எழுதிடுறேன்.மேசம்,ரிசபம் ராசிபலன் படிக்காதவர்கள் அருகில் உள்ள் கூகிள் தேடலில் நல்ல நேரம் ப்ளாக் சைட்ல இருக்கு பாருங்க..அதுல சனி வக்ரம் அல்லது sani peyarchi என தேடினால் கிடைக்கும்.

இன்றைய பலன்கள் மிதுனம் ராசியினருக்கு;

சனி வக்ரம் 8 ஆம் தேதியே துவங்கி விட்டது..இன்னும் 4 மாதங்கள் வரை இது இருக்கும்.அதாவது சனி வக்ரம் துவங்கிய பின் தான் மின்வெட்டு பிரச்சினை தமிழ்கத்தில் பூதாகரமாகி உள்ளது..சனி மின்சாரத்துக்கும் அதிபதி அல்லவா.ஏற்கனவே அரசியல் கிரகம் செவ்வாயும் வக்ரகதியில் உள்ளது.எனவே இது அரசியல் பிரச்சினையாகவும் உருவெடுத்துள்ளது.இது மூத்த அரசியல் தலைவர்களுக்கும் கண்டமான காலம்.விஜயகாந்த் ஜாதகம் கணித்து அவர் மீது வழக்கு பதிய அதிக வாய்ப்பு இருக்கிறது.வாயால் அவர் கெடுவார் என உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பே எழுதியிருந்தேன்..அது இன்று பலிதம் ஆகியிருக்கிறது..இது குறித்து பாராட்டிய சென்னை விஜய் க்கு நன்றி.இன்னும் நிறைய எழுத விருப்பம்தான்..அதுவுமில்லாமல் பப்ளிக்காக பல விசயங்களை எழுதி வைப்பது கொஞ்சம் பிரச்சினைதான்.ஜெயலலிதா ஜாதகம் குறித்து ஒரு கட்டுரை எழுதி வைத்திருக்கிறேன்...நல்ல நேரம் பார்த்து ! தான் வெளியிடணும்!!

மிதுனம் ராசியினர் புதன் கிரகத்தின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்கள்.நுட்பமானவர்கள்..யாரையும் எளிதில் நம்ப மாட்டார்கள்.யார் எது சொன்னாலும் சொல்பவர்களின் யோக்யதையை தராசு மீது வைத்து அளந்து பார்ப்பது போல மனக்கண்ணில் பார்த்துவிட்டுத்தான் முடிவெடுப்பார்கள்.ஆராய்ச்சி குணம்,பகுத்தறிவு குணம் அதிகம் உண்டு....மிதுன்பம் ராசிக்காரர்கள் சொன்னால் அது சரியாக இருக்கும்.பலருக்கு ஏணிப்படியாக விளங்குவார்கள்..இவர்களுக்கு அவர்கள் உதவுவதும் இல்லை.இவர்கள் எதிர்பார்ப்பதும் இல்லை.நல்ல பேச்சுதிறமை நிறைந்தவர்கள்.இவர்கள் பலம் பலவீனமே பேச்சுதான்.

சனிப்பெயர்ச்சி ஆனது உங்கள் ராசிக்கு 5 ஆம் இடம்....இப்போது வக்ரம் ஆகியிருப்பது நான்காம் இடம்..இரண்டுமே பாதகம் தான்..நான்காம் இடம் சுகம் ஸ்தானம் என்பதால் போன வாரம் முதலே சொத்துக்கள் வில்லங்கம்,உடல்நலன் பிரச்சினை,மருத்துவ குறிப்புகள் நாடுதல் என்று இருப்பீர்கள்...தொழிலில் அதிக மன உளைச்சல் ஏற்படும்படியான சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கும்.அதிக பண விரயமும் உண்டாகி வருகிறது.பெற்றோர்களால் கவலையும் வாட்டும்.திருப்பதி பாலாஜி யை தரி8சனம் செய்து வந்தால் ,வெங்கடேஸ்வரா எல்லா பிரச்சினையையும் தீர்த்து வைப்பார்.பிரியாணி சாப்பாடு எல்லாம் எல்லாம் லிமிட்டாக இருக்கட்டும்.சமையல் விசயத்தில் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..தீயால் காயம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.சனி,செவ்வாய் வக்ரம் என்பதால் இரும்பு சம்பந்தமான தொழிலில் இருப்பவர்கள் அதிக கவனம் தேவை.நிதி,மற்றும் பங்கு வர்த்தகம் பிரச்சினையை கொடுக்கும்.மகளிர் பிரச்சினைகள் உண்டாகும் என்பதால் பெண்களிடம் அதிக கவனம் தேவை.குழந்தை சம்பந்தமான சிகிச்சைக்கு செல்பவர்கள் இன்னும் 3 மாதம் கழித்து முயற்சிக்கலாம்.

எண் ஜோதிடம்;

எண் ஜோதிடம் பொறுத்தவரை எனக்கு 7 வருட அனுபவம் உண்டு.பண்டிட் சேதுராமன் முதல் கொண்டு தமிழில் வெளியான அனைத்து எண் ஜோதிட நூல்களையும் ஆய்வு செய்து,பார்த்துவிட்டேன்..இதுதான் எண் ஜோதிடம் என்ற முறையை நான் வகுத்து குழந்தைகளுக்கு அதிர்ஷ்டபெயர் அமைத்து வருகிரேன்..திருச்சி கோபால் தாஸ்,திருப்பூர் அசோக் பாரதி,சேலம் ஜெயவஸ்ரூபா போன்ற எண் நியூமராலஜி பார்ப்பவர்களிடம் பார்த்தவர்களும் பண்டிட் சேதுராமன் மகனிடம் ஜோதிடம் பார்த்தவர்களும் என்னிடம் வந்து பெயர் திருத்தம் செய்து கொண்டு இப்போது நன்றாக இருக்கின்றனர்.அவர்கள் வாங்கும் கட்டணம் 4,000 ரேஞ்ச்..நான் வாங்குவது..மிக சொற்பம்..அவர்கள் டிவி விளம்பரம் செய்து பில்டப் கொடுக்கின்றனர்..எனக்கு வயது குறைவாக இருப்பதால் இப்போதே ஓவராக வளர வேண்டாம் என பொறுமையாக இருக்கிறேன்..என் வாடிக்கையாலர் ஒருவர் விஜய் டிவியில் நான் நிகழ்ச்சி நடத்த தானே பணம் கட்டிவிடுகிறேன்.வாரம் அரை மணி நேரம் பேசுங்கள்..என்றார்..அவர் சொல்லி இரண்டு வருடம் இருக்கும்..நான் மறுத்துவிட்டேன்..என் கூச்ச சுபாவமும் ஒரு காரணம்..என் அலுவலகத்தில் தில்லா பேசிவிடுவேன்...மேடை என்றால் கொஞ்சம் உதறும்.எனது நண்பரும்,வாடிக்கையாருமான ஈரோடு கணேஷ் வீடியோஸ் உரிமையாளர் திரு ஜெயபாலன்அவர்கள்..ஜோதிட நிகழ்சிக்கான ஒளிப்பதிவு செய்து தருகிறேன் என சொல்லியிருக்கிறார்..பார்ப்போம்.. 

நியூமராலஜி யில் என் ஸ்டைல் என்னவெனில், என் ஜோதிடம் விதிப்படி நான் பெயரில் இரண்டு ஏ எழுத்துக்கள் இரண்டு எஸ் எழுத்துக்கள் எல்லாம் சேர்த்து நியூமராலஜியை கற்பழிப்பதில்லை.உச்சரிப்பு முறையை பயன்படுத்திதான் சக்ஸஸ் கொடுக்கிறேன்...பெயரின் உச்சரிப்பு ஒலியை மாற்றினால் வெற்றி கிடைக்கும்.இது என் அனுபவம்...இது எப்படி சாத்தியம் என்பதையும் நியூமராலஜி தொழிலில் நான் சந்தித்த வித்தியாசமான மனிதர்களையும் பற்றி எழுத நிறைய விசய்மிருக்கிறேது..அவ்வப்போது எழுதுகிறேன்...

Thursday, 9 February 2012

ராகுல்காந்தி பிரதமர் ஆவாரா..ஜாதகம் ஆய்வு

ராகுல்காந்தி பிரதமர் ஆவாரா..ஜாதகம் ஆய்வு


ராகுல்காந்தி பிறந்த தேதி;19.6.1970
பிறந்த நேரம்;5;50 காலை
 பிறந்த ஊர்;டில்லி


இவரது ராசி;விருச்சிகம்
லக்னம்;மிதுனம்
நட்சத்திரம்;கேட்டைஇவரது ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தை குரு பார்த்ததால் தந்தை வழி ஸ்தானம் வலுவடைந்தது.செவ்வாய்,சூரியன் இணைந்து அதனை சனி பார்த்தது,9 ஆம் பாவத்தில் ராகு அமர்ந்ததும் தந்தையை அகால மரணம் அடைய வைத்தது.

செவ்வாய்,சூரியன் இணைந்து 7 ஆம் பாவத்தை பார்ப்பதால் எந்த பெண்ணையும் முறையாக திருமணம் செய்யும் யோகம் அடையமுடியவில்லை.அதாவது ஊரறிய திருமணம் செய்யமுடியவில்லை.அப்படி செய்தாலும் நிலைக்காது.பெண்கள் விசயத்தில் சொதப்பல் திலகமாக இவர் இருப்பதும் ஒரு காரணம்.செவ்வாய்,சுரியன் லக்னத்தில் இருந்தாலே எல்லாம் குளறுபடிதான்.தொழில்,குடும்பம் எதுவும் சிறக்காது.சனி அரசியல் கிரகங்களை பார்த்து முடக்கி விட்டதாலும்,பாக்யாதிபதி சனி நீசம் அடைந்து சனி நின்ற வீட்டுக்கதிபன் செவ்வாயும் லக்னத்துக்கு பாதகாதிபதி ஆகிவிட்டபடியால் இவர் அரசியலில் மக்கள் செல்வாக்கை பெறவும் இயலாது.தலைவராக உருவெடுக்கவும் முடியாது.

நடப்பு சந்திர திசை சனி புத்தியும்,தற்போது ஏழரை சனி தொடங்கியதாலும் இவர் தொட்டதெல்லாம் தோல்விதான்.தாய் சோனியாகாந்திக்கும் கண்டம்.இவருக்கும் கண்டம் ..இருவருக்கும் மறுபடி மருத்துவ சிகிச்சை காத்திருக்கிறது.தாயுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியும் காலத்தில் இவர் இப்போது இருக்கிறார்.

இவரது தங்கை பிரியங்கா அரசியலில் பரிணமிக்க வாய்ப்பு அதிகம் உண்டு.ராகுல்காந்தி விபத்துகளை சந்திப்பார்.அரசியலை விட்டு ஒதுங்கியே இருப்பார்.நல்ல மக்களை கவரும் பேச்சுத்திறமை இவருக்கு இல்லை.ஆனால் இவர் தங்கைக்கு உண்டு.கட்சியை வழிநடத்தும் திறனுக்கும்,பிரதமர் ஆகும் அமைப்பிற்கும் சூரியன்,குரு,செவ்வாய் கிரகங்கள் சிறப்பாக அமைய வேண்டும்.இவர் ஜாதகத்தில் இவை எல்லாம் கெட்டுய் விட்டன..மக்கள் செல்வாக்கு பெற சனி,சந்திரன்,புதன் சிறப்பாக அமைய வேண்டும்.அவையும் இவர் ஜாதகத்தில் வலு குன்றிய்றே காணப்படுகின்றன..பூர்வீக ஸ்தானமான 5 ஆம் இடத்தை சனி பார்ப்பது பூர்வீக சாப கேடை சொல்கிறது...ஆக இவர் பெரும் குழப்பத்தில் இப்போது இருக்கிறார்...அரசியலை விட்டு விரைவில் ஒதுங்குவார் அல்லது இவர் தங்கை இவரை ஓரங்கட்டுவார்..!!

Wednesday, 8 February 2012

சனி வக்ரம் ரிசபம் ராசிக்காரர்களுக்கு பாதிப்பா..?

சனி வக்ரம் ரிசபம் ராசிக்காரர்களுக்கு பாதிப்பா..?


சனி பற்றி ஜோதிடம் சொல்லும் முக்கிய குறிப்பு என்னவெனில் சனிதான் ஆயுள் காரகன்.சனிதான் தொழில் காரகன்.சனிதான் நீதி,நேர்மை,தெய்வீக ஞானத்துக்கும் அதிபதி.ஒருவன் சுறுசுறுப்பாக செயல்படுவதற்கும் சோம்பேறியாக தூங்குவதற்கும் காரணம் அவன் ஜாதகத்தில் சனியின் பலமே ஆகும்.

சனி வக்ரம் என்பது பின்னோக்கி நகர்தல் என பார்த்து பலன் அறியலாம்.அதாவது சனி மீண்டும் கன்னிக்கே வருகிறார் என குறித்து பலன் எடுக்கவும்.அதாவது மேசம் ராசிக்கு 7 ஆமிட பலனை சனிப்பெயர்ச்சி முதல் கொடுத்து வருகிறார் ..இப்போது சனி வக்ரம் ஆனதால் 6 மிட பலன்களை வரும் 138 நாட்களும் தருவார்.அதாவது 8.2.2012 முதல்.சரியா..?

ரிசபம் ராசி கார்த்திகை 2 ஆம் பாதம் முதல் ,ரோகிணி,மிருகசிரீடம் 2 ஆம் பாதம் வரை இருப்பவர்கள் எப்போதும் முன்னேறுவது பற்றி கவலைதான்...எப்போது சந்தோசமாக இருப்பது...என தற்போதைய காலத்தை குழப்பிக்கொண்டிருப்பர்.நீங்கள் எப்போதும் சந்தோசமான மனிதர்தான் கவலை வேண்டாம்...

பணம் சம்பாதிப்பதில் அதிக சமர்த்தர் நீங்கள் தான்.அலட்சியத்திலும்,வேலையை தள்ளிப்போடுவதிலும் உங்களை மிஞ்ச ஆள் இல்லை.அதை சரி செய்துகொண்டால் நல்லது.மிருகசிரீடம் நட்சத்திரக்காரர்களுக்கு கோபம் அதிகம்.அதை கட்டுப்பாட்டில் கொண்டு வாங்க..சாப்பாடு விசயத்தில் அதிக கவனம் தேவை.சிக்கன் பிரியாணின்னா ஒரு பிடி பிடிக்கிறது உங்க பழக்கம்.அசைவ உணவுகள் கட்டுப்பாட்டுக்குள் வெச்சுக்கிறது முக்கியம்.சர்க்கரை நோய் அதிகம் தாக்குவது இந்த ராசிக்காரரைத்தான்.உடல்பருமன் பிரச்சினையும் அதிகம் தாக்கும்,காரணம் உணவு பழக்கமும்,அதிக உழைப்பில்லாத உங்க தொழில் அமைப்பும் தான்.

சனிப்பெயர்ச்சிக்கு பின் ருண,ரோக,சத்ரு ஸ்தானமாகிய ஆறாம் இடத்தில் இருந்து வரும் சனீஸ்வரர் வக்ரமாகி பின்னோக்கி மீண்டும் கன்னிக்கு சென்று மறுபடி துலாம் ராசிக்கு வரப்போகும் இந்த காலகட்டத்தில் ,கூடா நட்பு கேடாக முடியலாம்..அவர்களால் பண விரயம் உண்டாகலாம் ..குழந்தைகளால் மருத்துவ செலவுகள் உண்டாகலாம்...மகன்,மகளால் மன வேதனை உண்டாகும்,பூர்வீக சொத்து பிரச்சினை தலையெடுக்கும்.

பாக்யாதிபதி,சனி பூர்வீகத்துக்கு வருவது சிலருக்கு நன்மையையும் கொடுக்கலாம்.ஆனால் பெரும்பாலும் விரயமே காணப்படுகிறது.கவனம் ,கட்டுப்பாடு தேவை!

Tuesday, 7 February 2012

சனி வக்ரம் என்ன செய்யும்..? எந்த ராசிக்காரர்களுக்கு பாதிப்பு..?

சனி வக்ரம் என்ன செய்யும்..? எந்த ராசிக்காரர்களுக்கு பாதிப்பு..?

சனிப்பெயர்ச்சிக்கு பின் அதாவது சனி கன்னி வீட்டில் இருந்து துலாம் வீட்டிற்கு பெயர்ச்சியாகிவிட்டது.இப்போது வரும் 8.2.2012 முதல் 25.6.2012 வரை சனி துலாம் ராசியில் வக்ரம் ஆகிறார்.அதாவது பலம் இழந்துவிடுகிறார்.இதனால் சனியால் ஆதாயம் அடைந்தவர்களுக்கு இது சற்று கலக்கம் தரும் செய்திதான்...

சனி பற்றி ஜோதிடம் சொல்லும் முக்கிய குறிப்பு என்னவெனில் சனிதான் ஆயுள் காரகன்.சனிதான் தொழில் காரகன்.சனிதான் நீதி,நேர்மை,தெய்வீக ஞானத்துக்கும் அதிபதி.ஒருவன் சுறுசுறுப்பாக செயல்படுவதற்கும் சோம்பேறியாக தூங்குவதற்கும் காரணம் அவன் ஜாதகத்தில் சனியின் பலமே ஆகும்.

சனி வக்ரம் என்பது பின்னோக்கி நகர்தல் என பார்த்து பலன் அறியலாம்.அதாவது சனி மீண்டும் கன்னிக்கே வருகிறார் என குறித்து பலன் எடுக்கவும்.அதாவது மேசம் ராசிக்கு 7 ஆமிட பலனை சனிப்பெயர்ச்சி முதல் கொடுத்து வருகிறார் ..இப்போது சனி வக்ரம் ஆனதால் 6 மிட பலன்களை வரும் 138 நாட்களும் தருவார்.அதாவது 8.2.2012 முதல்.சரியா..?

அதன்படி பார்த்தால் மேசம் ராசியினருக்கு 6 மிடத்து சனி நன்மை தரும்.சனிப்பெயர்ச்சி ஆனது முதல் ஒண்ணும் சரியில்லை.பிரச்சினையாவே இருக்கு.கணவன் மனைவிக்குள் பிரச்சினை மேல் பிரச்சினை வருது.என சலித்துக்கொள்கிறீர்களா..இந்த நாட்களில் அந்த பிரச்சினை முடிவுக்கு வரும் கடன் பிரச்சினை அடையும்.தொழில் பிரச்சினை,மந்தம் விலகும்.

ரிசபம் ராசிக்காரர்களுக்கான சனி வக்ர பலன்கள்

விஜயகாந்த் நல்ல நேரம் எப்போது..? ஜாதகம் ஆராய்ச்சி பலன்கள்

விஜயகாந்த் ஜாதகம் ஆய்வு பலன்கள்;


விஜயகாந்த் பிறந்த தேதி;25.8.1952
பிறந்த நேரம்;7.00 காலை
ஊர்;மதுரை

இதன் முதல் பாகம் ஏற்கனவே விஜயகாந்த் ஜாதகம் என்ன சொல்கிறது? என்ற தலைப்பில் எழுதியிருக்கிறேன்.அதில் விஜயகாந்த் வாயால் கெடுவார் என பல மாதங்களுக்கு முன்பே எழுதியிருந்தேன்.அதுதான் இப்போதும் நடந்து இருக்கிறது.நெருப்பின் மேல் அமர்ந்தது போல எதிர்கட்சிதலைவர் பதவியில் இருப்பார் என சொல்லியிருந்தேன்.அதன்படி எதிர்கட்சி தலைவருக்குண்டான எதையும் அனுபவிக்க முடியாமல் சங்கடத்தில் இருக்கிறார்.அந்த பதிவை படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

இவரது ஜாதகப்படி இப்போது நடக்கும் கேது திசை அறிவுக்கிரகம் புதனுடன் இணைந்து திசை நடத்துகிறது.அதனால் அறிவு ஸ்தானம் கெட்டுப்போச்சோ என்று சொல்ல முடியாது.ஐந்தில் மாந்தி இருப்பதும் அவரது தொடர் வெற்றிக்கு தடைகல்லாக இருக்கிறது.இரண்டில் இருக்கும் சந்திரன்,சனி சேர்க்கை மதியை கெடுத்ய்துவிடுகிறது.சனி இரண்டில் இருப்பது நல்ல பேச்சாற்றலை தரும்.சந்திரன் இரண்டில் இருப்பது மக்களை கவரும் பேச்சு திறனை தரும்.ஆனால் இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பகையாச்சே.அதனால் நாக்கை கடித்து கெட்டார்.ஆபாசமாக பேசி இதுவரை சட்டமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக நாக்கை கடித்து ஆபாசமாக திட்டி சஸ்பெண்ட் ஆன ,தலைவர் என பெயரெடுத்தார்.

6ல் இருக்கும் ராகுவும்,இவரது லக்னம் சிம்மம் என்பதால் யாருக்கும் அடங்காத குணத்தை காட்டுகிறது.லக்னத்தில் சூரியன் ஆட்சி கடும் கோபம்,பிடிவாதத்தை தந்திருக்கிறது.

இவரது ராசிக்கு ஏழரை சனி நடந்தாலும்,பிறக்கும்போதே இவர் ஜென்ம சனியில்தான் பிறந்தார் என்பதாலும் 25.10.2012 க்குபின் கேது புத்தியில்,கடும் மருத்துவ செலவையோ அல்லது சிறைவாசத்தையோ சந்திப்பார் என சொல்லலாம்.வழக்குகள் இவர் மீது பாய வழியுண்டு.காரணம் இன்னும் 8 மாதத்தில் தொடங்கும்,கேது புத்திதான்..தான்...ஏழரை சனிதான்.

லக்னத்துக்கு 4ல் இருக்கும் செவ்வாயை சனி 3 ஆம் பார்வையாக பார்ப்பதும் மருத்துவ செலவு,விபத்து,நோய் ஏற்படுத்தும் ஒரு காரணி..இதுவே சிறைவாசத்துக்கும் வழி உண்டாக்குகிறது!

6க்குடைய சனி இரண்டில் இருப்பதும்,விரயாதிபதி சந்திரன் இரண்டில் இருப்பதும்,இவருக்கு கெட்டபெயரையே சம்பாதித்து கொடுக்கும்.

சரி இவ்வளவு காலம் எப்படி பிரபலமாக இருந்தார்..?

காரணம் 19 ஆண்டுகளாக நடைபெற்ற சனி திசை கலைத்துறையில் நல்ல புகழை வருமானத்தை கொடுத்தது.6க்குடையவன் இரண்டில் இருந்து திசை நடத்தினால் அடுத்தவன் பணம் எல்லாம் தமக்கு வரும்.

நடப்பு புதன் திசை புதிதாக எதையாவது செய்ய வைத்து ஏமாற்றம் தருவார்...அல்லது மற்றவர்களை ஏமாற்ற வைப்பார்.விஜயகாந்த் ஏமாறுவாரா...ஏமாற்றுவாரா காலம் பதில் சொல்லும்.திருமண பொருத்தம்; ராசிபலன் பார்க்கும் முறை

திருமண பொருத்தம்; ராசிபலன் பார்க்கும் முறை

ஜோதிடம் திருமண பொருத்தம் பார்க்கும் விதிகளில் முக்கியமானதாக ராசி பொருத்தம் பற்றி சொல்லியிருக்கிறது.பெண் ராசிக்கும் ஆண் ராசிக்கும் 2,3,4,6,,12 ஆக வராமல் இருக்க வேண்டும்...

பெண் ராசிக்கு ஆண் ராசி;2 வது ராசியாக வந்தால் மரணம்
பெண் ராசிக்கு ஆண் ராசி 3 வது ராசியாக வந்தால் துக்கம்
பெண் ராசிக்கு ஆண் ராசி 4 வது ராசியாக வந்தால் ஏழ்மை
பெண் ராசிக்கு ஆண் ராசி 5 வது ராசியாக வந்தால் வைதவ்யம்
பெண் ராசிக்கு ஆண் ராசி 6 வது ராசியாக வந்தால் புத்திர நாசம்
பெண் ராசிக்கு ஆண் ராசி 7 வது ராசியாக வந்தால் உத்தமம்,மாங்கல்ய விருத்தி
பெண் ராசிக்கு ஆண் ராசி 8 வது ராசியாக வந்தால் அதிக குழந்தைகள்
பெண் ராசிக்கு ஆண் ராசி 9 வது ராசியாக வந்தால்செளமாங்கல்யம்
பெண் ராசிக்கு ஆண் ராசி 10 வது ராசியாக வந்தால் ஐஸ்வர்யம்
பெண் ராசிக்கு ஆண் ராசி  11 வது ராசியாக வந்தால் சுகம்
பெண் ராசிக்கு ஆண் ராசி 12 வது ராசியாக வந்தால் ஆயுள் விருத்தி

பெண்ணின் ராசிக்கு 6,8 ராசியாக வருவதில் ஒரு விலக்கு இருக்கிறது.அதே போல 7 வது ராசியாக வருவதிலும் ஒரு விலக்கு இருக்கிறது.

மேசம் 6 வது ராசியான கன்னியை இணைக்கலாம்
தனுசு 6 வது ராசியான ரிசபம் சேர்க்கலாம்
துலாம் 6 வது ராசி மீனம் சேர்க்கலாம்.
கும்பம் கடகமும்,சிம்மம்,மகரமும் சேர்க்கலாம்..மிதுனம்,விருச்சிகமும் ஒத்துவரும்.இவை சுப சஷ்டாஷ்டமம் எனப்படும்.( பஞ்சாங்கம் இப்படி சொன்னாலும்,அனுபவத்தில், இதில் எனக்கு உடன்பாடு இல்லை.ஆணின் ராசியில் இருந்து பெண் ராசியாக 6 வந்தால் எதிரி ஆகிவிடுகிறது.எனவே எப்படியிருப்பினும் இந்த ராசிகள் அடிக்கடி மருத்துவ செலவுகளை சந்திக்கின்றனர்..அல்லது.எலியும் பூனையுமாக ஈகோ பிரச்சினையில் வெறித்தனமாக சண்டை போட்டுக்கொள்கின்றனர்.)

7 வது ராசி யாக பெண் ராசியாக வந்தால் அருமையான பொருத்தம் தான்.ஆனால் கடகம்-மகரம்,சிம்மம்-கும்பம் ஆகவே ஆகாது.பொருள் நஷ்டம்,உயிரிழப்பு உடனே உண்டாகும்.ரிசபம் ராசிக்காரர் விருச்சிகம் ராசிப்பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டா ரிசபராசிக்காரருக்கு வாழ்வே நரகமாயிடும்...கொஞ்சம் லேட் ஆனாலும் எவ கூட ஊர் சுத்திட்டு வர்ற..? என நெத்தியடியாய் கேள்வி வரும்.

மகரம் ராசி பொன்ணை கடகம் ராசிக்காரர் கல்யாணம் கட்டிக்கிட்டா வாழ்க்கை வெறுத்து போறதுன்னா என்னன்னு இவர்கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கலாம்.அந்தளவு வெறுத்து போய் குடிகாரரா மாறிடுவார்...


Friday, 3 February 2012

திருமண பொருத்தம்;யோகமான பெண் ஜாதகம் கண்டறிதல்

திருமண பொருத்தம்;யோகமான பெண் ஜாதகம் கண்டறிதல்


ஜோதிடம் சொல்லும் விதிகளில் முக்கியமானது திருமண பொருத்தம்.மனப்பொருத்தம் நன்றாக இருந்தால் மணப்பொருத்தமே பார்க்க வேண்டாம் என சொல்வார்கள்.ஆனால் இப்போதெல்லாம் என்ன படிப்பு,சம்பளம் எவ்வளவு..வீடு சொந்தமா இருக்கா என்பதே முக்கியமாக போய்விட்டதால் பையனும்,பொண்ணும் பழகவும்,புரிந்துகொள்ளவும் வாய்ப்பே இல்லை.நல்ல வசதியான பையன் கிடைக்கும் என்றால் சில பெண்கள் நீ யாரு என 10 வருசம் காதலிச்சு ஊர் சுத்தின காதலனையே கேட்கும் காலம் இது.

காதல்,கவிதை,சினிமா,சென்னை மெரீனா பீச் லவ் னு சுத்துறவங்க..எல்லாம் பக்குவமில்லாதவர்கள்..புத்திசாலி பொண்ணுங்க..நல்ல தகுதியான ,நல்லா சம்பாதிக்குற பையனைத்தான் கல்யாணம் பண்ணிக்கும் என நண்பன் ஒருவன் அடிக்கடி சொல்வான்.ரெண்டு பேரும் நல்லா சம்பாதிச்சா அப்ப அவங்க லவ் பண்ணா வெரி குட்.பையன் சும்மா சுத்திகிட்டு இருப்பான் ..பொண்ணு வேலைக்கு போகும்..ஈவினிங் ரெண்டு பேரும் லவ் பண்ணுவாங்கன்னா அது மோசம்..

ஜாதகப்படி பொருத்தம் பார்ப்படி..?

இருவரது ஜாதகத்திலும் செவ்வாய் தோசம்,நாகதோசம்,காள சர்ப்ப தோசம் இருக்கான்னு பார்ப்பது முதல் படி.

இருவரது ஜாதகத்திலும் சுக்கிரன்,குரு,செவ்வாய்,7க்குடையவன் கெடாமல் இருக்கா என பார்ப்பது அடுத்தபடி...

கூட்டு கிரக சேர்க்கைகள் மோசமாக இருக்கான்னு பார்ப்பது அடுத்த படி.உதாரணம்..செவ்வாய்,+சூரியன்,சனி+சூரியன்,செவ்வாய்+சனி,சுக்கிரன்+ராகு,குரு+ராகு,சந்திரன்+சனி,இவைகள் இருந்தால் கொஞ்சம் எச்சரிக்கை அவசியம்.

அடுத்தபடீருவருக்கும் ஒரே திசை நடக்குதான்னு பார்க்கணும்.இருவருக்கும் ஒரே திசை நடந்தால் யோகமில்லை.கண்டம்தான்..போராட்டம்தான்..கொஞ்சநாள் கழிச்சும் திசை இருவருக்கும் சந்திக்ககூடாது...

அடுத்தபடியாக இருவர் லக்னமும் ஒண்ணுக்கொன்னு 6,8,12 ல் மறையாமல் இருக்கணும்.அப்பதான் ஒற்றுமை உண்டாகும்..அதே போல ராசியும் இருவர் ராசிக்கும் மறையக்கூடாது..!

அடுத்த படிதான் நட்சத்திரபொருத்தம் பார்க்கணும்..யோனி பொருத்தம்,ரஜ்ஜு பொருத்தம்,ராசிபொருத்தம்,ஸ்ரீதீர்க்கம்,இவை மிக அவசியம்.இவை இருந்தால் கூட போதும்...திருமணம் செய்யலாம்...

யோனி பொருத்தம் என்பது இருவரது உடல் அந்தரங்க உறுப்புகள் பற்றிய ரகசியம்...ஒவ்வொரு பெண் நட்சத்திரத்துக்கும் நேர் குதிரை,யானை,குரங்கு,ஆடு என போட்டிருப்பார்கள்.அதில் ஏகப்பட்ட ரகசியம் இருக்கிறது...இதெல்லாம் அப்பெண்ணின் காம எண்ணங்கள்,உடல் உறவு கொள்ளும் முறையை யெல்லாம் விவரிக்கும் குறியீடு.

ரஜ்ஜு பொருத்தம் என்பது இருவரது ஆயுள் பற்றியது.அப்பெண்ணின் மாங்கல்யபலம் பற்றியது..எனவே இரண்டும் முக்கியம்.

ஸ்த்ரீதீர்க்கம் பெண்ணின் ஆயுள் பற்றியது...இதுவும் முக்கியம்.

இவையை பரீலித்துதான் திருமணம் செய்ய வேண்டும்.வெறும் நட்சத்திர பொருத்தம் மட்டும் பார்த்து முடிவு செய்தால் அதற்கு ஜோதிடரோ,ஜோதிடமோ பொறுப்பாகாது!

வசதி,படிப்பு இதெல்லாம் பார்த்து இந்த சம்பந்தம் போனா வராது..என ஜோதிடரை நெருக்கி,பொருத்தம் எழுதி வாங்குபவர்கள்தான் இங்கு அதிகம்...அவர்களுக்கு அப்போதைக்கு வேலை முடியும்.ஆனால் எதிர்காலத்தின் அந்த கணவன்,மனைவி வாழ்க்கை கேள்விக்குறிதான்!!
Wednesday, 1 February 2012

சனி.... நல்லவரா..கெட்டவரா..?

சனி ...நல்லவரா..கெட்டவரா..?


சனி ஜாதகத்தில் கேந்திரத்திலோ,திரிகோணத்திலோ நல்ல ஆதிக்கம் பெற்றால் சுப கிரகங்களை விட மிகவும் உயர்வான பலன்களை கொடுக்கிறது.குடிசையில் இருப்பவர்களையும் கோபுர உச்சிக்கு கொண்டு செல்கிறது.ஆனால் சனி பகை வீட்டில் நற்பலன் கொடுப்பதில்லை.

சனி ஆட்சி உச்சம் பெற்று அமையப் பெற்றால் நீண்ட ஆயுள் அமைகிறது.வெற்றி மேல் வெற்றி,சொகுசு வாழ்வு,இன்ப வாழ்வு மிக எளிதாக நாடி வருகிறது.உல்லாச வாழ்வு தொடங்குகிறது.ஆனால் சனி நீசம் பெற்றுக் காணப்பட்டால்,நேர்மாறான கெடுபலன்கள் கிட்டுகிறது.உடல் ஊனம்,,சோம்பலான வாழ்வு,தாழ்ந்தோர் சினேகம்,ஏற்படுகிரது.சனி பகை வீட்டில் அமையப் பெற்றால் அரசு வழியில் பகை ,தண்டனை பெறும் நிலை பிரயாணத்தால் கெடுதி சித்த பிரமை போன்ற கெடுபலன்கள் தருகிறது.

ஜோதிடம் சொல்லும் முக்கிய குறிப்புகளில் சனிக்கு முன்னும் பின்னும் சூரியன் இருந்தால் தந்தைக்கு நற்பலன் உண்டாகாது.அது போல சனி நின்ற ஸ்தானத்திற்கு முன்னும் பின்னும் சந்திரன் நின்றாலும் சனியுடன் சந்திரன் காணப்பட்டாலும் தாய்க்கு நற்பலன் உண்டாகாது.

சந்திரன் உடல்காரகன்.மனக்காரகன்..சனி முடவன்...எனவே இந்த காரகத்துவத்தையும் சனி முடக்குவான்....
சூரியன் தந்தை வழி,பூர்வீகத்துக்கும் அதிபதி..சனி அதையும் முடக்குவான்..

குரு பார்த்த இடம் கோடி புண்ணியம் சனி பார்த்த இடம் பாழ்...என்பர்.

ஆயுள் காரகனாகிய சனி ஆயுள் ஸ்தானமாகிய எட்டில் நின்றால் நீண்ட ஆயுள் உண்டாகிறது.மூன்றாமிடமும் நீண்ட ஆயுள் தரும்.

சனியும்,செவ்வாயும் இணைந்து நின்ற ஜாதகர் நீதிமன்றம் ஏறிக்கொண்டே இருக்கணும்.அடிக்கடி வாகன விபத்தை சந்திக்கணும்.எங்கியோ போற மாரியாத்தா என் மேல வந்து ஏறாத்தா என்பது போல வம்பு சண்டை தேடி வரும்.

பெண்கள் ஜாதகத்தில் இந்த அமைப்பு இருப்பின் இன்னும் துன்பம் தான்..ஏதாவது சுபகிரகம் பார்த்தாலோ..6,8,12 ல் மறைஞ்சிருந்தாலோ..அல்லது இவங்க ரெண்டு பேர் திசா புத்தியும் வராம இருந்தாலோ தப்பிச்சுக்கலாம்..!!

இன்னும் நிறைய இருக்கு.அப்பப்போ எழுதுறேன்..பாகம் 2 விரைவில்...